Tuesday, December 19, 2017

மாதுளை குச்சி ஐஸ் - Pomegranate popsicles



மாதுளை பழம் கர்பிணி பெண்களுக்கு மிகவும் உகந்தது, கேன்சர் நோயை கட்டு படுத்தும், தோல் சம்பந்தப்பட்ட நோய்களை நிவர்த்தி செய்யும்.
மலட்டு தன்மை நீங்க ஆண் பெண் இருவரும் ஆறு மாதங்கள் தொடர்ந்து மாதுளை முத்துகளை சாப்பிட்டு வர குழந்தை பேறு உண்டாகும் என்று பெரியவர்கள் சொல்லி இருக்கிறார்கள்.

இரத்த சோகையை சீராக்கும். வாய் புண் மற்றும் வயிற்று புண்ணை ஆற்றும்.


அதை குச்சி ஐஸ்சாகவும் செய்து சாப்பிடலாம்








மாதுளை குச்சி ஐஸ்

மாதுளை – 6 பழம்
தண்ணீர் – 50 மில்லி
ஐஸ் கட்டிகள் – 5
ஸ்ட்ராபெர்ரி எசன்ஸ் – 2 துளி
சர்க்கரை – அரை கப்
குங்குமபூ – சிறிதளவு
வடிகட்ட மஸ்லின் துணி

முதலில் மாதுளை முத்துக்களை பிரித்து எடுத்து கொள்ளுங்கள்
மிக்ஸியில் மாதுளை முத்துக்கள், ஐஸ்கட்டிகள், மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு அரைக்கவும்.
அரைத்த கலவையை மஸ்லின் துணி அல்லது வடியில் வடித்து கொள்ளவும்.
அதில் சிறிது சாப்ரான் சேர்த்து ஐஸ் கிரீம் மோல்டில் ஊற்றி பிரீஜரில் 8 மணி நேரம் வைத்து எடுக்கவும்.
சுவையான மாதுளை குச்சி ஐஸ் ரெடி.

ஐஸ் கிரீம் மோல்ட் இல்லாதவர்கள் டீ குடிக்கும் கிளாஸில் வைத்து 4 மணி நேரம் முதலில் குளிர வைத்து இடையில் எடுத்து இரண்டு டூத்பிக்கை நடுவில் சொருகி  வைத்து மீண்டும் 4 மணி நேரம் வைக்கவும்.



Pomegranate popsicles
Pome Popsicle perfect summer treat
Pomegranate - 6 fruit
water - 50 ml
ice cube - 5
Strainer or muslin cloth
Strawberry essence – 2 drops
sugar – ½ cup 
saffron
In a blender (mixie), add Pomegranate and water,ice cubes and sugar blend well.
Strain the juice in a strainer or muslin cloth. Add saffron and
pour the pome juice  mix into ice cream mould keep it inside the freezer and refrigerate for 6 to 8 hours.
Enjoy.


https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

4 கருத்துகள்:

வெங்கட் நாகராஜ் said...

பார்க்கும் போதே சாப்பிடத் தோன்றுகிறது. இங்கே இப்போது குளிர்காலம்! சாப்பிட முடியாது! :)

'பரிவை' சே.குமார் said...

வாவ்.... சூப்பருல்ல....
அருமையா இருக்கே அக்கா...

Jaleela Kamal said...

வருகைக்கு நன்றி , இங்கும் சீசன் இல்லை ரொம்ப நாளா ட்ராப்டில் இருந்த போஸ்ட் அதான் போஸ்ட் பண்ணியாச்சு

Jaleela Kamal said...

நன்றி சே குமார்

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா