மல்டி பீன் சுண்டல் / கலவை பயறு சுண்டல்
Multibean Sundal
தேவையான பொருட்கள்
வெள்ளைகொண்டைக்கடலை
கருப்பு கொண்டைக்கடலை
கருப்பு உளுந்து
கொள்ளு
முழு பாசி பயிறு
காராமணி
ராஜ்மா ( கிட்னி பின்ஸ்)
பட்டாணி
எல்லாம் வகை கடலையும் கால் கிலோ
தாளிக்க
எண்ணை - 2 தேக்கரண்டி
பச்ச மிளகாய் - 3 ( பொடியாக நறுக்கியது)
கடுகு - ஒரு தேக்க்ரண்டி
கருவேப்பிலை - கை கால் கொத்து
உளுந்து பருப்பு - அரை தேக்கரண்டி
பெருங்காயப்பொடி - கால் தேக்கரண்டி
துருவிய தேங்காய் - அரை கப்
உப்பு - தேவைக்கு
கடைசியாக மேலே தூவ
லெமன் சாறு - ஒரு தேக்க்ரண்டி
கொத்துமல்லிதழை - சிறிது
சர்க்கரை - 2 சிட்டிக்கை
செய்முறை
எல்லாவகையான பீன் ( கடலைவகைகளையும் ) 8 மணி நேரம் ஊறவைக்கவும்.
இரவு ஊறவைத்து காலை செய்தால் சரியாக இருக்கும்.
நன்கு களைந்து குக்கரில் பயறு வகைகள் மூழ்கும் அளவிற்கு தண்ணீரை ஊற்றி வேகவைக்கவும்.
வெந்தததை வடிக்கட்டி தனியாக வைக்கவும்.
ஒரு வாயகன்ற சட்டியை காயவைத்து அதில் தாளிக்க கொடுத்துள்ளவைகளை சேர்த்து தாளித்து, கொத்துமல்லி, சர்க்கரை , லெமன் சாறு தூவி இரக்கவும்.
காலை நேர உணவுக்கு இட்லி தோசை, பொங்கல் என்று சாப்பிடாலம் ஒரு மாறுதலுக்கு இப்படி மல்டி பீன் சுண்டல் செய்து கூடவே அதற்கு ராகி குழிபணியாரம் ,மற்றும் ஏதாவது வெல்லம் கலந்த டிபன் வகை செய்து சாப்ப்பிடால் மிக அருமையாக இருக்கும், லைட் டிபன் ஆனால் ஆரோக்கியமான உணவு.
கவனிக்க:
இதையே முளைவிடவிட்டு (படத்தில் காட்டியுள்ள படி) அதில் காய் பழ வகைகள் கலந்து சாலடாகவும் செய்தும் சாப்பிடலாம்.
காலையில் ஊறிய பீன் வகைகளை வடிகட்டி , ஒரு ஈர துணியில் கட்டி மூட்டை போல் கட்டி ஒரு ஹாட் பாக்ஸில் முற்றிலும் மூடி வைக்காமல் லேசாக மூடி வைக்கவும். பயிறு வகைகள் முளைவிட்டுடும், அதை எடுத்து வேண்டிய (காய்கள் பழவகைகள் )சேர்த்து( கேரட், குக்கும்பர்,ஆப்பிள், திராட்சை லெமன் சாறு உப்பு மிளகு தூள் தூவி சாப்பிடலாம்.
Tweet | ||||||
1 கருத்துகள்:
ஆஹா... கலக்கலா இருக்கே அக்கா.
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா