Monday, January 23, 2017

பொரிச்ச கறி/மட்டன் டிரை மசாலா - Mutton Fry



இஸ்லாமிய இல்லங்களில் கட்டி பருப்புக்கு துணை கறியாக செய்யப்படும் பொரிச்ச கறி 
ரொம்ப சிம்பில் ஆனால் ருசியோ அபராம். ரொட்டி , பகறா கானா , பருப்பு , சாம்பார் போன்ற வற்றிற்கு பக்க உணவாக செய்வது. 



பொரிச்ச கறி/மட்டன் டிரை மசாலா

மட்டன் - அரை கிலோ
ஆச்சி சிவப்பு மிளகாய் தூள்  அல்லது மிளகாய் தூள் - 1 மேசைகரண்டி
தக்காளி - ஒன்று
இஞ்சி பூண்டு பேஸ்ட் - ஒரு மேசைகரண்டி
உப்பு தேவைக்கு
எலுமிச்சை சாறு - ஒரு மேசைகரண்டி
கொத்துமல்லி தழை - சிறிது
பட்டை - அரை  - இன்ச் சைஸ் ஒன்று



செய்முறை

மட்டனை சுத்தமாக கழுவி சைடில் இருக்கும் கொழுப்புகளை அகற்ற வேண்டும்.
மட்டனில் ஒரு தக்காளி பழத்தை பிழிந்து அத்துடன் இஞ்சி பூண்டு பேஸ்ட், உப்பு, ஆச்சி மிளகாய் தூள் அனைத்தையும் போட்டு நன்கு பிசறி அரை மணி நேரம் ஊறவைக்கவும்.
பிறகு குக்கரில் வேகவைத்து, குக்கர் ஆவி அடங்கியது தண்ணீரை வற்றவிடவும்.
ஒரு வாயகன்ற இரும்பு வானலியில் எண்ணைய சூடாக்கி அதில் பட்டையை போட்டு தாளித்து வெந்த மட்டனை போட்டு சுருள கிளறி வறுத்து எடுக்கவும்.

(மட்டன் ப்ரை, mutton fry

https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

1 கருத்துகள்:

ட்றம்ப் அங்கிள் செகரட்றி அதிரா:) said...

ஆஹா மிக சுவையான ஒரு மட்டின் ரெசிப்பி.. ஜல் அக்கா என்ன சத்தமே இல்லாமல் போஸ்ட் போட்டுக்கொண்டிருக்கிறீங்க? ரொம்ப பிசிபோல கர்ர்ர்ர்:)

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா