மைதா = ஒரு டம்ளர்
முட்டை = 2
உப்பு = ஒரு சிட்டிக்கை
சர்க்கரை (அ) வெல்லம் = அரை டம்ளர்
கட்டி தேங்காய் பால் = முக்கால் டம்ளர்
நெய் + எண்ணை சுட தேவையான அளவு
மைதா,முட்டை, உப்பு, சர்க்கரை,தேங்காய் பால் எல்லாவற்றையும் ரொம்ப கட்டியாகவும் இல்லாமல்,தண்ணியாகவும் இல்லாமல் மீடியமாக கரைக்கவும்.
பணியார சட்டியில் எல்லா குழியிலும் சிறிது நெய் கலந்த எண்ணையை ஊற்றி மாவை ஊற்றவும்.
கோதுமை மாவு = ஒரு டம்ளர்
முட்டை = ஒன்று
தேங்காய் துருவல் = கால் டம்ளர்
உப்பு = ஒரு சிட்டிக்கை
வெல்லம் = அரை டம்ளர் (பொடித்தது)
ஏலப்பொடி = அரை தேக்கரண்டி
எண்ணை = பொரிக்க தேவையான அளவு
வெல்லத்தை சிறிது தண்ணீரில் சூடாக்கி கரைத்து மண்ணில்லாமல் வடிகட்டி சேர்த்து முட்டையும் சேர்த்து நன்கு கெட்டியாக கரைகக்வும்.
எண்ணையை சூடாக்கி, ஒரு ஒரு கரண்டி அளவு ஒன்றோடு ஒன்று ஒட்டாதவாறு ஊற்றி எடுத்து எண்னையை வடியவிட்டு சாப்பிடவும்.
இதில் முட்டை சேருவதால் நல்ல பொங்கி வரும்.
முட்டை பிடிக்காதவர்கள், வாழைப்பழம் சேர்த்து , ஒரு சிட்டிக்கை சோடாமாவும் சேர்த்து சுட்டெடுக்கவும். இதை தோசை பதத்திற்கு கரைத்து தோசைகளாகவும் சுட்டெடுக்கலாம்.
இதில் அரை டம்ளர் தான் சேர்த்துள்ளேன் இனிப்பு அதிகம் விரும்புவோர். முக்கால் டம்ளர் வெல்லம் சேர்த்து கொள்ளலாம்.
Tweet | ||||||
36 கருத்துகள்:
அப்பாடா..ஜலி வந்துவிட்டீர்களா?உங்களை தேற்றுவதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது.இனி எதற்கும் கலங்காமல் வீறு நடை போட்டு சிகரத்தில் ஏறுங்கள்.இப்படி இடர்பாடுகளை தடைகல்லாக நினைக்காமல் படிக்கல் ஆக நினைத்து ஏறுங்கள்.அதுதான் இந்த அக்காவின் ஆசை.வாழ்த்துக்கள்.அப்புறமாக வந்து உங்கள் மைதா குழிப்பணியாரத்தை சுவைக்கின்றேன்
என் மகனின் ஃபேவரைட்!! ஆனால் நாங்கள் தேங்காய்ப்பூதான் சேர்ப்போம். பால் சேர்ப்பதில்லை. பால் சேர்ப்பதால் இன்னும் ஸாஃப்டாக இருக்கும் போல.
அக்கா உங்க அப்பம் பார்த்த உடனேயே எடுத்து சாப்பிடனும் போல இருக்கு ஆனால் முட்டை சேர்த்துள்ளீர்கள்.முட்டை இல்லாம பண்ணலாமா?
அக்கா, வாங்க. வாங்க. ரெட்டை இனிப்பு. முதல் பணியாரம் செய்வேன். அடுத்தது புதுசு. கண்டிப்பா செய்ஞ்சு பாக்குறேன்.
அக்கா, உங்க ரெசிபீஸ் எல்லாம் காப்பி ரைட் பண்ணிட்டா என்ன? அப்போ, யாரும் சுட்டா நீங்க ரிப்போர்ட் பண்ணி நடவடிக்கை எடுக்க முடியும்.
தொடர்ந்து குறிப்புகள் கொடுப்பதற்கு என் வாழ்த்துகள். அல்லாஹ்வின் அருளால் எல்லாம் நன்மைக்கே நடந்தது.
வாழ்க வளமுடன்
அதிகம் இனிப்பு விரும்புவதில்லை
ஆனால் இதை அவசியம் சாப்பிட தோனுது
இந்த வாரத்தில் எப்படியும் அதற்கான சட்டியை வாங்கிடனும் - இன்ஷா அல்லாஹ்.
குளிருக்கேற்ற பலகாரம்,அருமை அக்கா
ஜலீலா மீண்டும் குறிப்பு கொடுக்க ஆரம்பித்தது மகிழ்ச்சி.வாழ்த்துக்கள்.
மீண்டும் குறிப்புக்கள் கொடுக்க ஆரம்பித்தது மிக்க மகிழ்ச்சி.வாழ்த்துக்கள்.
salaam ஜலீலா
எப்பவும்போல சூப்பர் ரெசிபி
கோபம் தணிந்து மீண்டும் குறிப்புகள் தரமுன் வந்ததற்க்கு தாங்ஸுங்கோ
வாங்க சகோதரி. மீண்டும் நல்ல இனிப்பான (இடுகை)செய்தியோட வந்தது சந்தோசம்.
ஜலிலா அக்கா வாழ்த்துக்கள் மீண்டும் குறிப்பு கொடுத்தற்கு , லவ்லி பணியாரம்
அம்மா செய்துகொடுப்பாங்க நல்லா சாப்பிடுவேன் ஆனால் நான் இதுவரை செய்ததில்லை. செய்துபார்க்கனும்... இந்த பணியாரத்தை பார்க்கும் பொழுது உடனே செய்யனும் போல இருக்கு அக்கா
ஸாதிகா அக்கா வந்துட்டேன்.
முடிந்த போது கண்டிப்பாக போடுவேன். மிக்க நன்றி.
ஹுஸைன்னாமா உங்கள் பையனுக்கு ரொம்ப பிடிக்குமா? தேஙகாய் பால் சேர்ப்பதால் பிள்ளைகளுக்கு சாப்பிட அப்படியே பஞ்சு போல் உள்ளே போகும். கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி.
அம்மு வாங்க முட்டை இல்லாம, வாழைபழம், சோடாமாவு சேர்த்து கொள்ளுங்கள். நன்றி அம்மு.
சித்ரா ஆமாம் இது இரண்டுமே ரொம்ப சூப்பரா இருக்கும்.
சீக்கிரமே காப்பி ரைட் செய்திடலாம்.
ஹைஷ் வாங்க வருகைக்கு மிக்க நன்றி. ஆமாம் நடந்தது கண்டிப்பாக நன்மைக்கே. உங்கள் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி.
சகோதரர். ஜமால் இதில் இனிப்பு கம்மியாக தான் சேர்த்துள்ளேன்.
தவறாமல் வருகை த்ருவதற்கு மிக்க நன்றி.சட்டி வாங்கி விட்டால் இதே போல் காரத்திலும் செய்யலாமே. இனிப்பு பிடிக்காத உங்களையே சாப்பிட வைக்கிறதா இந்த அப்பம். குழிபணியாரம்
பாத்திமா ஜொஹ்ரா வாங்க ஆமாம் குளிருக்கு நலல் சுட சுட சாப்பிட்டால் சூப்பரா இருக்குமே. கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி.
ஆசியா வாங்க உங்கள் ரொம்ப நன்றி, நான் கொடுத்ததற்கு நீங்களும் ஒருகாரணம்.
தாஜ் இல்லபா கோபம் எல்லாம் ஒன்றும் இல்லை. நாம் போட போட அவர்கள் எடுத்து எடுத்து போட்டு கொண்டு இருக்கிறார்கள் அதான் எதற்கு கொடுக்கனும் என்று யோசித்தேன். மிக்க நன்றி.
நவாஸ் ஆமாம் என்ன இனிப்பு போடலாம் என்று யோசித்து தான் இதை போட்டாச்சு.
ஆரம்பத்திலிருந்து தொடர்ந்து ஊக்கம் தெரிவித்து குறீப்புகளுக்கு தவறாமல் பின்னூட்டம் இடுவதற்கு ஸ்பெஷல் நன்றி.
சாரு வாங்க உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி.
பாயிஜா ஆசை பட்டால் உடனே அம்மாவிடம் கேட்டுசெய்து சாப்பிடுங்கள்.
2 பணியாரமும் அருமையா இருக்கு ஜலிலாக்கா.பணியாரத்தில் முட்டை,தே.பால் சேர்த்து செய்ததில்லை.அடுத்தமுறை செய்து பார்க்கிறேன்.
அக்கா வாங்க எங்கே குறிப்புகள் போடாமல் இருந்துடுவீங்களோன்னு ப்ய்ந்திட்டேன் தொடர்ந்து குறிப்புகள் போட வாழ்த்துக்கள் எல்லாம் நன்மைக்கே
ஹாய் ஜலிலா தோழி எப்படி இருக்கிங்க சூப்பர் குழிபணியாரம்.ரைஹானா.
அப்பாடா வாங்க அக்கா..இப்போதான் வயிறு குளிர்ந்து பசிக்க ஆரம்பிக்குது...நெக்ஸ்ட்..கார பணியாரம் போடுங்க இது ரெண்டும் சூப்பர்...அக்கா.....நன்றி...வாழ்த்துகள்...
ரைஹானா தோழி நான் நலம், வாங்க வாங்க வருகைக்கு மிக்க நன்றீ + சந்தோஷம்/
மேனகா இரண்டு பணியாரமும் நல்ல இருக்கா , ஊரிலிருந்து வந்தாச்சு, எல்லோரும் நலமா? ஷிவானிக்கு ஊர் பிடித்திருந்ததா?
கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி
முட்டை தேங்காய் பால் சேர்த்து செய்து ஷிவானிக்கு கொடுங்கள்.
ஷீரின் ஏன் பயம் அதான் இவ்வள்வு நல்ல உள்ளங்கள் அழைத்த பின்பும் வராமல் இருப்பேனா? முடிந்த போது குறிப்பு போடுகிறேன்./
சீமான் கனி வாங்க அதுக்கென்ன கார பணியாரமும் போட்டுட்டா போச்சு/
கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றீ
அருமை ராத்தா
வருகை தந்தமைக்கு மிக்க நன்றி பேனாமுனை
வந்துடீங்களா..:)) மிக்க மகிழ்ச்சி.:)
மிக்க மகிழ்ச்சி!!
எங்களின் வேண்டுகோளை ஏற்று மீண்டும் ஒரு “இனிப்பான” ரெசிப்பியோடு வந்த உங்களை இனிப்பாய் வருக, இனிப்பாய் இருக்க வாழ்த்துகிறேன்...
Welcome. cheer up.
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா