ஜி மெயில் தகவல் திருடப்படுகிறதா ?
மின்னஞ்சல் பயன்பாட்டில் ஜிமெயில் அக்கவுண்ட் முதல் இடத்தில் உள்ளது. மின் அஞ்சல் வசதியை அடிக்கடி பயன் படுத்தாதவர்களும், எதற்கும் இருக் கட்டுமே என்று ஒரு ஜிமெயில் அக்கவுண்ட்டை வைத்திருப்பார்கள்.ஜிமெயில் தளத்தில் இப்போது புதியதொரு வசதி கிடைக்கிறது. இது ‘Last account activity’ என அழைக்கப் படுகிறது. இந்த வசதியை இயக்கிவிட்டால், உங்கள் ஜிமெயில் தளத்தை கடைசியாக யாரெல்லாம் அணுகிப் பார்த்தார்கள் என்ற பட்டியல் காட்டப்படுகிறது. கம்ப்யூட்டரில் பிரவுசர் வழியாகவோ, பி.ஓ.பி. மெயில் கிளையண்ட் வழியாகவோ அல்லது மொபைல் போன் மூலமோ, எந்த வகையில் உங்கள் ஜிமெயில் பார்க்கப் பட்டிருந்தாலும், அதனை இந்த வசதி பட்டியலிடுகிறது. எந்த ஐ.பி. முகவரியிலிருந்து இது பார்க்கப்பட்டது என்று காட்டுகிறது. வழக்கத்திற்கு மாறாக ஏதேனும் ஒரு ஐ.பி. முகவரியிலிருந்து உங்கள் ஜிமெயில் தளம் திறக்கப் பட்டிருந்தால், அதனைக் காட்டி எச்சரிக்கை செய்கிறது. எந்த நாள், நேரம் என்பவையும் பட்டியலில் கிடைக் கின்றன.
இதனைக் காண உங்கள் ஜிமெயில் தளத்தின் கீழாக, Last account activity என்ற வரிக்கு அருகே Detailsஎன்பதில் கிளிக் செய்திடவும். உடன் தகவல்கள் அடங்கிய பட்டியல் கிடைக்கும்.
இந்த பட்டியலில் Access type என்பதில், என்ன மாதிரியான வகையில் (பிரவுசர், மொபைல் போன்,பி.ஓ.பி. கிளையண்ட் போன்றவை) உங்கள் தளம் அணுகப்பட்டது என்று காட்டப்படுகிறது. இந்த பட்டியலில் நீங்கள் பயன்படுத்தாத வகை எதுவும் காணப்பட்டால், உடனே உங்கள் அக்கவுண்ட் தகவல்களை (யூசர் நேம், பாஸ்வேர்ட்) யாரோ திருடி இருக்கிறார்கள் என நீங்கள் அறிந்து கொள்ளலாம். எடுத்துக் காட்டாக, நீங்கள் மொபைல் போன் வழி இணையத்தைப் பார்க்கும் வழக்கம் இல்லாதவராக இருந்து, பட்டியலில் மொபைல் போன் வழி பார்க்கப்பட்டது காட்டப்பட்டால், உங்கள் அக்கவுண்ட் திருடு போயுள்ளது என அறியலாம்.
அடுத்ததாக, Location (IP address) என்ற தலைப்பின் கீழ், உங்கள் ஜிமெயில் அக்கவுண்ட்டை அணுகிய பத்து ஐ.பி. முகவரிகள் தரப்படுகின்றன. இதில் சந்தேகப்படும்படியான ஐ.பி. முகவரிகள் எச்சரிக்கப்பட்டு காட்டப்படுகின்றன. இவ்வாறு ஏதேனும் காட்டப்பட்டால், உடனடியாக உங்கள் ஜிமெயில் அக்கவுண்ட்டின் பாஸ்வேர்டினை மாற்றுவது நல்லது.உங்களுடைய ஐ.பி. முகவரியும் பட்டியலில் இருக்கும். இது உங்களுடையதுதானா? என்று எப்படி அறியலாம். இணைய இணைப்பு பெறுபவர்களுக்கு, ஒவ்வொரு முறையும் ஒரு ஐ.பி. முகவரி தரப்படுகிறதே என்ற சந்தேகம் உங்களுக்கு வரும். நீங்கள் பயன்படுத்தும் இணைய இணைப்பின் ஐ.பி. முகவரியின் முதல் இரு எண்கள் எப்போதும் மாறாமல் இருக்கும். எடுத்துக்காட்டாக, 172.16.xx.xx என்ற எண்ணில் இங்கு காட்டப்பட்டுள்ள முதல் இரு எண்களும், நீங்கள் ஒரே இணைய இணைப்பைப் பயன் படுத்தினால் எப்போதும் மாறாமலே இருக்கும். அதே போல, மொபைல் போன் வழியே ஜிமெயில் காண்பவர்களுக்கு, மொபைல் சேவை வழங்கும் நிறுவனத்தின் முதல் எண்கள் மாறாமல் இருக்கும். இவற்றிலிருந்து உங்களுடைய ஐ.பி. முகவரியினை அடையாளம் தெரிந்து கொள்ளலாம்.www.kalvikalanjiam.com
ஒரே நேரத்தில், இருவேறு கம்ப்யூட்டர் களில், இரு வேறு இணைய இணைப்பு மூலம் ஜிமெயில் அக்கவுண்ட்டினை அணுகினால், அவை Concurrent sessions என்பதன் கீழ் தரப்படும்.
தகவல்களைத் திருடியவர்களும் இதே போல பட்டியல் பெற்று, உஷார் ஆகலாமே? என்று நாம் எண்ணலாம். ஜிமெயில் தளம் மிகக் கவனமாக இதனைக் கையாள்கிறது. வழக்கத்திற்கு மாறான ஐ.பி. முகவரிகளில் இருந்து அக்கவுண்ட் பார்க்கப்பட்டதாக இருந்தால், அந்த முகவரிகளுக்கு இந்த எச்சரிக்கைப் பட்டியல் காட்டப்படாது.
நம் அக்கவுண்ட் தகவல்கள் திருடப் பட்டுவிட்டன என்று உறுதியாக அறிந்தால், பாஸ்வேர்ட் மாற்றுவதுடன், கூகுள் http://www.google.com/help/security/என்ற முகவரியில் தரப்படும் எச்சரிக்கை நடவடிக்கைகளையும் பின் பற்றவும்.நான் அடிக்கடி கம்ப்யூட்டர், இணைய இணைப்பு, மொபைல் போன் ஆகியவற்றை மாற்றி என் ஜிமெயில் தளத்தினை அணுகுகிறேன். எனவே இது போலக் காட்டப்படும் எச்சரிக்கை பட்டியல் எனக்குத் தேவையில்லை என்று கருதுகிறீர்களா? அப்படியானால், இந்த வசதி இயங்குவதை நிறுத்திவிடலாம். இந்த பட்டியலின் கீழாக இதற்கான வசதி தரப்பட்டிருக்கிறது. ஆனால், நீங்கள் ஆப்ஷன் தெரிவித்து ஒரு வாரம் கழித்தே இந்த வசதி நிறுத்தப்படும்.
Tweet | ||||||
16 கருத்துகள்:
அடிக்கடி பார்க்கும் விஷயம் தான்
பகிர்வுக்கு நன்றி அக்கா
பயனுள்ள தகவல்கள்.பகிர்ந்ததுக்கு மிக்க நன்றி ஜலி.
Very useful post Jaleela..
இந்த இடுகையை பதிவர் தென்றல் இதழில் பயன்படுத்திக்கொள்ள தங்களின் அனுமதி தேவை. அதோடு பதிவையும் யுனிகோட் எழுத்ருவிலேயே எனது மெயிலுக்கு அனுப்பி வையுங்கள். தங்கள் பெயருடன், வலைத்தள முகவரியுடனும் இதழில் வெளியாகும். நவம்பர் இதழ் தயாரிப்பில்...
நன்றி. அன்புடன் அன்புமணி விவரங்களுக்கு தகவல் மலர் வலைத்தளம் பாருங்கள்.thagavalmalar.blogspot.com
thambaramanbu@gmail.com
உபயோகமான இடுகை.
Good one ..thanks for sharing
All in all Jaleelakka vazhka...:)
அஸ்ஸலாமு அலைக்கும்
அனைவருக்கும் பயனுள்ள பதிவு. அடுத்தவர்கள் மெயிலை பார்க்கும்
திருடர்களுக்கு இனி பயம் வந்துவிடும் . பகிர்வுக்கு நன்றி.
பகிர்வுக்கு நன்றி ஜலீலா..
ஃபேஷன் நகைகள் செய்ய தேவையான பொருட்களை எங்களுக்கு ஒரு போன் கால் மூலமாகவோ அல்லது ஒரு மெயில் மூலமாகவோ தொடர்புக்கொண்டால் உங்கள் வீடு தேடி கூரியர் மூலமாக பொருட்களை அனுப்பி வைக்கிறோம்..
பொருட்கள் தேவைக்கு தொடர்புக்கொள்ளவும்:
moosa shahib
e.mail : moosafs69@gmail.com
contact no: 0476 - 3293737 Mobile no : 09387044070
NEW JANATHA FANCY JEWELLERY
B.R.Complex, K.S.R.T.C.Bus Stand,
Thevarkaavu Road
karunagappally - 690518
ரொம்ப நன்றிங்க...
ஆமினா
ஸாதிா அக்கா
ப்ரியா
அனைவருக்கும மிக்க நன்றி\
குண்ட்தை அன்புமணி வருகைக்கு மிக்க நன்றி
நான் பிறகு மெயில் செய்கீறேன்
வாங்க நாஞ்சிலாந்தா ஏதோது ரொம்ப மாதம் கழித்து வந்து இருக்கீங்க
வருகைக்கு மிக்க ந்ன்றீ
வா அலைக்கும் சலாம் ஆயிஷா அபுல், கருதது தெரிவித்தமைக்கு மிக்கந்னறீ
மிக்க நன்றி...
ரொம்ப நல்ல பயனுள்ல பதிவு, பகிர்வுக்கு நன்றி
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா