Tuesday, March 10, 2015

கருப்பு உளுந்து இனிப்பு சுண்டல் - Black Urad Dhal Sundal






கருப்பு உளுந்து இனிப்பு சுண்டல் -Black Urad Dhal Sundal

இடுப்பெலும்பை பலப்படுத்தும் கருப்பு உளுந்து, இதில் உளுந்து சாதம், உளுந்து களி, உளுந்து புட்டு உளுந்து சுண்டல் போன்றவை செய்யலாம்.
வட இந்தியர்கள் தால் மக்கானி என்று ஒரு குழம்பு வைப்பார்கள் அது கருப்பு உளுந்து மற்றும் ராஜ்மாவில் செய்வது. இது பூப்பெய்திய பெண்களுக்கு , கர்பிணி பெண்களுக்கு, பிள்ளை பெற்றவர்களுக்கு இடுப்பெலும்பு பலம் பெற கருப்பு உளுந்தில் இது போன்ற உணவு வகைகளை சமைத்து கொடுக்கலாம்.
ஆண்களுக்கும் நல்லது.கூடுமான வரை இட்லிக்கு, அடை வகைகளுக்கு அரைக்கும் போது வெள்ளை உளுந்துக்கு பதில் கருப்பு உளுந்தும் சேர்த்து செய்வது நல்லது.




கருப்பு உளுந்து


கருப்பு உளுந்து - 100 கிராம்
துருவிய தேங்காய் - கால் கப்
சர்க்கரை - 2 மேசைகரண்டி
உப்பு -அரை சிட்டிக்கை
ஏலக்காய் பொடி - அரை சிட்டிக்கை







செய்முறை

கருப்பு உளுந்தை இரவே ஊறவைத்து காலையில் குக்கரில் வேகவைத்து தண்ணிரை வடிக்கவும்.
வெந்த உளுந்தில் தேங்காய், ஏலக்காய் பொடி, உப்பு சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து சாப்பிடவும்


டிப்ஸ்: பெண்களுக்கு ஏற்படும் மாதாந்திர இடுப்பு வலி வயிற்று வலிக்கு கருப்பு உளுந்து மிகவும் நல்லது. காலை டிபனுக்கு பதில் இதை செய்து சாப்பிட்டு கொள்ளலாம். இதை புட்டாக , உளுந்து சாதம் , உளுத்தங்களியாக செய்து சாப்பிடலாம்.

இதே போல் முழு பாசி பயறிலும் செய்யலாம்.
Whole Moong Dal Sundal

ஆரோக்கிய சமையல், ஹெல்தி காலை உணவு, - Healthy Brakfast


https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

7 கருத்துகள்:

ராமலக்ஷ்மி said...

நல்ல குறிப்பு.

'பரிவை' சே.குமார் said...

குறிப்பு அருமை.

'பரிவை' சே.குமார் said...

குறிப்பு அருமை.

திண்டுக்கல் தனபாலன் said...

வீட்டில் செய்வார்கள்... ஆனால் எனக்கு மட்டும் இனிப்பு இல்லாமல்...!

திண்டுக்கல் தனபாலன் said...

Today : http://dindiguldhanabalan.blogspot.com/2015/03/Internal-Audit.html

shameeskitchen said...

இதுவரை கருப்பு உளுந்தில் சுண்டல் செய்ததில்லை...
அருமையாக இருக்கு உங்கள் செய்முறை அக்கா..
உங்கள் நோன்பு கஞ்சி இப்போ எங்கள் வீட்டின் பிடித்த காலை உணவாகி விட்டது விடுமுறை தினங்களில்.
நன்றி அக்கா.

Unknown said...

Never heard it before but very interesting and healthy akka

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா