இது என் மகன் Abdul Hakeem SK செய்த பாயில்ட் எக் சாலட்
அவித்த முட்டை சாலட்/ஹெல்தி டயட் காலை உணவு/Healthy Diet Breakfast
தேவையான பொருட்கள்
- பாயில்ட் எக் சாலட்
- முட்டை – 2 எண்ணிக்கை
- வெங்காயம் – அரை
- (பொடியாக நறுக்கியது)
- ஒன்றும் பாதியுமாக பொடித்த மிளகு – அரை தேக்கரண்டி
- ப்ரஷ் புதினா இலைகள் – சிறிது
- லெமன் ஜூஸ் – அரை தேக்கரண்டி
செய்முறை
- முட்டையை ஒரு பாத்திரத்தில்
- மெதுவாக வைத்து மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி சிறிது உப்பு சேர்த்து 10 நிமிடம் வேகவைக்கவும்.
- முட்டை வெந்த வெண்ணீரை வடித்து விட்டு முட்டையை குளிர்ந்த நீரில் போடவும்.
- முட்டை ஓடை பிரித்து நான்காக அரியவும். ஒரு தட்டில் அரிந்த முட்டைகளை வைத்து அரிந்து வைத்துள்ள புதினா, மிளகு உப்பு தூவவும். லெமன் ஜூஸை தெளித்துகலக்கி சாப்பிடவும்.
- ஹெல்தியான எண்ணை இல்லாத டயட் உணவு.
காலை உணவுக்கு இதை ஒரு நபருக்கு ராகி பானம் அல்லது வெஜ் அன்ட் ஃப்ரூட் ஜூஸுடன் சாப்பிடலாம். மாலை நேர நொருக்கு தீனிக்கு பதில் இதை செய்து சாப்பிடலாம்.
https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/
Tweet | ||||||
1 கருத்துகள்:
Healthy and Easy Salad...Arumai Ji
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா