ஆயிஷா மலேசியா - ஏற்கனவே சிறப்பு விருந்தினர் பதிவில் குறிப்பு அனுப்பி பேக் பண்ணுவது என்றால் எனக்கு ரொம்ப பிடிக்கும் சிறு வயதில் இருந்தே கேக், பிஸ்கேட் போன்றவைகளை செய்கிறேன் என்றார்கள், இனி இங்கு உங்களுக்காக கேக் வகைகளை கொடுக்க இருக்கிறார்கள்.
ஆயிஷா என்ன சொல்லுகிறார்கள் என்று கேளுங்கள்..
நான் 13 வருடங்களா கேக் மற்றும் பிஸ்கட் செய்து வருகின்றென். எனக்கு 16 வயசுல எனது தந்தை ஒவன் வாங்கி தந்தார்கள். அப்பொழுது நான் ஸ்கூல் படித்து கொண்டுருந்தேன். எனக்கு கேக் செய்து காமிக்கிற சமயல் நிகழ்ச்சி பார்க்க ரொம்ப ஆர்வாக இருந்தது. ஒவன் வாங்குநதும்,நோன்பு பெருநாள் மற்றும் வீட்டில் உள்ள எல்லாம் விஷேசத்துக்கும் நான்தான் கேக் மற்றும் பிஸ்கட் செய்வேன். கல்யாணத்துக்கு அப்புரம் மாமியார் வீட்டுலயும், இப்ப நான் தான் எல்லோருக்கும் கேக் செய்து குடுப்பேன். பல தடவை எனக்கும் கேக் நன்றாக வராமல் இருந்திருக்கு. எனது கணவர்தான் மறுபடியும் செய்ய சொல்வார்கள். மறுபடியும் செய்யும் பொழுது,ஏற்கனவே செய்த தவறை மறுபடியும் செய்யமாட்டேன்.
இப்போது என் செல்ல மகனுக்காகவும் கேக்களை தயாரிக்கிறேன்.
எனக்கு தெரியும் ஒரு சில கேக் செய்யும் டிப்ஸை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். பேசிக் கேக் செய்வதுக்கு மைதா மாவு, முட்டை, சக்கரை மற்றும் எண்ணெய் அல்லது பட்டர் தேவைப்படும். இந்த பொருட்கள் பயன் படுத்தி வித விதமான கேக் செய்து பார்க்கலாம்.
Cake Baking Tips
1. முதலில், பட்டரை சிறிது நேரத்துக்கு முன்பாகவே ஃபிரிட்ஜில் இருந்து வெளியே எடுத்து வைக்க வேண்டும். அப்பதான் நாம் பட்டருடன் சக்கரை, சேர்த்து பீட் செய்யும் பொழுது கிரீமி பதம் வரும். இல்லா விட்டால் கேக் நன்றாக பொங்கி வராது. ஒவனில் இருந்து வெளியே எடுத்ததும் கேக் பஞ்சு போல் இருக்காது. அதனால், பட்டரையும் சக்கரையும் நன்கு பீட் செய்றது ராெம்ப முக்கியம்.
2. முட்டையை ஒன்று ஒன்றாக சேர்த்து அடிக்க வேண்டும். அப்பொழுதுதான், கேக் பஞ்சு போல் பொங்கி வரும். எல்லாம் முட்டையையும் ஒன்றாக சேர்த்து பீட் செய்யக் கூடாது.
3. ஒரு 10 நிமிடம் ஒவனை ப்ரிஹீட் பன்னுனவுடன் தான் கேக்கை வேக வைக்க வேண்டும்.
4. கேக் தட்டை ஒவன் நடு தட்டில் வைத்து பேக் பன்னவும். அப்பொழுதுதான் ஒவன் சூடு கேக் மேல சரி சமமாக படும்.
5. பட்டர், சர்க்கரை, மற்றும் முட்டை சேர்தத கலவையுடன் மாவு சேர்த்து அடிக்கும் பாெழுது ராெம்ப நேரம் அடிக்க கூடாது. மாவு நன்றாக கலக்கும் வரை அடித்தால் பாேதும். ராெம்ப நேரம் மாவை சேர்த்து அடித்தால் கேக் கட் பன்னும் பாெழுது உதிரியாகும்.
6. கேக் மாவை 3/4 அளவுதான் கேக் தட்டில் ஊத்த வேண்டும். இதுக்கு அதிமாக ஊத்தினால் கேக் பாெங்கி கீழே வழிந்திடும்.
7. கேக் வெந்ததும் சிறிது நேரம் ஆர வைத்துதான் கேக்கை கட் பன்னும்
என் பிளாக்கில் அவ்வளவாக கேக் ரெசிபிகள் இல்லை, செய்ய ஆசை தான் ஆனால் பட்டர் , மைதா போன்றவை அதிகமாக சேர்ப்பதால் ஆரோக்கியம் கருதி அவ்வளவாக செய்வதில்லை. ஆனால் டயட் கேக்வகைகள் செய்யலாம் என்று இருக்கிறேன்.இங்கு வந்து கேக் ரெசிபிகள் தேடுபவர்களுக்காக ஆயிஷா ஒரு சில கேக் ரெசிபிகளை இங்கு கொடுக்க இருக்கிறார்.சுவைத்து மகிழுங்கள்.
இது வரை ஆயிஷா செய்த கேக் வகைகள்
வாழைப்பழம் கேக் - Banana Cake
தேவையான பொருட்கள்:
4 முட்டை
2 கப் மைதா மாவு
1 கப் சர்க்கரை (அரைத்து)
1 கப் வாளைய்ப்பழம் (பிசைந்து)
3/4 கப் சோளம் எண்ணெய்/உருக்கிய பட்டர்
1 தேக்கரண்டி பேக்கிங் பவுடர்
1 தேக்கரண்டி சோடா பைகார்பனேட்
1 தேக்கரண்டி வண்ணிலா/வாழைப்பழம் சாரம்
செய்யும் முறை
1. ஒரு கிண்ணத்தில், சர்க்கரை மற்றும் முட்டைகள் ஒன்றாக சேர்த்து கலக்க வேண்டும்.
2. அதில் பிசைந்த வாழைப்பழம், சோளம் எண்ணெய் மற்றும் வண்ணிலா சாரம் சேர்த்து மீண்டும் கலக்கவும்.
3. வேர கிண்ணத்தில் மைதா மாவுடன் பேக்கிங் பவுடர் மறறும் சோடா பைகார்பனேட் சேரத்து சலித்து வைக்கவும். இதை மேலே செய்த கலயையுடன் ஒன்றாக கலக்கவும்.
4. 7 அங்குல கேக் தட்டில் பட்டர் அல்லது எண்ணெய் தடவி ஒவனை 175C, 10 நிமிடம் preheatசெய்து சுமார் (30 - 45 நிமிடங்கள்) வரை பேக் பன்னவும்.
Tweet | ||||||
8 கருத்துகள்:
looks yummy .thanks for the recipe
தளத்தின் url போலவே அனைத்து பதிவுகளும்... வாழ்த்துக்கள்...
http://dindiguldhanabalan.blogspot.com/2014/12/Intellect-Part-1.html
முட்டை போடாமல் செய்து பார்க்கிறேன்.
நன்றி ஜலீலா.
ஆயிஷாவுக்கு வாழ்த்துக்கள்.
நன்றி.
டிப்ஸ் உபயோகமானவை. சுவையான கேக். ஆயிஷாவிற்கு வாழ்த்துகள்.
Thank you jaleela sis and viewers
my all time fav cake ayisha.. in sha allah try panni paakiren...! Thanks jaleela ka...
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா