- வொயிட் சென்னா 200 கிராம்
- பாலக் கீரை – ஒரு கப்
- தக்காளி – 2
- தயிர் – 2 தேக்கரண்டி
- வெங்காயம் – 2
- சோம்பு – ஒரு தேக்கரண்டி
- மாதுளை பழம் – 3 தேக்கரண்டி
- சென்னா மசாலா – 1 ½ தேக்கரண்டி
- இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 தேக்கரண்டி
- பச்சமிளகாய் – 2
- மிளகாய் தூள் – கால் தேக்கரண்டி
- தனியாத்தூள் – அரை தேக்கரண்டி
- கரம் மசாலாதூள் – கால் தேக்கரண்டி
- சர்க்கரை – ஒரு சிட்டிக்கை
- உப்பு தேவைக்கு
- பட்டர் (அ) நெய் – ஒரு தேக்கரண்டி
- எண்ணை – 2 + 1 தேக்கரண்டி
- கொத்து மல்லி தழை – சிறிது
- பாலக்கீரையை கட் செய்து மண்ணில்லாமல் அலசி தண்ணீரை வடித்து வைக்கவும்.
- சென்னாவை இரவே ஊறவைத்து காலையில் குக்கரில் மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி வேகவைத்து தண்ணீரை வடித்து வைக்கவும்.
- ஒரு வானலியில் ஒரு ஸ்பூன் எண்ணைய காயவைத்து அதில் சோம்பு பச்சமிளகாய், வெங்காயம், தக்காளி, மாதுளை முத்துகள் ,பாலக்கீரை அனைத்தையும் சேர்த்து வதக்கி ஆறவைத்து மிக்சியில் அரைத்து வைக்கவும்.
- ஒரு வாயகன்ற பாத்திரத்தை சூடுபடுத்தில் அதில் எண்ணை + பட்டர் சேர்த்து இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். வதக்கி பிறகு அரைத்த விழுதை சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
- இப்போது மிளகாய் தூள், மஞ்சள் தூள், தனியாதூள்,சென்னா மசாலா, உப்பு அனைத்தும் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்,
- மசாலாவாடை அடங்கியதும் வெந்த சென்னாவை சேர்த்து , கரம்மசாலாதூள் மற்றும் சர்க்கரையும் சேர்த்து நன்கு கொதிக்க விட்டு இரக்கவும்.
- மேலே கொத்துமல்லி தழை தூவி பரிமாறவும். பூரிக்கு ஏற்ற சைட் டிஷ்.
- ப்ரட் , பண்ணிலும் வைத்து சாப்பிட அருமையாக இருக்கும்.
பாலக் , மாதுளை , வெள்ளை கொண்டைக்கடலை கறி
பூரிக்கு பக்க உணவு.
Side dish for Puri Chappathi
https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/
Tweet | ||||||
4 கருத்துகள்:
வித்தியாசமாக இருக்கு. செய்து பார்க்கிறேன்.
Dish sounds interesting and new..Will have a try
Thanks for the recipe ..haven't tried with pomegranate ,shall try this method ..
வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துகள்..
http://blogintamil.blogspot.com.au/2014/12/blog-post_61.html
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா