Tweet | ||||||
Wednesday, August 14, 2013
சிக்கன் சாசேஜ் & வெஜ் ஃப்ரைட் ரைஸ்
குழந்தைகளுக்கு ரொம்ப பிடித்தது சாசேஜ், நூடுல்ஸ் , மற்றும் ப்ரைட் ரைஸ் உடன் சிக்கன் மட்டனுக்கு பதில் சாசேஜ் சேர்த்து சமைத்துகொடுக்கலாம்.
சிக்கன் சாசேஜ் & வெஜ்
ஃப்ரைட் ரைஸ்
1.
முட்டை - 1
மிளகு தூள் – ¼ + ¼ தேக்க்ரண்டி
எண்ணை + பட்டர் – 1 + ¼ + ¼ தேக்கரண்டி
உப்பு தூள் – தேவைக்கு
2.
சிக்கன் சாசேஜ் – 2 (Al Kabeer Halal Sausage)
மிளகாய் தூள் – ¼ தேக்க்ரண்டி
எண்ணை + பட்டர் – ¼ தேக்கரண்டி
உப்பு தூள் – ¼ தேக்கரண்டி
3.
எண்ணை + பட்டர் - 1
தேக்கரண்டி
சர்க்கரை –1/4 தேக்கரண்டி
பொடியாக நறுக்கிய பூண்டு –
1 பல்
பொடியாக நறுக்கிய
பச்சமிளகாய் 1
பொடியாக நறுக்கிய வெங்காய
தாள் – 1
மேகி கியிப் – ¼ துண்டு
சோயா சாஸ் – ½ தேக்கரண்டி
ஃப்ரோஜன் மிக்ஸட்
வெஜிடேபுள் – 2 மேசைக்கரண்டி
4.
உதிரியாக வடித்த சாதம் – 1
கப்
செய்முறை
1. முட்டையில் ¼ தேக்கரண்டி மிளகு தூள் மற்றும் ¼ தேக்கரண்டி உப்பு சேர்த்து நன்கு நுரை பொங்க
அடித்து தவ்வாவில் கால் தேக்கரண்டி எண்ணை + பட்டர் ஊற்றி தோசையாக பொரித்து
தூளாக்கி வைக்கவும்
2. குக்க்கரில் சாசேஜை
மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி ஒரு விசிலில் வேக வைத்து பொடியாக ¼ தேக்க்ரண்டி மிளகாய் தூள் ¼ தேக்கரண்டி உப்பு தூள் போட்டு ¼ தேக்கரண்டி பட்டர் + எண்ணையில் வறுத்து எடுத்து வைக்கவும்.
3. ஒரு வாயகன்ற நான் ஸ்டிக்
தவாவில் பட்டர் + எண்ணையை சேர்த்து சர்க்கரை, பச்சமிளகாய், பூண்டு சேர்த்து நன்கு
வதக்கவும்.
அடுத்து வெங்காய தாள் ,
மிக்ஸ்ட் வெஜிடேபுள் சோயா சாஸ், மிளகு தூள், உப்பு, மேகி கியுப் அனைத்தும்
சேர்த்து நன்கு 3 நிமிடம் வதக்கவும்.
4. பொடித்து வைத்துள்ள்
முட்டை, உதிரியான சாதம் , பொரித்து வைத்துள்ள சாசேஜ் அனைத்தையும் ஒன்றன் பின்
ஒன்றாக சேர்த்து நன்கு ஒரு சேர கிளறி இரக்க்வும்.
( அரிசி 75 கிராம் 10
நிமிடம் ஊறவைத்து ஒரு வாயகன்ற சட்டியில் தண்ணீர் கொதிக்க விட்டு அரிசியை சேர்த்து
உப்பு + எண்ணை விட்டு உதிரியாக வடித்து ஆறவைத்து வைக்கவும்.
( பச்சரிசி, பாசுமதி அரிசி
எல்லாம் உலை கொதித்து 7 நிமிட்த்தில் வெந்துவிடும்) இதை ஒரு நாள் முன்பே செய்து
பிரிட்ஜில் வைத்து மறுநாள் ப்ரைட் ரைஸில் சேர்க்கலாம்).
பள்ளி செல்லும்
குழந்தைகளுக்கும் லஞ்ச் பாக்ஸ்க்கு கொடுத்து விடலாம்.
பரிமாறும் அளவு : இரண்டு
குழந்தைகளுக்கு
ஆக்கம்
ஜலீலாகமால்
துபாய்
Labels:
அசைவம்,
அயல் நாட்டு உணவு,
குழந்தை உணவு,
சாசேஜ்,
சாதம் வகைகள்
Subscribe to:
Post Comments (Atom)
8 கருத்துகள்:
சுலபமான செய்முறையாத்தான் இருக்கு...
சாசேஜ் அடிக்கடி செய்து சாப்பிடுறோம்... இதையும் செய்து பாத்துற வேண்டியதுதான் அக்கா...
Assalamu Alaikum,
I hope you are aware of how the sausage is made.
என் பிள்ளைகளுக்கு சாசேஜை ஸ்லைஸ் பண்ணி பிரை பண்ணிக்கொடுத்தால் சாப்பிட்டுக்கொண்டே இருப்பாரக்ள்.
சே குமார் செய்து பாருஙக்ள் பேச்சுலர்களுக்கு இது மிக சுலமாக இருக்கும்
ஆமாம் ஸாதிகா அக்கா என் பிள்ளைகளுக்கும் ரொம்ப பிடிக்கும்.
va alakkum salama
Pebble,
இது சிக்கன் சாசேஜ் (ஹலால்)
நன்றாக இருக்கின்றது.
மகள் செய்து சாப்பிடுவாள்.
சிம்பிள் அண்ட் சுப்பேர்ப். சின்னாட்களுக்கு மட்டுமல்ல பெரியோருக்கும் பிடிக்கும்.
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா