Tuesday, November 15, 2011

ஆண்களுக்கு தையல் பாகம் - 1

தையல் கற்று கொள்வது மிகவும் பயனுள்ளது.

 நிறைய பேர் இதை கற்று கொள்வதில்லை.

கைத்தொழில்அதிலும் வெளிநாடுகளில் வேலை பார்க்கும் ஆண்களுக்கு தீடீரென தையல் விட்டு போய் விட்டாலோ அல்லது பட்டன் அறுந்து விட்டாலோ பேண்ட் உயரத்தை குறைக்கனும் என்றாலே டெயிலரை நோக்கி ஓடனும்.

 அதுவும் விடுமுறை வரும் போது தான் போய் தைக்க கொடுக்கனும். அதை வாங்கி வர அடுத்த விடுமுறையை எதிர்பார்க்கனும்.


 சிலருக்கு வேலை பார்க்கும் இட்த்தில் இருந்து வெளியில் செல்ல வாய்ப்பே கிடைப்பதில்லை.

அப்படி இருப்பவர்களுக்கு எளிதாக இங்கு நான் சில எளிய தையல் முறைகளை சொல்லி தரலாம் என்று இருக்கேன்.






இது தையல் தெரியாத பெண்களுக்கும் உதவும். உங்க ஆசை கணவரின் பட்டனை நீங்களே தைக்கலாம் இல்லையா?


ஆ ஆ எல்லாம் எங்களுக்குதெரியும் இது சின்ன மேட்டர் இத சொல்லி கொடுக்க வந்துட்டாங்களாக்கும் என நினைப்பவர்கள் அப்ப்டியே கொஞ்ச ஓரங்க்கட்டிக்கோங்கோ......





வாங்க முதலில் பட்டன் தைக்கலாம்.

முடிந்த வரை இரண்டு டைப்பா போட்டோ எடுத்து இருக்கேன் புரியுதான்னு பாருங்கள்.இந்த முறையில் தைத்தால் உங்கள் ஷர்ட் கிழிந்தாலும் பட்டனில் தையல் கிழியாது.




ரெடி மேட் ஷர்ட்கள் கூடுமானவரை லாட் லாட்டா தைக்கப்படுவதால் ஒரே ஒரு தையல் தான் போட்டு இருப்பார்கள். இரண்டு முறை போட்டு வாஷிங் மிஷினில் போட்ட்துமே பட்டன் கானாபோய்விடும்.


முதலில் தேவையானவை




ஊசி மற்றும் நூல்கள்






நல்ல விலை உயர்ந்த ஷர்ட்களில் பார்த்தீங்க அந்த கலருக்கு ஏற்றார் போல பட்டன்கள் வைக்க பட்டிருக்கும். அது அறுந்து விட்டால் தேடி அதே போல் அதே டிசைனில் வாஙக் முடியாது.


ஆகையால் ஷர்டில் கடைசி பட்டன் போடும் இட்த்தில் திருப்பி பார்த்தீங்கன்னா இரண்டு பட்டன் எக்ஸ்ரா வைத்து தைத்து இருப்பார்கள்.


அது பட்டன் அறுந்து விட்டால் அந்த பட்டனை எடுத்து வைத்து கொள்ளலாம்.







இப்ப கடைசியில் இருக்கும் ஒரு பட்டனை ஷர்ட் கிழியாமல் கட் செய்து எடுத்து கொள்ளுங்கள்.




எந்த இட்த்தில் பட்டன் இல்லையோ அந்த இட்த்தில் கண்டிப்பாக அதில் தைக்கும் மார்க் இருக்கும் அப்ப்டி இல்லை என்றால் எதிரே உள்ள பட்டன் மாட்டும் பொத்தான் ஹோலுக்கு நேராக வைத்து ஒரு புள்ளி போல் பென்சிலில் மார்க பண்ணிக்கோங்கோ


ஊசியில் நூலை இரட்டை பட்டையாக கோர்த்து கொள்ளுஙக்ள் இரண்டு முழம் அளவு நூல் எடுத்து கொண்டால் போதும் கோர்த்த்தும் இரண்டு நூலையும் சேர்த்து கடைசியில் முடியும் இட்த்தில் முடிச்சி போட்டு கொள்ளுங்கள்./







இப்போது மேல் பக்க (நல்ல பக்க)த்தில் இட்து கையால் பட்டனை வைத்து பிடித்துகொள்ளுங்கள்.   சில பட்டனில் 2 ஹோல் கள் , சில பட்டனில் 4 ஹோல் கள் இருக்கும் அதில் கீழிருந்து பட்டனில் மேலாக ஊசியை குத்தி மேலே கொண்டு வரவும். எதிர் எதிரே உள்ள துளைகளில் பெருக்க்ல் குறி போல் மாற்றி மாற்றி மேலிருந்து கீழாக 4 முறை குத்தி கடைசியாக கீழே கொண்டுவரவும்.

கீழே உள்ள துணியில் சுருக்கம் வராத வாறு சின்னதாக ஒரு ஓட்டு தையல் போட்டு முடிச்சி போடவும்.




மறுபடி மேல் நோக்கி பட்டன் துளையில் குத்தாமல் பட்டனுக்கு பின் ஊசி வருமாறு குத்தவும்.





குத்தி விட்டு பூ கட்டுவது போல் பட்டனை சுற்று முன்று முறை முடிச்சி போடவும்,




















திருப்பி கிழ் நோக்கி குத்தி விட்டு கீழே சின்னதாக ஒரு முடிச்சி போட்டு நூலை கட் பண்ணவும்.

அவ்வளவு தான் உங்கள் சட்டை பட்டனை நீங்களே தைத்தாச்சு.


இது என் பையனுக்காக சொல்லி கொடுக்கும் போது எடுத்தது.


டிஸ்கி:பதிவு பிடித்து இருக்கான்னு மறக்காம உங்கள் கருத்துக்களை கீழே பதியுங்கள்/




31 கருத்துகள்:

M.R said...

பிடித்துள்ளது சகோ ,மேலும் தையல் பற்றிய (கட்டிங் முதற்கொண்டு )
தெளிவுகள் இருந்தால் பகிருங்கள்
அதைப் பற்றிய மென்நூல் இருந்தாலும் அதற்கான லிங்க் தாருங்கள்

எனது தோழி ஒருவர் கேட்டார் .

தேடிப்பார்த்தேன் கிடைக்க வில்லை
நன்றி

ஸாதிகா said...

அனைவருக்கும் தெரிந்த குரிப்புகளாயின் நீங்கள் தெளிவாக விவரித்து இருப்பது அருமை ஜலீலா.

Priya Suresh said...

Super post Jaleela, romba peruku uthaviya irrukum..

குடந்தை அன்புமணி said...

ஆண்களுக்கான தையல் பயிற்சியா? இப்போதெல்லாம் பழைய துணிகளை தைப்பதற்கு டைலர்கள் யாரும் முன்வருவதையில்லை. தங்களின் பயிற்சியால் வீட்டிலேயே தைத்துப் பழக முடியுமானால் மிகவும் நன்று. (பதிவர் தென்றல் மாதஇதழ் ஆசிரியர்)

Admin said...

அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.!

இது எனக்கு பயன்படும் என நினைக்கிறேன். பயனுள்ள தகவலை பகிர்ந்தமைக்கு நன்றி சகோ.!

வலையுகம் said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

சகோ விரிவான விளக்கம்
மிகத் தெளிவான புகைப்படங்கள்

நன்றி சகோ

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

ஸலாம் சகோ.ஜலீலா,
பாடத்தை 'ப்ரீகெஜி சிலபஸ்' கொண்டு விளக்கமாக ஆரம்பித்து இருக்கிறீர்கள். அருமை.

எனக்கு இந்த கலையை ஐந்தாவது படிக்கும்போதே எங்க தாயார் கற்றுக்கொடுத்து விட்டார்கள்.

//மறுபடி மேல் நோக்கி பட்டன் துளையில் குத்தாமல் பட்டனுக்கு பின்(பக்கம் பட்டனுக்கு அடியில்)ஊசி வருமாறு குத்தவும்.//

//குத்தி விட்டு பூ கட்டுவது போல் பட்டனை சுற்று முன்று முறை முடிச்சி போடவும்//

//திருப்பி கிழ் நோக்கி குத்தி விட்டு கீழே சின்னதாக ஒரு முடிச்சி போட்டு நூலை கட் பண்ணவும்.//

ம்ம்ம்... இவையே இப்பதிவில் கவனித்துக்கொள்ள வேண்டிய முக்கிய பாயிண்ட்ஸ்.

இப்படி முடிச்சு போட்டு தைக்காததால்தான் மெஷின் ஸ்டிச்ட் ரெடிமேட் பட்டன் அடிக்கடி பிரிந்து காணாமல் போய் விடுகிறது.

அம்பலத்தார் said...

என்னங்க இப்படி பதிவு போட்டியள். இதை என்ரை ஆத்துக்காரி செல்லம்மா படிச்சா அப்புறம் பட்டன் தைக்கிறதும் நம்ம வேலையாயிடும்.

Asiya Omar said...

தெளிவான படங்கள்,நீட் ஃபினிஷிங்.நல்ல பகிர்வு.

குறையொன்றுமில்லை. said...

ஜலீலா உங்களை ஒரு தொடர் பதிவுக்கு அழைச்சிருக்கேன். நேரம் கிடைக்கும்போது தொடருங்க.

Unknown said...

எனக்கு இனி பயன்படும் அக்கா

Starjan (ஸ்டார்ஜன்) said...

அருமையான குறிப்பு

Learn said...

ரொம்ப நல்ல பகிர்வு பகிர்வுக்கு நன்றி அக்கா

தமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in

தலை மறைவான அதிரா said...

ஆ... ஜலீலாக்கா மகனுக்கு தையலும் சொல்லிக்கொடுக்கிறீங்களோ?
சூப்பர்.

Chitra said...

Very useful post for everybody. Iam a beginner in stitching. if u can help with basic things , i can make it for my hubby. thanks :)

Jaleela Kamal said...

MR
எனககு தெரிந்தவரை கண்டிப்ப்ாக இங்கு பகிரு்வேன்.

உங்களுக்கு லின்க் தருக்றேன்.

Jaleela Kamal said...

ஸாதிகா அக்கா கருத்து தெரிவிடத்hதமைக்குமிக்க நன்றி

Jaleela Kamal said...

ஆமாம் பிரிா இது சிம்பில் தைய்ல் குறீப்பு ஆனால் சிலர்க்கு பயன் படும்.

Jaleela Kamal said...

ஆமாம் குடந்தை அன்புமனி சில நேரம் விலை உயர்ந்த ஆடைகள் தையல் விட்டு போவதால், பட்டன்விட்டு போவதான் அணிந்து கொள்ள முடியது, இது போல சின்ன சின்ன ்தையல் கற்று கொள்வதால்நாமே தைத்து கொள்ளலாம்,

Jaleela Kamal said...

வா அலைக்கும் சலாம் சகோ பாஸித்
உங்களுக்ுபயன் படுவது குறித்து மிக்வும் சந்தோஷம்.

Jaleela Kamal said...

வா அலைக்கும் சலாம் சகோ .ஹைதர் அலி வ்ருகைக்கு நன்றி

Jaleela Kamal said...

.சலாம் சகோ. ஆஷிக். எனக்கு இந்த கலையை ஐந்தாவது படிக்கும்போதே எங்க தாயார் கற்றுக்கொடுத்து விட்டார்கள்/

உங்கள தாயார் கிரேட் தான்.

//இப்படி முடிச்சு போட்டு தைக்காததால்தான் மெஷின் ஸ்டிச்ட் ரெடிமேட் பட்டன் அடிக்கடி பிரிந்து காணாமல் போய் விடுகிறது.//

அஆமாம்.
நான் சொல்லி உள்ளது போல தைத்தால். பட்டன் அறுந்தே போகாhது

Jaleela Kamal said...

//என்னங்க இப்படி பதிவு போட்டியள். இதை என்ரை ஆத்துக்காரி செல்லம்மா படிச்சா அப்புறம் பட்டன் தைக்கிறதும் நம்ம வேலையாயிடும்//

அம்பலதட்தார் இத இன்னும்உங்கள் ஆத்து காரி படிக்கல ட்ானேதைரியம இருங்க

Jaleela Kamal said...

உங்க அருமையான கமெண்ட்டுக்கு மிக்க நன்றிஆசியா.

Jaleela Kamal said...

வாங்க லஷ்மி அக்கா நேரம் இருக்கும் போது வந்துபார்க்கிற்ேன், எழுத்ு கிறெேன்
பதி பற்றி ஒன்ற்ம் சொல்லாம பொய் விட்டீர்கலே

Jaleela Kamal said...

நன்றி பாயிஜா உங்கள் எம்ராய்டரி வொர்கில் இது ரொம்ப் சுலப்ம் தான்

Jaleela Kamal said...

வருகைக்கு் மிக்க நன்றி ஸ்டார்ஜன்

Jaleela Kamal said...

கருத்துக்கு மிக்கa நன்றி யுஜின்

Jaleela Kamal said...

ஆமாம்
அதி்ரா சும்ம்ம சின்ன் சின்ன தையல்க்ள்

Jaleela Kamal said...

சித்ரா வாங்க இங்கு சின்ன சின்ன சுலப தையல்கள் சொல்லி கொடுக்கலம் என இருக்கிறேன்.

asiasaran said...

அருமை.

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா