கத்திரிக்காய் சாம்பார்
தேவையானவை
வேக வைக்க
துவரம் பருப்பு – 50 கிராம்
மஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி
சின்ன வெங்காயம் - 8
தாளிக்க
எண்ணை + நெய் – முன்று தேக்கரண்டி
கடுகு – அரை தேக்கரண்டி
பூண்டு – இரண்டு பல்
கருவேப்பிலை – சிறிது
சின்ன வெங்காயம் – 6
தக்காளி ஒன்று – பெரியது
பெரிய கத்திரிக்காய் – ஒன்று (கால் கிலோ)
உப்பு தேவைக்கு
சாம்பார் பொடி – ஒன்னறை தேக்க்ரண்டி
புளி – கொட்டை பாக்கு அளவு
கொத்து மல்லி தழை - சிறிது
செய்முறை
1 . பருப்பை வேகவைத்து மசிக்கவும்.
2. தாளிக்க கொடுத்துள்ளவைகளை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து தாளித்து தக்காளியை நான்கு துண்டுகளாக அரிந்து சேர்த்து, மஞ்சள் பொடி, உப்பு சேர்த்து வேகவிடவும்.தக்காளி வெந்த்தும் கத்திரிக்காயை எட்டாக அரிந்து சேர்த்து வேகவைக்கவும்
3. ஐந்து நிமிடம் கழித்து சாம்பார் பொடி சேர்த்து, புளியையும் கரைத்து சேர்த்து கொதிக்கவிடவும்.
4. காய் வெந்து மசாலா வாடை அடங்கியதும் வேகவைத்த பருப்ப மசித்து சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்கவிட்டு கொத்துமல்லி தழை தூவி இரக்கவும்.சுவையான கத்திர்க்காய் சாம்பார் ரெடி.சுவையோ சுவை சுவையோ அலாதி. சாம்பார் என் சின்ன பையனுக்கு ரொம்ப பிடிக்கும். என் சின்ன பையனுக்கு நான் வைக்கும் சாம்பார் மட்டும் தான் பிடிக்கும்.
டிஸ்கி: இங்கு முன்பெல்லாம் கத்திரிக்க்காய் என்றால் குட்டி கத்திரிக்காய் கிடைப்பது அரிது நல்ல இரண்டு கை சைஸுக்கு ஒன்று கிடக்கும். இப்ப எல்லா வகையான கத்திரிக்காய் களும் கிடைக்கின்றன.
என் சில குறிப்புகளை இங்கும் காணலாம்... வாங்க வாங்க
Tweet | ||||||
11 கருத்துகள்:
கத்தரிக்காய் சாம்பார்..பேஷ் பேஷ்..சாம்பாரில் கத்திரிக்காய் முருங்கைக்காய்க்கு அடிச்சுக்க முடியாது.
கத்திரிக்காய் சாம்பாரே தனி ருசி தான்.
Delicious sambar jaleela Akka!
Yum yum,my fav sambar..
கத்திரிக்காய் சாம்பார் மிகவும் ருசியாக இருக்கிறது ஜலீலா.
சாம்பார் சூப்பர்! நன்றி சகோ!
கத்தரிக்காய் சாம்பார் சுவையோ சுவை.. அருமை
கத்தரிக்காய் சாம்பார் எனக்கும் ரொம்ப பிடிக்கும். ஊர்ல வைக்கும் சாம்பார்தான் டேஸ்ட். அதுவும் நம்மூர் நாட்டுக்கத்தரிக்காய் என்றால் இஷ்டம்தான். இங்கு வந்தபின் சாம்பாரில் கத்தரிக்காயே சேத்துக்க மாட்டேன். ஏன்னா இங்குள்ள கத்தரிக்காய் பெருசுபெருசா.. உவ்வ்வ்வே
அருமை.
Great Recipe....
visit @ ma blog in ur free time :-)
http://preeti-kitchen.blogspot.in/
Kathrikai is always best for sambhar, looks very delicious. Thank you for linking with Any One Can Cook :)
ஸாதிகா அக்கா
ரத்னவேல் ஐய்யா
ஆஸியா
மகி
பிரியா
கோமதி அரசு
திண்டுககல் தனபாலன்
சிநேகிதி
பிரிதி
உம்மு மைமூன்
அனைவருக்கும் மிக்க நன்றி
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா