Sunday, March 29, 2015

சிறப்புவிருந்தினர் பதிவு 10 - மதுரை ஸ்பெஷல் உப்பு கறி/மட்டன் ஃப்ரை - ஃபரின் அஹமத்



ஃபரின் ஆங்கில பிலாக் தோழி, சமீபத்தில் தான் பிலாக் மூலம் பழக்கம்,
ஆனால் அவர்கள் (chennai) ஊரில் எங்க கடையில் (Chennai Plaza) இருந்து அவர்கள் சொந்த காரர்கள் மூலம் புர்கா ஷால் எல்லாம் வாங்கி இருக்கிறார்கள், வாங்கியது இல்லாமல் துணியின் தரத்தை பற்றியும் சொல்லி மெயில் செய்தார்கள் அப்போது தான் அவர்களும் பிளாக்கர் என்று தெரியவந்தது.

சமையல் என்பது ஒரு கலை சமையல் மேல் உள்ள ஆர்வத்தால் எவ்வளவு பிஸியிலும் , உடம்பு முடியலன்னா கூட ஒரு சின்னதா ஒரு சமையல் செய்ய எனக்கு பிடிக்கும். அதை இன்னும் மெருகேற்றி கலை நயத்துடன் ஒரு திரைபட ரேஞ்சுக்கு சொல்லி போஸ்ட் போட்டால் படிக்க எவ்வளவு சுவாரசியமாக இருக்கும் , அப்படி ஒரு பதிவுகள் தான் நான் ஃபரின் பிளாக்கில் பார்த்தது. நான் பரின் சமையல் மூவியின் ரசிகை யாகி விட்டேன்.

அவரகள் கிச்சனில் டைரக்ட் செய்து 50 நாள் , 100 நாள்  என்று பல நாட்கள் ஓடிக்கொண்டு இருக்கும் படங்கள் சில கிழே

http://www.farinsfunflavour.com/

கலர் கலர் ah காசா பூரி Movie on
முள்ளும் மலரும் முள்ளங்கி chutney movie on…
அவங்க விதவிதமாக வைத்துள்ள இந்த பெயரை விரும்பி படிக்கவே அங்கு போய் அங்கே தங்கிடுவேன்.

About jaleela akka:

'ஒரு வளர்ந்து வரும் என்னை மாதிரி இயக்குனர் குநடிக்க வாய்ப்பு கிடைச்சா எப்படி இருக்கும் .. அப்படி ஒரு சந்தர்பம்  Jaleela அக்கா மூலமாக எனக்கு கிடைத்தது  .. உடனே இயக்குனர் சேரன் மாதிரி ஞாபகம் வருதே ஞாபகம் வருதே  என்று   சொல்லி நானும் நடிக்க (guest post) கிளம்பிடேன்  ... ஆனா என்ன அவருக்கு மூன்று கதாநாயகி இருந்தாங்க , எனக்கு சினேகா மாதிரி
 'ஒரு அன்புத்தோழி Jaleela (அக்கா)மட்டும் தான்  .. 

அக்கா நம்ம டைரக்டர் பாரதிராஜா மாதிரி ,என்றென்றும்  மாறாத நம் தமிழ் மண்வாசனை  அவர்களின் வலைப்பூவில் வீசி கொண்டே இறுக்கும் . எனது இனிய தமிழ் மக்களே என்று சொல்லி சும்மா அறுசுவை விருந்து அக்காவின் வலைப்பூவில் ஏராளம். என்னவென்று சொல்லுவதுஅம்மா இந்த வஞ்சியின் சமையல் அட்டகாசங்களை , சொல்ல வார்தையேயில்லை...சமையலை தவிர்த்து இவுங்க ஒரு பெரிய Business  Magnet... Chennai Plaza வின் உரிமையாளர்..

ஒன்றாய் இரண்டாய் வலைபூ உனது , குழந்தை வளர்ப்பு , முத்தான துஆ க்கள்  என்று உண் கைவண்ணத்தை சொல்லிகொண்டே போகலாம் .. எல்லாம் வல்ல அல்லாஹ் நம் நட்பு என்னும் அழகான பூஞ்சோலையை எப்பொழுதும் தொடர வைப்பானாக ..ஆமீன் 


என்னைபற்றி சொல்லுற அளவுக்கு நான் அவ்வளோ பெரிய அப்பாடக்கர் இல்லை ...

Just ஒரு புதிய வளர்ந்து வரும் டைரக்டர் ..என்னோட ஓடுற படம், ஓடாத படம், மொக்க படம், காமெடி படம் என்று அணைத்து படத்தினை பார்க்க கிளிக் செய்யவும்.
அன்பான பெற்றோர் , முத்தான சகோதரர்கள், Romantic கணவன், அழகான குழந்தை, blessed friends என்று இறைவனின் அருளால் வாழ்கை என்னும் படம்Super ah ஓடுது .


Do A.R.Rahman needs a baby assistant? ? Am ready for composing!!! Start Music!!

Okay!!! உங்க Mind  Voice புரியுது, உன் படத்தோட கதைய சொல்லுவீங்களா இல்லையா தானே கேட்குறீங்க !!! இதோ படத்தின் கதைக்கு போவோமா ...

இன்றைய ரெசிபி உப்பு கறி, இது  மதுரையின் பாரம்பரிய உணவு மட்டுமல்ல எங்க மாமியாரின் Signature reciepe .


Just include 


Movie Name : உன்னாலே உன்னாலே உப்பு கறி 



Madurai Special Uppu kari

 மட்டன் - 300 கிராம்
வெங்காயம் - 2 பெரியது
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 மேசைகரண்டி
முழ்ய் சிவப்பு மிளகாய் பொடித்தது - 2 
கடுகு - ஒரு தேக்கரண்டி
கருவேப்பிலை - சிறிது
துருவிய தேங்காய் - 2 மேசை கரண்டி
உப்பு தேவைக்கு
எண்ணை - 1 மேசைகரண்டி



செய்முறை
மட்டனை சுத்தமாக கழுவி சிறிய துண்டுகளாக போடவும்.


குக்கரில் மட்டனுடன் இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து தேவைக்கு தண்ணீர் சேர்த்து 6 விசில் விட்டு இரக்கவும்.மட்டன் துண்டுகளை தனியாக எடுத்து வைக்கவும்.

ஒரு வாயகன்ற கடாயை சூடு படுத்தி கடுகு,கருவேப்பிலை,  சேர்த்து தாளித்து வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும்.
வெங்காயம் வெந்ததும் சில்லி ஃப்ளேக்ஸ் சேர்த்து வதக்கி வேக வைத்து வைத்துள்ள மட்டன் துண்டுகளை சேர்த்து மூடி போட்டு முன்று நிமிடம் வேகவிடவும். நன்கு மசாலாக்கள் ஒன்று சேர்ந்ததும் 
கடைசியாக துருவிய தேங்காய் சேர்த்து 2 நிமிடத்துக்கு கிளறி இரக்கவும்.
சுவையான மதுரை ஸ்பெஷல் பாரம்பரிய உப்புகறி ரெடி.

கட்டு சாதவகைகள் மற்றும் ரொட்டி சப்பாத்திக்கு சைட் டிஷ் ஆக வைத்துகொள்ளலாம்.

At the end ..

உங்க எல்லோருக்கும் இந்த உப்பு கருவாடு sorry உப்பு கறி  movie பிடிச்சுருக்கும் என்று நினைகிறேன் ..

இந்த் படத்தை பார்த்த அனைவருக்கும் Romba Dhanksu pa .. அப்படியே எல்லோரும் நம்ம Jaleela -அக்காக்கு ஒரு ஓ-O  Podunga ..


Madurai Uppu Kari

Ingredients:

Mutton – 300 gms
Onion – 2 big size chopped
Ginger garlic paste – 1 tbsp
Whole Dry red chilly-2
Turmeric powder- ½ tsp
Red chilly flakes- 1½ tbsp
Mustard Seeds- 1 tsp
Curry leaves- few sprigs
Grated coconut- 2 tbsp
Salt- as need
Oil- 1 tbsp

Method:

Wash and clean the mutton in to small pieces. In a pressure cooker add the mutton pieces + ginger garlic paste +salt + turmeric powder and required amount of water and pressure cook until the mutton gets cooked well for 6 whistles. Release the pressure and take the cooked pieces and keep aside

Heat oil in a pan add the mustard seeds, once it splutters add the Whole dry red chilly and curry leaves followed by chopped onions. Mix it well. Add some salt for onion

Once the onion gets cooked throw the Red chilly flakes, give a quick stir. Now add the cooked mutton pieces, Mix it nicely and close it with a lid.

After 5 mins, open the lid and again mix it well. Close the lid.. Again after 3 mins open and mix it well.. Now at this time, mutton has mixed up well with the onion mixture.. Now add the grated coconut and give a quick stir and let it sit for another 2 mins.

Switch off the flame and serve it hot!!!


அறுசுவை தோழிகள், தமிழ் குடும்ப தோழிகள்,முக நூல் தோழியர்கள் வலை உலக தோழ தோழியர்கள் மற்றும் இதை பதிவை பார்ப்பவர்கள் யாருக்கும் விரும்பம் உள்ளவர்கள் உங்கள் ஊரின் பாரம்பரிய சமையல் குறிப்புகளை என்னுடன் இங்கு பகிர்ந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

என்ன குறிப்பாக இருந்தாலும், அதாவது டிபன் வகைமதிய உணவிற்கு செய்யும் கறி வகைகள்மாலை நேர சிற்றுண்டி மற்றும் இரவு சாப்பாடு வகைகள்.குழந்தைகளுக்கு செய்யும் உணவு, கர்பிணி பெண்களுக்கான உணவு, பூப்பெய்திய பெண்களுக்கான உணவு, பிள்ளை பெற்றவர்களின் பத்திய உணவு, திருமணத்தில் செய்யும் முக்கிய வகை உணவு, விஷேச நாட்களில் செய்யும் பலகாரம்மற்றும் பல.....வகைகளை அனுப்பலாம்.. நானும் சிலரை அழைக்கிறேன்...விருப்பம் உள்ளவர்கள்  இங்கு கிழே என் பதிவின் கீழ் கருத்து தெரிவிக்கலாம்  அல்லது கிழே கொடுக்கப்பட்டுள்ள என் முகவரிக்கு மெயில்  அனுப்புமாறு கேட்டு கொள்கிறேன்.


feedbackjaleela@gmail.com or cookbookjaleela@gmail.com

Burka Hijab @ Chennaiplaza
https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

5 கருத்துகள்:

Angel said...

farin செம சந்தோஷம்ப்பா ..இத்தன நாளா உங்க ப்ளாக் உள்ளேயே போக முடியாது இங்கே ஜலீ பக்கம் சும்மா லிங்க் அழுத்தி பார்த்தேன் ! இப்போ ப்ளாக் பார்க்க முடியுது ...

100 O FOR JALEE :)

Unknown said...

Jazak Allah for this wonderful chance akka.. O ho..

Asiya Omar said...

ஃபரின் உங்க ஓஹோ டைரக்‌ஷன் சூப்பர்.பகிர்வும் குறிப்பும் மிக அருமை.பாராட்டுக்கள் & நல்வாழ்த்துக்கள்.தொடர்ந்து அசத்துங்க.

திண்டுக்கல் தனபாலன் said...

சகோதரிக்கும் வாழ்த்துக்கள் சொல்லிடுங்க....

Priya Satheesh said...

Delicious recipe and lovely writing :)Loved it totally !

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா