Friday, February 24, 2012

மகிழ்சிக்குரிய அவார்டு - Winner & Runner up - Master chef India 2Contest




Tuiti Fruity Pancake indiblogger link  - Master chef India 2 Contest


வாங்க பதிவுலக தோழ தோழிகளே எவ்வளவோ வலைப்பூவ்வுக்கு எழுத்துதவி மூலம் இது வரை 1000 த்துக்கும் மேற்பட்ட குறிப்புகள் அனுப்பி விட்டேன்.

அருசுவைடாட்காம், தமிழ்குடும்பம்டாட்காம்,சமையலறைடாட்காம், வல்லமை, இன்னும் பல பத்திரிக்கைகளில் எல்லாம் என் சமையல் குறிப்புகள் ஏராளமாக உண்டு...

உலகில் உள்ள அனைத்து சமையலறையிலும் நான் உப்பா சர்க்கரையாக வாழ்ந்து வருகிறேன்.

பரிசு கிடைக்குதோ கிடைக்கலையோ, யாரும் கமெண்ட் போடுறாங்களோ இல்லையோ , ஓட்டு போடுறாங்களோ இல்லையோ இதெல்லாம் நான் எதிர் பார்ப்பதில்லை.

சரி சரி என்ன விஷியம் விஷயத்த சொல்லுங்கன்னு கேட்பது காதில் விழுது ஹிஹி

போன வருடம் இண்டி பிலாக்கர் நடத்தும் மாஸ்டர் செஃப் இந்தியா 2 காண்டெஸ்ட்க்கு குறிப்பு அனுப்பும் படி மெயில் வந்தது.

இது போல் நிறைய மெயில் முன்புன் வந்துள்ளது, இண்டி பிலாக்கர் ஒரு திரட்டி ஆனால் இருக்கிற திரட்டிகளிலேயே குறிப்ப சேர்க்க எனக்கு நேரம் இல்லை.ஆகையால் அதில் எப்பவாவது நேரம் கிடைக்கும் போது மட்டும் குறிப்புகளை சேர்ப்பேன்.

மேலும் அங்கு போய் பார்த்தால் அதில் என்ன எப்படின்னு எனக்கு ஒன்றும் புரியவில்லை. இருந்தாலும் மெயில் வந்ததுக்கு சமையல் குறிப்புக்கு தான் நம்ம கிட்ட ஏராளமாக இருக்கே சரி அனுப்புவோம் என்று  இந்த பிலாக்கில் இருந்து சில குறிப்புகள் அனுப்பினேன்.


Winner - First Prize

Runner - up
Eggplant Bhajji sandwich - இந்த ரெசிபி அடுத்த குறிப்பில் போடுகிறேன்.


அதில் என்  ட்யுட்டி ஃப்ரூட்டி பேன் கேக்.   பெரிய பெரிய செஃப் எல்லாம் சேர்ந்து செலக்ட் செய்து முதல் பரிசு கொடுத்து இருக்காங்க.
இண்டி பிலாக்கர் - சுட்டியை சொடுகவும்.

முந்தாநாள் மெயில் வந்ததும் ஒன்றும் ஓடல உடனே மெயில் செய்து கேட்டேன். அங்கு முதல் பரிசு யாருக்கு என மொத்தமா ரன்னர் அப் அவார்டிலும் என் பெயர் இருந்தது.

உடனே பதில் வந்தது உங்களுக்கு தான் முதல் பரிசு.  
( எல்லா புகழும் இறைவனுக்கே)
ரொம்ப சந்தோஷம்.

 தோழ, தோழிகள்அனைவரும் இந்த வலை உலகில் ஒருவருக்கொருவர் சந்தோஷத்திற்காக நிறைய  அவார்டுகளை பரிமாறி கொண்டு இருக்கிறோம்.


ஆனால் இப்ப கிடைத்த பரிசு  என் உழைப்புக்கு கிடைத்த பரிசு. 
பெரிய பெரிய செஃப் கள் செலக்ட் செய்து கொடுத்து இருப்பது மிக்க மகிழ்சி.




இது வரை இங்கு நீங்க எல்லாரும் கொடுத்த ஆதரவுக்கு மிக்க நன்றி.






அடுத்த அவார்டு என் ஆங்கில பிலாக்குக்கு.  இங்கு உள்ள குறிப்புகள் தான் அங்கும் போட போகிறேன்இது வரை நான் யாருக்கும் லிங்க் கொடுக்க வில்லை..சில புது குறிப்புகள்.


அதில் மிக்சட் தந்தூரி பிஷ் ஃபிரைக்கும் ,எக் ப்லாண்ட் பஜ்ஜி சாண்ட்விச்சுக்கும் கிடைத்துள்ளது.பிஷ் ரெசிபி ஏற்கனவே இங்கு இருக்கு, மற்றயது கூடிய விரைவில் இங்கு பகிர்கிறேன்.

அனைவருக்கும் நன்றி.நன்றி நன்றி.....



68 கருத்துகள்:

Anonymous said...

wavvvvvvvvvvvvvv.....super akkaa...kalakunga...vaazththukkal

Angel said...

வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ஜலீலா .

ராமலக்ஷ்மி said...

மிக்க மகிழ்ச்சி:)! மனமார்ந்த வாழ்த்துகள் ஜலீலா!!!

Nithu Bala said...

Congrats akka..thatz a great news:-)Keep going.

Aashiq Ahamed said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

மாஷா அல்லாஹ்.... சூப்பர் சிஸ்டர். அல்ஹம்துலில்லாஹ்..மிக்க மகிழ்ச்சி.

தொடர்ந்து பல வெற்றி பதக்கங்களை வாரி குவிக்க வல்ல இறைவன் உதவுவானாக...ஆமீன்.

வஸ்ஸலாம்...

ராஜி said...

கலக்குறீங்க தோழி . வாழ்த்துக்கள்

சிராஜ் said...

வாழ்த்துக்கள் சகோ. உண்மையிலே இது பெரிய விஷயம் தான்.

ஹ்ம்ம்... உங்க டிப்ஸ்லாம் படிக்க சொல்லி எங்க வீட்டுக்கார அம்மாட்ட சொல்றேன். அப்பயாவது விதம் விதமா கிடைக்குதா இல்ல அதே தோச தானான்னு பார்ப்போம்.

Asiya Omar said...

மனமார்ந்த வாழ்த்துக்கள்.ஜலீலா.
உங்களுடைய கடின உழைப்பிற்கு கிடைத்த வெற்றி.வெற்றிப்படிகளில் தொடர்ந்து ஏறுங்கள்.பாராட்டுக்கள் பல தோழி.

vanathy said...

congrats, akka. Keep rocking.

Menaga Sathia said...

வாழ்த்துக்கள் ஜலீலாக்கா!!

கோமதி அரசு said...

வாழ்த்துக்கள் ஜலீலா.
உங்கள் உழைப்புக்கு நல்ல பரிசு.
இன்னும் பல பரிசுகள் வாங்க வாழ்த்துக்கள்.

நட்புடன் ஜமால் said...

வாழ்த்தோ வாழ்த்துகளுங்கோ ...

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

ஸலாம் சகோ.ஜலீலா,

மாஷா அல்லாஹ். மப்ரூக்.
விருது பெற்றமைக்கு வாழ்த்துகள் சகோ. மிகவும் மகிழ்ச்சி.

Mahi said...

வாழ்த்துக்கள்,வாழ்த்துக்கள்! மேலும் பலப்பல சிகரங்களைத் தொட வாழ்த்துக்கள்!

ஹேமா said...

மிக மிகச் சந்தோஷமான விருது ஜலீலா.மனம் நிறைந்த வாழ்த்துகள் !

அந்நியன் 2 said...

மிக்க மகிழ்ச்சி மனமார்ந்த வாழ்த்துகள்.

Admin said...

அஸ்ஸலாமு அலைக்கும்

வாழ்த்துக்கள் சகோ. உண்மையில் இது உங்கள் உழைப்புக்கு கிடைத்த விருது. எல்லா புகழும் இறைவனுக்கே!

'பரிவை' சே.குமார் said...

மிக்க மகிழ்ச்சி.மனம் நிறைந்த வாழ்த்துகள் !

சிநேகிதன் அக்பர் said...

சந்தோசமான செய்தி. வாழ்த்துகள்.

திண்டுக்கல் தனபாலன் said...

வாழ்த்துக்கள் சகோதரி !

ஜெய்லானி said...

//Labels: அவார்டு, இது தான் உண்மையான அவார்டு, மாஸ்டர் செஃப்//


சந்தோஷமான விஷயம் :-)மாஷா அல்லாஹ்


பதிவுலக அரசியல் இல்லாமல் இதுப்போல இன்னும் உண்மையான அவார்டு நிறைய கிடைக்க வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள் :-))

Christy Gerald said...

Congrats Dear Jaleela,Vazhthukal. Yumm Award I hope!.

Vijiskitchencreations said...

வாழ்த்துக்கள் ஜலீ. மிக சந்தோஷமா இருக்கு. மேலும் மேலும் இது போன்ற அவார்டுகள் கிடைக்கனும் ஜலீ. யூ ஆர் தெ Gr8.

ஆச்சி ஸ்ரீதர் said...

**********************
great!!!.vaalththukal
***********************

Anisha Yunus said...

அல்ஹம்துலில்லாஹ் அக்கா..... மாஷா அல்லாஹ் என்ன சொல்வதென்றே தெரியவில்லை. நேரில் வந்து வாழ்த்த முடியாத தூரத்திலும், உயரத்திலும் இருக்கிறீர்கள். உங்களின் திறமைக்கும், அதன் அறிகுறியே தெரியாத பணிவுக்கும் கிடைத்த அங்கீகாரம். இன்ஷா அல்லாஹ் இன்னும் மென்மேலும் பல பரிசுகள் குவிய வேண்டும்.... இன்ஷா அல்லாஹ் குவியும்..... மிக மிக மிக மகிழ்ச்சி..... இதை கொண்டாடவும் உங்களின் இனிப்பு ரெசிபிதான் ஏதாவது நான் செய்ய வேண்டும்.... ஹி ஹி ஹி.... நம்ம உயரம் நமக்கு தெரிஞ்சதுதானே..... நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் அக்கா...... :))

பிலஹரி:) ) அதிரா said...

ஜலீலாக்காஆஆஆஆஆஆஆ... அந்த ரீவியில போகுமே ஒரு ஷோ அதுவா இது? சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்... பதிவு போட்டு 2 நாளாகிட்டுதே எனக்குத் தெரியாமல் போச்சே....

வாழ்த்துக்கள் ஜலீலாக்கா வாழ்த்துக்கள்.மாஷா அல்லாஹ்.

அது என்னமோ உண்மைதான் போட்டியில் தெரிவாகி அதுவும் முதலிடம் பெறுவதெனில் பெரிய விஷயம் + பயங்கர ஊக்குவிப்பாகவும் இருக்கும்.

கொஞ்ச காலமாக நீங்க சோர்ந்துபோய் இருந்தனீங்க, ஏனோதானோ என்றே குறிப்புக்கள் போட்டனீங்க, இப்போ இந்த அவார்ட் உங்களை உஷார்ப் படுத்தியிருக்கும்.

இன்னும் இப்படியான நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு, பல வெற்றிகளைக் காண வேண்டுகிறேன்.

பிலஹரி:) ) அதிரா said...

//அடுத்த அவார்டு என் ஆங்கில பிலாக்குக்கு. இங்கு உள்ள குறிப்புகள் தான் அங்கும் போட போகிறேன்இது வரை நான் யாருக்கும் லிங்க் கொடுக்க வில்லை..சில புது குறிப்புகள்.//


அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் நீங்க எங்கேயோ போயிட்டீங்க ஜல் அக்கா.... அனைத்துக்கும் வாழ்த்துக்கள்.

பிலஹரி:) ) அதிரா said...

// அந்நியன் 2 said...
மிக்க மகிழ்ச்சி மனமார்ந்த வாழ்த்துகள்//

ஓ.. இவர் இங்கயா இருக்கிறார்?, இல்ல காணல்லியே என தேடித்திரிந்தேன்:).

enrenrum16 said...

வாழ்த்துக்கள் ஜலீலாக்கா.... ரொம்ப சந்தோஷமா இருக்கு.மென்மேலும் வெற்றிகள் பல கிடைக்க இறைவன் உதவி செய்வானாக. நீங்கள் அடைந்த ஆச்சரியம் கலந்த சந்தோஷம் என்னையும் தொற்றிக் கொண்டது. அக்கா.... பக்கத்துலதான் இருக்கோம்.. பார்ட்டி வச்சு எங்களை கொஞ்சம் கவனியுங்க ;-)))

//பரிசு கிடைக்குதோ கிடைக்கலையோ, யாரும் கமெண்ட் போடுறாங்களோ இல்லையோ , ஓட்டு போடுறாங்களோ இல்லையோ இதெல்லாம் நான் எதிர் பார்ப்பதில்லை.// இதுதான்க்கா விடா முயற்சி... முயற்சி தன் மெய்வருத்த கூலி தரும். (கரக்டா எழுதியிருக்கனா?).. இன்னும் பலப்பல கூலிகள் கிடைக்க வாழ்த்துக்கள்.

Unknown said...

ஜலீலாக்கா உங்களின் உண்மையான உழைப்புக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி, மாஷா அல்லாஹ் தொடர்ந்து பல பரிசுகள் வாங்க வாழ்த்துக்கள்

ஸாதிகா said...

வாழ்த்துக்கள் ஜலி.படிக்கையில் சந்தோஷமாக உள்ளது.பரிசு கிடைத்ததும் என்னிடம் பகிர்ந்து வாழ்த்தை பெற்று விட்டாலும் இப்பொழுது மனமார்ந்து வாழ்த்துக்களை சொல்லிக்கொள்கிறேன்.மேன் மேலும் பற்பல பரிசுகளும் விருதுகளும் கிடைக்க அன்பான வாழ்த்துக்கள்.

Jaleela Kamal said...

கலை வாங்க முதலாவதாக வந்து வாழ்த்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி

Jaleela Kamal said...

உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி ஏஞ்சலின்.

Jaleela Kamal said...

நன்றி ராமலக்‌ஷ்மி

Jaleela Kamal said...

உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி நீத்து

Jaleela Kamal said...

வா அலைக்கும் சலாம் உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி

Jaleela Kamal said...

நன்றி தோழி ராஜி

Jaleela Kamal said...

வாங்க சகோ,. சிராஜ் உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி

//ஹ்ம்ம்... உங்க டிப்ஸ்லாம் படிக்க சொல்லி எங்க வீட்டுக்கார அம்மாட்ட சொல்றேன். அப்பயாவது விதம் விதமா கிடைக்குதா இல்ல அதே தோச தானான்னு பார்ப்போம்.//

அந்த தோசையும் நல்லதாங்க இருக்கும்

Jaleela Kamal said...

தோழி ஆசியா உங்க்ள் மகிழ்சிய போனிலும் மெயிலிலும் , இங்கு தெரிவித்து இருக்கீங்க,
ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோஷம்

Jaleela Kamal said...

நன்றி வானதி

Jaleela Kamal said...

மிக்க நன்றீ மேனகா

Jaleela Kamal said...

//வாழ்த்துக்கள் ஜலீலா.
உங்கள் உழைப்புக்கு நல்ல பரிசு.
இன்னும் பல பரிசுகள் வாங்க வாழ்த்துக்கள்..//

மிக்க நன்றி

Jaleela Kamal said...

உங்கள் தொடர் ஊக்கத்துக்கு மிக்க ந்னறிங்கோ ( நட்புடன் ஜமால்)

Jaleela Kamal said...

சலாம் முகம்மது ஆஷிக்
உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க ந்னறி

Jaleela Kamal said...

உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி மகி

Jaleela Kamal said...

உங்கள் மனம் நிறைந்த வாழ்த்துக்கு மிக்க நன்றி ஹேமா

Jaleela Kamal said...

நாட்டாமை எவ்வளவு பிஸியிலும் இங்கு வந்து வாழ்த்தியமைக்கு மிக்க ந்னறி

Jaleela Kamal said...

அஸ்ஸலாமு அலைக்கும்

வாழ்த்துக்கள் சகோ. உண்மையில் இது உங்கள் உழைப்புக்கு கிடைத்த விருது. எல்லா புகழும் இறைவனுக்கே!

வா அலைக்கும் சலாம் சகோ கண்டிப்பாக நீங்க சொல்வது உண்மையே

Jaleela Kamal said...

சகோ பாஸித் உஙக்ள் வாழ்த்துக்கு மிக்க நன்றி

Jaleela Kamal said...

சே.குமார் நீண்ட இடைவெளிக்கு பிறகு வருகைக்கும் வாழ்த்த்துக்கும் மிக்க நன்றி

Jaleela Kamal said...

உங்கள் வாழ்த்துக்கு மிகக் ந்ன்றி சிநேகிதன் அக்பர்

Jaleela Kamal said...

திண்டுக்கல் தனபாலன் உங்கள் தொடர் வருகைக்க்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி

Jaleela Kamal said...

//பதிவுலக அரசியல் இல்லாமல் இதுப்போல இன்னும் உண்மையான அவார்டு நிறைய கிடைக்க வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள் :-))//

ஹிஹி வாங்க ஜெய்லானி ஒரு வாசகம் சொனனாலும் திருவ்வாசகம்

மிக்க நன்றி

Jaleela Kamal said...

மிக்க நன்றி கிரிஸ்டி

Jaleela Kamal said...

//வாழ்த்துக்கள் ஜலீ. மிக சந்தோஷமா இருக்கு. மேலும் மேலும் இது போன்ற அவார்டுகள் கிடைக்கனும் ஜலீ. யூ ஆர் தெ Gr8.//

பிஸியான விஜி டீச்சர் வருகை தந்து வாழ்த்தியமைக்கு ரொம்ப சந்தோஷம்

Jaleela Kamal said...

வாங்க ஆச்சி அக்கா வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி

Jaleela Kamal said...

வாங்க அன்னு உங்கள் வாழ்த்துக்கு மிக்க ந்னறி

ஸ்வீட் தானே ஈசியா பால் கோவா போட்டுள்ளேன் பாருங்கள்.

Jaleela Kamal said...

//ஜலீலாக்காஆஆஆஆஆஆஆ... அந்த ரீவியில போகுமே ஒரு ஷோ அதுவா இது? சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்... பதிவு போட்டு 2 நாளாகிட்டுதே எனக்குத் தெரியாமல் போச்சே....

அதிரா டீவியில இப்படி ஒரு ஷோ போய் கொண்டு இருப்பது தெரியாது .இது மெயில் வந்து குறிப்பு அனுப்பிய பிறகு தான் பார்க்க் நேர்ந்தது,

பார்த்துட்டு ரொம்ப வே பயம், இந்த அளவுக்கா இந்த ஷோ நடக்குதுன்னு

எனக்கு டீவி ஷோ பார்க்க நேரம் இல்லை , ஆபிஸிலிருந்து நான் வரும் நேரம் எல்லாம் முடிந்து விடும்

Jaleela Kamal said...

//கொஞ்ச காலமாக நீங்க சோர்ந்துபோய் இருந்தனீங்க, ஏனோதானோ என்றே குறிப்புக்கள் போட்டனீங்க, இப்போ இந்த அவார்ட் உங்களை உஷார்ப் படுத்தியிருக்கும்.//

hihi அது என்ன வோ உண்மை தான்

Jaleela Kamal said...

அதிரா உங்கள் தொடர் வருகைக்கு,உங்க்ள் தொடர் ஊக்கதுக்கு உஙக்ள் வாழ்த்துக்கு மிக்க ந்ன்றி

Jaleela Kamal said...

//வாழ்த்துக்கள் ஜலீலாக்கா.... ரொம்ப சந்தோஷமா இருக்கு.மென்மேலும் வெற்றிகள் பல கிடைக்க இறைவன் உதவி செய்வானாக. நீங்கள் அடைந்த ஆச்சரியம் கலந்த சந்தோஷம் என்னையும் தொற்றிக் கொண்டது. அக்கா....//


ஆமாம் என்றென்றும் 16 , மிக்க நன்றி துஆ செய்யுங்கள்



பக்கத்துலதான் இருக்கோம்.. பார்ட்டி வச்சு எங்களை கொஞ்சம் கவனியுங்க ;-)))//
எங்க இருக்கீங்க???????

Jaleela Kamal said...

//ஜலீலாக்கா உங்களின் உண்மையான உழைப்புக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி, மாஷா அல்லாஹ் தொடர்ந்து பல பரிசுகள் வாங்க வாழ்த்துக்கள்//

வாங்க பாயிஜா என்னை ஊக்குவித்த முதல் தோழி
மிக்க ந்னறி பாயிஜா

Jaleela Kamal said...

//வாழ்த்துக்கள் ஜலி.படிக்கையில் சந்தோஷமாக உள்ளது.பரிசு கிடைத்ததும் என்னிடம் பகிர்ந்து வாழ்த்தை பெற்று விட்டாலும் இப்பொழுது மனமார்ந்து வாழ்த்துக்களை சொல்லிக்கொள்கிறேன்.மேன் மேலும் பற்பல பரிசுகளும் விருதுகளும் கிடைக்க அன்பான வாழ்த்துக்கள்.//



மிக்க நன்றி ஸாதிகா அக்கா. முதலில் இந்த சந்தோஷத்தை உங்களிடம் பகிர்ந்து கொண்டதில் மிக்க் மகிழ்ச்சி ஸாதிகா அக்கா.

சௌந்தர் said...

wow super news ka... நான் ஊரில் இல்ல கா அதான் எனக்கு லேட்டா தெரியுது... ரொம்ப சந்தோஷம் கா :)))

R.Gopi said...

ஜலீலா ஜி....

இனிய மதிய வணக்கம்....

//"மகிழ்சிக்குரிய அவார்டு - Winner & Runner up - Master chef India 2Contest"// மிக்க மகிழ்ச்சி அடைந்தேன் என்பது சிறிய வார்த்தை தான்... நிரம்ப மகிழ்ச்சி கொண்டேன்... நம் பாசத்துக்குரிய ஜலீலா அவர்களுக்கு இது போன்ற ஒரு விருது கிடைத்து இருக்கிறதே என்று!!!

இது போல் மேலும் பல விருதுகள் தங்களை வந்தடையும் என்பது திண்ணம்... ஏனெனில், உங்கள் உழைப்பு பற்றி எனக்கு தெரியும்...

என் மனமார்ந்த நல்வாழ்த்துகள் ஜலீலா ஜி...

சாந்தி மாரியப்பன் said...

மனமார்ந்த வாழ்த்துகள் ஜலீலாக்கா..

ADHI VENKAT said...

வாழ்த்துகள். தொடர்ந்து பரிசுகள் உங்களை தேடி வரட்டும்.

மாதேவி said...

மிக்க மகிழ்ச்சி.
வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள் ஜலீலா.

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா