Tweet | ||||||
Wednesday, November 19, 2014
பனீர் சென்னா புலாவ் ( குக்கர் முறை)
பனீர் சென்னா புலாவ்
( குக்கர் முறை)
குழந்தைகளுக்கு
லன்ச் பாக்ஸ் அல்லது பெரியவர்களுக்கு ஆபிஸ் எடுத்து போக இந்த பனீர் சென்னா புலாவை
குக்கரில் எளிதாக செய்து விடலாம்.
குழந்தைகளும் விரும்பிசாப்பிடுவார்கள். லன்ச் பாக்ஸ் க்கு ஏற்ற ஈசி உணவு
தேவையான பொருட்கள்
பாஸ்மதி அரிசி
– 300 கிராம்
வேக வைத்த வொயிட்
சென்னா ( கொண்டைக்கடலை) – 100 கிராம்
அமுல் பனீர் –
100 கிராம்
அரைக்க
கொத்துமல்லி தழை
புதினா
சின்ன வெங்காயம்
– 10 எண்ணிக்கை
பச்ச மிளகாய்
– 2
தயிர் – ஒரு மேசைகரண்டி
தாளிக்க
ஆயில் – 3 தேக்கரண்டி
நெய் அல்லது பட்டர்
– ஒரு தேக்கரண்டி
பிரிஞ்சி இலை
இஞ்சி பூண்டு விழுது
– ஒன்னறை தேக்கரண்டி
கரம் மசாலா – அரை
தேக்கரண்டி
சர்க்கரை – 1 சிட்டிக்கை
வெண்ணீர் –
450 மில்லி
உப்பு – சுவைக்கு
தேவையான அளவு
FB Id
FB - Cookery page
our Shop page Chenani plaza Page
செய்முறை
அரிசியை களைந்து
10 நிமிடம் ஊறவைக்கவும். பன்னீரை வெண்ணீரில் கழுவி சிறிது மிளகாய் தூள் , உப்பு தூள்
சேர்த்து பிசறி வைக்கவும்.
அரைக்க கொடுத்துள்ளவைகளை
மிக்சியில் முக்கால் பதத்துக்கு அரைத்து வைக்கவும்.
குக்கரை அடுப்பில்
ஏற்றி சூடுபடுத்தி ஒரு தேக்கரண்டி பட்டர் சேர்த்து பனீரை வறுத்து தனியாக ஒரு பவுளில்
எடுத்து வைக்கவும்.
அதே குக்கரில்
எண்ணைவிட்டு பிரிஞ்சி இலை சேர்த்து தாளிக்கவும்.
பிறகு இஞ்சி பூண்டு
பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.அடுத்து அரைத்து வைத்துள்ளதை சேர்த்து நன்கு வதக்கி இரண்டு
நிமிடம் மசாலா ஒரு சேர கிளறி வேகவைத்துள்ள சென்னா, பனீர், கரம் மசாலா, சர்க்கரை , மிளகாய்
தூள் நன்கு கிளறி வெண்ணீரை சேர்த்து கொதிக்க விடவும்.
ஊற வைத்துள்ள அரிசியை
தண்ணீர் வடித்து சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறி கொதிக்க விடவும்.
கொதிக்க ஆரம்பித்ததும்
குக்கரை மூடி தீயின் தனலை குறைவாக வைத்து 2 விசில் விட்டு இரக்கவும்.
ஆவி அடங்கியதும்
குக்கரை திறந்து சாதம் உடையாமல் கிளறி இரக்கவும்.
லன்ச் பாக்ஸ் க்கு
ஏற்ற ஈசி உணவு, நிமிஷத்தில் தயார் படுத்திவிடலாம்.
இதில் மசாலாக்கல்
அரைத்து ஊற்றி செய்துள்ளதால் பிள்ளைகளுக்கு எளிதில் சாப்பிடதோதுவாக இருக்கும். பனீர்
சென்னா சேர்த்துள்ளதால் இந்த சாதம் மிகவும் சத்துள்ளதாக இருக்கும்.
Subscribe to:
Post Comments (Atom)
4 கருத்துகள்:
இன்றே செய்து பார்த்து விடுகிறோம்...
நன்றி சகோதரி...
சுவையான புலாவ். ரோஷ்ணியின் லன்ச் பாக்ஸ் லிஸ்ட்டில் சேர்த்து விடுகிறேன்.
கண்டிப்பாக செய்து பார்த்து வந்து சொல்லுங்கள் தனபாலன் சார்
ஆதி உங்கள் ரோஷ்னிக்கு ரொம்ப் பிடிக்கும் லன்ச் பாக்ஸ் க்கு செய்து அனுப்புங்கள்
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா