Thursday, January 19, 2017

நட்டி லெமன் சாக்லேட் கேக் Nutty Lemon Chocolate Cake


நட்டி லெமன் சாக்லேட் கேக்

மைதா – 11/2  கப்
சாக்லேட் பார் - சிறிது
பட்டர் – 150 கிராம்
சர்க்கரை – ஒன்னறை கப்  பொடித்தது
பேக்கிங் பவுடர் – இரண்டரை தேக்கரண்டி
முட்டை – 4
தண்ணீர் – ஒரு கப்
உப்பு – சிறிது
சாக்லேட் எசன்ஸ் – ஒரு தேக்கரண்டி
லெமன் ஜுஸ் – அரை மூடி
துருவிய லெமன்  - ஒரு தேக்கரண்டி
பேக்கான் & வால்நட் – 100 கிராம் பொடியாக அரிந்தது

செய்முறை

ஓவனை 20 நிமிடம் ப்ரீ  ஹீட் செய்யவும்.
பட்டரையும் சர்க்கரையையும் சேர்த்து ஒன்றாக ப்ளன்ட் செய்ய்வும்
மைத,பேக்கிங் பவுடர் , ,உப்பு நான்கையும் சலித்து கொள்ளவும்.
( சாக்லேடை உருக்கி வைக்கவும் இருந்தால் உருக்கி சேர்க்கவும்)
முட்டையை ப்ளபியாக அடித்து சர்க்கரை கலவையுடன் சேர்த்து கலக்கவும்.
பிறகு சலித்த மைதாவை அதில் சிறிது சிறிதாக தூவி நன்கு கலக்கவும்.
கடைசியாக வென்னிலா எசன்ஸ் , லெமன் சாறு கலந்து , துருவிய லெமன் சேர்த்து முன்றில் ஒரு பாகம் எடுத்து அதில் உருக்கிய சாக்லேட் சேர்த்து கலக்கவும்  கேக் பேக் செய்யும் ட்ரேவில்  பட்டர் தடவி கிழே முதலில் சாக்லெட் மிக்ஸ் செய்யாத கலவையை சேர்த்து , மேலே சாக்லேட் மிக்ஸ் செய்த கலவையை அங்கும் இங்குமாக ஊற்றி  மேலே நட்ஸை தூவி 20 நிமிடம் பேக் செய்யவும். 20 நிமிடம் கழித்து ஆறியதும் வேண்டிய வடிவில் துண்டுகள் போட்டு சாப்பிடவும்.




https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

1 கருத்துகள்:

Nagendra Bharathi said...

அருமை

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா