குழந்தை வளர்பபு
டிப்ஸ்கள் போட்டு வெகு நாட்கள் ஆகிறது, நிறைய டிப்ஸ்கள் இருந்தாலும் இப்ப எல்லாம் டைப்
செய்ய சோம்பேறிதனம் .
இந்த மிக்சிக்கு
வாஷர் இல்லை, வாங்குவதற்காக இதை எடுக்கும்போது தான் ஒரு டிப்ஸ் ஞாபகத்துக்கு வந்தது.
சம்பவம் : 1
ஒரு முன்று வருடம்
முன் ஒரு வீட்டுக்கு சாப்பிட போகும் போது அங்கு ஒரு பெண் மடியில் அவளின் பெண் குழந்தை
கையில் நாலு விரலிலும் கட்டு போட்டு போட்டு இருந்தது.
என்னவென்று கேட்ட
போது. இப்ப தான் புதுசாக விட்டில் ப்லெண்டர் ,சாப்பர் செட் வாங்கி வந்து வைத்து இருக்கிறார்கள், இப்ப உள்ள குழந்தைகள் தான் வெளியில்
போய் வந்ததும் வாங்கி வரும் கவர்களை பிரித்து என்ன இருக்கு என்று பார்த்து அக்கு வேரா
ஆணிவேர ஆக்கிவிடுகிறார்களே.
அவங்க அம்மா அதை
பிரித்து எடுத்து வைப்பதற்குள் லபக்குன்னு பிளேட் உள்ள ஜாரை பிடிங்கி விட்டது, கையில்
நாலு விரலும் வெட்டி இரத்தம் பீறிட்டு ஓடி இருக்கு , உடனே ஹாஸ்பிட்டலுக்கு தூக்கி போல்
கட்டு போட்டு கூப்பிட்டு வந்து இருக்கிறார்கள்.
ஆகவே குழந்தைகள்
உள்ள வீட்டில் ஷாப்பிங் சென்று வந்தால் இது கூர்மையான பொருட்கள் , கத்தி வகைகள், கத்திரி
கோல் போன்றவை வாங்கி வந்தால் உடனே அதை கவனமாக குழந்தைகளுக்கு கைக்கு எட்டாத உயரத்தில்
வைத்து விடுங்கள். பிறகு செய்யலாம் என்று விட்டு வைத்தால் வேண்டாத விபரீதம் உங்களுக்கு
தான்.
இப்ப குழந்தைகள்
எங்கே எங்க வீட்டில் பெரிய பிள்ளைகளே ( ஹனீஃப்) கடைக்கு போய் அவங்க டாடி கவருடன் வந்தால் என்ன வாங்கி
வந்து இருக்கீங்கன்னு நேராக கொண்டு வந்த கவர் பக்கம் தான் வருவான், பெரிய பிள்ளைகளுக்கே
இப்படி இருக்கும் போது குழந்தைகளுக்கு எப்படி இருக்கும்.
கையில் விளையாடி
கையை மட்டும் கிழித்து கொண்டது இதே கழுத்திலோ
எதிரில் வேறு குழந்தைகளுடன் விளையாடி இருந்தால் என்ன ஆகும் கொஞ்சம் யோசித்து
பாருங்கள். பிள்ளைகளை வளர்ப்பது கண்ணாடி பாத்திரத்தை எப்படி பத்திரமாக பாதுகாப்போமோ
அப்படி ஆகும்..
சம்பவம் – 2
போன வருடம் நான்
ஊருக்கு போயிருந்த போது பக்கத்து வீட்டில் குய்யோ மொய்யோன்னு சத்தம் எல்லாரும் என்ன
ஆச்சுன்னு ஓடி போய் பார்த்தால் யு கே ஜி படிக்கும்
சின்ன பையன், ஓடி கொண்டு இருந்த மிக்சியினுள் கை விட்டு விட்டான், விரல் வெட்டு பட்டு
இரத்தம்.
அம்மா மிக்சி அரைக்கும்
போது பையனுக்கு எப்படி வெட்டுபடும்.
ரொம்ப செல்லமாம்,
சமைக்கும் போது பக்கத்தில் சமையல் மேடை மீது உட்காரவைத்து தான் சமைப்பார்களாம், பக்கத்தில்
மிக்சி அரைத்துட்டு திறந்து வைத்திருந்த போது ஓடவிட்டு கையை உள்ளே விட்டு விட்டான்.
பிறகு டாக்டரிடம் சென்று கட்டு போட்டு ரொம்ப நாட்கள் கழித்து சரியானது.
பிள்ளைகள் அடம்
பிடிக்கிறார்கள் என்று பெரும்பாலும் அம்மா மார்கள் சமையலரையில் சமைக்கும் போது தொல்லை
தாங்க முடியாமல் கூட வைத்துகொண்டு சமைக்கிறார்கள். இதனால் பிறகு பெரும் ஆபத்துகளை
நீங்க சந்திக்கவேண்டிவரும் என்பதை மறந்து விடாதீர்கள்.
சம்பவம் 3
முன்பு என் தங்கை
பையன் சில சமயம் மிக்சி திறந்து இருந்தால் ஆன் செய்து விட்டுட்டு ஓடிவிடுவான். அதில்
உள்ள பருப்பு ,தேங்காய் எல்லாம் சிதறி சுவரெல்லாம் பருப்பு குளியலாகவும் பெயிண்ட் அடிச்ச மாதிரியும் இருக்கும்.
பிள்ளைகளுக்கு
அது ஒரு ஆசை அம்மா ஏதோ மிக்சிய வச்சி விளையாடுகிறார்களே நாமும் விளையாடலாம் என்று,
அம்மாமார்களே மிக்சி ,கத்தி, கத்திரிக்கோல், அயர்ன் பாக்ஸ், பெலென்டர் எல்லாம் பயன்
படுத்துபவர்கள் உயரமான இடத்தில் பிள்ளைகளுக்கு எட்டாத இடத்தில் வைத்து பயன் படுத்துவது
நல்லது.
https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975
https://www.facebook.com/Samaiyalattakaasam
http://www.chennaiplazaki.com/
3 கருத்துகள்:
ஜலீலா ,இப்பதான் எதிவீட்டு ஜெர்மன் குழந்தை கை சுண்டு விரல் ஆறி வருகிறது. இத்தனைக்கும் ஆறு வயதாகிறது அந்தப் பெண்ணுக்கு. கையையே முழு பாண்டேஜ் போட்டு வைத்திருந்தார்கள்.நல்லவேளை இத்தோடு போச்சே என்று நினைத்துக் கொண்டேன். நல்லதொரு பதிவுமா.
அருமையான டிப்ஸ் ..
முதல் சம்பவம் நிறைய வீடுகளில் நடப்பதுதான் ,குழந்தைகளுக்கு அது ஒரு கியூரியாசிட்டி !
நாம் தான் கவனமுடன் இருக்கணும் .
சில வகை மிக்சி ஜார் மூடி லாக் ஆகியிருந்தால் தான்மற்றும் இன்னொரு பட்டன் அமுக்கினால்தான் ஓடும்
ஆனால் இது ஒரு (பழயைமிக்சி )வகை பிளக் போட்டதும் சுற்றும் அது குழந்தைகளுக்கு சேவ்டி இல்லை .
மிக்சியை பயன்படுத்தியபின் பிளக் கலட்டி சுற்றி கட்டி வைக்கணும் அப்புறம் கவர் பண்ணுவதும் நல்லதுதான் .இல்லாட்டி இந்த சின்னஞ்சிருசுன்ங்க அதையும் இழுத்து விளையாடும் ..எல்லாம் அனுபவம்தான் :)
பிள்ளைகள் எப்பவும் அவங்க பொருட்களில் விளையாட மாட்டாங்க நம்ம பொருள் மேல்தான் ஆசை :)
சமையல் அறையில் பக்கத்தில் வைத்து சமைப்பதும் பெரும்பாலும் தனியே பெற்றோருடன் மட்டும் வளரும் பிள்ளைகளின் இயல்பு ...என் பொண்ணு எண்ணையில் பொரிக்க்கிரத்தை பாக்கனும்னு ஒரே அடம் புடிப்பா சின்னதில் .
ப்ளக்பாயிண்டேல்லாம் அடைச்சு வைப்போம் :)
மிகவும் உபயோகமான பதிவு. நன்றிங்க ஜலீலா.
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா