ரவையை லேசாக கருகாமல் அதே நேரம் சிவறாமல் வறுத்து ஒரு வாயகன்ற தட்டில் கொட்டி ஆறவிடவும். 2 நிமிடத்தில் வறுத்துடலாம், கொஞ்சம் தீய அதிகமாகமாக வச்சிட்டு அங்க இங்க பராக் பார்த்தீங்க அவ்வளவு தான் தீஞ்சே போய்விடும்.
பெரிய சட்டி அல்லது வாயகன்ற வானலி ( உப்புமா கிளற சின்ன பாத்திர எடுக்காதீங்க கொஞ்சம் பரவாலான சட்டியா இருக்கட்டும்.
எண்ணை ஊற்றி தாளிக்க கொடுத்துள்ளவைகளை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து தாளிக்கவும்.
வெங்காயம் சிவற கூடாது லேசாச வெள்ளை கலரில் வதங்கினால் போதும் தாளிக்கும் போதே பக்கது அடுப்பில் தண்ணீரை கொதிக்க வையுங்கள்.
ஒன்னேகால் என்று சொன்னதால் சரியா ஒன்னேகால் தண்ணீர் வைக்க வேண்டாம். கொதிக்கும் போது தண்ணீர் கொஞ்சம் வற்றும். அதுவும் இல்லாமல் கிளறும் போது உப்புமா கட்டி பிடித்தால் மேலும் ஊற்றி கிளற கூடுதல் வெண்ணீர் தேவைப்படும்.
இப்ப கொதித்து கொண்டிருக்கும் வெண்ணீரில் அளவில் குறிப்பிட்ட படி ஒன்னேகால் டம்ளர் ஊற்றி கொதிக்க விட வேண்டும். கொதி வெண்ணீர் ஊற்றியதால் சீக்கிரமே கொதி வந்துடும். இந்த ஸ்டேஜில் தீயின் தனலை குறைத்து விட்டு. உப்பை தூவி விட்டு, தட்டில் வைத்திருக்கும் வறுத்த ரவையை கொஞ்சம் கொஞ்சமாக விட்டு ஒருகையால் துவி கொண்டே மறுகையால் கிளறுங்கள். சிறிது நெய்யை ஊற்றி மீண்டும்
கிளறி கெட்டி ஆகி கொண்டே வரும் போது அடுப்பை அனைத்து விடுங்கள்.
கொஞ்சம் அந்த சூட்டுட்டன் அடுப்பிலேயே இருக்கட்டும். 5 நிமிடம் தம் போல் அப்படியே விட்டு விடுங்கள். 5 நிமிடம் கழித்து கிளறி ஒரு சிறிய கிண்ணத்தில் போட்டு தட்டில் தட்டினால் அழகான வடிவத்தில் வரும். கூட ஊறுகாய் , இல்லை வடை, வெங்காய முட்டை ஏதாவது ஒன்றுடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும்.
இதை காலை டிபன் என்றில்லை இரவில் கூட ஈசியான டிபனாக செய்து சாப்பிடலாம்.
இதில் தாளிக்கும் போது காஞ்சமிளகாய் இஞ்சி சேர்த்து தான் செய்வேன்,
இதில் வெரும் பச்சமிளகாய் சேர்த்து செய்துள்ளேன். பச்ச மிளகாய் வாசத்துடனும் டேஸ்ட் அருமையாக இருக்கும்.
https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/
Tweet | ||||||
2 கருத்துகள்:
ஆஹா... சூப்பர் அக்கா.
upma and oorukai, superb combo...
http://kurinjikathambam.blogspot.in/
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா