தேவையான பொருட்கள்
மைதா - மூன்று டம்ளர்
உப்பு ஒரு தேக்கரண்டி
சோடாமாவு ஒரு சிட்டிக்கை
டால்டா = முன்று மேசை கரண்டி
சர்க்கரை = முன்று தேக்கரண்டி
தண்ணீர் = முக்கால் டம்ளர்
முட்டை = 1 (தேவை பட்டால்) சேர்த்து கொண்டால் நல்ல ஷாப்டாக இருக்கும்
எண்ணை = சிறிது
எண்ணை + டால்டா = சுட்டெடுக்க தேவையான அளவு
செய்முறை
மைதாவில் சோடா,உப்பு, சேர்த்து கலக்கி, டால்டாவை உருக்கி ஊற்றி தண்ணீர் ஊற்றி ஒரு ஃபோர்கால் கிளறி விடவும். போர்கால் கிளறி விடுவதால் பிசையும் போது கையில் ஒட்டி கொண்டே வராது.
சிறிது நேரம் கழித்து கையில் எண்ணை தொட்டு கொண்டு நன்கு பிசையவும். தண்ணீர் தேவைப்பட்டால் சிறிது தெளித்து பிசையவும்.
பிசைந்த மாவை ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் நமக்கு தேவையான சைஸில் உருண்டைகள் போட்டு எல்லா உருண்டையிலும் எண்ணை தடவி நன்கு ஊறவிடவும். 2 மணிநேரம் போது மானது.
மேலும் ஊறினாலும் நல்ல இருக்கும்.
ஓவ்வொரு உருண்டையையும் ரொட்டி பலகையில் தேய்த்து புடடைக்கு கொசுவம் வைப்பது போல் மடக்கி மறு படி 20 நிமிடம் ஊறவைக்கவும்.
(உடனே தேய்த்தால் சுருண்டு சுருண்டு நிற்கும்,கொசுவம் வைத்து ஊறினால் தேய்க்கும் போது சுலபமாக வரும்).
இப்போது தேய்க்க நல்ல வரும், கடையில் உள்ளது போல் கெட்டியாகவும் செய்யலாம். அது சரியாக உள்ளே வேகாது. வெள்ளையாக இருக்கும். ஆகையால் சிறிது பெரியதாக போட்டு உள்ளேன்
ரெடி செய்த பரோட்டாவை தவ்வாவில் போட்டு சுடவும்.
ஒரு பக்கம் வெந்ததும் மறுபக்கம் திருப்பி போட்டு எண்ணை கலந்த டால்டாவை சுற்றிலும் ஊற்றி சுட்டெடுக்கவும்.
சுவையான மைதா பரோட்டா ரெடி, இதை கோதுமையிலும் செய்யலாம்.
குறிப்பு
இதற்கு எல்லா சைட் டிஷும் பொருந்தும். ஒன்றும் இல்லை என்றால் வாழைபழம் தொட்டு கூட சாப்பிடலாம், மாசி, காய் கறி குருமா, பெப்பர் சிக்கன்,மட்டன், சிக்கன், குருமாக்கள், மீன் சால்னா, வெங்காய முட்டை. ஆம்லேட், தக்காளி சட்னி,பொரியல், சைனீஸ் அயிட்டம் சில்லி சிக்கன், பட்டர் சிக்கன். எல்லாமே பொருந்தும்.
Tweet | ||||||
44 கருத்துகள்:
நேற்று இரவு இதேதான் இங்கே
இருப்பினும் சில டிப்ஸ் இருக்கு
அடுத்த முறை செய்து பார்ப்போம்.
எங்க வீட்ல பெரும்பாலும் இரவில் கோதுமை/மைதா பரோட்டா தான். குறிப்பும் படங்களும் நல்லாவே இருக்கு.
ஷபிக்ஸ் ஆமாம் நாங்களும் கோதுமை மைதா என மாறி மாறி செய்வது .
இதனுடன் பரோட்டா கீமாவும் செய்து அடுத்த குறிப்பில் போட்டு வைத்துள்ளேன், இது போன மாதமே கால் பாயாவில் மேனக சிஸ்டர் கேட்டு இருந்தார்கள் அவர்களுக்காக போட்டது.
சகோதரர் ஜமால் உடனெ வந்து கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி + சந்தோஷம்.
செய்து பார்த்து எப்படி இருந்தது என்று சொல்லுங்கள்
குறிப்பு ஓகே. ஆனால் இரவில் மைதாவில் செய்த பண்டங்கள் உடலுக்கு கெடுதல்..
அண்ணாமலையான்.
அது வயதானவர்களுக்கு தான் ஒத்து கொள்ளாது .என்றாவது ஒரு நாள் ஒகே தானே. இங்கு எந்த டீகடையானாலும் இந்த மைதா பரோட்டா தான் அதுவும் ரொம்ப திக்கா பார்க்க சரியா வேகாமல் இருக்கும்.
போங்க ஜலீலா ...உங்களுக்கு மட்டும் அருமையாக வருகிறது.
நானும் பல முறை முயற்சி செய்து பார்த்து விட்டேன், எல்லாம் சரியாக வருகிறது.
ஆனால் பரோட்டா மெதுவாக வர மறுக்கிறது :-(
அதுக்கு முதல்ல ஒரு வழிய சொல்லுங்க :-)
ஒன்றும் பெரிய விஷியம் இல்லை.
மைதா குழைத்த மாவு நன்கு ஊறனும்.
அடுக்கு (கொசுவம் வைத்தும் கூட நல்ல சிறிது நேரம் ஊறனும் . நல்ல சர்குலர் மூமெண்டில் சுழற்றி சுழற்றி விடனும்.
நன்றி சிங்கக்குட்டி.
சிங்கக்குட்டி./
தவ்வாவில் போட்டு இரண்டு பக்கம் வெந்ததும் எண்ணை + டால்டா ஊற்றீயதும்
நல்ல சர்குலர் மூமெண்டில் சுழற்றி சுழற்றி விடனும்.
ஜலி,எனக்கு சப்பாத்தி தேய்ப்பதென்றால் மகா கஷ்டம்.பரோட்டா என்றால் 1/2 மணி நேரத்திலேயே 2 கிலோ மாவில் சுலபமாக சுட்டுத்தள்ளிவிடுவேன்.எங்கள் வீட்டிலும் அனைவருக்கும் மிகவும் பிடித்தமான ஐட்டம்.மாவு பிசையும் பொழுது நீருக்கு பதில் பால் சேர்த்தால் இன்னும் சுவை கூடும்.அழகிய படங்கள்.
எல்லாருடைய வயிற்றுக்கும் விருந்தளிக்கும் உங்கள் தாயுள்ளத்துக்கு, மனம் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்,மேடம்.
u pls verify wth doctrs .. lot of prblems cum if v take regularly... occasionally ok..(am nt criticizing ur tips 1ly talk abt maida)
Good post. makes me feelin hungry.
My wife don't know the method to make parotta though we have desire to eat .
Now we will make our own parottas.
Nice photos.Thanks for the recipe.
நல்ல செய்முறை விளக்கம் அக்கா ...
கராச்சி தர்பார் கீமா பரோட்டா இன்னும் ருசிக்குது...நன்றி அக்கா...படமும் அருமையோ அருமை...
பரோட்டா குறிப்பு சூப்பர் அக்கா. நானும் கோதுமை பரோட்டா குறிப்புன்னு ஏகப்பட்டது இருக்கு போட நேரம் போதவில்லை.
புதாண்டு வாழ்த்துக்கள் தாங்களுக்கு தாங்கள் குடும்பத்துக்கும்.
என்ன இவ்வளவு லேட்டா சொல்லுரன்னு கேட்கிரது காதில் விழுது என செய்ய இந்த மலி பத்திதான் தெரியுமே உங்களுக்கு வெட்டியா பொழுது போக்குறேன்ன்னு..
மைதா பரோட்டா நன்றாக இருக்கிறது் ஜலிலா.
இங்கு கூடுதலாக மைதாவில்தான் செய்து கொள்வார்கள்.
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
நல்ல பதிவு, நல்ல படங்கள். புரெட்டா அருமை.
// இது போன மாதமே கால் பாயாவில் மேனக சிஸ்டர் கேட்டு இருந்தார்கள் அவர்களுக்காக போட்டது. //
அப்படின்னா இது பழைய புரெட்டா என்று சொல்லுங்கள். பாவம் மேனகா பழைய புரெட்டா எல்லாம் கொடுக்காதீங்க. ஹா ஹா ஹா.
நான் தான் லேட்டா. பந்திக்கு முந்தனும் படைக்குப் பிந்தனும்னு சும்மாவா சொன்னாங்க.
//பரோட்டா மீந்து போனால் கொத்து பரோட்டா செய்யலாம்.//
இதுதான் எனக்கு இப்போதைக்கு.
ஸாதிகா அக்கா நீஙக்ள் சொல்வது சரி, எங்க வீட்டிலும், ஒரே நேரம் ஒரு படி மாவு, இப்படிசெய்வது நல்ல ஷாப்டாக வரும்.
உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி
ஷண்முகபிரியன் சார் ரொம்ப நாள் கழித்து வந்துள்ளீர்கள். உங்கள் பாராட்டுக்கும், கருத்திற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.
அண்ணாமலையான் அவர்களுக்கு, நீங்கள் சொல்வது சரியே மைதா உடல் நலத்திற்கு கேடு தான், பைல்ஸ் பிராப்லம் இருப்பவர்கள் சாப்பிட கூடாது.
ஆனால் ஊருக்கு ஊரு, தெருவுக்கு தெரு ரோட்டோர கடைகள் எல்லா வற்றிலும் இந்த மைதா பரோட்டாதான் விற்கிறார்கள்.
பேச்சுலர்கள் வேற வழி இல்லாமல் இதை தான் வாங்கிசாப்பிடுகீறார்கள்.
நாங்கள் வீட்டில் செய்யும் போது இதே போல் கோதுமையில் செய்வோம், மைதாவில் எப்பவாவது தான் செய்வோம்.
இது ரிலேட்டடா அடுத்த குறிப்பு போடுகிறேன் ஆகையால் தான் இந்த மைதா பரோட்டா, அதுவும் இல்லாமல் ஒரு தோழி கேட்டு கொன்டதாலும் இந்த குறிப்பை போட்டுள்ளேன்.
கைலாஷ்,
சர்வன்,
வருகைக்கும் கருத்து தெரிவித்தமைக்கும் மிக்க நன்றி,
கைலாஷ் இனி உங்கள் வீட்டில் உஙக்ள் மனைவி கையால் பரோட்டா கிடைக்கும். இல்லையா?
சீமான் கனி கராச்சி தர்பார் பெரிய பரோட்டாவை விரும்பாத ஆள் உண்டோ,
நன்றி
வாங்கம்மா மலிக்கா,
பரவாயில்லை லேட்டா போட்டாலும், வாங்க அடிக்கடி.
போடுஙக் உங்கள் பரோட்டாவையும்.
உங்களுக்கும் என் புத்தாண்டு வாழ்த்துக்கள்,
மாதேவி ஆமாம் கடைகளில் இங்கும் மைதா பரோட்டா தான் அதிகம்.
வருகைக்கும் கருத்து தெரிவித்தமைக்கும் மிகக் நன்றி
புத்தாண்டுவாழ்த்துக்கள்.
சுதாகர் சார் ஆமாம் இது பழைய பரோட்டாதான், சரியா கண்டு பிடித்து விட்டீர்களே?
கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி.
எனக்கு ஆனால் மைதா பரோட்டா ஷாப்ட்டாவே வரதில்லை அக்கா உங்கள் முறைபடி செய்து பார்க்கிறேன்
அக்கா இன்று காலை கோதுமை மாவில் செய்தேன் , நல்லா வந்தது ஆனால் கடையில் கிடைப்பது போல லேயராகவர என்ன செய்யணும் .
சாருஸ்ரீ கடையில் விற்பது போல் லேயராக வர,
நல்ல பெரிய சைஸ் மாவு எடுத்து வட்ட வடிவமாக உருட்டுங்கள்.
ஒரு ஸ்பூன் எண்ணை முழுவதும் தடவி கிட்ட கிட்ட கொசுவம் வையுங்கள்.
வைத்து மடித்தால் நான் படத்தில் காட்டியுள்ளது போல் வரும்.
மறுபடி வட்ட வடிவமாக தேய்க்கும் போது சப்பாத்திக்கு மெல்லியதாக உருட்டுவது போல் உருட்ட கூடாது.
அப்படியே தடிமனாக வட்ட வடிவமாக உருட்ட்டி, தவ்வாவில் போட்டு இரண்டு பக்கமும் லேசாக வெந்தது சிவந்து வரும் போது சுற்றிலும் எண்னை கலந்த நெய்யை ஊற்றி தோசை கரண்டியால் நாலாபக்கமும் பரோட்டாவை சுற்றி விடுஙக்ள்.
முடிந்ததும் முன்று பரோட்டா ஒன்றாக வைத்து இரண்டு கைகளாலும் பொசுக்கி விடுஙக்ள். நாம் வைக்கும் கொசுவம் அடுக்கு சுடும் போதே பிரியும்.
தெரிந்த வரை சொல்லிவிட்டேன் முயற்சி செய்து பாருங்கள்.
ரொம்ப நன்றி அக்கா , அடுத்த முறை இது மாதிரி செய்து பார்கிறேன் . பசங்களுக்கு மிகவும் பிடித்த டிபன். எங்கள் வீட்டு சமையல் குறிப்புகள் கட்டாயம் போட முயற்சி செய்கிறேன் ,எனக்கு ஊக்கம் தந்தற்கு மிகவும் நன்றி
ஆஹா ஜலீ கல்கிட்டிங்க போங்க.
என் பேபரிட் அயிட்டம். ம்.. நான் எப்பாவது தான் செய்வேன். இங்கு ப்ரோசன் பரோட்டா கிடைக்கும் அதை தான் அவசரத்துக்கு உதவுகிறது. அடுத்த முறை உங்க வழிமுறை தான்.
நிங்க பரோட்டா ராணியாகிட்டிங்க.
நல்ல ஸ்டெப் பை ஸ்டெப் படம் போட்டு கல்க்கிட்டிங்க. இத தான் நான் எதிர்பார்த்திருந்தேன். இனி பரோட்டா செய்யும் போது அவசியம் இந்த படத்தை பார்த்து தான் செய்கிறேன்.
கல்க்கிட்டிங்க
அக்கா ப்ரோட்டா நல்லா இருக்கு கோதுமையில் செய்தால் நல்லா வ்ருமா நான் இதுவரை மைதாவில்தான் சாப்பிட்டு இருக்கிறேன் கோதுமை மாவிலும் இதே செய்முறை தானா அக்கா பரோட்டாவோட சேர்த்து தொட்டுக்கவும் கொடுங்க அக்கா அப்பதான சாப்பிட முடியும நான் shirin
நான் அடிக்கடி செய்வது கோதுமை மாவில் தான் , அருசுவையில் கூட யரும் சமைகக்லாமில் இருக்கு பாருங்கள் நான் கொடுத்தது. ஷாப்ட் சப்பாத்தி, கோதுமை பரோட்டா என்று இருக்கும்.
தொட்டுக்க எது வோண்டுமானாலும் செய்யலாம், சர்க்கரை, வாழைப்பழம், மாசி சம்பல்,வெஜ் குருமா, சிகக்ன், மட்டன், மீன் குழம்புகள்,
பொட்டோட்டோ, இறால் கூட்டு, கறி கூட்டு கால் பாயா எல்லாம் பொருந்தும்
சாருஸ்ரீ, விஜி, பாத்திமா உங்கள் கருத்துக்களுக்கு மிகக் நன்றி.
விஜி என்னபா பரோட்டா ராணியா? எத்தனை ராணி பட்டம் தான் வாங்குவது.
ஜலீலக்கா பரோட்டா சூப்பர்,பார்க்க பார்க்கா ஆசையா இருக்கு.
எனக்கு ஒரு ஆசை,உங்களை எங்க வீட்டுக்கு ஒரு வாரம் அழைச்சிட்டு வந்து, வித விதமா சாப்பிடணும்னு ஆசை:) எப்ப வறீங்க??
நல்லா இருக்கு. புரேட்டா படமும் அருமை. உடனே சாப்பிடத் தோன்றுகின்றது. மன்னிக்கவும் ஜலில்லா பணி காரணமாய் உங்கள் பதிவுகளைப் படிக்கவில்லை. இன்று சேர்த்துப் படித்துவிட்டேன். வெல்லச் சோறும், பரேட்டாக் கீமாவும் அருமை. நன்றி.
கவி வாங்க எத்தனை பரோட்டா வேண்டும். என்ன சமையல் வேண்டும் சொல்லுங்கள்
பரவாயில்லை சுதாகர் சார் , எப்ப நேரம் கிடைக்குதோ அபப் வந்து கருத்தை தெரிவியுங்கள்.
தொடர் வருகைக்கு மிக்க நன்றி.
hello mam.
unga blogguku na recenta sernthen.ungal thirami kandu viyanthu ponen.im staying in abu dhabi.i feel happy and lucky to b as ur follower.i hav one problem in doing parota.in the final stage i mean parota suttu edutha pin it becomes hard(even i mix egg).romba neram pisainthu kondey irukanumna?solunga plz.
aaminaa maavu uurinaalee poothum piraku pathil thareen, paal seerththu paarungkaL
பரோட்டா சூப்பர்..... செய்து பார்த்தேன்... நன்றாக இருந்தது...
கௌரி உங்களுக்கு இந்த பரோட்டா நல்ல வந்தது குறித்து மிகவும்சந்தோஷம்.
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா