Friday, September 5, 2014

ஹெல்தி காய்கறி குருமா/ சால்னா


ஹெல்தி காய்கறி குருமா/ வெஜ் குருமா./ காய்கறி  சால்னா, பரோட்டா சால்னா/ 



மைதா பரோட்டா,இங்கு சென்று பார்க்கவும், மைதா பரோட்டா இதற்கு சூப்பரான காம்பினேஷன், பரோட்டா உடம்பிற்கு அவ்வளவாக நல்ல தில்லை ஆகையால் ஆசைக்கு எப்பவாவது செய்து சாப்பிட்டு கொள்ளலாம், படத்தில் இருப்பது கோதுமை ரொட்டி

காய்கறி வகைகள்

உருளை - பாதி
கேரட் சிறிய துண்டு
கருனை கிழங்கு  - 50 கிராம் சிறிய துண்டு
பீன்ஸ் - எட்டு
பட்டாணி - கால் கப் ( இரண்டு மேசை கரண்டி)
ஸ்வீட் கார்ன் - கால் கப்

புரோக்கோலி - முன்று பூ
காலிப்ளவர் - 6 பூக்கள்
பச்ச மிளகாய் 3
மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
உப்பு தேவைக்கு


தாளிக்க

எண்ணை - 2 தேக்கரண்டி
நெய் - ஒரு தேக்கரண்டி
பிரிஞ்சி இலை -  2
பட்டை - 1 இன்ச் சைஸ் - 1 
கிராம்பு - 2
ஏலக்காய் - 1

வெங்காயம் -  ஒன்று பொடியாக அரிந்தது 
இஞ்சி பூண்டு பேஸ்ட்  - 1 தேக்கரண்டி
கொத்துமல்லி தழை - சிறிது 

அரைக்க
தக்காளி - 1
தேங்காய் பத்தை - 2 (அ) தேங்காய் பவுடர் - 1 மேசை கரண்டி
முந்திரி - 5
சோம்பு - 1 தேக்கரண்டி




செய்முறை 

1. அரைக்க கொடுத்துள்ளவைகளை அரைத்து வைக்கவும்.

2. காய் கறி வகைகளை பொடியாக அரிந்து அத்துடன் ,புரோக்கோலி,காலிப்ளவர், கார்ன் சேர்த்து நன்கு அலசி , இரண்டு முன்று தண்ணீரில் அலசி வடித்து வைக்கவும். ( முடிந்தால் லேசான வெது வெதுப்பான நீரில் சிறிது உப்பு போட்டு அலசவும்)

அடுப்பில் சட்டியை ஏற்றி காயவிட்டு, தாளிக்க கொடுத்துள்ளவைகளை ஒன்றன் பின் ஒன்றாக கருகாமல் தாளித்து காய்கறிகளை சேர்த்து நன்கு பிரட்டவும்.

அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், தனியாத்தூள், உப்பு தூள் சேர்த்து கிளறி 1 நிமிடம் சிம்மில் வைத்து இரண்டு  டம்ளர் தண்ணீர் ஊற்றி காய்கறிகளை வேக விட்வும்.

வெந்ததும் அரைத்த விழுதை சேர்த்து தேவைக்கு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விட்டு இரக்கவும்.

இது பரோட்டா, ஆப்பம், பூரி, தோசை, இடியாப்பம் போன்றவைக்கு ஏற்ற பக்க உணவு.
இது வரை காய்கறி/வெஜ் குருமா, எல்லாரும் பொதுவாக செய்வது தானே என்று  இங்கு போஸ்ட் பண்ணதில்லை.என் ஸ்டைல் குருமாவையும் ருசித்து பாருங்கள்.
மறக்காமல் செய்து பாருத்து உங்கள் கருத்தை தெரிவிக்கவும்.



https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

6 கருத்துகள்:

Angel said...

நல்லா இருக்கு..வெஜ் குருமா செய்திருக்கேன் ஆனா தக்காளி சோம்பு அரைச்சதில்லை .என் பொண்ணுக்கு தினமும் மூணு வேளையும் சப்பாத்தி கொடுத்தாலும் சாப்பிடுவா :) செய்து பார்க்கிறேன் ..

Jaleela Kamal said...

ஏஞ்சலின் என் பையனுக்கு வெஜிடேபுள் குருமா ரொம்ப பிடிக்கும் ஆனால் தக்காளி இருக்க கூடாது.
அதான் அரைத்து சேர்த்துடுவேன்.

Asiya Omar said...

வித்தியாசமாய் காய்கறிகள் சேர்த்து செய்திருக்கீங்க. ஜலீலா. குருமாவிற்கு
தக்காளி அரைத்து சேர்ப்பது புதுசு.

Jaleela Kamal said...

கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி ஆசியா. நான் கூடுமானவரை தக்காளியை அரைத்து தான் சேர்ப்பேன் ஆசியா.

வல்லிசிம்ஹன் said...

MMம்ம்.படிக்கவே நல்லா இருக்குமா. குருமாக்குத் தக்காளி அரைப்பது சுவை கூட்டும். நாளை ஞாயிறு ஸ்பெஷலாகச் செய்து கொடுக்கிறேன். மிக நன்றி பா.ஸாதிகா.

Jaleela Kamal said...

வருகைக்கு மிக்க நன்றி வல்லியக்கா

கண்டிப்பாக செய்து பார்த்து அதன் ருசியை இங்கு வந்து பகிருங்கள்.

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா