Tuesday, October 8, 2013

ஆனியன் ஊத்தாப்பம் - Onion Uthaappam


ஆனியன் ஊத்தாப்பாம் என் கணவரின் பேவரிட், எப்ப ஹோட்டலுக்கு போனாலும் முதலில் இதை தான் அவர் ஆர்டர் செய்வார். ஏன்னா அது திக்காக இருக்குமாம் நல்ல பில்லிங்காய இருக்கும் என்பார். சில நேரம் தோசைமாவு மீதம் ஆனால் இப்படி செய்து ஆபிஸ்க்கு கொண்டுபோவது , அப்படியே தோசையில் தக்காளிசட்னியை தடவி ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் சுருட்டி சாப்பிட அருமையோ அருமை தான்..





தோசை மாவு - ஒரு கப்

( தோசைமாவில் உப்பு, சிறிது சர்க்கரை, நல்லெண்ணை சேர்த்து கலக்கி வைக்கவும்)

வெங்காயம் - கால் கிலோ (பொடியாக நறுக்கியது)
பச்சமிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
எண்ணை + நெய் - சுட தேவையான அளவு





செய்முறை
முதலில் பொடியாக நறுக்கிய வெங்காயம் பச்சமிளகாயை நன்றாக கலக்கி வைத்து கொள்ளவும்.


தோசைமாவில் 
தோசைகல்லை காயவைத்து மாவை தடிமனாக ஊற்றவும்.

முன்று மேசைகரண்டி அளவுக்கு வெங்காயம் பச்சமிளகாய் கலவையை பரவலாக தூவி மூடி போட்டு சிறிது நேரம் வேக விடவும்.
தோசையை திருப்பி போட்டு தீயின் தனலை குறைவாகவைத்து வெங்காயம் கருகாமல் சுட்டு எடுக்கவும்.



தக்காளி சட்னி
தேவையான பொருட்கள்.
வெங்காயம் 2 பொடியாக நறுக்கியது
தக்காளி - 4
மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
பச்சமிளகாய் - 1 பொடியாக நறுக்கியது
உப்பு தேவைக்கு
கருவேப்பிலை - சிறிது
பூண்டு - 2 பல் பொடியாக நறுக்கியது
எண்ணை - ஒரு தேகக்ரண்டி
கடுகு உளுத்தம் பருப்பு
செய்முறை 

எண்ணையை காயவைத்து கருவேப்ப்பிலை கடுகு,உளுத்தம் பருப்புகருவேப்பிலை  பூண்டு சேர்த்து தாளித்து
வெங்காயம், பச்சமிளகாய், தக்காளி சேர்த்து வதக்கி மிளகாய் தூள் உப்பு தூள் தூவி தீயின் தனலை சிம்மில் வைத்து கூட்டாகும் வரைசுருள வேகவிட்டு இரக்கவும்.இதில் வெங்காயம் ரொம்ப குழைய வேகவைக்கவேண்டாம், அப்படியே முழுச்சிக்கிட்டு நிற்கனும்.. ஹிஹி (ரொட்டிக்கு செய்யும்போது வெங்காயம் தக்காளி அளவு சரி சமமாக இருக்கனும்.
இந்த தக்காளி சட்னி செய்முறை என் பெரிமாவிடம் கற்று கொண்டது. நாங்க பள்ளிக்கு செல்லும் போது கோதுமை பரோட்டாவிற்கு பக்க உணவாக செய்து தருவார்கள்.ஆனால் பெரிமா இப்ப இல்லை. எங்க டாடி போய் ஆறுமாதத்தில் அவர்களும் இறந்து விட்டார்கள்.ஜலீ ஜலீ ஜலீ ஜலீன்னு பெரிமா கூப்பிடும்போது ரொம்ப நல்ல இருக்கும்.

Linking to Gayatri's Walk through Memory Lane Hosted by Asiya. and Tamizar samaiyal
https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam


9 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் said...

வாவ்...! இரண்டும் சூப்பர்...!

ராஜி said...

என் மகனின் ஃபேவரிட் ஊத்தப்பம். ஆனா மாவில சர்க்கரை கலக்க மாட்டேன். தக்காளி சட்னியும் நாங்க செய்வதுண்டு.

Mahi said...

ஊத்தப்பம்-சட்னி ரெண்டுமே நல்லா இருக்கு ஜலீலாக்கா!
------
//அப்படியே தோசையில் தக்காளிசட்னியை தடவி ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் சுருட்டி சாப்பிட அருமையோ அருமை தான்..//
// வெங்காயம் ரொம்ப குழைய வேகவைக்கவேண்டாம், அப்படியே முழுச்சிக்கிட்டு நிற்கனும்.. ஹிஹி (ரொட்டிக்கு செய்யும்போது வெங்காயம் தக்காளி அளவு சரி சமமாக இருக்கனும்.//
-------
ரெசிப்பிய விட உங்க விளக்கம்தான் ஜூப்பரு! :)) ஹிஹி...

Anonymous said...

உங்கள் சுவை ரசனை சுவைக்க வைக்கிறது ஜலீ .
நான் இதனுடன் சிறிது இட்லிமிளகாய் பொடி தூவி
பொடி ஊத்தாப்பம் என்பதும் உண்டு.

Asiya Omar said...

Thanks for linking to WTML Event.Super onion uthappam.

Unknown said...

I wish i could comment in Tamil but i will continue in english.
I love onion uthappam.
Thanks for sharing your recipe.

'பரிவை' சே.குமார் said...

இரண்டுமே அருமையான குறிப்புக்கள்...
பகிர்வுக்கு நன்றி.

Torviewtoronto said...

deliciously done uthapam

Al Musairie Qatar said...

super. periyamma illadha kavalai dhan manasa nogadigukkudhu

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா