Sunday, January 1, 2017

கஜூர் - Kajur



கஜூர்


தேவையான பொருட்கள்

  • ரவை - ஒரு கிலோ
  • முந்திரி - 350 கிராம்
  • பால் கோவா - 350 கிராம் (அ) கட்டியான பால் ஒன்னே கால் டம்ளர்
  • பாதம் - 80 கிராம்
  • சர்க்கரை - 450 கிராம்
  • சாப்ரான் - இரண்டு பின்ச்
  • கேசரி கலர் பொடி - ஒரு பின்ச்
  • கோதுமை மாவு - கால் டம்ளர்
  • உப்பு - ஒரு பின்ச்
  • எண்ணை + டால்டா - பொரிக்க தேவையான அளவு

செய்முறை

  • ரவையில் முந்திரி பாதத்தை தூள் செய்து போடவும்.
  • சர்க்கரையையும் பொடித்து சேர்க்கவும்.
  • பாலில் சாப்ரான், கலர் பொடி, உப்பு சேர்த்து ரவை கலவையோடு சேர்த்து வெறவவும்.
  • பிறகு கோதுமை மாவையும் சேர்த்து குழைக்காமல் வெறவி ஆறு நேரம் ஊறவைக்க வேண்டும்.
  • பிறகு எடுத்து ரொட்டிக்கு குழப்பது போல் நல்ல குழைத்து தடிமனாக அரை இன்ச் அளவு சப்பாத்திகளாக இட்டு டைமண்ட் ஷேப்பில் கட் செய்து எண்ணையில் டால்டா (அ) நெய் சேர்த்து பிரித்தெடுக்கவும்.
  • .

குறிப்பு:

இது ஒரு மாதம் வரை கெடாது வெளியில் எங்காவது டூர் சென்றால் எடுத்து செல்லலாம். காலையில் நாலு கஜூர் சாப்பிட்டு ஒரு டீ குடிக்கலாம், வயிறு நல்ல திம்மென்று இருக்கும்

டூர் ரெசிபி,







https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

3 கருத்துகள்:

'பரிவை' சே.குமார் said...

கஜூர் போன வாரம்தான் ஊருக்குப் போன ஒரு நண்பர் கொண்டு வந்து கொடுத்தார்... அந்தச் சுவை இன்னும் நாவில் இருக்கிறது.

மாதேவி said...

அருமை.

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

பாரணை முடிச்ச:) அதிரா said...

ஆவ்வ்வ்வ் ஜல் அக்கா நலமா? எப்படி இருக்கிறீங்க? எல்லோர் புளொக்கையும் பார்க்கும்போது ஏதோ சொந்த ஊருக்கு திரும்பிய உணர்வாக இருக்கு. அருமையான சமையல் குறிப்பு. இனி மறுபடியும் எல்லோரும் கலக்குவோம் எனும் ஆசையில் களம் குதிச்சிருக்கிறேன்... வாங்கோ எல்லா புளொக்குகளையும் கைகொடுத்து தூக்கி விடுவோம்... புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா