Sunday, June 27, 2010

கொத்துமல்லி புதினா காம்பு,பேரித்த பழ சட்னி






தேவையானவை

பேரித்தம் பழம் - 8
ரெயிஸின்ஸ் - 4
கொத்து மல்லி காம்பு அரை கைபிடி, புதினா காம்பு கால் கைபிடி
வினிகர் - கால் ஸ்பூன்
வருத்து திரித்த சீரகம் - அரை தேக்கரண்டி
புதினா தழை - சிறிது
புளி - கொட்டை பாக்கு அளவு
மிளகாய் தூள் - கால் ஸ்பூன்
உப்பு - ஒரு சிட்டிக்கை




செய்முறை


1. பேரித்தம் பழத்தையும், ரெயிஸின்ஸையும் கால் டம்ளர் தண்ணீரில் ஊறவைக்கவும்
2.பேரித்தம் பழத்த்தின் கொட்டையை நீக்கி விட்டு மைக்ரோ வேவில் ஒரு நிமிடம் வேகவைக்கவும்.
3.ஆறியதும் அதனுடன் புளி,மிளகாய் தூள்,உப்பு,கொத்து மல்லி புதினா காம்பு, வினிகர் எல்லாவற்றையும் சேர்த்து அரைத்து எடுக்கவும்.




குறிப்பு
இதில் கொத்துமல்லி, புதினா தழை சேர்த்து அரைப்பார்கள் நான் காம்புகளை சேர்த்து அரைத்துள்ளேன்.

சாமோசா, சோமாஸ்,எல்லா வகையான வடை பஜ்ஜி, ஸ்பிர்ங் ரோலுக்கு பொர்ந்தும்.



இனிப்பு சட்னி அடுத்த பதிவில் போட்கிறேன்.





I am sending this recipe to "Best out of Waste" started by nithu

19 கருத்துகள்:

SUFFIX said...

சுவையான சட்னி, வாழ்த்துக்கள்.

இமா க்றிஸ் said...

குறிப்பு நல்லா இருக்கு. ;)

ஸாதிகா said...

இனி புதினா காம்பு குப்பைக்கு போகாது.

Asiya Omar said...

அருமையாக இருக்கு,சாட் கார்னர்ஸில் பானிபூரிக்கு தருகிற புளித்தண்ணீர் முடிந்தால் கொடுங்கள்.அது வேறா?இது தானா? நிறைய குக்கிங் காண்டஸ்டில் கலந்து அசத்துறீங்க.பாராட்டுக்கள்.

Kanchana Radhakrishnan said...

இனி புதினா காம்பு குப்பைக்கு போகாது
அருமையாக இருக்கு.

Riyas said...

ம்ம்ம் சுவை..

Menaga Sathia said...

சூப்பர்ர்...

Jaleela Kamal said...

அருமையாக இருக்கு,சாட் கார்னர்ஸில் பானிபூரிக்கு தருகிற புளித்தண்ணீர் முடிந்தால் கொடுங்கள்.அது வேறா?

ஆசியா அதே ருசி இதில் கிடைக்கும். பேரித்தம் பழம், ரெயிசின், சேர்க்காமல். ஒரு கை பிடி அளவு , புதினா கொத்துமல்லி , கூட கொஞ்சம் புளி, மிளகாய் ட்தூள் சேர்த்து அரையுங்கல்
ரொம்ப அருமையாக நீஙக்ள் கேட்கும் சாட் கிடைக்க்கும்.

தூயவனின் அடிமை said...

சகோதரி அருமையாக உள்ளது.

பனித்துளி சங்கர் said...

எனக்கு மிகவும் பிடித்த சட்னி அருமை . பகிர்வுக்கு நன்றி

ஜெய்லானி said...

வித்தியாசமா இருக்கு. இனிமேல வேஸ்டுன்னு சொல்ல ஒரு பொருள் கிச்சன்ல இருக்காது போல..!! சூப்பர்.

ஜெய்லானி said...

ஆஹா..கமெண்ட் கவுண்டிங்ல செஞ்சுரி போட்டாசு.. ஸ்பெஷல் பிரைஸ் எதுவும் கிடைக்குமா..???

சிநேகிதன் அக்பர் said...

வேஸ்ட்ல டேஸ்டா சமையல் செய்றீங்களே நீங்க ஆல் இன் ஆல் தான்.

சீமான்கனி said...

ஜலி கா இந்த சட்னி வட இந்தியர்கள் ஸ்டைல் தானே...வித்யாசமா இருக்கு...

GEETHA ACHAL said...

அருமையான குறிப்பு....சுவையான சட்னி..

Jaleela Kamal said...

ஆமாம் தம்பி, சீமான் கனி வட இந்தியர்கள் சட்னி தான்

எல் கே said...

arumai super jaleela

athira said...

ஊருக்குக் கொண்டுபோவதற்காகச் செய்தீங்களோ சட்னி?

vanathy said...

akka, super recipe!

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா