Monday, February 13, 2012

மொளகா பஜ்ஜி



மொளகா (மிளகாய்) பஜ்ஜி என்றாலே சென்னையில் உள்ள காந்தி பீச் தான் நினைவுக்கு வரும். அங்கு கிடைக்கும் பஜ்ஜியின் சுவையே தனி தான்.

சில‌ருக்கு மொள‌கா ப‌ஜ்ஜி சாப்பிட‌ ஆசை ஆனால் கார‌ம் வ‌யிறு உபாதை கார‌ண‌மாக‌ சாப்பிட‌ முடியாது, அத‌ற்கு இந்த‌ முறையில் செய்து சாப்பிட்டால் கார‌ம் அந்த‌ அள‌விற்கு தாக்காது. வினிக‌ரில் ஊறி சுவையும் வித்தியாச‌மாக‌ இருக்கும். முழுசா செய்ய‌ விரும்புவ‌ர்க‌ள் அப்ப‌டியே பாதியா வெட்டாம‌ல் காம்புட‌ன் க‌ல‌வையில் முக்கி பொரித்து சாப்பிட‌லாம்.










நீட்டு மிளகாய் = 3

பஜ்ஜி மாவு கலவை

கடலை மாவு = அரை கப்
அரிசி மாவு = ஒரு மேசை கரண்டி
மிளகாய் தூள் = அரை தேக்கரண்டி
உப்பு = தேவைக்கு
இட்லி சோடா = சிறிது
ரெட் க‌ல‌ர் பொடி = சிறிது
இஞ்சி பூண்டு பேஸ்ட் = கால் தேக்கரண்டி
பெருங்காயப்பொடி = ஒரு பின்ச்

மிள‌காயை ஊற‌வைக்க‌

வினிக‌ர் = ஒரு மேசை க‌ர‌ண்டி
த‌ண்ணீர் = கால் க‌ப்
உப்பு = ஒரு சிட்டிக்கை
ச‌ர்க்க‌ரை = ஒரு சிட்டிக்கை











1. மிள‌காயை காம்பு ம‌ற்றும் விதைக‌ளை நீக்கி விட்டு இர‌ண்டாக‌ அரிந்து வினிக‌ர், த‌ண்ணீர், ச‌ர்க்க‌ரை, உப்பு சேர்த்து ஊற‌வைக்க‌வும்.

2. கடலை மாவு+ அரிசிமாவு+மிளகாய் தூள் + உப்பு+பெருங்காயப்பொடி+இஞ்சி பூண்டு பேஸ்ட்+இட்லி சோடா+ரெட் கலர் பொடி, அனைத்தையும் த‌யிர் ப‌த‌த்திற்கு போர்கார் ந‌ன்கு க‌ல‌க்கி ப‌த்து நிமிட‌ம் ஊற‌வைக்க‌வும்.

3. எண்ணையை காய‌வைத்து மிளகாயை க‌ல‌வையில் தோய்த்து பொரித்தெடுக்க‌வும்.


குறிப்பு

பச்ச மிளகாய் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு நல்லது என்று கேள்வி பட்டுள்ளேன். இப்படி விதை எடுத்து வினிகரில் ஊறி செய்தால் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கும் கொடுக்கலாம். கூடுமானவரை பச்சமிளகாயை அதன் உள்ளே இருக்கும் விதையை எடுத்து விட்டு சமையலுக்கு அரைத்து சேர்க்கலாம். பொடியாக நருக்கியும் சேர்த்து கொள்ளலாம்


19 கருத்துகள்:

Menaga Sathia said...

super!!

Jaleela Kamal said...

உங்கள் பாராட்டிற்கு மிக்க நன்றி மேனகா

ADHI VENKAT said...

உங்களுக்கு ஒரு விருது காத்திருக்கிறது என் வலைப்பூவில்....

http://kovai2delhi.blogspot.in/2012/02/blog-post.html

Mahi said...

Nice bujji jaleela Akka..never tried with vinegar!

Angel said...

மிளகா பஜ்ஜின்னாலே சுற்றுலா பொருட்க்காட்சியும்நினைவுக்கு வருது .
வினிகரில் தோய்த்து செய்யும் முறை புதியதா இருக்கு .செய்துவிட்டு சொல்றேன்

ஜெய்லானி said...

கூடவே கெட்டி சட்னியும் இருந்தா கணக்கில்லாம உள்ளே போகும் .:-)))

ஜெய்லானி said...

ஆனா அடுத்த நாள் டாக்டர்தான் எங்கிட்டே கணக்கில்லாம காசு பிடிங்கிடுவார் அவ்வ்வ்வ் :-)))

Vimitha Durai said...

Perfect tea time snack
My culinary Trial room
Ongoing event - Love n Chocolate Fest

Asiya Omar said...

வினிகர் ஊற வைப்பது புதுசாக இருக்கு.ஜலீலா.அருமை.

Jaleela Kamal said...

இது முன்பே போட்ட குறிப்பு தான் , மறுபடி ரீ போஸ்ட்

Jaleela Kamal said...

வாங்க கோவை2தில்லி விருதுக்கு மிக்க நன்றி

Jaleela Kamal said...

மகி வினிகரில் ஊறவைத்து முயற்சித்து பாருஙக்ள் காரத்தை எடுத்துவிடும்

Jaleela Kamal said...

ஆமாம் ஏன்சலின், ரோட்டோர கடைகளில் முதலில் விற்கும் மாலை நேர சுற்றுண்டி பஜ்ஜி

Jaleela Kamal said...

ஜெய்லானி அளவோடு சாப்பிடனுமாக்கும்.
இல்லை என்றால் ஹாஸ்பிட்டல் தான்

இது காரம் இருக்காது;

Jaleela Kamal said...

கெட்டி சட்னி இல்லாத பஜ்ஜி யே செய்ய மாட்டேன்
போட்டோ எடுக்கும் போது சேர்த்து எடுக்கல

Jaleela Kamal said...

விமிதா வருகைக்கு மிக்க நன்றி

Jaleela Kamal said...

ஆசியா வினிகரில் ஊறவைப்பதால் காரத்தை எடுத்துடும்.
சாப்பிடும் போது வயிறு கபீருன்னு எரியாது..

சாந்தி மாரியப்பன் said...

பஜ்ஜிகளிலேயே இதுதான் எனக்கு ரொம்பவும் பிடிக்கும். கடைசியா ஆறு வருஷத்துக்கு முன்னாடி மைசூர் பிருந்தாவனத்துல வெச்சு சாப்பிட்டது நினைவுக்கு வருது.

இப்பவே கிளம்பறேன் மார்க்கெட்டுக்கு, நீட்டு மிளகாய் வாங்க :-))

ஸாதிகா said...

பஜ்ஜி மிளகாய் என்றே மார்கெட்டில் கிடைக்கின்றதே.அதனை வாங்கினால் காரம் குறைவாக இருக்கும்.காரம் வேண்டுவோர் மிளகாயில் காரப்பொடியை தடவி பஜ்ஜி மாவில் தோய்த்துப்போட்டால் காரமாக இருக்கும்.

ஜலி மிளகாய் பஜ்ஜி என்றதும் காந்தி பீச் மட்டுமல்ல வருட்ந்தோறும் நடக்கும் தீவுதிடல் சுற்றுலா கண்காட்சியில் படா சைஸ் டெல்லி அப்பளமும்,மெத்து மெத்தென்ற மிளகாய் பஜ்ஜியும் ஆஹா..மறக்கவே முடியாது.

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா