- பாலுதா அனைவருக்கும் பிடிக்கும் ஒரு டெசர்ட் , இங்குள்ள பாக்கிஸ்தானி , இந்தியன் ரெஸ்டாரண்ட்களில் உணவு பட்டியலுல் முதன்மையான லிஸ்டில் இருப்பது பாலூதா..
- நான் வெயில் காலங்களிலும், நோன்புகாலங்களிலும் அடிக்கடி செய்வதுண்டு. இதை அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப பல விதங்களில் தயாரிக்கலாம்.நல்லதொரு பில்லிங், காலை டிபனை தவிர்த்து கூட இது போல ஒரு டம்ளர் தயாரித்து சாப்பிடலாம்.
- ரொம்ப ஈசியாக தயாரிக்கலாம் பிள்ளைகள் அனைவரும் விரும்பி சாப்பிடும் அருமையான டெசர்ட்.என் சுலபமான பாலுதா குறிப்பை இங்கு சென்று பார்க்கவும்.
- இது அறுசுவை தோழி மாலதி அக்காவின் குறிப்புHow to make Falooda?
- பாலூடா செய்வது எப்படி??
- கிழே உள்ளது அறுசுவை தோழி மாலதி அக்காவின் ஃப்லூடா
- ஐஸ்க்ரீம் செய்ய தேவையான பொருட்கள்:
- (அல்லது கடையில் விற்கும் ஐஸ்க்ரீம் 2 கப் வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்)
- ஃபலூடாவிற்கு தேவையான பொருட்கள்:
- ஊற வைத்த சேமியா - ஒரு கப்
பால் - அரை லிட்டர்
ஓரம் நீக்கப்பட்ட ப்ரெட் ஸ்லைஸ் - 2
சர்க்கரை - அரை கப்
எசன்ஸ் - அரை தேக்கரண்டி
ஜெல்லி - ஒரு கப் (ஜெல்லி செய்முறை அதன் டப்பாவிலேயே எழுதி இருக்கும்)
நறுக்கிய மாம்பழம், அன்னாசி, பப்பாளி, வாழை, திராட்சை - 2 கப்
ட்ரை ஃப்ரூட்ஸ் - கால் கப்
செர்ரி பழம் - 5
- ஐஸ்கிரீம் செய்முறை:
- நன்றாக கலந்து மிருதுவானதும் கிண்ணத்தில் ஊற்றி மீண்டும் ஃப்ரீஸரில் வைத்து விடவும்.
பாலை சுண்ட காய்ச்சவும். சூடான பாலில் ப்ரெட் ஸ்லைஸை போட்டு அப்படியே மூடி ஆற விடவும்.
பால் ஆறியதும் சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைக்கவும்.
இந்த கலவைவையை ஒரு கிண்ணத்தில் ஊற்றி மூடி ஃப்ரீஸரில் 5 மணி நேரம் வைக்கவும்.
இப்போது ஐஸ்க்ரீமை எடுத்து எசன்ஸை கலந்து மறுபடியும் மிக்ஸியில் போட்டு அரைக்கவும்.
5 மணி நேரம் அப்படியே விட்டு விடவும். இப்போது ஐஸ்க்ரீம் ரெடியாகி விட்டது.
ஒரு நீளமான கண்ணாடி டம்ளரை எடுத்துக் கொள்ளுங்கள்.
அதில் முதலில் ஒரு கரண்டி ஊற வைத்த சேமியாவை போடவும்.
அடுத்து கருப்பு திராட்சை, அதன்மேல் மாம்பழம், அடுத்து சிகப்பு கலர் ஜெல்லி, இப்ப கொஞ்சம் ஐஸ்க்ரிம், அதன் மேல் மற்ற பழ வகைகள் போடவும்.
கடைசியாக சிறிது ஐஸ்க்ரீமை வைத்து அதன் மேல் ட்ரை ஃப்ரூட்ஸை தூவி மேலே ஒரு செர்ரி பழத்தை வைத்து அலங்கரித்து கொடுங்கள்.
இது என் குறிப்பு சுட்டியை கிளிக்கி பார்க்கவும் - ரிச் ஃப்ரூட் பாலூதா - Rich Fruit Falooda சமையல் அட்டகாசங்கள்
பாலுதா /ஃபலூடா/Falooda - cookbookjaleela
Tweet | ||||||
11 கருத்துகள்:
படிக்கும்போதே செய்து குடிக்கனும் போல் இருக்கு...
ஜலீலா சின்ன சந்தேகம், சேமியாவை வேக வைத்து போட கூடாதா? ஊறவைத்து தான் போட வேண்டுமா?
ஃபாலூடா மிக நன்றாக அழகாய் இருக்கிறது. மாலதிக்கும், உங்களுக்கும் நன்றி.
எளிதாக விளக்கியுள்ளீர்கள். சுவையான குறிப்பு. நன்றி.
அருமையான குறிப்பு.
ஃபலூடா சூப்பர்.
மேனகா வாங்க இந்த பலூடா யாருக்கு தான் பிடிக்காது, பார்க்கும் போதே உடனே குடிக்கனும் போல் இருக்கும்.
வருகைக்கு மிக்க நன்றி
செய்து பாருங்கள்.
கோமதி அக்கா ஆமாம் நானும் கவனிக்கல, இதில் சேமியாவை வேக வைத்து தான் போடனும்.
ஊறவைத்து போடுலாமான்னு தெரியல, மாலதி அக்கா லைன் ல வந்தால் கேட்டு சொல்கிறேன்.
அவங்க எல்லாம் இப்ப ரொம்ப பிஸி..
வருகைக்கு மிக்க நன்றி கோமதி அக்கா
வாங்க சாரதா உங்கள் கருத்துக்கு நன்றி
உங்கள் வருகைக்கு மிக்க நன்றி ராமலக்ஷ்மி
நன்றி ஆசியா
என்னுடைய மிகவும் விருப்பமான ஒன்றில் இதுவும் அக்கா..... பார்க்கவே சூப்பராக இருக்கு.
துபாயில் ஜுமேரா அருகில் அல் இஜாஜா கேஃபடரியாவில் வாங்கி சாப்பிட்டால் சும்மா அப்படி ஒரு டேஸ்ட் அக்கா.....
நானும் துபாயில் இருந்த நாட்களில் நான் விரும்பி வாங்கி சாப்பிடுவதும் இதுதான்.....
அந்த பொன்னான நினைவலைகளை மீண்டும் உங்கள் அசத்தலான குறிப்பின் மூலம் மீண்டும் ஏற்படுத்தி விட்டீர்கள் அக்கா.
அப்சரா
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா