Thursday, April 29, 2010

வித விதமான கழுத்து டிசைன்கள்சோளியாக இருந்தாலும், சுடிதாராக இருந்தாலும் கழுத்து தான் மெயின் அது லூசாவோ , வடிந்தாலோ பிட்டிங் சரியாக அமையாது.

முன்பு காலத்தில் வி நெக், ரவுண்ட் நெக், ப நெக் மட்டும் தான்.
ஆனால் இப்ப சோளியில் கழுத்த் வித விதமான டிசைன் களிலும், பைப்பிங், போ வைத்து தைக்க ஆரம்பித்து விட்டனர்.


படத்தில் காட்டியுள்ளது போல் உங்களுக்கு விருப்பாமான டிசைன் களை வரைந்து வைத்து கொண்டால் சோளி தைக்கும் போது ஈசியாக இருக்கும்.இது போல ஸ்டார் நெக் தைப்பது கொஞ்சம் கழ்டம், வளைவுகளை ஓட்டு தையல், ரன்னிங் ஸ்டிச் போட்டு தைத்து கொண்டால் ஈசியாக இருக்கும், வளைவுகளையும் அதே போக்கில் தைக்கனும் அந்த கார்னரில் அதே போல் வி ஷேப்பில் தைத்து விட்டு கார்னரை சிறிது வெட்டி விட்டால் தைத்து விட்டு திருப்பும் போது கழுத்தில் டிசைன் நன்கு படியும். ஓட்டு தையல் தைக்கும் போது சிறிது அரை செண்டி மீட்டர் தள்ளி தைக்க வேண்டும், இல்லையென்றால் தைத்து விட்டு திருப்பி தைக்கும் போது இட்டையில் தையல் விட்டு போகும் பிறகு பிரித்து தைப்பது மிகவும் சிரமம்.
பின் புறம் வட்டவடிவமான கழுத்து ரொம்ப டீப்ப்பாக போடுவர்கள் , இடுப்பு கிட்ட கொஞ்சம் இரக்கம் வைத்து தைத்து கொண்டால்ஷோல்டர் முன் கழுத்து பக்கம் வடியாமல் இருக்கும்.
// ஜெயா டீவியில் நடிகை குஷ்புவின் மாடல்கள் பார்த்தால் வித விதமாக இருக்கும் ஆனால் உயரம் நல்ல இரக்கம் வைத்து தைத்து இருப்பதால் தான் சோளி வடியாமல் நிற்கிறது.//

தைக்கும் முன் அயர்ன் செய்து தைத்தால் டெயிலர் தைப்பது போலவே இருக்கும்.

கழுத்து ஆழமாக போடுபவர்கள், ஷோட்டரிலிருந்து சோளி
வடியும் அதற்கு படத்தில் உள்ள்படி பின்புறம் நாட் வைத்து தைத்து கொண்டால் நல்ல பிட்டிங் கிடைக்கும்.
அகல கழுத்து போடும் போதும், அல்லது மற்ற சோளிகளிலும் உங்கள் அறியாமல் உள்ளாடைகள் வெளியே தெரியும், அது வெளியில் வராமல் இருக்க ஷோல்டர் ஜாயிண்ட் பண்ணியதும் அங்கு ஒரு சிறிய லூப் வைத்து தைத்து பிரஸ் பட்டன் வைத்து உள்ளாடையை அதில் பின் பண்ணி விட்டால் வெளியே வர வாய்ப்பில்ல்லை, இப்ப சுடி தாரிலும் எல்ல்லோரும் டெயிலரிடம் தைக்க கொடுக்கும் போது ஷோல்டர் லூப் வைத்து பட்டன் தைத்து கொடுக்க சொல்லுங்கள்.
பிறகு முடிந்த போது துணியில் கழுத்தை வெட்டும் விதத்தை சொல்கிறேன்.

இதெல்லாம் தையல் டீச்சர் ஆனால் சொல்லி கொடுக்க முன்பு போட்டு வைத்து இருந்த பேட்டன்கள்.

24 கருத்துகள்:

எல் கே said...

நல்லா இருக்கு

எல் கே said...
This comment has been removed by the author.
Chitra said...

அக்கா, நீங்க "ஆல் இன் ஆல் அழகு ராணி"!!! பாராட்டுக்கள்!
very nice patterns and tip. :-)

ஜெய்லானி said...

@@@LK--//இன்று அங்கு பதிவர் சந்திப்பு என்று அறிந்தேன் . சந்திப்பு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்//

அடங்கொக்கா மக்கா இது எப்போ ? எங்கே ? லோக்கல் மழையை டீவியில பாத்து தெரிஞ்சிக்க வேண்டி இருக்கே!!

கொழுக்கட்டையா !!பிரியாணியா !! வாழ்த்துக்கள் அனைவருக்கும் !!!!!!

ஜெய்லானி said...

இது பெண்களுக்கான பதிவு...மீ எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்..

Asiya Omar said...

கழுத்து டிசைன் அனைத்தும் அருமை.எல்லா டிசைனும் நம்ம கிட்ட இருக்கான்னு பார்க்கணுமே.

நாஸியா said...

நா சொல்லவந்ததை சித்ரா சொல்லிட்டாங்க.. ஹிஹி..

ஜெய்லானி said...

//சோளியாக இருந்தாலும், சுடிதாராக இருந்தாலும் கழுத்து தான் மெயின் அது லூசாவோ , வடிந்தாலோ பிட்டிங் சரியாக அமையாது.//

ஆமாங்க சேருக்கு (நடை வண்டி ) சட்டை போட்ட மாதிரி இருக்கும்.

சசிகுமார் said...

அக்கா உங்களுக்கு என்ன தான் தெரியாது எல்லா விஷயத்திலும் அடி பின்றீங்க. நீங்கள் செய்ததை தான் நான் தினமும் கம்ப்யுட்டரில் செய்து கொண்டு இருக்கிறேன். நான் ஒரு fashion designer அக்கா.
நல்ல உபயோகமான பதிவு. உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

Unknown said...

சித்ரா சொன்னதையே நானும் ...

Menaga Sathia said...

டிசைன்ஸ் அருமை!!

எல் கே said...
This comment has been removed by the author.
ஜெய்லானி said...

சகோதர சகோதரிகளே!! , ஒரு தவறு அது யார் செய்தாலும் அதை தெரியப்படுத்தும் போது அடுத்த முறை அது நடக்க வாய்ப்பு இல்லாமல் போகிறது.

பதிவுத் திருட்டை தமிழிஷ்க்கு ஆதாரத்துடன் அனுப்பிய உடனே ஒரு மணிநேரத்தில் எனக்கு பதில் வந்தது பாருங்கள்.

we removed the copy post.

On Thu, Apr 29, 2010 at 7:17 PM, Tamilish - Support wrote:

we removed the copy post.


On Thu, Apr 29, 2010 at 6:16 PM, jailani wrote:


http://allinalljaleela.blogspot.com/2009/10/kidney-fry.html

copy one person same to

http://cookbala.blogspot.com/2010/04/blog-post_28.html
--
தமிழிஷ்
www.tamilish.com


தொடர்பு கொண்ட ஜலீலாக்காவுக்கு நன்றி. உங்கள் உழைப்பு வீண் போகாது.

malar said...

கலக்குங்க...

அருந்ததி:) அதிரா:) said...

ஜலீலாக்கா எல்லாமே அழகான டடிசைன்ஸ். ஒரேஞ் டிசைனில் இருப்பதுபோல என்னிடமும் ஒரு பிளவுஸ் இருந்தது..ஸ்கேட் பிளவுஸ்.

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

அடடா... ஜஸ்ட் மிஸ்ஸு...

இப்ப தானே இந்தியா போயிட்டு வந்தேன்..

என்ன கழுத்து வைக்கலாம்னு அவ்ளோ கஷ்டப்பட்டு யோசிச்சனே..

இது தெரியாம போச்சே..

பரவாயில்ல.. அடுத்த முறை யூஸ் பண்ணிரலாம்.. ;)
நன்றி.. எல்லா டிசைன்ம் சூப்பர்..

இமா க்றிஸ் said...

Superb posting Jalee. ;)

Jaleela Kamal said...

நன்றி எல்.கே.

சித்ரா எனக்கு தெரிந்ததை மற்றவர்களுக்கு சொல்லி தரேன் அவ்வள்வு தான்.

எல்.கே விற்கும், அது மூலமா ஜெலானிக்கும் மூக்கை துளைத்து விட்டது போல இருக்கே.

வரும் செய்திகள் மெதுவாக வரும்.

நன்றீ ஆசியா

நன்றி நாஸியா/

Jaleela Kamal said...

சசிகுமார் நீங்கள் பேஷன் டிசைனாரா, .

ரொம்ப சந்தோஷம் ஏதாவது டவுட் என்றால் உங்களிடம் கேட்டுகொள்ளலாம் இல்லையா?
தொடர் வருகைக்கும், தொடர் பாராட்டுக்கும் மிக்க நன்றி

Jaleela Kamal said...

மிகக் நன்றீ சகோ.ஜமால்

நன்றி மேனகா

Jaleela Kamal said...

பதிவு திருட்டுக்கு உடனடியா உதவியதற்கு மிக்க நன்றி ஜெய்லானி.

Jaleela Kamal said...

நன்றி மலர்.

அதிரா அப்ப கிரீச், என்னிடமும், உங்களிடமும் ஒன்றாக இருந்தா ஒரு கீரீச்.

ஹி ஹி

Jaleela Kamal said...

பரவாயில்லை ஆனண்ட்தி அதனால் என்ன அடுத்த முறை தைக்க இந்த பயன் படும். வருகைக்கு மிக்க நன்றி.

Jaleela Kamal said...

நன்றி இமா

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா