Sunday, December 12, 2010

செட்டி நாடு மட்டன் கிரேவி - chettinad mutton gravy



தேவையானவை

மட்டனில் வரட்டி கொள்ள
எலும்புடன் மட்டன் – 400 கிராம்
உப்பு தேவைக்கு
மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
மிளகாய்தூள் – கால்

தாளிக்க

எண்ணை – இரண்டு மேசை கரண்டி
நெய் – ஒரு தேக்கரண்டி
வெங்காயம் – இரண்டு
தக்காளி – ஒன்று
இஞ்சி பூண்டு பேஸ்ட் – ஒரு மேசை கரண்டி
கருவேப்பிலை – இரண்டு முன்று ஆர்க்
மிளகாய்தூள் – கால்
மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி

தேங்காய் பவுடர் – முன்று தேக்கரண்டி

வறுத்து பொடிக்க

மிளகு – ஒன்னறை தேக்க்ரண்டி
சீரகம் – ஒரு தேக்கரண்டி
சோம்பு – ஒரு தேக்க்ரண்டி
கருப்பு ஏலக்காய்- ஒன்று, பச்சை ஏலக்காய் – ஒன்று
பிரியாணி இலை – முன்று
கிராம்பு – முன்று
பட்டை – சிறியட் துண்டு
முழு தனியா – ஒரு தேக்கரண்டி ( அ) தூள்
முந்திரி - நான்கு

செய்முறை

1.மட்டனில் வரட்டி கொள்ளவேண்டியவைகளை சேர்த்து வரட்டிபாதி வேக்காடு வெந்து வைத்து கொள்ளவும்.வறுத்து பொடிக்க வேண்டியவைகளை வறுத்து பொடிக்கவும்.
2. குக்கரில் எண்ணையை காய வைத்து கருவேப்பிலை , இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
3.வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
4. வெங்காயம் தக்காளி மடங்கியதும், பொடித்த பொடி,உப்பு,தேங்காய் பொடி சேர்த்து நன்கு பிரட்டவும்.
5. ஒரு சேர எல்லாவற்றையும் நன்கு கிளறவும்.கிளறி அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி குக்க்ரில் முன்று விசில் விட்டு இரக்கவும்.
மட்டன் பஞ்சு மாதிரி வெந்து கிரேவியும் சேர்ந்து சுவை சூப்பராக இருக்கும்.

Note:

சுவையான செட்டி நாடு மட்டன் கிரேவி ரெடி.
பிளெயின் சாதம், ரொட்டி,நான்,பிரைட் ரைஸ் சப்பாத்தி வகைகளுக்கு ஏற்ற சைட் டிஷ் ஆகும்.

சுவை எபப்டி இருந்ததுன்னு கண்டிபாக வந்து சொல்லனும்.





13 கருத்துகள்:

சீமான்கனி said...

ரெம்ப நாள் கழிச்சு வந்தாலும் எனக்கு பிடிச்ச மட்டன் போட்டு குஷி படுத்துன அக்காக்கு நன்றிகள்...மன்னிக்கனும் அக்கா மறக்கவில்லை முன்புபோல் சரியா நேரம் கிடைப்பதில்லை என் ஒவ்வொரு பதிவுக்கும் உள்ள இடைவெளி பார்த்தாலே தெரியும் நேரம் கிடைக்கும்போது மறக்காமல் இந்த பக்கம் வருவேன்

ஜெய்லானி said...

//சுவை எபப்டி இருந்ததுன்னு கண்டிபாக வந்து சொல்லனும்.//

அதுக்கு கொஞ்சம் லேட் ஆகுமே..!! :-))

ஜெய்லானி said...

நல்ல அருமையான ரெஸிபி :-)

Angel said...

looks yummy .naalaikku solgiren taste eppedi irundhadhu endru.thanks for sharing this recipe .

Jaleela Kamal said...

சீமான் கனி வலை பெயரை மாற்றியதால் தேட போறீஙக்ன்னு தான் சொன்னேன், வருகைக்கு மிக்க நன்றி
எப்ப முடியுதோ அப்ப வாங்க

Jaleela Kamal said...

ஜெய்லானி ஊருக்கு போனதும் கண்டிப்பா உங்கள் அம்மனிக்கு செய்து கொடுத்து என்ன சொன்னாஙக்க்கு வந்து சொல்லனும்

Jaleela Kamal said...

ஏஞ்சலின் செய்து பாருங்க அபப்டியே ஹோட்டலில் செய்து போல் மணம் அடிக்கும்

sumichezhiyan said...

ஜலீலாக்கா உங்க சாம்பார் பொடி,சென்னை சிக்கன் பிரியாணி செய்தேன் மிகவும் நன்றாக் இருந்தது,ஆனால் பிரியாணி பொல பொலவென்று வரவில்லை.ஆனால் டேஸ்ட் மிகவும் நன்றாக இருந்தது. என் கணவர் சிக்கன் வாங்கினால் பிரியாணிதான் செய்ய சொல்லுகிறார்.அதனால் எனக்கு கொஞ்சம் தம் போடும் கருவி எங்கு கிடைக்கும் என்று சொல்லவும். தம் போடும் கருவி பாத்திரத்திற்க்கு மேல் போடவேண்டுமா?

Jaleela Kamal said...

சுமி செஷியன் வாங்க வருகைக்கு மிக்க நன்றீ
சென்னை சிக்கன் பிரியாணீ, சாம்பார் பொடி செய்து பார்த்து நல்ல வந்தது குறித்து சந்தோஷம்

தம் போடும் கருவி , எல்லா இடத்திலும் கிடைக்கும், சைட் லேபிளில் பிரியாணி குறிப்பு களை சொடுகுங்கள்

அதில் பிரியாணி தம் போடும் முறை சொல்லீருக்கேன்.

அதை பார்த்தால் புரியும் உங்களுக்கு
வருகைக்கு மிக்க நன்றி .

சுமிச்செழியன் said...

ஜலீலாக்கா நான் இப்பொழுதுதான் தம் பிளேட் எல்லா கடைகளிலும்(அண்ணநகர்&அம்ஜிகரை)கேட்டேன்,ஆனால் அவங்கள் பிரியாணி மேல் மூடுகிற தட்டை காட்டுறாங்க. அதனால் என்க்கு தம் போடும் கருவி படம், அல்லது அது எப்படி இருக்கும் என்றும்,அது சென்னையில் எங்கு கிடைக்கும் என்று சொல்லவும். அப்புறம் உங்க ரசமலாய் இப்பொழுது செய்ய உள்ளேன் அதற்க்கு பால்பவுடர் என்ன பால்பவுடர் யூஸ் செய்யலாம். நான் அமுல்யா பால்பவுடர் வாங்கியுள்ளேன். நாளை என் கணவருக்கு பிறந்தநாள் அவர் ரசமலாய் செய்ய சொல்லிருக்கிறார்,அதனால் எனக்கு உடனே சொன்னால் நன்றாக இருக்கும்

Jaleela Kamal said...

அமுல்யாவில் செய்யலாம்,

உங்கள் கணவருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகக்ள்

Jaleela Kamal said...

http://samaiyalattakaasam.blogspot.com/2010/11/blog-post_15.html

சுமி இந்த் லிங்கை கிளிக் செய்து பாருங்களேன் உங்களுக்கு புரியும்

Umm Mymoonah said...

Chettinadu style gravy are always special in our home. Looks very delicious . Thank you so much for linking with Any One Can Cook.

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா