குதிரை வாலி பொங்கல்
மறந்து போன பழங்காலத்து சிறுதாணிய வகைகள் மீண்டும் இப்போது அனைவரும் பயன் படுத்த ஆரம்பித்து உள்ளனர்.
ரொம்ப நல்ல விஷியம், அரிசி உணவை தவிர்த்து , குதிரை வாலி, சாமை, வரகரிசி, தினை, கம்பு, கேழ்வரகு என்று பயன் படுத்தினால் சர்க்கரை வியாதி, கேன்சர் வியாதி, ஹார்ட் பிராப்ளம் போன்ற பல வியாதிகளில் இருந்து நம்மை காத்துக்கொள்ளலாம்.
இதில் நான் பயன் படுத்தி இருப்பது குதிரை வள்ளி ( வாலி) Kuthirai vaali என்ற தாணியம், அந்த அளவுக்கு அரிசிக்கும் இதற்கும் பெரிய வித்தியாசம் தெரியவில்லை மிகவும் நன்றாக இருந்தது.
தேவையான பொருட்கள்.
குதிரை வாலி அரிசி - முக்கால் டம்ளர்
சிறு பருப்பு - கால் டம்ளர்
உப்பு - தேவைக்கு
தாளிக்க
எண்ணை + நெய் - 4 தேக்கரண்டி
மிளகு - ஒரு தேக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
பொடியாக அரிந்த பச்சமிளகாய் - ஒரு தேக்கரண்டி
துருவிய இஞ்சி - அரை தேக்கரண்டி
பொடியாக அரிந்து வறுத்த முந்திரி - ஒரு மேசைகரண்டி
கருவேப்பிலை - 5, 6 இதழ்
செய்முறை
பாசி பருப்பு மற்றும் குதிரை வாலி அரிசியை களைந்து ஊறவைக்கவும்.
குக்கரில் 3 டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
நன்கு கொதி வந்ததும் ஊறிய அரிசி மற்றும் பருப்பை சேர்த்து உப்பு சேர்த்து வேகவிடவும்.
முக்கால் பதம் வெந்ததும், தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து வெந்து கொண்டு இருக்கும் அரிசியில் சேர்த்து குக்கரை மூடவும்.
தீயின் தனலை மிதமாக வைக்கவும். முன்று விசில் விட்டு இரக்கவும்.
குக்கர் ஆவி அடங்கியதும், சிறிது நெய் விட்டு கிளறி இரக்கவும்.
இதில் இன்னும் இனிப்பு பொங்கல், அடை, கொழுக்கட்டை, ரொட்டி போன்றவை தயாரிக்கலாம்.
நோன்பு கஞ்சி செய்தவதில் அரிசிகூட இந்த குதிரை வாலியும் பாதிக்கு பாதி சேர்த்து செய்யலாம்.இல்லை கஞ்சியே இந்த தாணியத்தில் செய்யலாம். நான் செய்து பார்த்தேன் மிக அருமையாக இருந்தது.
இதில் கிச்சிடி, முறுக்கு , சத்துமாவு, பாயசம் போன்றவை தயாரிக்கலாம்.
கவனிக்க: இந்த தாணியவகைகள் கிடைக்கும் இடம் சென்னையில் நீல்கிரீஸ் , ஒரு கிலோ 65 ரூபாய் என்று நினைக்கிறேன்.
ஆயத்த நேரம்: 10 நிமிடம்
சமைக்கும் நேரம் : 10 நிமிடம்
பரிமாறும் அளவு - 2 நபர்களுக்கு
Kuthirai vaali pongal/Breakfast Recipes/
Tweet | ||||||
12 கருத்துகள்:
குதிரை வாலி பொங்கல் செய்து பார்க்கிறேன்.
நன்றி ஜலீலா.
குதிரை வாலி... என்பது ஒரு வித அரிசியா.....!!??
இப்போது தான் இந்தப் பெயரை அறிகிறேன் தோழி.
அருமையான செய்முறைக்கு நன்றி தோழி.
செய்முறை குறிப்புக்கு நன்றி சகோதரி...
செஞ்சு பார்க்கலாமுன்னா..... இங்கே கிடைக்கறதில்லையேப்பா:(
கோமதி அக்கா வருகைக்கு மிக்க நன்றி செய்து பார்த்து சொல்லுங்கள்.
அருணா வாங்க இதை பற்றி உங்களுக்கு தெரியாதா? இனி டிபாட்மென்டல் ஸ்டோர் போனால் வாங்கி செய்து பாருங்கள்.
துளசி அக்கா வருகைக்கு மிக்க நன்றி
தன்பாலன் சார் நீண்ட நாட்களுக்கு பிறகு வந்து இருக்கீறீர்கள் மிக்க நன்றி
சத்துள்ள பொங்கல். நானும் சாமையில் செய்து பகிர்ந்திருக்கிறேன்.
Healthy Pongal Akka..will try for sure
வருகைக்கு மிக்க நன்றி ஆதி
செய்து பாருங்கள் பரீன்
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா