தேவையான பொருட்கள்.
தரமான பாசுமதி அரிசி - அரை கிலோ
இறால் - 150 கிராம்
காய் கறிகள் - 200 கிராம்
(கேபேஜ்,கேரட், கேப்ஸிகம்,பீஸ்,பீன்ஸ்)
வெங்காய தாள் - இரண்டு ஸ்ட்ரிப்ஸ்
பூண்டு - முன்று பெரிய பற்கள்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - அரை + ஒரு தேக்கரண்டி
வெங்காயம் - ஒன்று + ஒன்று
கிரீன் சில்லி பேஸ்ட் - ஒரு தேக்கரண்டி (அ) பச்ச மிளகாய் - 2
சர்க்கரை - அரை தேக்கரண்டி
மேகி கியுப் - ஒன்று
சோயா சாஸ் - ஒரண்டு தேக்கரன்டி
வெயிட் பெப்பர் பொடி - ஒரு தேக்கரண்டி
பிளாக் பெப்பர் பொடி- இரண்டு தேக்கரண்டி முட்டை - முன்று
உப்பு - தேவைக்கு
எண்ணை - முன்று மேசை கரண்டி
பட்டர் - முன்று மேசை கரண்டி
டொமேடோ கெட்சப் - ஒரு மேசை கரண்டி
செய்முறை
1. தேவையான அனைத்து பொருட்களையும் தயாராக வைக்கவும்.இறாலை தோலெடுத்து வயிற்றிலும், முதுகிலும் உள்ள அழுக்குகளை எடுத்து நன்கு கழுவி தண்ணீரை வடித்து அதில் அரை தேக்கரண்டி இஞ்சி பூண்டு கால் தேக்கரண்டி உப்பு, கால் தேக்கரண்டி மிளகாய் தூள் சேர்த்து ஊற வைக்கவும்.மற்ற காய் கறிகள் அனைத்தியும் அரிந்து ரெடியாக வைக்கவும்.
2.முட்டையில் மிளகு தூள், உப்பு தூள் சேர்த்து அடித்து வைக்கவும், அரிசியை பத்து நிமிடம் ஊற வைக்கவும்.
3.ரைஸ் குக்கர் (அ) குக்கரில் ஒரு மேசை கரண்டி எண்ணை + ஒரு மேடை கரண்டி பட்டர் சேர்த்து காய் வைத்து ஒரு வெங்காயம், பொருதேக்கரண்டி இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்து வதக்கி மேகி கியுபில் கொஞ்சம் உடைத்து போட்டு, ஒரு தேக்கரண்டி சோயா சாஸும் ஊற்றி கிளறவும்.
4. எல்லாம் ஒன்று சேர இரண்டு நிமிடம் வதக்கவும். வதக்கி அதில் ஒரு டம்ளர் அரிசிக்கு அதே போல் ஒரு டம்ளர் தண்ணீரும், கூட அரை டம்ளரும் சேத்து ஊற்றி சிறிது உப்பு சேர்த்து வேகவிடவும்.ரைஸ் குக்கர் என்றால் பதமாக வந்து விடும் கீப்பில் வந்ததும் இரக்கி வைத்து கொள்ள வேண்டும்.குக்கர் என்றால் தண்ணீர் ஊற்றியதும் கொதிக்க விட்டு வெயிட் போட்டு முன்றவது விசில் வரும் சமயம் இரக்கி விட வேண்டும்.
5.இப்போது காய் தாளிக்க வேண்டும், இரண்டு மேசை கரண்டி பட்டர் + ஒரு மேசை கரண்டி எண்ணை விட்டு காய்ந்ததும் சர்க்கரை,பூண்டை பொடியாக அரிந்து போட்டு , பசமிளகாய் பேஸ்ட் (அ) பச்சமிளகாய் பொடியாக அரிந்து சேர்த்து கிளறவும். 6. .வெங்காயம் ஊறவைத்த இறாலை போட்டு வதக்கவும்.
7.அடுத்து பொடியா கட் பண்ணி வைத்துள்ள அனைத்து காய் கறிகளையும் சேர்த்து கிளறவும்.
8. முட்டையை எண்ணை சிறிது பட்டர் சேர்த்து பொரித்து வைத்து கொள்ளவேன்டியது.
9.காய் கறியில் மீதி உள்ள மேகி கியுப்,சிறிது உப்பு,சோயா சாஸ், வொயிட் பெப்பர், பிளாக் பெப்பர், டொமேடோ சாஸ் எல்லாம் சேர்த்து நன்கு வதக்கவும்.
10.இப்போது வதக்கி வைத்துள்ள காய் ரெடி, ரைஸ் குக்கரில் உள்ள சாதமும் ரெடி, பொரித்த முட்டையை கொத்தி கொள்ளவும். 11.முதலில் காய் கறி களை போட்டு சாதம் உடையாமல் கிளறவும்.
10.இப்போது வதக்கி வைத்துள்ள காய் ரெடி, ரைஸ் குக்கரில் உள்ள சாதமும் ரெடி, பொரித்த முட்டையை கொத்தி கொள்ளவும். 11.முதலில் காய் கறி களை போட்டு சாதம் உடையாமல் கிளறவும்.
12. அடுத்து முட்டையையும் சேர்த்து கிளறவும்.
13.கடைசியாக தேவை பட்டால் உப்பு சரி பார்த்து தேவைக்கு உப்பு, மிளகு தூள்,சிறிது பட்டரை உருக்கி ஊற்றி நன்கு கிளறி இரக்கவும், சுவையான சூப்பரான பிரான் பிரைட் ரைஸ் ரெடி.
14.இதற்கு தொட்டு கொள்ள வெங்காயம் இறாலுடன் சேர்த்து சாப்பிடவும்
குறிப்பு
இது செய்வது ரொம்ப சுலபம் உதிரியான சாதம், வதகிய காய்கறிகள் வித் சிக்கன் (அ) இறால், முட்டை/ஆனால் சிலருக்கு உதிரியாக வராது சாதம் உதிரியாக வர தன் கீ ரைஸ் போல் ஆனால் கொத்து மல்லி புதினா, பச்ச மிளாகாய்,தயிர் இல்லாமல் லைட்டாக தாளித்து சாதம் ரெடி செய்யனும்.
உப்பு விஷியத்தில் ரொம்ப கவனம் தேவை.சோயா சாஸ், மேகி கியிபில் உப்பு இருக்கும் ஆகையால் எல்லாத்துக்கும் உப்பு சுவையும் சேரனுமே என்று கொஞ்சம் கொஞ்சம் சேர்த்து கொள்ளவும்.
இதை சிக்கனிலும் செய்யலாம்.
இறால் வெள்ளையாக வரட்டினால் சில பேருக்கு பிடிக்காது ஆகையால் சிறிது மிளகாய் தூள் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு ஊறவைப்பது.
பிரைட் ரைஸ் என்றாலே சிறிது அஜினமோட்டோ சேர்ப்பார்கள், நான் அதை பயன் படுத்துவதில்லை, இந்த முறை ரொம்ப நீளமாக இருந்தாலும் சுவை அபாரமாக இருக்கும்.
Tweet | ||||||
29 கருத்துகள்:
பர்ஃபக்ஷன் இருக்கு நீங்க சொல்வதில்
நானே எளிதா செய்திடலாம் போலிருக்கே
நன்றி சகோதரி.
அக்கா, நிச்சயம் இதை இன்று செய்ய போறேன். என் கணவரின் பிறந்த நாளுக்கு நல்ல ரெசிபி கொடுத்து இருக்கீங்க. உங்கள் குறிப்புகள், சமையல் செய்ய எளிதாக உள்ளது. மிக்க நன்றி. நம்ம ப்லாக் பக்கம் காணோமே, அக்காவை.
பார்க்கவே 5 ஸ்டார் சமையல் போல் இருக்கும். நீங்கள் செய்தால் ருசியும் அருமையாக தான் இருக்கும்..
சூப்பர் ரெசப்பி, பிரின்ட் எடுத்து வச்சாச்சு.
ஜலீலா நான் ப்ரைட் ரைஸ் என்றால் நினைக்கும் அதே கலர்,சமையலில் நீங்க ஒரு எக்ஸ்பெர்ட் தான் . சூப்பர்.
ஜமால் சொன்னமாதிரி ரொம்ப ஈசியா செஞ்சிடலாம்போல இருக்கே!!
இன்னும் 13 நாள் தான் இருக்கு, போய் ஒரு கை பார்த்திடலாம்.
பிளாக் எழுதுபவர்களுக்கு ரடான் மீடியா ஒர்க்ஸ் நிறுவனத்தின் பல்வேறு வாய்ப்புக்கள்...
எங்கள் வலைத்தளத்தில் உங்கள் பதிவுகளை பகிர்ந்து கொள்ளுங்கள்...
www.radaan.tv
செயல் முறை மிகவும் எளிதாக உள்ளது பகிர்வுக்கு நன்றி ........
one of my fav!!! simply superb..
அக்கா, உங்கள் வாழ்த்துக்களுக்கும் ஆசிர்வாதங்களுக்கும் நன்றிகள் பல. ரொம்ப சந்தோஷமாக இருக்கு. அக்கா, உங்க மட்டன்/சிக்கன் குழம்பு வகைகள் செய்து பார்த்து நல்லா வந்திருக்கு. அக்கா, நீங்க அறுசுவை.காம் வெப்சைட் இல் ரெசிபி போட்டு இருக்கிறீங்களா?
Leela prawn rice looks fantastically delicious and yummy...my daughter will finish that plate happily:)
வாவ், அழகா எளிமையா செய்முறை விளக்கம் கொடுத்திருக்கீங்க. இந்த சன்டே செய்திட வேண்டியதுதான்:-)
இவ்ளோ வேலை இருக்க... படங்களை பார்த்து கிட்டு தயிர் சோறு சாப்ட வேண்டியதுதான்....ஹும்ம்ம்ம் ...நன்றி அக்கா...
சீமான் கனி ஏன் தயிர் சாதம், நீங்க சொல்வதை பார்த்தா மனோரம்மாவும், எஸ்வி சேகரும் ஒரு படத்தில் கோழி படத்தை மாட்டி வெரும் சாதம் வைத்து சாப்பிடுவார்களே அது போல் இருக்கு...
ஆகா பேச்சுலர் பிரைட் ரைஸ் கூட செய்யலாமே.
மிக்ஸ்ட் வெஜிடேபுல்,உதிரியான சாதம், மிளகு சேர்த்து பொரித்த முட்டை அத்தனையும் மிக்ஸ் செய்து (மேகி ஸ்டாக், சோயா சாஸ் ) சேர்த்து செய்தால் ஈசியாக பிரைட் ரைஸ் தயாரிக்கலாம்.
சகோதரர் ஜமால் உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி.
சித்ரா உங்கள் கணவரின் பிறந்த நாளுக்கு செய்ய போறீங்களா?
ரொம்ப சந்தோஷம்.
ஆமாம் பாயிஜா 5 ஸ்டார் பிரைட் ரைஸ் போல ரொம்ப ரிச்சா க இருக்கும் இதன் மணமும் ரொம்ப ஜோராக இருக்கும்
ஷஃபிக்ஸ் பிரிண்ட் எடுத்தாச்சா ரொம்ப சந்தோஷம்
ஆசியா உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி, எக்ஸ்பேர்ட் எல்லாம் இல்ல பா தினம் சமைப்பதால் வந்த கை பக்குவம்.
நீங்களும் நல்ல கை தேர்ந்த சமையல் ராணி தான்
சகோ நவாஸ் ஊருக்கு போக 13 நாள் தான் இருக்கா நல்ல படியாக போய் வாங்க.
அப்ப போய் பொட்டிய திறக்கும் முன் என் சைட்ட தான் ஓப்பன் பண்ணுவீங்க இல்லையா?
மகா கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி.
thank you sarah naveen
//Leela prawn rice looks fantastically delicious and yummy...my daughter will finish that plate happily:)//
Happy to hear,
Thank you for your comment,
பிரியா கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி.
கண்டிப்பா செய்து பாருங்கள்.
அக்கா, அறுசுவை லிங்க் கொடுத்ததுக்கு நன்றி. நான் நிறைய ரெசிபி அங்கே இருந்து எடுத்து இருக்கேன், ப்லாக் உலகம் வரும் முன்னே. உங்க மட்டன் ரெசிபீஸ் எல்லாம் செஞ்சு நல்ல பேரு வாங்கி இருக்கேன். அதான் ரெண்டு பெரும் ஒண்ணுதானான்னு கேட்டேன். ரொம்ப ரொம்ப தேங்க்ஸ், அக்கா. உங்க நட்பு கிடைத்தது ரெட்டிப்பு மகிழ்ச்சி.
Perfect one,loves to eat
நல்ல ரெசிப்பி ஜலி.
வணக்கம் அக்கா,
உங்களுடைய Prawn Fried Rice இன்று மதியம் செய்தேன். ரொம்ப நன்றாக இருந்தது.
மிக்க நன்றி, அக்கா.
பிருந்தா
மை கிச்சன், ஸாதிகா அக்கா, பிருந்தா கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி.
பிருந்தா செய்து பார்த்து பின்னூட்டம் தெரிவித்தமைக்கு மிகுந்த சந்தோஷம்.
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா