பூப்பெய்திய பெண்களுக்கு இதை செய்து கொடுப்பார்கள். டயட் செய்பவர்கள் இதை சாப்பிட வேண்டாம்.
ஒல்லியாக இருப்பவர்கள் குண்டாக இதை அடிக்கடி செய்து சாப்பிடலாம்.
தேவையான பொருட்கள்
உளுந்து = கால் டம்ளர்
அரிசி மாவு = முன்று தேக்கரண்டி
ரவை = ஒரு மேசை கரண்டி
வெங்காயம் = முன்று
பச்சமிளகாய் = ஒன்று
கொத்துமல்லி தழை = சிறிது
நெய் + எண்ணை = சுட தேவையான அளவு
செய்முறை
உளுந்தை அரை மணி நேரம் ஊறவைத்து சிறிது தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்து கொள்ளவும்.
அரைத்த உளுந்து மாவுடன் அரிசி மாவு, ரவை சேர்த்து கலக்கி அதில் உப்பு,பொடியாக நருக்கிய வெங்காயம், கொத்துமல்லி தழை, பச்சமிளகாயை சேர்த்து அடை சுட தகுந்தவாறு தண்ணீர் சிறிது சேர்த்து அடைகளாக வார்க்கவும்.
சுவையும் மணமும் சொல்ல வார்த்தைகள் இல்லை.
இது மலிக்கா உடைய குறிப்பு. இது இடுப்பு வலி உள்ளவர்களுக்கு உளுந்து சம்பந்தப்பட்ட சமையல் செய்து சாப்பிட்டால் ஆண்களுக்கும், பெண்களுக்கும் நல்லது. இதில் மலிக்கா ரவை சேர்க்க சொல்ல்ல நான் ரவை சேர்த்துள்ளேன். இதில் இனிப்பில் வேண்டும் என்றால் ஒரு முட்டை, தேவையான அளவு சர்க்கரை, ஒரு சிட்டிக்கை உப்பு சேர்த்து கொள்ளவும்.வெங்காயம் பச்சமிளகாய் சேர்க்க தேவையில்லை/
இடுப்பெலும்பு பலம் பெற உளுந்து அடை (இனிப்பு மற்றும் காரம்), உளுந்து களி, உளுந்து வடை, உளுந்து வட்லாப்பம்,உளுந்து சுண்டல் போன்றவை சாப்பிடலாம்.
Tweet | ||||||
33 கருத்துகள்:
உளுந்து கஞ்சின்னு ஒன்னு காச்சுவாங்க அதைத்தவிர உளுந்தில் எதுவும் பிடிக்காது ...
மருந்து என்பதால் முயற்சி செய்து பார்க்கிறேன் .
தொட்டுக்க கெட்டிச்சட்னியோட ரொம்ப நல்லா இருக்கும்.
உளுந்து களிதான் கொடுப்பாங்க. இப்படி அடையா செஞ்சு கொடுத்தா நல்லதுதான்.
எனக்கு தெரிந்தது,உளுந்து வடை,உளுந்தம்பால்.உளுந்து சுண்டல் அவ்வளவு தான்,இது உங்க கண்டுபிடிப்பா?சூப்பர் .
என்ன ஜலீ கலக்கிட்டிங்க. வடை, உருண்டை எல்லாம் சாப்பிட்டுருக்கேன்.
அடை புதுவிதமா இருக்கே செய்திட வேண்டியது தான். நல்லதும் கூட.
உளுந்து கஞ்சிதான் கேள்வி பட்டுருக்கேன். இதுவும் நல்லதுதான்...
உளுந்து அடை வித்தியாசமான,சத்தான அடைதான்.
அக்கா, குண்டா இருக்கிறவங்களை மெலிய வைக்கிற மாதிரி, அட்டகாசமான ரெசிபி அடுத்த பதிவு போடுங்க. :-)
கண்டிப்பா, உடனே செய்யுறேன்.
அக்கா, நான் பதிவுலத்துக்கு ரெண்டு மாதமாதான் ஆஜர். அதான் அறுசுவை.காம் பத்தி நீங்கள் எழுதியதை படிக்க மிஸ் பண்ணிட்டேன். ஆனால் உங்கள் ரெசிபிகளை நான் ரொம்ப காலமாவே சுட்டு, நல்லா (அப்படிதான் நினைக்கிறேன்) சமைச்சிக்கிட்டு இருக்கேன். :-)
Thanks for stopping by kothiyavunu n for nice comments.:)
Urad dal adai sounds interesting and looks superb!!
அடடே ஆடை தூள்...அக்கா...எவ்ளோ நாள் ஆச்சு...எவ்ளோ நாள் நாள் ஆச்சு..ஹும்ம்ம்ம்...
அட!...அடை...அட்டகாசம் :-)
அக்கா உளுந்து அடை நல்லா இருக்கு உளுந்து களி எப்படி செய்வது என்று சொல்லுங்கள் அக்கா அது நல்ல டேஸ்ட்டா இருக்குமே உங்க பக்குவம் ரொம்ப நல்லா இருக்கும் சொல்றீங்களா
படங்களும் - சமையல் குறிப்புகளும் சாப்பிடும் ஆவலை தூண்டுகின்றது...
வாழ்த்துக்கள்...
வாழ்க வளமுடன்,
வேலன்.
எனக்கு பிடிச்ச உணவு
// இடுப்பெலும்பு பலம் பெற உளுந்து அடை (இனிப்பு மற்றும் காரம்), உளுந்து களி, உளுந்து வடை, உளுந்து வட்லாப்பம்,உளுந்து சுண்டல் போன்றவை சாப்பிடலாம். //
நல்லாத்தான் சொல்லியிருக்கீங்க. அண்கள் அதிகம் உளுந்து சாப்பிட்டால் உயிரனுக்கள் கூடும் என்பது கூடுதல் தகவல். நன்றி ஜெலில்லா.
நான் பதிவர்கள் சமையல் அறையில் என்று ஒரு நகைச்சுவை பதிவு போட்டுள்ளேன். படித்து விட்டுத் திட்டவும். நன்றி.
1. சகோ ஜமால் உளுந்து கஞ்சி பிடிக்கதவர்கள். இப்படி அடை சுட்டு சாப்பிடலாம்.
2.சகோ. நவாஸ் தொட்டுக்க கெட்டி சட்னி ம்ம் சூப்பரா இருக்குமே.
3.ஆசியா தவறாமல் என் குறிப்புகளை கண்டு பதில் அளிப்பதற்கு மிக்க நன்றி/
இது மலிக்கா தங்கையிடம் பேசும் போது உளுந்து அடை என்றார்கள் ,உடனே செய்து பார்த்தது.
4.ஆமாம் விஜி இடுப்பு வலிக்கு ரொம்ப நல்லது.
5. அண்ணாமலையான் அவர்களுக்கு மிக்க நன்றி
6. ஆமாம் ஸாதிகா அக்கா இது ரொம்ப சத்தானது.
7. சித்ரா எப்ப பார்த்த்தாலும் குண்டானவர்கள் ஒல்லியாக தான் டிப்ஸ் போடுவீங்களா? ஒல்லியா இருப்பவர் குண்டாக டிப்ஸ் போட மாட்டிங்களா என்று முன்பு ஒரு சகோதரி கேட்டாஙக் அதுக்கு தான் ஓவ்வொரு ரெசிபியா சேர்த்து கொண்டு இருக்கேன்.
8.கொதியவனு உங்கள் வருகைக்கும், கருத்து தெரிவித்தமைக்கும் மிக்க நன்றி
9.// அடடே ஆடை தூள்...அக்கா...எவ்ளோ நாள் ஆச்சு...எவ்ளோ நாள் நாள் ஆச்சு..ஹும்ம்ம்ம்// வாங்க சீமான் கனி அடை சாப்பிட்டா? எவ்ளோ நாள் ஆச்சு....
10.சிங்கக்குட்டி உங்கள் பாரட்டுக்கு மிக்க நன்றி.
11. ஷீரின் உளுந்து களி செய்யும் போது போடுகிறேன்.
12.வேலன் சார் வாங்க வாங்க வருகைக்கும் கருத்து தெரிவித்தமைக்கும் மிக்க நன்றி.
13.பாத்திமா ஜொஹ்ரா பிடித்த அடையா ம்ம் செய்து சாப்பிடுங்கள்.
14 சுதாகர் சார் அட சூப்பரான டிப்ஸ் கொடுத்து இருக்கீங்க.
வரேன் வந்து பார்க்கிறேன் உங்கள் பதிவை....
ஆகாகா நம்ம உளுந்தடையை செய்தாச்சா சூப்பராக இருந்திருக்குமே.
விளக்கங்களும் சூப்பரப்பூ.. அக்கான்னா அக்காதான். நம்மைளையும் இணைச்சிகிட்டதுக்கு மிக்க நன்றிக்கா
உளுந்துசோறு செய்வதுண்டு. உளுந்து கஞ்சி, களி தெரியும். அடை புதுசு!!
அக்கா சூப்பரா இருக்கு!! உளுந்தை பொங்க வைக்க வேண்டுமா இல்ல அரைத்ததும் அப்படியே ஊற்றா வேண்டுமா? ஈசியா எடுக்க வருமா? கொஞ்சம் டவுட் இருக்கு. முடிந்தால் நாளை செய்கிறேன் வொர்க் அதிகம் இல்லாமல் இருந்தால்
//Chitra said...
அக்கா, குண்டா இருக்கிறவங்களை மெலிய வைக்கிற மாதிரி, அட்டகாசமான ரெசிபி அடுத்த பதிவு போடுங்க. :-)
கண்டிப்பா, உடனே செய்யுறேன்.//
ஹா...ஹா...ஹா... சித்ரா... அவ்ளோ குண்டாவா இருக்கீங்க... ஜலீலா மேடம்... கொஞ்சம் மனசு வைங்க...
உளுந்து அடை என்ற இப்போதுதான் கேள்விப்படும் ரெசிப்பி சொன்ன உங்களுக்கு ஒரு ஸ்பெஷல் “ஓ”...
உளுந்து மாவை தயிருடன் கலந்து, கடுகு தாளித்து, பச்சடியாக்கி துவையல் சாதத்திற்கு தொட்டுக்கொண்டு சாப்பிட்டு பாருங்கள்... தேவாமிர்தமாக இருக்கும்... இது என்னோட ரெசிப்பி.
assalamu alaikkum
நலமா உளுந்து அடை சூப்பர்
நோன்பு திறக்கும்போது கீரை பொரியரிசி இறால் போட்டு சமைத்து கெட்டி சட்டினியுடன் உளுந்துஅடை அம்மா செய்து தருவாங்க என்ன சுவையா இருக்கும்.
தேங்காய் முட்டை கலந்து செய்தால் நல்ல டேஸ்ட் கிடைக்கும்
சுவையானசுவை (சுஸ்ரீ . இது நான் இட்லிக்கு மாவு அரைக்கும் போது இந்த அடை செய்து பார்க்க கால் டம்ளர் மாவு தனியாக எடுத்து புளிக்க விடாமல் பிரிட்ஜில் வைத்து விட்டேன். நேரம் இல்லாததால் இரண்டு நாள் கழித்து அப்படியே அதில் அரிசி மாவு, ரவை கலந்து , வெங்காயம், பச்ச மிளகாய் எல்லாம் கலந்து தவ்வாவில் ஊற்றி சுழற்ற தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சுட்டேன். 3 அடை வந்ந்தது.
செய்து பாருங்கள்./ வந்து கருத்தை தெரிவிக்கவும்.
//உளுந்து மாவை தயிருடன் கலந்து, கடுகு தாளித்து, பச்சடியாக்கி துவையல் சாதத்திற்கு தொட்டுக்கொண்டு சாப்பிட்டு பாருங்கள்... தேவாமிர்தமாக இருக்கும்... இது என்னோட ரெசிப்பி//
கோபி கண்டிப்பா செய்து பார்க்கிறேன்.
புது ரெசிபி சொல்லி தந்தமைக்கு மிக்க நன்றி.
எனக்கு ஒரு பெரிய ஓ போட்டதற்கும் மிக்க நன்றி,,
ஆமாம் கண்டிப்பாக சித்ராவிற்காக அடுத்தது டயட் ரெசிபி தான்.
வா அலைக்கும் அஸ்ஸலாம். Taj
//நோன்பு திறக்கும்போது கீரை பொரியரிசி இறால் போட்டு சமைத்து //
தாஜ் இது எனக்கு தெரியாது எப்படின்னு சொல்லுங்கள்,
ஹுஸைன்னாம்மா புதுசு புதுசு தான் செய்து பாருங்கள்.
கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி
healthy adai..nice one
Adai romba nalla irukku pa. Vadaikku pathilaga ithai kooda seyalamnu ippo therinthu konden.
Please accept my award dear:)
ஷாமா நட்ராஜன் உங்கள் வருகைக்கும் கருத்து தெரிவித்தமைக்கும் மிக்க நன்றி
விக்கி கருத்து தெரிவித்தமைக்கும், அவார்டு கொடுத்தமைக்கும் மிக்க நன்றி.
வந்து பெற்று கொள்கிறேன்.
வித்தியாசமான,சத்தான அடை.சூப்பர்
ஜலீல அக்கா உங்க உளுந்து அடை செய்தேன் நல்லா இருக்கு எனக்கு சட்டியில் இருந்து எடுக்க ரெம்ப கஷ்டமா இருந்தது நானா சட்டியா ஒரு வழி ஆயிடுச்சு டேஸ்டு நல்லா இருந்ததது ஈசியா எடுக்க வழி சொல்லுங்களேன் உங்களுக்கும் இப்படி தான் கஷ்டமா இருந்ததா இன்னும் மீதி மாவு இருக்கு என்ன பண்ணலாம் ஐடியா சொல்லுங்க!!
சுஸ்ரீ நீங்கள் எவ்வளவு போட்டீர்கள் ரவை, அரிசி மாவு சேர்த்தீர்களா? ஊத்தப்பம் ஊற்றும் அளவிற்கு கரைத்தீர்களா? தோசை சட்டி ரொம்ப காய்ந்து இருந்தாலும் ஒட்டிக்கொண்டு சண்டை போட வேண்டி வரும், வெங்காயத்தை பாதி அரிந்து கல்லில் எண்ணை தடவி வெங்காயத்தை தேய்த்து விட்டு ஊற்றினால் கூட ஒட்டாமல் வரும்.
அபபடி இல்லை ( பருப்படை போல் செய்து விடலாம். (கடலை பருப்பு, துவரம் பருப்பு, பாசிபருப்பு ஊறவைத்து கொர கொரப்பாக அரைத்து அடை வார்க்கலாம்.
மைகிச்சன் கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா