சிக்கன் எலும்பில்லாதது - அரை கிலோ
கீரீம் - ஒரு மேசைகரண்டி
சீஸ் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு
இஞ்சி பூண்டு பேஸ்ட் - ஒரு தேக்கரண்டி
பச்ச மிளகாய் - 2
ஆலிவ் ஆயில்- ஒரு மேசைகரண்டி
தயிர் - ஒரு மேசைகரண்டி
ஒரிகானோ, ரோஸ்மேரி, பேசில், தைம் - 1 தேக்கரண்டி
செய்முறை
அரை கிலோ சிக்கன் எலும்பில்லாதது துண்டுகளாக வெட்டாமல் அப்படியே இங்கு கிடைக்கின்றன.
அதை முன்று இஞ்ச் நீளத்துக்கு பார்பிகியு குச்சியில் சொருகுவது போல் வெட்டி கொள்ளவேண்டியது.
மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து மசாலாக்களையும் போட்டு பிரட்டி. முன்று மணி நேரம் பிரிட்ஜில் வைக்கவும்.
கபாப் குச்சிகளை அரை மணி நேரம் வெண்ணீரில் ஊறவைத்து , கழுவி அதில் மேரினேட் செய்து வைத்துள்ள சிக்கன் சாட்டேக்களை நீளமாக சொருகி பிறகு ஆங்காங்கே லேசாகா கீறி விடவேண்டும்.
.
மேலே உள்ளது பார்பிகியு அடுப்பு வீட்டில் வைத்தே செய்வது.அதில் வைத்து இரண்டு பக்கமும் கிரில் செய்து எடுத்துள்ளேன்.
நீங்கள் உங்கள் வசதி படி பார்பிகியு அல்லது கேஸ் ஓவன் , அல்லது கேக் ஓவனில் வைத்து கிரில் செய்யவும், இல்லை கனமான தவ்வாவில் எண்ணை விட்டு மூடி போட்டு மிதமான தீயில் வேக விட்டு பொரித்தும் எடுக்கலாம்.
Chicken Lolipop
மேலே உள்ளது சிக்கன் லாலிபாப், அதே பார்பிகியு அடுப்பில் வெரும் இஞ்சி பூண்டு மிளகாய் தூள், உப்பு தூள் , லெமன் சேர்த்து பார்பிகியு செய்தது.
மேலே உள்ளது இறால் மட்டன் கீமா கபாப் ஏற்கனவே இங்கு போஸ்ட் செய்துள்ளேன். இது தவ்வாவில் வைத்து பொரித்தது.
பார்பிகியு, ஓவன் இல்லாதவர்கள் இதே மசாலாவை போட்டு தயாரித்து பொரித்தும் எடுக்கலாம்.
https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/
Tweet | ||||||
1 கருத்துகள்:
படங்கள் அருமை
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா