கல்கண்டு வடை
தேவையானவை
உளுந்து - அரை டம்ளர்
வாழைப்பழம் - அரை பழம் ( பெரிய வாழைபழத்தில் பாதி)
முழு கல்கண்டு - கால் டம்ளர்
ஏலக்காய் - 1
உப்பு - ஒரு சிட்டிக்கை
செய்முறை
1. தேவையான பொருட்களை தயாராக வைக்கவும்.
2. உளுந்தை அரை மணி நேரம் ஊறவைத்து மிக்சியில் முதலில் உப்பு, ஏலக்காய், கல்கண்டு சேர்த்து பொடித்து பிறகு உளுந்தை சேர்த்து மையாக அரைத்து எடுக்கவும்.
பிறகு வாழைப்பழத்தை மசித்து சேர்க்கவும்.
3.எண்ணையை காயவைத்து வடைகளாக உருட்டி தீயின் தனலை மீடியமாக வைத்து கருகாமல் பொரித்து எடுக்கவும்.
4. சுவையான கல்கண்டு வடை ரெடி.
அருசுவை தோழி செல்வி அக்காவின் கல்கண்டு வடையை சில மாறுதல்களுடன் செய்துள்ளேன்.லின்க் பிறகு இனைக்கிறேன்.
டிப்ஸ்.
டிப்ஸ்.
சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கு ஒரு வயது முதல் உள்ள குழந்தைகளுக்கு இது போல் சுட்டு கொடுக்கலாம். நோகம கையில் வைத்து சமத்தா சாப்பிட்டுவாங்க.
சாப்பாடு தான் சாப்பிடனும் என்றில்லை எந்த சத்தான ஆகாரமும் கொடுக்கலாமே.
ஈசியாக எடுத்து சாப்பிடுவார்கள் பார்க்க டோனட் போல் இருக்கும் .
பூப்பெய்திய பெண்களுக்கு இடுப்பெலும்பு பலம் பெற இதை செய்து கொடுக்கலாம்.
சாப்பாடு தான் சாப்பிடனும் என்றில்லை எந்த சத்தான ஆகாரமும் கொடுக்கலாமே.
ஈசியாக எடுத்து சாப்பிடுவார்கள் பார்க்க டோனட் போல் இருக்கும் .
பூப்பெய்திய பெண்களுக்கு இடுப்பெலும்பு பலம் பெற இதை செய்து கொடுக்கலாம்.
Tweet | ||||||
20 கருத்துகள்:
பெயரே சாப்பிடனும்னு ஆசையா இருக்கு,பகிர்விற்கு நன்றி.
சமைத்துப்பார்த்திடுவோம்
சுவையான குறிப்பு. பகிர்வுக்கு நன்றிங்க.
நல்ல குறிப்பு.
நல்லா இருக்கு ஜலீலாக்கா.. கல்கண்டை சேர்த்து அரைக்கிறப்ப நீர்த்துப் போகாது இல்லையா?..
படிக்கவே சுவையாக இருக்கு என் ஆத்துக்காரியிடம் செயல்முறையை காமிச்சிருக்கேன். செய்து தந்தால் ருசித்துப்பார்த்திட்டு சொல்லுறன்.
வாங்க ஆச்சி வருகைக்கு மிக்க நன்றி
ஸாதிகா அக்கா செய்து பாருஙக்ள்
கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி கோவை2தில்லி
மிக்க நன்றீ ஆசியா
சாந்தி முதலில் பொடித்து விட்டு தான் அரைக்கிறோம் , அரைத்ததும் உடனே சுட்டெடுக்கனும், நீர்த்து போகாது
வாங்க அம்பலத்தார் உஙக் தங்கமணியிடம் காண்பிச்சாச்சா, சாப்பிட்டதும் எப்படி இருந்ததுன்னு வந்து சொல்லுங்கள்
sounds new to me akka :)
thx. for sharing.
புதிய சமையல் குறிப்பு ! நன்றி சகோதரி !
அருமை.. நல்லா செய்திருக்கீங்க
இப்பத்தானே பார்க்கிறேன் ஜலீலாக்கா. சூப்பர் வடை. நாங்கள் வாழைப்பழமும் சக்கரையும்(வெல்லம்) போட்டு ரொட்டிதான் சுடுவோம்.
புதுத்தலைப்பைக் காணல்லியே ஜலீலாக்கா?
வடை அருமையா இருக்கு அக்கா. சூப்பர்.
ம்ம்..வித்தியாசமா இருக்கே....இனிப்பு வடை... கண்டிப்பாக செய்து பார்க்கிறேன்க்கா...
கல்கண்டு வடை...இனிப்பு வடை.சூப்பர் !
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா