Monday, September 23, 2013

வடா பாவ்/வடா ப்ரட் - Vada Pav/Vada Bread


வடா பாவ்
இது வட இந்தியாவில் பிரத்தி பெற்ற ஒரு சிற்றுண்டி, பாவ் பன்னுடன் சாஸ் சேர்த்து இதை உள்ளே வைத்து சாப்பிட அருமையாக இருக்கும்.

 Vada Pav




Vada Bread



தேவையானவை
பிரட் – 8 (அ) பன் – 4
பட்டர் – பொரிக்க தேவையான அளவு
டொமேட்டோ கெட்சப் – தேவைக்கு
டேட்ஸ் சட்னி (அ) இனிப்பு சட்னி
வடா செய்ய
ரெடி மேட் பஜ்ஜி மாவு – அரை கப்
கார்ன் மாவு – ஒரு மேசை கரண்டி





உருளை கிழங்கு பட்டாணி மசாலா
வேகவைத்த உருளைகிழங்கு – ஒன்று
வெங்காயம்  - ஒன்று
பச்ச மிளகாய் – ஒன்று
மஞ்சள் பொடி – கால் தேக்கரண்டி
எண்ணை – ஒரு தேக்கரண்டி
தாளிக்க
கடுகு – கால் தேக்கரண்டி
சீரகம் – கால் தேக்கரண்டி
கருவேப்பிலை – சிறிது
பட்டானி (புரோஜன்)  - ஒரு மேசை கரண்டி
பெருங்காயப்பொடி – ஒரு சிட்டிக்கை

செய்முறை
முதலில் உருளைகிழங்கு மசாலா தயாரித்து கொள்ளவும்
வாயகன்ற வானலியில் எண்ணையை ஊற்றி கடுகு, சீரகம்,கருவேப்பிலை, பெருங்காயப்பொடி சேர்த்து தாளித்து பொடியாக அரிந்த வெங்காயம் மற்றும் பச்சமிளகாய்,பட்டானி சேர்த்து நன்கு வதக்கவும்.
மஞ்சள் தூள் உப்புதூள் வெந்த உருளைசேர்த்து நன்கு மசித்து கிளறி ஆறவைக்கவும்.
ஆறிய உருளைமசாலாவை சிறிய உருண்டைகளாக பிடித்துவைக்கவும்.
( வட நாட்டு உருளை மசாலாவில் சேரும் மசாலாக்கள் வேறு, இது நம்ம பூரி பாஜிக்கு செய்யும் மசாலா போல் தான் செய்துள்ளேன்)

பிரட் (அ) பன் பொரித்து கொள்ளவும்/
பிரட்டை (அ) பன்னை பட்டர் தடவி பொரித்து கொள்ளவும்
பஜ்ஜிமாவை கார்ன் மாவு சேர்த்து கலக்கி கொள்ளவும்.
வானலியில் எண்ணையை காயவைத்து உருட்டிய மசாலா உருண்டைகளை பஜ்ஜிமாவில் தோய்த்து பொரித்து எடுக்கவும்.

வடா பன் (பாவ்)

பொரித்த பிரெட்டில் ஒரு பக்கம் கெட்சப்பும், மறுபக்கம் டேட்ஸ் சட்னியும் தடவி ஒரு பொரித்த மசாலா பஜ்ஜியை நடுவில் வைத்து  மூடவும்.

 குறிப்பு:
இது பிள்ளைகளுக்கு என்பதால் கெட்சப் மட்டும் போதுமானது,  பெரியவர்களுக்கு ஒரு பக்கம் கீரின் கார சட்னியும், மறுபக்கம் டேட்ஸ் சட்னியும் வைத்து செய்யலாம்.அருமையான மாலை நேர சிற்றுண்டியும், குழந்தைகளுக்கு லன்ச் பாக்ஸுக்கும் சூப்பரான டிபன். சுவைத்து மகிழுங்கள்.

Vada Bread English Version
Linking to Akila's Dish Name Starts with V 


https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam

8 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் said...

வடா பாவ் வாவ்...! சூப்பரான டிபன்...

கோமதி அரசு said...

ஜலீலா, அருமையான வடா பாவ், வடா ப்ரட்.
செய்து பார்த்து விடுகிறேன்.
நன்றி.

Jaleela Kamal said...

நன்றி தனபாலன் சார்

Asiya Omar said...

வாவ் ! சூப்பர்.என் மகளுக்கு ரொம்பவும் பிடிக்கும்.
சக்தி போண்டா மிக்ஸ் இங்கே கிடைக்கிறதா?

Priya Anandakumar said...

Super vada pav akka, paarthadhu ippa pasikithu, romba nalla irrukku...

இளமதி said...

வாவ்!.. வாவ்!.. வடா பாவ்!...:)

நல்ல சுகமான ரெஸிப்பி! செய்துடுவோம்!..:)

மிக்க நன்றி ஜலீலா.. வாழ்த்துக்கள்!

த ம.4

ஸாதிகா said...

வடாபாவ் நான் இதுவரை சாப்பிட்டதே இல்லை.ரெஸிப்பிக்கு நன்றி.

மாதேவி said...

சுவையான வடாபாவ்.

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா