Monday, March 13, 2017

அதே ருசி ஆனால் சைவம்




My 30 Veg recipes for Iftar special has been published in Kunkumam Thozi Monthly Magazine (Tamil) on 15th June 2016.
Thank you very much Vaidehi Ranganathan  for giving me the opportunity (15.06.2016)

2015 னில் குங்குமம் தோழியில் நோன்பு கால சமையல் வெளி வந்தது அதை தொடர்ந்து 2016 ஒரு சவாலாக நாங்க எங்க வீடுகளில் செய்யும் அசைவ சமையலை சைவமாக செய்து அனுப்பபசொன்னார்கள், இதில் அரபிக் பிரியாணி வகைகளையும் சைவமாக செய்துள்ளேன்.



இஸ்லாமிய வீட்டு விருந்தென்றால் அசைவப் பிரியர்களுக்கு வாயில் நீர் ஊறும்.
நோன்பு காலங்களில் இஸ்லாமிய வீட்டு விருந்து களில் இடம்பெறுகிற கஞ்சி முதல் கடைசியாகப் பரிமாறபடுகிற இனிப்பு வரை எல்லாம் அசைவ மயம் என்பதில் சைவ உணவுகாரர்களுக்கு கொஞ்சம் தர்மசங்கடம்.

உலகில் பிரபல உணவு களில் இஸ்லாமிய மெனுவுக்கு ஸ்பெஷல் இடம் உண்டு எப்போதும்.அசைவம் என்கிற காரத்துக்காகவே அந்த ருசி அனுபவத்தை மிஸ் பண்ணுகிறவர்களுக்கு அதை சைவமாக மாற்றி ஒரு ட்ரீட்கொடுத்துள்ளேன்.


அதிகாலையில் நோன்பு வைக்கச் செய்கிற பிரியாணி மற்றும் குழம்பு வகைகலில் தொடங்கி , மாலையில் நோன்பு திறக்க செய்கிற கஞ்சி, சிற்றுண்டிவகைகள் என எல்லாவற்றிலும் அசைவம் சேறர்ப்பது எங்கள் வழக்கம்.
இஸ்லாமிய உணவுகளின் உன்னத ருசியை மற்றர்வர்களும் அனுபவிக்க வேண்டும் என்பதற்காகவே நோன்பு கால ஸ்பெஷல் ரெசிபிகள் அனைத்திலும் அசைவத்தை முற்றிலுமாக தவிர்த்து சைவமாக மாற்றி செய்து காட்டி இருக்கேன். அசைவ உணவு காரர்களே சாப்பிட்டால் கூட அந்த அளவுக்கு துளியும் ருசி மாறமல் செய்து காட்டி இருக்கிறேன்.


நான் இதில் செய்து காட்டிய 30 குறிப்பில் மிக ரசித்து ஆச்சரயப்பட்ட ரெசிபி

ஆட்டு குடல் சால்னாவை பீர்க்கங்காய் கத்திரிக்காய் சால்னாவாக செய்துள்ளேன்.

அடுத்து கேரளா மீன் சால்னாவை கப்பக்கிழங்கு ( மரவள்ளி கிழங்கு) கில் செய்துள்ளேன்  அவ்வளவு அருமையாக இருந்தது.


30 வகை ரமலான் ஸ்பெஷல் சைவ சமையலில்
மற்ற இரண்டும் பிரியாணியும் சான்ஸே இல்ல.
இனி வரும் பதிவுகளில் அதை பதிகின்றேன். நீங்களும் ருசித்து உங்கள் கருத்தை தெரிவியுங்கள்.

இதில் எந்த ரெசிபி முதலில் வேண்டும் என்று யாராவது கேட்டாலும் அதை முதலில் போஸ்ட் செய்கிறேன்.


நேரம் கிடைக்கும் போது இங்கு  ஒவ்வொன்றாக போஸ்ட் செய்கிறேன்.

  1.  கேரளா ஸ்பெஷல் கப்பக்கறி
  2. கிரீன் கார்டன் சூப்
  3. ம்ஷ்ம்ம மசாலா நோன்பு கஞ்சி
  4. மலேசியா ஸ்பெஷல் டவுன்பாண்டன் இலை கடல் பாசி
  5. கலோட்டி கபாப்
  6. பீர்க்கங்காய் கத்திரிக்காய் சால்னா
  7. .ஹைத்ராபாத் வெஜ் பிரியாணி
  8. கோவைக்காய் பொரிச்ச கறி
  9. நூல்கோல் சேப்பங்கிழங்கு கொழுக்கட்டை ( தக்குடி)
  10. கம்பு பாலக்கீரை பத்திரி (தட்டு ரொட்டி)
  11. மஷ்ரூம் பீஸ் மினி சாண்ட்விச்
  12. ஏழுகறி சைவ நோன்புக்கஞ்சி
  13. சேனைகிழங்கு டிக்கா
  14. பாலக் பனீர் பால் சாண்ட்விச்
  15. கார்லிக் பனீர்
  16. காலிஃப்ளவர் மினி லாலி பாப் 65
  17. பலாக்காய் சோயா மற்றும் வெஜ்ஜி மக்பூலா (அரபிக் பிரியாணி)
  18. வெஜ் கட்லெட் லாலிபாப்
  19. பலாக்காய் உருளை குருமா
  20. ஸ்டீம்ட் ஃப்ரைடு மனி பேக்
  21. சேப்பங்கிழங்கு கபாப்
  22. ஈசி கொத்து புரோட்டா
  23. தில் கீரை ப்லாஃபல் சாண்ட்விச்
  24. மஷ்ரூம் கீரை புலாவ்
  25. தூல் துல்லாரி
  26. பீட்ரூட் கடலைபருப்புகறி ( பாகிஸ்தானி ஸ்டைல்)
  27. வாழைக்காய் புட்டு
  28. கேரட் சோயா சூப்
  29. டோஃபு புரோட்டா சாண்ட்விச்
  30. மஷ்ரூம் கூட்டு




 15.16.2016




tag: magazine, jaleela's Special Iftar Recipes, kungkumam thozi, 30 days Ramadan recipe, Vegetarian Recipes, Biriyani, Side Dishes, Agar Agar,Arabic Recipes, Hyderabad Recipes, Kerala Recipes


https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

4 கருத்துகள்:

Angel said...

வாவ் !!சூப்பர்
வாழ்த்துக்கள் ஜலீ .
எனக்கு கேரள ஸ்பெஷல் கப்பக்கறி அப்புறம் பீர்க்கை கத்திரி சால்னா ஹைதராபாத் வெஜ் பிரியாணி மூணு ரெசிப்பியும் வேணும்

கோமதி அரசு said...

நேரம் கிடைக்கும் போது ஒவ்வொன்றாக அனுப்புங்கள். நல்லதுதான்.
நீங்கள் குறிப்பிட்டு அனுப்பி இருக்கும் எல்லாமே நன்றாக இருக்கிறது.
நன்றி.

Jaleela Kamal said...

ஏன்சலின் கண்டிப்பாக நீங்க கேட்டது முதலில் போடுகீறேன்
கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி

Jaleela Kamal said...

கேமதி அக்கா வருகைக்கு மிக்க நன்றி

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா