Tweet | ||||||
Sunday, September 18, 2011
வாங்க ஆரஞ்சு, சாத்துகுடி பழத்தை சுலபமாக உரிக்கலாம்
//அரசியல் வாதிகள் உண்ணாவிரதம் இருக்கும் போது அவர்களுக்கு இந்த ஆரஞ்ச் ஜூஸ கொடுத்து தான் உண்ணாவிரதத்த முடிப்பாங்க, இழந்த தெம்பை , எனர்ஜியை மீட்டு கொடுக்கும் அதுக்கு தான் இந்த ஜூஸ கொடுத்து உண்ணவிரத்தத்த சுமூக ம முடிக்கிறாங்க.//
எல்லா வகை பழங்களிலும் சாத்துகுடி பழம் உடம்பிற்கு மிகவும் நல்லது,
நோயாளிகளை நலம் விசாரிக்க போனால் கண்டிப்பா ஒரு பையில் சாத்துகுடியோடு போவார்கள்.
அதே போல் இஸ்லாமிய இல்ல திருமணங்களில் கல்யாண நாள் அடுத்து வைக்கும் மாப்பிள்ளை தஸ்தரில் பல வகையான பழங்களில் இந்த சாத்துகுடியும் ஒன்று.
பழங்கள் சாப்பிடுமுன் அதை நேர்த்தியா கட் பண்ணிவைத்தால் பார்கக்வும் அழக்காக இருக்கும்.
ஊரில் இந்த சாத்துகுடி பழம் பச்சை கலரில் இருக்கும் இங்கு கமலா பழம் போலவே இருக்கும்.
எப்படி சுலபமாக உறிக்கலாம், தெரியுது (ஆமா புரியுது புரியுது இத பெரிசா சொல்லி கொடுக்க வந்துட்டாங்களாக்குமுன்னு ) நீங்க முனு முனுப்பது தெரியுது ம்ம் பிடிச்சவங்க படிங்க , சிலருக்கு இதை உறிக்கும் முன் போதும் போதும் என்றாகிடும், நகத்தை வைத்து கீறி பிச்சி எடுப்பார்கள்.
இந்த ஆரஞ்சு பழத்த எடுத்து மேலே தலை பகக்ம் வால் பக்கம் முதலில் அரிந்து கொள்ளுங்கள்.
சைடில் படத்தில் காட்டியுள்ளபடி குறுகாக எட்டு கோடு போட்டு கீறி விட்டு கொள்ளுங்கள்.
அப்படியே கீற்று கீற்றாக பிரித்தெடுக்க வேண்டியது தான்
படத்தில் உள்ளது கேரட் ஆரஞ்ச் ஜூஸுக்காக கட் பண்ணியது குறிப்பு அடுத்து பிறகு பார்க்கலாம்.
பிரித்து இப்போது சுளையாக பிரித்தெடுக்கவும்.
அந்த சுளையை பின்பக்கம் கத்தியால் கீறி பிரித்தால் இப்படி வரும்.
நடுவில் உள்ள கொட்டைகளை நீக்கிவிட்டு இப்படி அடுக்கி வைக்கவும்.
இஸ்லாமிய இல்ல திருமனத்தில் நடக்கும் மாப்பிள்ளை தஸ்தரில் இப்படி தான் அரிந்து வைப்போம்.
இப்படி நோகாம எடுத்து சாப்பிட்டா எப்படி இருக்கும்.
இன்னும் என் தங்கை பஷிரா அதையும் பிரித்து சர்க்கரை தூவி ஒரு ஸ்பூன் போட்டு பிள்ளைகளுக்கு கொடுப்பாள்.
ஆனால் ரொம்ப புளிப்பாக உள்ள சாத்துகுடி, ஆரஞ்சை இப்படி பிரித்து சர்க்கரை (அ) குளுக்கோஸ் ஒரு சிட்டிக்கை உப்பு தூவி சாப்பிடலாம்.
இப்ப டிப்ஸ் டிப்ஸ் டிப்ஸ்
1. பிள்ளைகளுக்கு நம்பர் 2 போக ரொம்ப டைட்டாக இருந்தால் இது போல் சாத்துகுடியை பிரித்து போட்டு சாப்பிட வைத்தால் பிரியாகும்.
2. அரசியல் வாதிகள் உண்ணாவிரதம் இருக்கும் போது அவர்களுக்கு இந்த ஆரஞ்ச் ஜூஸ கொடுத்து தான் உண்ணாவிரதத்த முடிப்பாங்க, இழந்த தொம்பு, எனர்ஜியை மீட்டு கொடுக்கும்.அதுக்கு தான் ஒரு பெரிய டம்ளர் முழுவது ஆரஞ்ச் ஜூஸ் கொடுப்பார்கள்.
3. மசக்கை நேரத்தில் கர்பிணி பெண்களுக்கு ஏற்படும் வாய் கசப்பிற்கு சாப்பிட அருமையாக இருக்கும்.
4. புளிப்பு பழத்தை மற்ற பழத்துடன் சேர்த்து சாலட் போல் செய்து போல் செய்து சாப்பிடலாம்.
5. லோ பிரஷரினால் அடிக்கடி மயக்கம் வந்தால் இரண்டு ஆரஞ்சு பழத்தில் ஜூஸ் எடுத்து உப்பு சர்க்கரை ( அ) குளுக்கோஸ் கலந்து குடித்தால் உடனே நல்ல கேட்கும்.(இது என் அனுபவம்)
Subscribe to:
Post Comments (Atom)
38 கருத்துகள்:
உபயோகமான பகிர்வு ஜலி.நானும் சாத்துக்குடிக்கு இப்படித்தான் தோலெடுப்பேன்.மாதுளை முத்துக்களை எப்படி பிரித்தெடுப்பது என்று தெரிந்தால் போடுங்கள்
துபை லூலூ செண்டரில் அண்னாசிப்பழத்தை தோ;ல் எடுத்து மெஷினாலே கட் செய்து பேக் செய்து விற்பதை கண்ணால் கண்டு ஆச்சரியப்பட்டு இருக்கிறேன்.
ஸாதிகா அக்கா
மாதுளைதான் ஈசியாச்சே
நாலா பிரிச்சிட்டு ஒரு ஸ்பூனால் தட்டினால் எல்ல்லாம் வந்துடும்.
லுலு கேரி ஃபோர்ரில் அன்னாச்சி பழத்த அழகா மிஷினில் கட் பண்ணி வைத்துஇருப்பாங்க நம க்கு அப்படி கட் பண்ண வராது.
அங்கு போனாலே ஒரு பாக்கெட் வாங்கிடுவது.
இங்கே டின்னிலும் வட்ட வடிவ ஸ்லைசா கட் பண்ணது இருக்கும்/
பைனாப்பிள் சாலட்க்கும், ஃப்ரூட் கஸ்டடுக்கும் வாங்குவேன்
சலாம் ஜலீலாக்கா
எனக்கும் புளிப்பு வஸ்துக்கும் ரொம்ப காலமாவே சண்டையாக்கும் :-) தெளிவா சொல்லி கொடுத்துருக்கீங்க
தமிழ்மணத்துல இணைச்சுட்டேன் அக்கா
ஆமினா எனக்கும் தான் , ஆரஞ்சோ சாத்துக்குடியோ யாரும் சாப்பிட்டு பார்த்து இனிப்புன்னு சொன்னாதான் முன்பெலலாம் சாப்பிடுவேன்.
தலை வலி இருப்பவர்களுக்கு புளீப்பா இருந்த உச்சந்தலையில் ஏறிடும்.
அதற்கு பிறகு ஜூஸ் , சாலட் , ஃப்ரூட் சாலட் இதுபோல் செய்து சாப்பிடுவது.
நோன்பு காலத்தில் எது இருந்தாலும் ஆரஞ்சு பழம் கண்டிப்பா இருக்கனும் , இந்த முறை வாங்கிய ஆரஞ்செல்லாம் புளிப்பு.
அதான் சாலட், ஜூஸ், இது போல் கட் பண்ணி சர்க்கரை, கமலா பழ கேசரி என செய்தாச்சு.
( தமிழ் மனத்தில் இனைத்தமைக்கு மிக்க நன்றி)
நல்ல பகிர்வு ,நானும் இப்படி தான் உரிப்பது வழக்கம்,எனக்கு பிடித்த பழமே ஆரஞ்சு அதுவும் கமலா ஆரஞ்சு, சுளையை உரிக்காமலே சாப்பிடுவேன்.
அஸ்ஸலாமு அலைக்கும்
பகிர்வுக்கு நன்றி.
தெளிவா சொல்லிருக்கீங்க,பகிர்வுக்கு நன்றி!!
அஸ்ஸலாமு அலைக்கும்
உண்மை தாங்க சாத்துக்குடி பழ தோல் உரிக்கிறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிரும்... மெத்தேட சொல்லிட்டீங்கள்ள இனி ஃபாலோ பண்ணிர வேண்டியதான்... பகிர்வுக்கு நன்றி
ஆரஞ்சை நான் அப்படி பிச்சு உதறிகிட்டிருந்ததைப் பாத்து, இப்படி உரிக்கணும்னு எங்க வாப்பாதான் எனக்கு கல்யாணமான புதுசுல சொல்லித் தந்தாங்க... ஹி.. ஹி..
//ஸாதிகா said...
மாதுளை முத்துக்களை எப்படி பிரித்தெடுப்பது என்று தெரிந்தால் போடுங்கள்//
அக்கா, ரெண்டு பாதியா குறுக்குவாட்டில வெட்டிட்டு, பின்பக்கம் குழிக் கரண்டியால நாலு தட்டு தட்டினா பொல பொலன்னு உதுந்துடும். இது எங்க பெரிய மைனி சொல்லித் தந்தது.. (சொந்தமா எதுவுமே தெரியாது எனக்கு ஹி.. ஹி.. ) :-))))
ஜலீலாக்கா, நீங்க நாலாவெட்டி தட்டுவீங்களா, அப்படியா.
very nice tips and sure will be good for serving a diet friendly attractive snack.
தெரிந்ததை இன்னும் சுலபமாக சொல்லிக் கொடுத்திருக்கிறீர்கள். இப்படி யாராவது விதைகளை எல்லாம் நீக்கிக் கொடுத்தால் நல்லாத்தான் இருக்கும். வாழைப் பழச் சோம்பேறி என்பது போல ஆரஞ்சுச் சுளை சோம்பேறி என்று பெயர் வந்து விடுமே...!
hope all is well in your end was trying to find the blog that was in english :)
regards Akheela
torviewtoronto and createwithmom
இங்கே ரெஸ்டாரண்டுகளில் சாத்துக்குடி ஜூஸை கஸ்டமர்கள் முன்னாடிதான் தயாரிப்பாங்க. அவங்களும் இப்படித்தான். தோலை உரிப்பாங்க. இதே முறையில் மாதுளம்பழத்தையும் உரிக்கலாம். தோலுரிச்சுட்டு, முத்துக்களை மெதுவா உதிர்த்து எடுத்துடலாம். ஃப்ரூட் சாலட்ட்டுக்கு நான் இப்படித்தான் உரிப்பேன். ஒரு சொட்டு சாறு கூட கசியாது. வெட்டினால் கண்டிப்பா சாறு கசியும் :-)
அழகாய் சொல்லியிருக்கீங்க
கொஞ்சம் உப்பு போட்டு சாப்பிடுவேன், க்ளுகோஸ் கூட நல்ல சாய்ஸ்தான் ...
ரொம்ப அருமையாக அனைவருக்கும் பயனுள்ள பகிர்வு...
இது எப்பவும் கஸ்டமான வேலை..நீங்க சொன்ன யோசனை அருமை..
tamilmanam 10 th vote
//இப்படி நோகம எடுத்து சாப்பிட்டா எப்படி இருக்கும்//
நல்லா இருக்கும்.
ரொம்ப நன்றிங்கோ....
சொல்ல மறந்துட்டனே...
தமிழ் மணம் 11
ஜலீலாக்கா.... ரொம்ப பொறுமையாகப் பதிவு போட்டிருக்கிறீங்க. சாத்துக்குடியை உப்பூடி உரித்து வெட்டவும் பொறுமை வேணும்.
அழகாக இப்படி ஆராவது உரித்து டிஸ் இல் போட்டுத் தந்தால், நானும் சப்பிடுவேனே:))).
//1. பிள்ளைகளுக்கு நம்பர் 2 போக ரொம்ப டைட்டாக இருந்தால் இது போல் சாத்துகுடியை பிரித்து போட்டு சாப்பிட வைத்தால் பிரியாகும்.//
100 வீதமும் உண்மை.
//அமைதிச்சாரல் said...
இதே முறையில் மாதுளம்பழத்தையும் உரிக்கலாம். ...வெட்டினால் கண்டிப்பா சாறு கசியும் :-)//
அமைதிக்கா, இதேபோல உரிக்கறதுக்கு, மாதுளையின் தோல் ரொம்பக் கடினமா இருக்குமே, வருமா? அடுத்த முறை செஞ்சுப் பாக்கணும்.
அழகாய் சொல்லியிருக்கீங்க.
ஆசியா சுளைய உரிக்காமன்னா எப்படி தோலோடா?
சும்மா தான்,
பிள்ளைகளுக்காக இப்படி ஈசியா கொடுப்போம்,
கல்யாணவீடுகளிலும் இப்படி தான் வைப்போம்
வருகைக்கு மிக்க நன்றி
வா அலைக்கும் சலாம் ஆயிஷா அபுல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
கருத்துக்கு மிக்க நன்றி மேனகா
வா அலைக்கு சலாம் ராஜேஷ்
கொஞ்ச நாள் முன் சரியா பிரிக்காம மெஸாக்கி ஒருத்தங்க பிரிச்சிருந்தாங்க, அதான் இப்படி ஒரு டிப்ஸ் பதிவு, நிறைய பேருக்கு தெரிந்திருந்தாலும் சிலருக்கு உதவும் இல்லையா
தொடர் வருகைக்கு மிக்க நன்றி
ஹுஸைனாம்மா மாதுளை இரண்டு பக்கமும் கொண்டைய அரிந்து ட்டு நாலா வெட்டி உதிர்தாலே கூட் வந்துடும்.
வருகைக்கு நன்றி விக்கி
ஸ்ரீராம் யாரவ்து பிரித்து இப்படி கொடுத்தால் ரொம்ப சூப்பராக இருக்கு
நீங்க தான் முதல் முதல் ஆரஞ்சு பழ சோம்பேறின்னு பெயர் வைச்சி இரூக்கீங்க போல
ஹிஹி
சாந்தி நீங்கள் சொல்வது மிகச்சரியே, அப்படியே பிரித்தெடுத்தாலும் ஈசியாக வரும்
நன்றி சகோ ஜமால்.
குளுக்கோஸ் மயக்கத்துக்கு கேட்கும்.
லோ பிரஷர் உள்ளவர்கள் இப்படி சாப்பிடலாம்.
கருத்துக்கு மிக்க நன்றீ கீதா ஆச்சல்
சதீஷ்குமார் உங்கள் வருகைக்கு மிக்க ந்ன்றி
ஜலீலாக்காவ் ,எனக்கு கஷ்டமுன்னு சொன்னா தேங்காய் உறிப்பதுதான் ஹி..ஹி... அதை பத்தி ஒரு பதிவு போடுங்களேன் :-))) ((ஐயோ...இது பூஸ் கண்ணுல படாம இருக்கனுமே ))
ஜெய்லானி தேங்காய பிரிப்பது சின்னதில் இருந்து ரொம்ப இஷ்டமான வேலை.
பூஸார் பார்த்தா பெரீஈஈஈ ய பதிவு போடுவாங்க.
அஸ்ஸலாமு அலைக்கும்
சின்ன சின்ன விசயங்kalai
இப்படி இலகுவாக பதிவதும் ஒரு கலைதான் நல்ல முயற்சி பாராட்டுக்கள்
நன்றி
alkan
வா அலைக்கும் சலாம் அல்கான்
வருகைக்கும் உங்கள் அன்பான பாராட்டுக்கும் மிக்க நன்றி
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா