Tuesday, September 10, 2013

நெத்திலி மீன் டிக்கா ஃப்ரை - Anchovies Tikka Fry






நெத்திலி மீன் டிக்கா ஃப்ரை  -Anchovies Tikka Fry




நெத்திலி மீன் டிக்காஃப்ரை – Anchovies Tikka Fry
உணவு வகைகளில் மிகவும் பிடித்த்து மீன் உணவு , ஆனால் சுத்தம் செய்வது தான் கொஞ்சம் கடினம். குழம்புக்கு என்றால் முள் முழுவது நீக்கி விட்டு போன்லெஸ் குழம்பு தான் செய்வது. ஃப்ரைக்கு முள் எடுக்க தேவையில்லை.

நெத்திலி மீன் முள்ளுடன்





Anchovies Tikka Fry
நெத்திலி மீன் – 200 கிராம் (முள்ளுடன்)
ஷான் டிக்கா மசாலா – 1 மேசை கரண்டி – ஒரு தேக்கரண்டி
உப்பு – தேவைக்கு
மிளகாய் தூள்  - முக்கால் + கால்
இஞ்சி பூண்டு விழுது – ஒரு தேக்கரண்டி + அரை தேக்கரண்டி
எலுமிச்சை சாறு – ஒரு தேக்கரண்டி + அரை தேக்கரண்டி
பொட்டுகடலை பொடி – 1 மேசைக்ரண்டி
கார்ன் மாவு – ஒரு தேக்கரண்டி

 நெத்திலி மீன் முள் இல்லாதது.




நெத்திலி மீன் டிக்காஃப்ரை
நெத்திலி மீன் –  100 கிராம் (முள்ளில்லாத்து)
ஷான் டிக்கா மசாலா – ஒரு தேக்கரண்டி
உப்பு – தேவைக்கு
மிளகாய் தூள்  - கால் தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது – அரை தேக்கரண்டி
எலுமிச்சை சாறு –  அரை தேக்கரண்டி
பொட்டுகடலை பொடி – 1 தேக்க்ரண்டி
கார்ன் மாவு – அரை தேக்கரண்டி






Anchovies Tikka Fry


நெத்திலி மீன் ஃப்ரை செய்வது எப்படின்னு பார்ப்போம்.
செய்முறை
100 கிராம் நெத்திலி மீனை சுத்தம் செய்து முள் எடுக்க தலையில் இருந்து சைடில் இழுத்தால் முழு முள்ளும் வந்து விடும்.
முள் எடுத்து அழுக்கையும் சுத்தம் செய்து கழுவி எடுக்கவும்
மீதியை முள்ளுடன் நடுவில் உள்ள அழுக்கு மட்டும் எடுத்து நன்கு கழுவி மேலே கொடுக்க பட்டுள்ள மசாலாக்களை தனித்தனியாக போட்டு பிரட்டி 15 நிமிடம் ஊறவைக்கவும்.
நான் ஸ்டிக் பேனில் எண்ணையை சூடாக்கி சிறிது கருவேப்பிலை சேர்த்து ஊற வைத்துள்ள மீன்களை பொரித்து எடுக்கவும்.
சுவையான சூப்பரான மொரு மொரு நெத்திலி டிக்கா ஃப்ரை ரெடி
உணவு வகைகளில் மிகவும் பிடித்த்து மீன் உணவு , இதில்(நெத்திலியில்) நிறைய முட்களுடன் இருப்பதால் எங்க வீட்டு பிள்ளைகள் முள் உள்ள மீன் சாப்பிட மாட்டார்கள் ஆகையால் முள் எடுத்து தான் செய்து கொடுப்பது.

.




சிறிய முள் உள்ள மீன் சமைத்தாலே பிள்ளைகளும் சரி கணவ்ருக்கும் முள்ளு பிரித்து கொடுத்தால் தான் சாப்பிடுவார்கள். ஆகையால் இப்படி தனித்தனியாக சமைத்து இருக்கிறேன்.
நெத்திலி என்றால் கண்டிப்பாக ஒரு முள்ளும் இல்லாமல் எடுத்து தான் குழம்பு செய்வேன். அப்படியே சாத்த்தில் போட்டு பிசைந்து சாப்பிடலாம். சின்ன குழந்தைகளுக்கு கூட கொடுக்கலாம்



மசாலாவகைகளில் பார்பிகிவு அயிட்டங்களுக்காக ஷான் பிராண்ட் மசாலா வகைகள் தான் வாங்குவேன். அதை சில நேரம் மீன், சிக்கன் , மட்டன் வகைகளுக்கு பயன் படுத்துவேன்.








மீன் கழுவும் விதம்


பெரிய அலுமினியம் கண் வடிகட்டி எடுத்துக்க்கொள்ளுங்கள்.மீனை ஒரு சட்டியில் தண்ணீரில் போட்டு லேசாக அரிசி களைவது போல் கலந்து வடுகட்டியில் போடவும்.
சிங்கில் டேபுக்கு நேரக வடிகட்டியை பிடித்து கொண்டு இரண்டு மூன்று தடவை கையால் உலசி கழுவவும்.
இப்போது அழுக்கு மண் எல்லாம் போய் சுத்தமாகி விடும்.
மீனி தலையை கிள்ளி அப்படியே வயிற்று பகுதியில் கட்டை விறலால் கீறி தலையோடு சேர்த்து முள்ளை மீனிலிருந்து பிரித்தெடுக்கவும்.
அதே மாதிரி எல்லா மீனையும் செய்யவும்.
இப்போது மீனில் சுத்தமாக முள் இருக்காது மீண்டும் ஒரு முறை கழுவி தண்ணீர் இல்லாமல் வடித்து வைக்கவும்.
இப்போது போன் லெஸ் நெத்திலி மீன் ரெடி அப்ப‌ர‌ம் என்ன‌ குழ‌ம்பு வைத்து சாப்பிட‌வேண்டது தான்.
பிள்ளைக‌ளுக்கும் அப்ப‌டியே பிசைந்து ஊட்டி விட‌லாம். இதே கிள‌ங்கா மீனிலும் எடுக்க‌லாம்
.



புது மாடல் ஸ்டோன் புர்காக்கள் - New Model Stone Burka/Abaya =>
www.chennaiplazaki.com


 https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam

3 கருத்துகள்:

Menaga Sathia said...

அருமையா இருக்கு...

மாதேவி said...

நன்றாக இருக்கிறது ஜலீலா.

மீன் சமையல் செய்யத்தெரியும் சாப்பிடமுடியாது :)

ஸாதிகா said...

பெயரே புதிதாக இருக்கிறது.

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா