Tweet | ||||||
Sunday, December 26, 2010
சிக்கன் ஸ்பகதி - chicken spaghetti
தேவையான பொருட்கள்
1. ஸ்பகதி - 200 கிராம்
2. போன் லெஸ் சிக்கன் - 100 கிராம்
3. டொமெட்டோ கெட்சப் - முன்று தேக்கரண்டி
4. வெங்காயம் - ஒன்று
5. மிளகாய் தூள் அரை தேக்கரண்டி
6. சோயா சாஸ் - ஒரு தேக்கரண்டி
7. பூண்டு - 3 பல்
8. சர்க்கரை - ஒரு சிட்டிக்கை
செய்முறை
1.ஸ்பகதியை இரண்டாக ஒடித்து குக்கரில் போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு அரைஸ்பூன் எண்ணை- சிறிது உப்பு சேர்த்து வேகவைத்து வடித்து வைக்க்கவும்.
2.ஒரு வாயகண்ற வானலியில் பட்டர் + எண்ணையை சேர்த்து வெங்காயம், பூண்டு பொடியாக அரிந்து சேர்த்து வதக்கவும்.
3. வதங்கியதும் அதில் சிக்கன், மிளகாய் தூள் , உப்பு தூள், சோயா சாஸ்,சர்க்கரை,கெட்சப் சேர்த்து நன்கு கிளறி தீயின் தனலை சிம்மில் வைத்து சிக்கனை நன்கு வேகவிடவும்.
4.சிக்கன் வெந்து கூட்டானதும் வடித்து வைத்த ஸ்பாகதியை சேர்த்து கிளறி இரக்கவும்.
Labels:
அசைவம்,
இத்தாலியன் உணவு,
கிட்ஸ் ஸ்பெஷல்,
சிக்கன்,
டிபன் அயிட்டம்
Subscribe to:
Post Comments (Atom)
18 கருத்துகள்:
நல்ல இலகுவான செய்முறை. பகிர்வுக்கு நன்றி!
ஆமாம் பாரதி ரொம்ப இலகுவானது, குழந்தைகளுக்கு ரொம்ப் பிடிக்கும்.
செய்துகொடுத்தால் நிமிஷத்தில் தட்டு காலியாகும்.
easy and tasty recipe...
நல்ல உணவு..எழிதில் ஜீரணிக்கக் கூடியதாக இருப்பதால் சிறுவர் முதல் பெரியவர் வரை விரும்பி உண்ணலாம்.
தங்கை ஆமினாவுக்கு அவர் அம்மா இதைத்தான் அதிகம் பள்ளிக் கூடத்திற்கு செய்து கொடுத்ததாக கூறியுள்ளார்கள்.
அருமையாக இருக்கு ஜலீலா.
சூப்பர் அக்கா!!!
ஆனா குக்கரில்வேக வச்சா குழையாதா??
@அந்நியன்
என்னையவா சொன்னேள்??
:))
ஏன்னா எங்கம்மா உண்மையிலேயே நூடுல்ஸ் தான் அடிக்கடி கொடுப்பாங்க :))
ஜலி ரொம்ப சுலபமான முறையில் செய்து காட்டி விட்டீர்கள்.குழந்தைகளுக்கு பிடித்தாஇட்டம் இது.
Present Jaleela.
spaghetti looks super o super!
எம் அப்துல் காதர் விருதுகளுக்கு மிக்க நன்றி, ஓடி வருகிறேன் பெற்றுகொள்ள.
கருத்திட்டமைக்கும் மிக்க ந்ன்றி
மகா விஜெய் வருகை தந்தமைக்கு மிக்க நன்றி
ஆமாம் நாட்டாமை எளிதாக ஜீரணம் ஆகும்.
ஆமினாவை வம்பிழுக்கிறீர்கள் ம்ம் நடக்கட்டும் நடக்கடும், பறந்து
வருவாஙக் பதில் கொடுக்க ஹிஹி
ஆமினா குக்கரில் குழையாது, இது ஸ்பேகதி வேக கொஞ்சம் நேரம் பிடிக்கும்., என் எல்லா சமையலும் குக்கரில் தான் ஆகையால் ஒன்றீரண்டு விசில் உடனே இரக்கிடுவேன்.
பாத்திஙக்லா நாட்டம இப்ப ஆமீனா பதில் சொல்லிச்சு, எல்லா குழந்தைகளுக்கும் (ஆமீனாக்கும்) ( நாட்டாமைக்கும்) நூடுல்ஸ் தான் பிடிக்கும்
ஆமாம் ஸாதிகா பிள்லைக்ளுக்கு பள்ளியில் இருந்து வந்ததும் ஏதாவது டிபெரெண்டா இருக்கனும்.
அதான் இப்படி செய்து வைத்தேன்., சத்தமே இல்லை தட்டு காலி
மிக்க நன்றி காஞ்சனா
விக்கி உங்கள் தொடர் வருகைக்கு மிக்க நன்றி . ரொம்ப சந்தோஷம்
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா