Tweet | ||||||
Thursday, August 29, 2013
ஓம்ம் & கர்பூரவள்ளி பீட்ரூட் சாலட் - Beetroot Salad with Thyme & Oregano
ஓம்ம் &
கர்பூரவள்ளி பீட்ரூட் சாலட்
உடல் ஆரோக்கியம்
மற்றும் எடை குறைப்பு ஹெல்தியான உணவுகளில் சாலட் வகைகள் மிகவும் சிறந்த்து.
இதை ஏதாவாது
ட்ரெஸ்ஸிங் வகைகள் ( சாஸ்) பயன்படுத்தி சாப்பிட்டால் சுவை கூடுதலாக இருக்கும்.
அந்த வகைகளில் இதில்
ஓம்ம் மற்றும் கர்பூரவள்ளி சேர்த்துள்ளேன்.
பிரியாணி செய்தால்
கண்டிப்பாக அதற்கு பக்க உணவாக தயிர் சட்னி தயாரிப்போம், கூடவே இது போல் சாலட் வ்கைகளும்
சேர்த்து கொண்டால் நல்ல செரிமானம் ஆகும். சளியையும் கட்டு படுத்தும்.கர்பிணி
பெண்களுக்கும் ஏற்ற சத்தான சாலட்.
தேவையான பொருட்கள்
பீட்ரூட் – சிறியது ஒன்று
ஆலிவ் ஆயில் ¼ தேக்கரண்டி
சீரகதூள் – ¼ தேக்கரண்டி
மிளகாய் தூள் – ஒரு சிட்டிக்கை
ட்ரெஸ்ஸிங் செய்ய:
கர்பூரவள்ளி (காய்ந்த்து) –
¼ தேக்கரண்டி
ஓம்ம் (காய்ந்த்து) - - ¼ தேக்கரண்டி
லெமன் ஜூஸ் – ¼ தேக்கரண்டி
மிளகு தூள் – ஒரு சிட்டிக்கை
உப்பு - தேவைக்கு
செய்முறை
பீட்ரூடை தோலெடுத்து இரண்டு
இன்ச் நீளத்திற்கு விரல் அளவு மெல்லியதாக அரிந்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் ஒரு
பின்ச் உப்பு சேர்த்து பிட்ரூட் முழ்கும் அளவு தண்ணீர் சேர்த்து வேகவைத்து தண்ணீரை
வடிக்கவும்.
நான்ஸ்டிக் பேனை சூடு
படுத்தி ஆலிவ் ஆயில் சேர்த்து சீரகதூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து இரண்டு
நிமிடம் வதக்கவும்.
பரிமாறும் பவுளில் ஓம்ம்,
கர்பூரவள்ளி, லெமன் ஜூஸ்,உப்பு, மிளகு தூள் சேர்த்த்து நன்கு கலக்கி வெந்த
பீட்ரூடை சேர்த்து மீண்டும் கலக்கவும்.
ஆரோக்கியமான மருத்துவ குறிப்பு, ஓமம் கர்பூரவள்ளி பீட்ரூட் சாலட்.
Oregano - karpuuravalli கர்பூரவள்ளி
Thyme - Omam - ஓமம்
Linking to virunthu unna vaangka viji SYS (Beetroot or Spinach )- hosted by Shama
Subscribe to:
Post Comments (Atom)
6 கருத்துகள்:
புதுமையான சாலட் செய்துப் பார்க்கிறேன் ஜலீலா.
அருமையான சலட்.
நன்றாக இருக்கு..
ஓமம் + கற்பூரவல்லி + பீட்ரூட் சாலட்...
புதுமையாக இருக்கிறதே அக்கா....
செய்முறை விளக்கம் நன்றாக இருக்கிறது.
சாலட் அருமை
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா