Monday, January 4, 2010

பாக்கிஸ்தானிய‌ர்க‌ளின் ப‌ரோட்டா கீமா


கோதுமை மாவு பரோட்டா கீமா



பரோட்டாவை கடைகளில் மைதாமாவில் செய்து உள்ளே கீமா வைத்து சுருட்டி கொடுப்பார்கள், நான் இதை கோதுமைமாவில் செய்துள்ளேன்.

இந்த பரோட்டா கீமாவை சாப்பிட்டு விட்டு தான் இங்குள்ள் பாக்கிஸ்தானியர்கள் ஒரு ஏசி ஒருத்தரா தூக்கி முதுகில் ஏற்றி கொண்டு போகிறார்கள்.
நம்ம ஊரு தயிர் சாதம் எல்லாம் ஒன்று முடியாது .



பாக்கிஸ்தானியர்களின் மிக முக்கியமான டிபன் அயிட்டம் இது. ஏன் மதிய உணவு கூட இது தான். ரொம்ப சத்தான டிபன். துபாயில் முக்கால் வாசி பேச்சுலர் உடைய காலை உணவும் இது தான். என்ன நம்ம‌ வீட்டில் செய்வது சின்ன‌தா உள்ள‌ங்கை அள‌வு தான் ப‌ரோட்டோ சுடுவோம், அவ‌ர்க‌ள் ந‌ல்ல‌ பெரிய‌தாக‌ சாப்பிடும் த‌ட்டு சைஸுக்கு இருக்கு, ஒருத்த‌ருக்கு ஒன்று (அ) ஒன்ன‌றை போதுமான‌தாக‌ இருக்கும்.











தேவையான பொருட்கள்



பரோட்டா தயாரிக்க



கோதுமை மாவு - மூன்று கப்


உப்பு ‍ ஒரு தேக்கரண்டி


சோடாமாவு ‍ ஒரு சிட்டிக்கை


பட்டர்(அ) நெய் - இரண்டு மேசைக்கரண்டி


பால் - கால் கப்


ச‌ர்க்க‌ரை = முன்று தேக்க‌ர‌ண்டி





கீமா தயாரிக்க




கீமா - கால் கிலோ


எண்ணை ‍ இரண்டு தேக்கரண்டி
ப‌ட்ட‌ர் = ஒரு தேக்க‌ர‌ண்டி
வெங்காயம் - ஐந்து
ஃபுரோஜன் பட்டாணி = இரண்டு மேசை கரண்டி

இஞ்சி பூண்டு பேஸ்ட் - இரண்டரை தேக்கரண்டி
தக்காளி - ஒன்று
பச்ச மிளகாய் - இரண்டு
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
சீரகத்தூள் - கால் தேக்க‌ரண்டி
கரம் மசாலா தூள் - அரை தேக்கரண்டி
தனியா தூள் - கால் தேகரண்டி
உப்பு - தேவைக்கு
கொத்து ம‌ல்லி த‌ழை = சிறிது









செய்முறை


கோதுமையில் சோடா,உப்பு, பட்டர் பால் சேர்த்து கலக்கி, தண்ணீர் ஊற்றி பிசைந்து ஊற வைக்கவும். இப்போது நல்ல ஊறவைத்த பரோட்டாமவை ஒரு பெரிய எலுமிச்சை அளவு எடுத்து பறத்தி அதில் ஒரு தேக்கரண்டி முழுவதும் தடவி புடவை கொசுவ‌ம் வைப்பது போல் வைத்து சுருளாக சுற்றி ஒரு தட்டில் அடுக்கி வைக்கவும்.

மைதா ப‌ரோட்டா





கீமாவை சுத்தம் செய்து ஒரு வடிகட்டியில் போட்டு நீரை வடிக்கவிடவும்.


எண்ணையை காய வைதது வெங்கயத்தை பொடியாக அரிந்து போட்டு வதக்கி இஞ்சிபூண்டு பேஸ்ட் சேர்த்து பொன் முறுவலாகும் வரை சிம்மில் வைக்கவும்.


பிறகு பொடியாக நறுக்கிய கொத்து மல்லி,பச்சமிளகாய்,தக்காளியை போட்டு வதக்க்கவும் வதக்கி எல்லா தூள்களையும் போட்டு உப்பும் சேர்த்து கிளறி கடைசியில் கீமாவைப்போட்டு கிளறி சிம்மில் ஏழு நிமிடம் வேகவைத்து இறக்கவும்.


கீமா மட்டர் ரெடி.


இப்போது தட்டில் அடுக்கி வைத்துள்ள ஒவ்வொரு பரோட்டா சுருளயும் வட்ட வடிவ பரொட்டாகளாக தேய்த்து சுட்டெடுத்து ரெடியாக உள்ள கீமாவை இரண்டு மேசைக்கரண்டி அளவு வைத்து ரோல் பண்ண வேண்டியது.எட்டு பரோட்டா வரும்.

குறிப்பு


இதில் நான் மட்டர் (ஃபுரோஜன் பட்டாணி சிறிது சேர்த்துள்ளேன்) நீங்கள் கூட எந்த காய்கறி வேண்டுமானாலும் சேர்த்து கொள்ளலாம்.
இதை சிக்கன் கீமாவிலும் செய்யலாம்
கோதுமை பரோட்டா செய்து இதை உள்ளே வைத்து சுருட்டினல் சாப்பிடும் போது நல்ல பஞ்சி மாதிரி இருக்கும்.

இதே கோதுமைமாவு பரோட்டாவை குழந்தைகளுக்கு 1 வயதில் இருந்து வாரம் ஒரு முறை செய்து பால் சர்க்கரை சேர்த்து ஊறவைத்து கொடுத்தால் நல்ல தளதளன்னு மின்னுவார்கள். இன்னும் நல்ல ஷாப்டாக வர சிறிது உடைத்தகடலையை பொடித்து சேர்த்து கொள்ளலாம்



குழந்தை களுக்கு ஸ்கூலுக்கு கொடுத்து அனுப்பலாம்,ஆபிஸுக்கும் எடுத்து செல்லலாம்.


மைதா ப‌ரோட்டா செய்முறையை இங்கு சென்று பார்க்க‌

31 கருத்துகள்:

SUFFIX said...

//இங்குள்ள் பாக்கிஸ்தானியர்கள் ஒரு ஏசி ஒருத்தரா தூக்கி முதுகில் ஏற்றி கொண்டு போகிறார்கள்//

அது சரி, மார்க்கெட்டிங் கான்செப்ட் நல்லாவே இருக்குங்க. கலக்குங்க நீங்க.

S.A. நவாஸுதீன் said...

எனக்கும் பிடிக்கும். என்னுடன் இருக்கும் பாக்கிஸ்தானியர்கள் செய்வார்கள்.

அலு(உருளைக்கிழங்கு)பரோட்டா செய்முறையும் போடுங்க.

ஸாதிகா said...

நல்ல ரெசிப்பி.கலவையில் பச்சை பட்டாணி தெரிகிறதே.ஆனால் செய்முறையில் இல்லையே?ப.பட்டாணி சேர்க்கலாமா ஜலி.

Unknown said...

அக்கா பார்க்கும் பொழுதே சாப்பிடனும் போல இருக்கு..

சாருஸ்ரீராஜ் said...

ரொம்ப நல்லா இருக்கு ஜலீலா அக்கா செய்து பார்கிறேன்

அண்ணாமலையான் said...

ரைட்டு...

Chitra said...

அக்கா, புத்தாண்டு வாழ்த்துக்கள்! நாங்கள், மியாமி சென்று இருந்த போது ஒரு பாக்கிஸ்தானி ஹோடேலில் இதை ஆர்டர் செய்து சாப்பிட்டோம். உங்கள் செய்முறையை பார்க்கும் போது, ரொம்ப ஈஸியாய் தெரிகிறது.

suvaiyaana suvai said...

அக்கா பார்க்கும் பொழுதே சாப்பிடனும் போல இருக்கு!!!!!!!

சீமான்கனி said...

/துபாயில் முக்கால் வாசி பேச்சுலர் உடைய காலை உணவும் இது தான்//

அதே..அதே...

அக்கா உங்க பரோட்டா எல்லாம் வித்துபோச்சு அக்கா...சுப்பர்....வாழ்த்துகள்..

Asiya Omar said...

ஜலீலா நீங்கள் என்ன சமைத்தாலும் ருசியாகத்தான் இருக்கும்.பார்த்தாலே தெரிகிறது.தேவையான பொருளில் பச்சை பட்டாணியை சேர்த்து விடுங்கள்.நான் விடுமுறையில் இங்கு தான் குடும்பத்துடன் இருக்கிறேன்.

சீமான்கனி said...
This comment has been removed by the author.
சீமான்கனி said...

அக்கா...உங்களை சிரிக்கவும் சிந்திக்கவும் இங்கு அன்புடன் அழைக்கிறேன்...

http://ganifriends.blogspot.com/

நட்புடன் ஜமால் said...

சரி நான் கோழியை போட்டு செய்து சாப்பிடுகிறேன்

ஆட்டிறைச்சி அவ்வளவாக விருப்பமில்லை.

செம மெனு - அபுதாபியில் இருக்கையில் ஆலு மற்றும் மூளி(முள்ளங்கின்னு நினைக்கேன்) நிறைய சாப்பிட்டு இருக்கேன்.

Jaleela Kamal said...

நன்றி ஷபிக்ஸ்,அட இபப்டி சத்தா சாபிடுங்கள் என்று சொல்லவந்தா? ஓஹோ இந்த டிப்ஸ் மார்கெட்டிங்கில் சேர்ந்து விட்டதா சரி சரி

Jaleela Kamal said...

நவாஸ் ஏற்கனவே ஆலு பராட்டா போட்டாச்சு

Jaleela Kamal said...

ஆமாம் ஸாதிகா அக்கா பச்சை பட்டாணி சேர்க்கலாம், ஆனால் இங்குள்ள ரெஸ்டரன்டில் அப்படியே நிறைய கீமாவை அள்ளிவைத்து சுருட்டி கொடுப்பார்கள், வீட்டில் செவதால் சிறிது பச்சை பட்டாணி சேர்த்து கொஞ்சமா வைத்து சுருட்டி உள்ளேன்.

Jaleela Kamal said...

பாயிஜா,சாருஸ்ரீ, அண்ணாமலையான் அவர்கள், உங்கள் தொடர் பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி.

Jaleela Kamal said...

சித்ரா இதன் படி செய்து பாருங்கள் ஓரளவிற்கு நீஙக்ள்மியாமியில் சாப்பிட்ட டேஸ்ட் கிடைக்கும்.


நன்றி சீமான் கனி பரோட்டா வித்து போச்சுன்னா என்ன, மறுபடி சட்டிய போட போட வேண்டியது தான்.


சுவையான சுவை உடனே செய்து சாப்பிடுங்கள்.


ஆசியா தவறை சொன்னதற்கு மிக்க நன்றி. சேர்த்துவிட்டேன். இங்கு என்றால் அல் அயினில் இருக்கிறீர்களா?

சகோ. ஜமால். இதை சிக்கன் கீமாவிலும் செய்யலாம்

மகா said...

கோதுமை புரோட்டா நிச்சயம் சத்தானது தான் அதுவும் சிக்கனுடன் சேர்ந்தால் அப்பிடியே சாப்பிடுவேன் ........

டவுசர் பாண்டி said...

//ஒருத்த‌ருக்கு ஒன்று (அ) ஒன்ன‌றை போதுமான‌தாக‌ இருக்கும்//


எனக்கு 3 தேவைப்படும் போலக் கீதே ? அப்பால , உங்க பிளாக்குல 2 இடுகை தான் வெச்சிக் கீரீங்கோ !! போட்டோ கீரதால ஓபன் ஆவ ,அதிகமா நேரம் ஆவுது , 1 என வெயுங்க , அப்பால இன்னாவோ சொல்ல மறந்துட்டேனே ? ம்ம் ... ம "HAPPY NEW YEAR " உங்க கேள்விக்கி பதிலு போட்டுக் கீரேன் , படிங்க !!

Jaleela Kamal said...

ம்ம் ஆமாம் மகா கோதுமை பரோட்டா ரொம்ப சத்தானது. அப்படியே வா அது எத்தனை உள்ளே போகுமுன்னு நமக்கே தெரியாது.
கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி

Jaleela Kamal said...

டவுசர் அண்ணாத்தே புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தமைக்கு நன்றி.


டவுட்ட கிளியர் பண்ணதுக்கும் மிக்க நன்றி, ஆமாம் இப்படி கூவி கூவி டவுட்ட சொல்லி கொடுபப்தற்கு, உங்களுக்கு 3 இல்லை நாலு பரோட்டா தேவைபடும்..... )))

Saraswathy Balakrishnan said...

Superaa irukkuu pa

Vikis Kitchen said...

Superb kheema parotta recipe Jaleela. I will definitely make this for my Pakistani friends. In my neighborhood I have many of them and I like their helping tendency and friendly behavior very much.

முஹம்மத் இக்பால் said...

மிகவும் சுவையான ஒரு ரெசிபியை தந்திருக்கிறீர்கள்.இதில் ஃப்ரோசன் பட்டானியை சேர்ப்பதை விட சாதாரன உலர்ந்த பட்டானியை முதல் நாளே வாங்கி ஊறவைத்து இதில் சேர்த்துப் பாருங்கள்.இன்னும் சுவை கூடும்.வளர்க உங்கள் ருசி சேவை.

Jaleela Kamal said...

ஹென்றி வருகைக்கு மிக்க நன்றி

சரஸ்வதி மிக்க நன்றி பா


விக்கி செய்து பாருங்க‌ள்.உங்க‌ள் பாக்கிஸ்தானி பிர‌ண்டுக்கு இதுவும் ஷீர் குருமாவும் செய்து கொடுங்க‌ள், ரொம்ப‌ விரும்பி சாப்பிடுவார்க‌ள்.

அபு வாஃபியா வ‌ருகைக்கும் க‌ருத்து தெரிவித்த‌மைக்கும் மிக்க‌ ந‌ன்றி.

பிரெஷ் போட்டால் இன்னும் சூப்ப‌ராக‌ இருக்கும்.

shirin said...

ஜ்லீலா அக்கா ரொம்ப நல்லா இருக்கு பரோட்டா பார்க்கும் போதே சாப்பிடனும் போல இருக்கு இதையும் நோடஸ் எடுத்து கொண்டேன் எனது புத்தாண்டு கார்ட் வந்த்தா அக்கா மெயிலில் அனுப்பியிருந்தேனே உங்களுக்கு எத்த்னை அவார்ட் கொடுத்தாலும் தகும் பத்தாது ஏன்னா உங்க கை ருசி அபாரம் அக்கா உங்க அம்மாவேட கைருசியா இல்லை பாட்டியோட கை ருசியா அக்கா உங்களுக்கு கிடைத்திருப்பது ச்மைச்சி அசத்துறீங்க நான் துபாய் வரும் போது உங்க வீட்டுக்கு உங்க சாப்பாட்டை சாப்பிடவே வ்ருவேன் அக்கா u r really great sister

பாத்திமா ஜொஹ்ரா said...

ஜ்லீலா அக்கா ரொம்ப நல்லா இருக்கு பரோட்டா பார்க்கும் போதே சாப்பிடனும் போல இருக்கு

Jaleela Kamal said...

ஷீரின் கவனிக்கல.
கார்டு வந்தது ரொம்ப சந்தோஷம்,

வாங்க வந்தால் நீங்கள் என்ன கேட்டாலும் செய்து தருவேன்.

பாத்திமா ஜொஹ்ரா நன்றி

Mahi said...

ஜலீலாக்கா,கோதுமைமாவு பரோட்டா செய்தேன்.ரொம்ப நல்லா வந்தது.கோதுமைமாவு மைதா மாதிரி எலாஸ்ட்க்-ஆ வருமான்னு சந்தேகத்துலயே செய்தேன்,ஆனா அருமையா வந்தது.

அறுசுவைல உங்க ரெசிப்பிக்கு பின்னூட்டமும் குடுத்திருக்கேன்,பார்த்தீங்களா? ரெசிப்பிக்கு நன்றி ஜலீலாக்கா!

Jaleela Kamal said...

mahi rompa santhoosham
arusuvaiyil paarkkiReen
maida eppavaavathu thaan sey voom
ithu thaan adikkadi

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா