Tweet | ||||||
Tuesday, February 12, 2013
தொண்டை கர கரப்பு மற்றும் புறையேறுதலுக்கு
அனைவருக்கும் இருக்கும் பிரச்சனை சளி இருமல்,மூக்கடைப்பு, தொண்டை வலி , தொண்டை புண்,புறையேறி கொண்டே இருத்தல்.... இப்படி சொல்லி கொண்டே போகலாம்
இதற்காகா நான் இங்கு என் கை வைத்தியம் ஏற்கனவே இங்கு நிறைய போட்டு உள்ளேன்.
மேலே உள்ள லிங்க்களில் கொடுத்துள்ளவைகள் எல்லாமே என் சொந்த அனுபவ குறிப்புகள்.
எங்க மாமியாரின் கை பக்குவம் தொண்டை கர கரப்பு சளி என்றால் முதலில் வெண்ணீர் உப்பு போட்டு வாய் கொப்பளிக்க தான் சொல்வார்கள்.
கிராம்பை வாயில் அடக்கி கொள்ளலாம் ஆனால் அதன் துகள்கள் தொண்டையில் மாட்டி கொண்டு இன்னும் பாடு படுத்தும்.
எந்த டாக்டர் கிட்ட போனாலும் தொண்டை கர கரப்பு மற்றும் இருமல் சளிக்கு முதல் செய்ய சொல்வது வெண்ணீர் உப்பு போட்டு கார்குலிங் செய்வது தான்.
பிரஷர் இருப்பவர்கள் அதிக உப்பை சேர்த்து கொள்ளாதீர்கள்.
மிளகு , கிஸ்மிஸ் பழம் எடுத்து கொள்ளுஙக்ள்.
வெண்ணீர் உப்பு போட்டு வாஉ கொப்பளிப்பதும் ஒரு தடவை இரண்டு தடவை செய்துட்டு விட்டுட கூடாது, அரை மணிக்கொருமுறை செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.
படுக்கும் போது கொஞ்சம் சரிந்து படுங்கள்.
இங்கு இதை படிக்கும் நீங்கள் பயன் படுத்திய குறிப்புகள் இருந்தாலும் இந்த பதிவின் கீழ் பகிரலாம்.
Subscribe to:
Post Comments (Atom)
14 கருத்துகள்:
இந்த டிப்ஸை படிப்பவர்கள்
விருப்பம் இருந்தால்
தொண்டை கரகரப்பு மற்றும் புறையேறுதலுக்கு நீங்கள் பயன் படுத்தி சரியான டிப்ஸ் இருந்தாலும் சொல்லலாம். நிறையபேருக்கு உதவியாக இருக்கும்.
நல்ல டிப்ஸ்.அனைவருக்கும் உபயோகமாக இருக்கும்.தொண்டை கரகரப்புக்கு மிளகுடன் பனக்கற்கண்டு சேர்த்தும் சாப்பிடலாம்.இது நான் கடைபிடிப்பது.
நன்றி சகோதரி...
ஆமாம் ஸாதிகா அக்கா பனங்கற்கண்டும் நல்ல கேட்கும்.
பனங்கற்கண்டை மிளகு சேர்த்து பாலில் காய்ச்சி விடுவேன்.
நீங்க சும்மா அப்படியே சாப்பிடலாமுன்னு சொல்றீங்களா?
நல்ல டிப்ஸ் ஜலீலா.
நான் சுக்கு காப்பி குடிப்பேன், இரவு படுக்கும் போது தூதுவளைப் பொடியை தேனில் கலந்து சாப்பிடுவேன். தொண்டை சளி சரியாகி விடும். என் கணவர் தொண்டை கரகரப்புக்கு மிளகு வாயில் அடக்கிக் கொள்வார்கள்.
சித்த்ரத்தையும் வாயில் அடக்கிக் கொண்டு சுவைத்து வர தொண்டையில் கட்டும், கோழை, இருமல், வாந்தி சரியாகும். உஷ்ணத்தல் தொண்டை கரகரப்பு என்றால் அரத்தையுடன் பனங்கற்கண்டும் சேர்த்து கஷாயம் வைத்து குடிக்கலாம்.
Very useful tips , thanks for sharing !
இருமல் மற்றும் தொண்டைகரகரப்பு முதலியவற்றால் நான் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளேன்.
இருமல் என்ற சனியன் வந்தால் எனக்கு மாதக்கணக்காக இருக்கும்.
கழுத்தை அறுக்கும்.
என் பக்கத்தில் யாராவது வந்தாலே அவர்களுக்கும் கோபம் வரும்.
எனக்கும் அவர்களைப் பார்த்தால் கோபம் வரும்.
அந்த அளவுக்கு மிகப்பெரிய இருமல் வந்து பாடாய்ப்படுத்தும்.
இருமி இருமி, விலா எலும்புகள் எல்லாமே எனக்கு வலிக்கும்.
தொடர்ந்து இருமவே முடியாதபடி சக்தி இழந்தும் போனதுண்டு.
நிம்மதியாக படுத்துத் தூங்க முடியாது.
எவ்வளவோ மருந்து, மாத்திரைகள், சிரப் என சாப்பிட்டுக்கொண்டே இருப்பேன்.
இஞ்ஜெக்ஷனும் போட்டுக்கொள்வேன்
நடுவே வீட்டுக்கு வருபவர்கள் ஏதேதோ நாட்டு வைத்தியங்கள் பற்றியும் கூறுவார்கள்.
சித்தரத்தை கஷாயம், மிளகு, ஜீரகம் என என்னவெல்லாமோ சொல்வார்கள்.
சூடான பாலில் மஞ்சள் தூள் கலந்து பனங்கல்கண்டு போட்டு குடிக்கச்சொல்வார்கள்.
ஒன்றிலும் குணம் ஆகாது.
அது எப்படி வந்ததோ அப்படியே ஒரு நாள் சென்று விடும்.
அழையாத விருந்தாளி போல வந்து இரண்டு மாதங்களுக்குத் தங்கி என்னைப்பாடாய்ப் படுத்தி விட்டே வெளியேறும்.
இதெல்லாம் கடந்த இரண்டு ஆண்டுகளுகு முன்பு வரை மட்டுமே.
இப்போது சுத்தமாக அந்த இருமல் என்ற அழையா விருந்தாளி என்னைத்தேடி வருவதே இல்லை.
நான் என்ன செய்தேன் என்பதைச் சொல்கிறேன்.
IT IS SO SIMPLE AND VERY EASY ONE..
>>>>>>> தொடரும் >>>>>>
ஐந்து லிட்டருக்குக் குறையாமல் கொள்ளளவு கொண்ட சுத்தமான, அகலமான, உயரமான எவர்சில்வர் அடுக்கு -2 , அதை சரியாக மூடக்கூடிய தட்டுக்கள் - 2, பெரிய டம்ளர்கள் -2 நமக்கென தனியாக பிரத்யேகமாக வைத்துக்கொள்ள வேண்டும். நாம் பெரும்பாலும் தங்கிடும் அறையிலேயே இவை இருக்க வேண்டும்.
தினமும் காலை எழுந்ததும், அதில் ஒரு அடுக்கை எடுத்து அலம்பிவிட்டு புதிய நீர் நிரப்பி, அடுப்பில் ஏற்றி நன்றாக 10-15 நிமிடங்களுக்கு கொதிக்க விட வேண்டும்.
பிறகு அதை தட்டால் மூடிவிட்டு, அதன் மேல் டம்ளரைக்கவித்து விட்டு, நாம் தங்கும் அறையில் நமக்குக் கைக்கு எட்டும் தூரத்தில் நம் கண்களில் படுவது போல வைத்துக்கொள்ள வேண்டும்.
அடிக்கடி அந்த நீரை எடுத்து பருக வேண்டும்.
கோடையோ குளிரோ 365 நாட்களும் இதை மட்டுமே பருக வேண்டும்.
வேறு தண்ணீர் ஏதும் தப்பித்தவறி கூட அருந்தக்கூடாது.
வெளியில் செல்லும் போதும் இதையே ஒரு பாட்டிலில் எடுத்துச்செல்ல வேண்டும்.
தினமும் 3 முதல் 5 லிட்டர் வரை சூடாக்கி ஆற வைத்த இந்தத்தண்ணீரை கட்டாயமாக பருக பழக்கிக்கொள்ள வேண்டும்.
மறுநாள் காலை இந்த அடுக்கு, தட்டு, டம்ளர் மூன்றையும் பாத்திரம் தேய்ப்பவரிடம் தேய்க்கச்சொல்லி கொடுத்து விட்டு, அந்த மற்றொரு அடுக்கு, தட்டு, டம்ளரை லேசாக அலம்பிவிட்டு, மீண்டும் சுடுநீர் தயாரித்துக்கொள்ள வேண்டும்.
சிறிய அளவிளான எலெக்ட்ரிக் வாட்டர் ஹீட்டர் எல்லாம் சரிப்பட்டு வராது.
5-8 லிட்டர் தண்ணீர் பிடிக்கும் அடுக்கு தான் நல்லது.
அதை ஈ-குக்கிலோ, கேஸ் அடுப்பிலோ வைத்து சூடாக்கிக்கொள்வதே சாலச்சிறந்தது.
தினமும் இதற்காக ஒரு கால் மணி நேரம் மட்டும் செலவழித்து செய்து பாருங்கள்.
அந்த குறிப்பிட்ட குடிநீரை மட்டுமே பருகி வாருங்கள்.
இருமல் தொண்டை கரகரப்பு எல்லாமே காணாமல் போய் விடும்.
அவை உங்களை எப்போதுமே அண்டவே அண்டாது.
இதற்கு நான் கியாரண்டி.
தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து ஆற வைத்து அருந்துவதை விட வேறு எதுவுமே மருந்துகள் உள்பட இருமலைக் கட்டுப்படுத்தாது.
என் அறையில் என் கட்டிலுக்கு அருகே, என் தலை மாட்டில், இந்த வெந்நீர் அடுக்கு எப்போதுமே என் கண் பார்வையில் இருக்கும்.
அவ்வப்போது எடுத்துக் குடித்துக்கொண்டே இருப்பேன்.
இந்தக்காய்ச்சும் வேலையும் நமக்கு நாமே சோம்பல் படாமல் செய்து கொள்ள வேண்டும்.
பிறரை இதற்காக சிரமப்படுத்தக்கூடாது.
தினமும் கால் மணி இதற்காகா செலவழிப்பது, தொண்டைக்கல்லவா நிரந்தரமான நிவாரணம்.
அனைவரும் இதை பின்பற்றிப்பாருங்கள். இன்றே தொடங்குங்கள். வாழ்த்துகள்.
புறைஏறுதல் என்பது நாம் உண்ணும் உணவு, உணவுக்குழல் வழியாக உள்ளே செல்லும் போது, தவறிப்போய் மூச்சுக்குழாயில் கொஞ்சமாக நுழைந்து விடுவதால் ஏற்படுவது.
உண்ணும் போது, நாம் வேறு எதையும் நினைக்கக்கூடாது.
அவசரமும் கூடாது.
பொறுமையாக நிதானமாக சந்தோஷமாக உண்ண வேண்டும்.
சாப்பிடும் போது பேசுவதையும் தவிர்க்க வேண்டும்.
ஜாடை மட்டுமே காட்ட வேண்டும்.
புறைஏறிவிட்டால், சாப்பிடுவதை நிறுத்தி விட்டு, கொஞ்சம் நீர் அருந்தி அதை சமாதானம் செய்து கொள்ள வேண்டும்.
அது போல விக்கல் ஏற்பட்டால் மூச்சை சற்று நேரம் தம் கட்டி அடக்கிக்கொள்ள வேண்டும்.
இதுபோல 2-3 தடவைகள் தொடர்ந்து செய்து வந்தால், விக்கல் நின்று விடும்.
ooooo
நல்ல குறிப்பு.
அருமையான குறிப்புகள். என் மாமியார் சொல்லி தொண்டை கரகரப்பு, சளி, உடம்பு வலி இருந்தால் கஷாயம் போட்டு விடுவேன். இதை பற்றி என்னுடைய பதிவு இதோ,
http://www.kovai2delhi.blogspot.in/2012/10/blog-post_10.html
இருமலுக்கு முதலாவது மிளகும், சர்க்கரையும் பொடித்துக் கொண்டு நெய்யில் குழைத்து சாப்பிட்டு வந்தால் கட்டுப்படும். இது நாங்கள் எப்போதுமே செய்வது.
சித்தரத்தையை தண்ணீரில் நசுக்கி போட்டுக் குடிக்கலாம்.
அதிமதுரத்தை வாயில் ஒதுக்கிக் கொள்ளலாம்.
குழந்தைகளுக்கு சளிக்கு கற்பூரவல்லி இலையையும், துளசியையும் போட்டு கொதிக்க விட்டு தேன் விட்டுக் கொடுக்கலாம்.
நேற்றுதான் ஆஷிஷ் அம்ருதாவிற்கு ஜலதோஷம், மூக்கடைப்புடன் ஜுரம் வருவது போல இருந்தது. இப்படிப்பட்ட சூழலில் எங்க வீட்டு மருந்து இதோ:
ஊரிலிருந்து சித்தரத்தை, அதிமதுரம், அரிசிதிப்பிலி, கண்டதிப்பில் கொண்டு வந்து கைவசம் வைத்திருக்கிறேன். அவற்றுடன் விரலி மஞ்சள்,மிளகு, ஜீரகம் தட்டிப்போட்டு கஷாயம் செய்து தேன் கலந்து கொடுத்தேன் இப்போ நலம்.
தொண்டை கரகரப்பாக இருந்தால் இரவில் தூங்குவது கஷ்டம். தூங்கப்போகும் முன் இளம் சூடான பாலில் மஞ்சள் தூள், சர்க்கரை கொஞ்சம் சேர்த்து கலக்கி குடித்தால் புண் ஆறும். எறுமைப்பாலாக இருந்தால் இன்னும் சிறப்பு. (மஞ்சள் தூள் பனங்கற்கண்டு தான் சிறந்தது. அது இல்லாவிட்டால் கொஞ்சமாக சர்க்கரை)
எங்களுக்கு ..உண்மையில் இது பயனுள்ள குறிப்பு ..அனைத்தையும் குறித்துக்கொண்டேன்
இங்கே சளி பிடிச்சா லேசில் போகாது ..நானும் பனங் கல்கண்டு முன்பு வைத்திருப்பேன்
மிளகு ரெயசின்ஸ் எல்லா இடத்திலும் உண்டு ..வாங்கி ஸ்டாக் செய்கிறேன் .மிக நன்றி
-:)
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா