இது போட்டோ சரியாக வரவில்லை , பிறகு மறுபடி செய்தால் மாற்றுகிறேன்/
பகோடா விரும்பாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள் தெருவுக்கு தெரு ஒரு அவசர ஸ்நாக்ஸ் என்றால் பகோடா, வெங்காய பகோடா தான்..அதையே நாம் இன்னும் சுவையாக ஹெல்தியாக நாம் வீட்டில் காய்கறிகள் ( முட்டைகோஸ், சுரைக்காய்,கீரைவகைகள் ( பொன்னாங்கண்ணி, முருங்ககீரை, வெந்தய கீரை இது போல பல வகை கீரைவகைகள் சேர்த்து ஹெல்தியாக செய்யலாம்.
மொரு மொரு முருங்கக்கீரை பகோடா.
Crispy Moringa pakoda
நோன்புகலத்தில் நோன்பு கஞ்சிக்கு ஏற்ற சூப்பரான ஈசி சிற்றுண்டி
முருங்ககீரை முந்திரி பகோடா
தேவையான பொருட்கள்
கடலை மாவு - ஒரு டம்ளர்
அரிசி மாவு - கால் டம்ளர்
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
உப்பு - ஒரு தேக்கரண்டி
சோடா உப்பு - அரை தேக்கரண்டி
டால்டா - ஒரு குழிக்கரண்டி
கறிவேப்பிலை - அரை கைப்பிடி
வெங்காயம் - ஒன்று
பச்சை மிளகாய் - மூன்று
முந்திரி - ஐம்பது கிராம்
முருங்கக்கீரை – ஒரு டம்ளர்
தண்ணீர் - சிறிது
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
செய்முறை
முந்திரிப் பருப்பை லேசாக இரண் டாக பிளந்துவறுத்து கொள்ள வேண் டும்.
உப்பு, சோடா உப்பு, கடலை மாவை, மிளகாய் தூள்ஒன்றாக கலக்கி அதி ல் டால்டாவை சூடுப்படுத்திஊற்றி , பச்சைமிளகாய், முருங்க்ககீரை, கறிவேப்பிலையை பொடியாக அரிந்து போட்டு,வெங்காயத்தை நீளவாக்கில் அரிந்து போட்டு வறுத்தமுந்திரி பருப்பையும் சேர்த்து கெட்டியா க பிசறிகொள்ளவும்.
மாலை நேர சிற்றுண்டி,Street Food with healthy cooking,Drumstickleavespakoda,Moringa pakoda
Tweet | ||||||
1 கருத்துகள்:
மழை காலத்துக்கு ஏற்ற தின்பண்டம்.
சூப்பர் செய்முறை விளக்கம்.
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா