தேவையானவை
வேக வைக்க
துவரம் பருப்பு + சிறு பருப்பு - 50 கிராம்
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
சின்ன வெங்காயம் - 8
தாளிக்க
எண்ணை + நெய் - முன்று தேக்கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
பூண்டு - இரண்டு பல்
கருவேப்பிலை - இரண்டு ஆர்க்
சின்ன வெங்காயம் - 6
தக்காளி - ஒன்று பெரியது
கேரட் - ஒன்று
உப்பு - தேவைக்கு
சாம்பார் பொடி - ஒன்னறை தேக்கரண்டி
புளி - கொட்டை பாக்கு அளவு
கொத்து மல்லி தழை சிறிது
செய்முறை
1 . இரு வகை பருப்புகளையும் வேகவைத்து மசிக்கவும்.
2. தாளிக்க கொடுத்துள்ளவைகளை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து தாளித்து கேரட்டை வட்டவடிவமாக அரிந்து போடவும், தக்காளியை நான்கு துண்டுகளாக அரிந்து சேர்த்து , மஞ்சள் பொடி, உப்பு சேர்த்து வேகவிடவும்.
3. ஐந்து நிமிடம் கழித்து சாம்பார் பொடி சேர்த்து , புளியையும் கரைத்து சேர்த்து கொதிக்கவிடவும்.
4. காய் வெந்து மசாலா வாடை அடங்கியதும் வேகவைத்த பருப்ப மசித்து சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்கவிட்டு கொத்துமல்லி தழை தூவி இரக்கவும்.
சுவையான குழந்தைகளுக்கு பிடித்த கேரட் சாம்பார் ரெடி.
கேரட் ஜூஸ்
காஜர் கி ஹல்வா
I am sending these recipes toVegetable Marathon-Carrot,an event started by Silpa
டிஸ்கி: கேரட் சாம்பாரா இனிப்பா இருக்குமா?
இதில் குழந்தை உணவுகளும் தனி லேபிலில் கொடுத்துள்ளேன்.
இது குழந்தைகளுக்காக போட்டு உள்ளேன்
காரம் அதிகம் தேவை படுபவர்கள் பெரியவர்கள் ( நம்ம மங்குனி அமைச்சர் போல் ) சாம்பார் பொடியுடன் அரை தேக்கரண்டி மிளகாய் தூள் (அ) முன்று பச்ச மிளகாயை இரண்டாக ஒடித்து போட்டு கொள்ளவும்.
Tweet | ||||||
34 கருத்துகள்:
இன்று இங்கே முள்ளங்கி சாம்பார் மதியத்திற்கு
இதையும் சொல்லிடறேன் ...
will try this sambhar tomorrow for idly and let u know :)
இனிப்பு சுவை தெரியுமா? செய்து பார்க்கவேண்டும் தோழி.
Dosa and sambar looks very tempting.Thanks for sending it across to the event..
தோசை + கேரட் சாம்பார் சூப்பர்...
வணக்கம் உறவே
உங்கள் தளத்தினை https://www.valaiyakam.com இல் இணைக்கவும்..
நன்றி
வலையகம்.கொம்
www.valaiyakam.com
சூப்பர்ப் குறிப்பு....ஆனால் கேரட் சாம்பார் டிபன் ஐடம்ஸுற்கு தான் ரொம்ப நல்லா இருக்கும் என்பதால் இதனை அடிக்கடி செய்வதில்லை...
விதவிதமா சாம்பார் செய்து அசத்துறீங்க...
கேரட் சாம்பார் இனிக்காதா?
பகிர்வுக்கு நன்றி
கவுசல்யா,
அக்பர்
இதில் புளி சாம்பார் பொடி சேர்த்து வெந்ததும் கேரட்டில் அந்த அது ஊறி நல்ல இருக்கும்.
இதில் குழந்தை உணவுகளும் தனி லேபிலில் கொடுத்துள்ளேன்.
இது குழந்தைகளுக்காக போட்டு உள்ளேன்
காரம் அதிகம் தேவை படுபவர்கள் பெரியவர்கள் ( நம்ம மங்குனி அமைச்சர் போல் ) சாம்பார் பொடியுடன் அரை தேக்கரண்டி மிளகாய் தூள் (அ) முன்று பச்ச மிளகாயை இரண்டாக ஒடித்து போட்டு கொள்ளவும்.
இந்திய தொலைகாட்ச்சிகளில் முதல் முறையாக , சே.... பழக்க தோஷம் , இந்திய ப்ளாக்களில் முதன்முறையாக , திரைக்கு வந்து சில மாதங்களே ஆன... சே .. மறுபடியும் பார்ரா ... கேரட் சாம்பார் நம் ஜலீலா மேடம் பிளாக்கில் திரையிடப்பட்டுள்ளது , இது குழந்தைகளுக்கான சிறப்பு திரை படம் , அனைவரும் கண்டு மகிழ்வீர்
அருமையான பதிவு வாழ்த்துகள்..!
உங்களுக்கு ஓட்டு போட்டாச்சு..
தமிளிஷில் என் பதிவும் வந்திருக்கிறது
http://rkguru.blogspot.com/2010/06/blog-post_24.html
தோசையும் சாம்பாரும் பார்க்கும்போதே சாப்பிடனும்போல இருக்குது.
டெம்ப்ளேட் அருமை! குருவை மிஞ்சிய சிஷ்யையாக அதிக எண்ணிக்கையில் ஃபாலோவர்ஸ்....எக்கச்சக்க பதிவுகள்! கீப் இட் அப் அக்கா!!! வாழ்த்துக்கள்!!!
###########################
இன்னைக்கு தமிழ் 10ல் இனைக்க போனால் வைரஸ் இருப்பதாக ஏ வி ஜி சொல்லுது ஆகவே மக்களே உஷார்..
###########################
கேரட்ட நான் தனியா சாப்பிட்டுகிறேனே..!!
அந்த தோசை செட் பார்ஸல்......!!
அக்கா, தினம் ஒரு பதிவு போட்டு கலக்குறீங்க..... பாசி பருப்பை, துவரம் பருப்புடன் சேர்த்து சாம்பார் செய்ததில்லை. செய்து பார்க்கிறேன். நன்றி, அக்கா.
carrot sambar very delicious,yummy...thanks for the healthy recipes...
அக்கா பதிவு நல்லா இருக்கு
தோசை மட்டும் பார்சல். சாம்பார் நான் வைத்துக் கொள்கிறேன். :)))
வாழ்க வளமுடன்.
அன்னிக்கி பொரிச்ச நெத்திலி கருவாட்டையும், இந்த கேரட் சாம்பரையும் சேர்த்து வச்சு சாபிட்டால் ம்ம்ம் அள்ளிக்கிட்டு போகும். யாரங்கே,, நான் சாப்பிடப் போறேன்,, இப்படி குறு குறுன்னு பாக்காதீங்க... கண்திஷ்டி பட்டுடும்னு அம்மா சொல்லும். நான் இந்தப் பக்கம் திரும்பி உட்காந்துக் கிறேன்!!
சகோ ஜமால் தங்க மனி கிட்ட சொல்லியாச்சா?
இது குழந்தைகளுக்க்காக கொடுத்தது, ஹாஜருக்கு பிடிக்கும் செய்து கொடுக்க சொல்லுங்கள்.
சித்ரா செய்து பார்த்து வந்து சொல்லனும்.
Thanks for visit pj,
நன்றி சாரு
நன்றி வலையகம்
நன்றி கீதா ஆச்சல் இது டிபனுக்கு செய்தது தான் என் ப்பையன் சாப்பாட்டுக்கும் இது தான் வேண்டும் என்று சொல்லிவிட்டான்,
நன்றி மேனகா.
நன்றி அக்பர்
நன்றி கவுசல்யா.
அக்பர், கவுசல்யா, உங்கள் இருவரின் சந்தேகத்துக்கு அன்றே பதில் கொடுத்து விட்டேன்.
//இந்திய தொலைகாட்ச்சிகளில் முதல் முறையாக , சே.... பழக்க தோஷம் , இந்திய ப்ளாக்களில் முதன்முறையாக , திரைக்கு வந்து சில மாதங்களே ஆன... சே .. மறுபடியும் பார்ரா ... கேரட் சாம்பார் நம் ஜலீலா மேடம் பிளாக்கில் திரையிடப்பட்டுள்ளது , இது குழந்தைகளுக்கான சிறப்பு திரை படம் , அனைவரும் கண்டு மகிழ்வீர்//
அமைச்சரே எப்பேத்திலிருந்து இம்புட்டு நல்லவரா மாறினீர்.
ஹிஹி நெம்ப ச்ஜந்தோஷம் பாராட்டுக்கு.....
//அருமையான பதிவு வாழ்த்துகள்..!
உங்களுக்கு ஓட்டு போட்டாச்சு..
தமிளிஷில் என் பதிவும் வந்திருக்கிறது
http://rkguru.blogspot.com/2010/06/blog-post_24.html//
குரு உஙகள் வருகைக்கு மிகக் மகிழ்சி,
ஊருக்கு போவதால் யார் பதிவையும் படிக்கவில்லை.
முடிந்த போது வந்து படித்து கமெண்ட் போடுகீறேன்.
உங்கள் பாராட்டுக்கு, வருகைக்கு , ஓட்டு போட்டமைக்கு மிக்க நன்றி
//டெம்ப்ளேட் அருமை! குருவை மிஞ்சிய சிஷ்யையாக அதிக எண்ணிக்கையில் ஃபாலோவர்ஸ்....எக்கச்சக்க பதிவுகள்! கீப் இட் அப் அக்கா!!! வாழ்த்துக்கள்//
வாங்க குரு அடியேனில் தளத்துக்கு வருகை தந்தமைக்கு மிக்க நன்றி,+ சந்தோஷம்
நன்றி தெய்வ சுகந்தி
நன்றி சகோ.ஜெய்லானி, தமிலிஷ் சம்மிட் செய்ததத்ற்கு மிக்க நன்றி
சித்ரா பாசி பருப்பு சாம்பார் பிள்ளைகளுக்கு ரொம்ப பிடிக்கும்.
அதே போல் மசூர் தாலிலும் செய்வேன் ஹோட்டல் சாம்பார் போல் இருக்கும்.
நன்றி சித்ரா
premalatha thanks for coming and your valuable comment
நன்றி சசி குமார்
நன்றி சகோ ஹைஷ் தோசை தானே எத்தனை செட் பார்சல் வேண்டும்.
எம் அப்துல் காதர், காரட் சாம்பாருடன் கருவாடு ம்ம்ம்யம்மியாக இருக்குமே....
நன்றி
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா