உருளை = 2
மிளகாய் தூள் = கால் தேக்கரண்டி
உப்பு = கால் தேக்கரண்டி
எண்ணை பொரிக்க = தேவையான அளவு
பெருங்காயப்பொடி = ஒரு சிட்டிக்கை
செய்முறை
உருளை கிழங்கை மெல்லிய தாக வட்ட வடிவில் ஸ்க்ராப்பரில் சீவி கொள்ளவும்.
எண்ணையை காயவைத்து ஒன்றோடு ஒன்று ஓட்டாமல் போட்டு வறுத்து எடுக்கவும்.
சிறிது சூடு ஆறியதும் மிளகாய் பொடி, உப்பு, பெருங்காயப்பொடி தூவி இரக்கவும்.
குறிப்பு
பெருங்காயப்பொடி தேவையில்லை என்றால் சேர்க்க தேவையில்லை.
மிளகாய் தூளுக்கு பதில் பெப்பர் தூளும் சேர்க்கலாம். மோர் குழம்பு, தயிர் சாதம் க்கு சிம்பிளா செய்தாலும் குழந்தைகள் சிப்ஸ் என்பதால் கூட இரண்டு புடி உள்ளே போகும்.
டிஸ்கி: முன்பு அடிகக்டி செய்வேன், பெரியவன் ஊருக்கு போனதிலிருந்து எப்பவாவது தான் செய்வது, ஏன்னா செய்து வைத்தால் இரண்டு பேரும் எனக்கு கொஞ்சம் இருக்கு, அவனுக்கு மட்டும் முனு சிப்ஸ் அதிகமா போச்சு என்று செல்ல சண்டைகள் நிறைய வரும்.
இப்ப சின்னவ்ன் மட்டும் தான் கூட சண்டை போட ஆளில்லை, என்ன சொல்வது என்று தெரியல நீங்க இத டைம் கிடைக்கும் போதெல்லாம் செய்து 400 பாக்கெட் போட்டு வைய்யுங்க் நாம ஊருக்கு போகும் போது கொண்டு போய் வித்துடலாம். வெரும் சிம்பிள் சிப்ஸ் தான் ஆனால் மொரு மொருன்னு பாக்கெட்டில் இருப்பது போலவே.. சுவையாக இருக்கும்.
Tweet | ||||||
30 கருத்துகள்:
அடடா..!! படத்தை பார்க்கும் போதே சாப்பிடனும்போல இருக்கு..!!
தமிழ் பாண்டும் ஒர்க் ஆகல ஏன்னு தெரியல . கை வலி வேறு, அதான் யாருக்கும் கமென்ட் போடல ,எப்பவும் என் பிளாக் பார்க்கத என் ரங்ஸ் அதிசயமா கொத்துமல்லி துவையல் போட்டதிலிருந்து இன்று என்ன வந்து இருக்குன்னு பார்க்கவருவார் போல,என்ன பாகறகாய் ஜூஸோடு நிற்குது என்றார், கை வலி வேறு தமிழ் எடிட்டர் முலமா ஹுஸைனாம்ம்மாவ நினைத்து கொண்டு எப்ப்டியோ போட்டாச்சு/
அருமை,. கையை கவனித்துக் கொள்ளுங்கள்
சூப்பராயிருக்கு அக்கா...கை வலியை கவனித்துக் கொள்ளுங்கள்..
அட, உங்க ரங்க்ஸும் பாக்க ஆரம்பிச்சாச்சா உங்க பிளாக்கை!! ஒருவேளை பெரியவன் இங்கில்லியேன்னு சரியாச் சமைக்கிறதில்லைன்னு பிளாக்லயாவ்து வந்து பாத்துக்கலாம்னு வர்றாங்களோ? ;-)))
கைவலி கவனம். மறக்காம என்னை எப்பவு ஞாபகம் வச்சிருக்கீங்களே!!
இதே போல் பாகற்காய் சிப்ஸும் சொல்லிடுங்க - நம்ம ஃபேவரைட்
சிப்ஸ் மொறு மொறுனு இருக்கு , கைவலியா கவனிங்க அக்கா.
உருளைக்கிழங்கு சிப்ஸ் பார்க்க மிகவும் நன்றாக இருக்கிறது!
கை வலி எப்படி இருக்கு ஜலீலா?
நான் இந்த லின்க்கை (http://www.higopi.com/ucedit/Tamil.html) யூஸ் செய்துதான் பதிவு, பின்னூட்டம் எல்லாம் எழுதறது. ரொம்ப ஈஸி. ட்ரை பண்ணி பாருங்கக்கா. கைக்கு என்னாச்சு...? இன்ஷா அல்லாஹ் சீக்கிரம் குணம்டைய செய்வானாக. பெரியவன் ஞாபகம் பதிவு வரை தெரிகிறது. இன்ஷா அல்லாஹ் எல்லாரும் மீண்டும் சீக்கிரமே சேர்ந்திருக்க இறைவன் நாடுவானாக. உங்கள் வலையை பெரியவர் படிப்பார் என்றால் அதில் வருத்தத்தை வெளிப்பட செய்யாதீர்கள் அக்கா, பின் தனியே இருக்கும் அவர் மனம் இன்னும் வடிவிடப் போகிறது. படிக்கும் காலம் வரை மட்டும்தானே. :))
ஜலீலாக்கா அதென்ன கணக்கு 400 பாக்கெட் போட சொல்லி இருக்கீங்க?? இப்ப கைவலி தேவலையா?? தமிழ் font எதில் டைப் பண்றீங்க. இதை ட்ரை பண்ணி பாருங்க!!
((http://www.google.co.in/transliterate/indic/tamil))ஆன் லைனிலும் அடிக்கலாம். டவுன் லோடு செய்தும் அடிக்கலாம்.
my name is haneef
i told 400rs becauz it is very tasty u all shld try it and thn u will come to knw evn here sme packets are dhs43/ for a packet so in india 400-500 rs............
thank you....}{@nEeF :)
அருமையாக இருக்கு ஜலீலா,உங்களுக்கு கைவலியா இப்பொழுது பரவாயில்லையா?உடல்நலனில் கவனம் கொள்ளவும்.
அக்கா, அப்படியே வாழைக்காய் சிப்ஸ் ரெசிபியும் போடுங்க, ப்ளீஸ்!
my fav chips, lovely, take care of your health madam
சிப்ஸ் சூப்பரா இருக்கு அக்கா . நானும் இதை அடிக்கடி செய்வேன்....ஆனால் கொஞ்சம் வேறுமாதிரி. உங்கள் சிப்ஸ் பார்த்தாலே தயிர் சாதம் சாப்பிட தோணுது:) கை இப்போ எப்படி இருக்கு? சீக்கிரமா சரி ஆக வேண்டிக்கிறேன்.
சூப்பர் நன்றி அக்கா
தனது சுய நலத்திற்க்காக பதிவர்களின் பதிவுகளை வரிசைபடுத்தி தன்னை மேதாவியாக காட்டிகொள்ளும், வந்தே மாதரம் சசி வலைபக்கத்தை இருட்டடிப்பு செய்யும் சுதந்திர இலவச வலை பக்கத்தை புறக்கணிப்போம் அவர் நடு நிலையாக வெளியிடும் வரை ....ஆதரவு தாரீர் …அந்நியன்
சிப்ஸ் படம் அருமை.ஜலி,இப்ப கை வலி எப்படி உள்ளது?
hey meeeeeeee the first..
ella sipsum enakuthan...
சிப்ஸ் சூப்பராக இருக்கு அக்கா,..
Chips kara kara moru moru! Super...
ஜலீலா அவர்களே...
கைவலி மேல் சிறிது கவனம் செலுத்தவும்... போஸ்டிங் அப்புறம் கூட போடலாம்...
எனக்கு இந்த பதிவை விட இந்த குறிப்பு நெம்ப பிடிச்சுருக்கு...
// நீங்க இத டைம் கிடைக்கும் போதெல்லாம் செய்து 400 பாக்கெட் போட்டு வைய்யுங்க் நாம ஊருக்கு போகும் போது கொண்டு போய் வித்துடலாம். //
ஹா...ஹா...ஹா... சூப்பரப்பு...
// Chitra said...
அக்கா, அப்படியே வாழைக்காய் சிப்ஸ் ரெசிபியும் போடுங்க, ப்ளீஸ்//
சித்ரா... இவ்ளோ அப்பாவியா நீங்க.. அப்படியே உருளைக்கு பதில் வாழைக்காய்... அவ்ளோ தான்... ட்ரை பண்ணிட்டு சொல்லுங்க....
(ஜலீலா கைவலின்னாங்களே... அதான், நானே சித்ராவுக்கு ரெசிப்பி சொல்லிட்டேன்...!!)
looking crispy.
ஜலீலக்கா இந்த உருளை சிப்ஸை இருமுறை செய்து விட்டேன்./..என் கணவருக்கும் மகளுக்கும் ரொம்ப பிச்சு போயிடுச்சு.இதற்கு முன் சற்று கணமான துண்டுகளாக வேற மசாலாவில் செய்து கொண்டிருந்தேன் அது சுவை இருக்கும் ஆனால் மொருமொருப்பு கிடைக்காது.இது கடை சிப்ஸ் போலவே உள்ளது../முதல் முறையாக மகள் உருளை சாப்பிட்டிருக்கிறாள்
பிரவின் குமார் கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி
நன்றி எல்.கே
நன்றி மேனகா கை வலி அப்ப அப்ப வந்து போவது தான்
ஹுஸைனாம்மா ரங்க்ஸ் எப்பவாவது தான் பார்ப்பார்
பெரியவன் இல்லை என்று கொஞ்சம் நாட்கள் சரியா சமைக்காத்து உண்மை தான் பிறகு இருக்கும் இருவருக்காக சமைத்து தானே ஆகனும்/
சகோ ஜமால் பாகற்காய் சிப்ஸ் தானே போட்டுட்டா போச்சு
தொடர் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சாரு
நன்றி மனோ அக்கா.
கை வலி கொஞ்ச நாலைக்கு ஒரு முறை வந்து போவது தான்
அன்னு நன்றி அன்னு பாண்ட் கொஞ்சம் நாளா எதுவும் வொர்க் ஆகல இல்ல எல்லாம் ஒகே ஆகிவிட்டது.
உங்கள் அன்பான பாராட்டுக்கும் துஆக்கும் மிக்க நன்றி
எம் அப்துல் காதர் 400 பாக்கெட் என்பது மொத்தமா கொண்டு போய் விற்க தான்
நன்றி ஆசியா
நன்றி கிருஷ்னவேனி
நன்றி சித்ரா, வாழக்காயும் போடுகிறேன்
விக்கி எனக்கும் தயிர் சாதத்துக்கு ரொம்ப பிடிக்கும்.
உஙக்ள் கருத்துக்கு மிக்க நன்றி
நன்றி சசி
நன்றி அந்நியன்
நன்றி ஸாதிகா அக்கா
சிவா எல்லா சிப்ஸும் உங்கலுக்கு தான் எடுத்துக்கோங்க
நன்றி பாயிஜா
நன்றி காயத்ரி
நன்றி கோபி உங்கள் தொடர் வருகைக்கு மிக்க நன்றி
மிகக் நன்றி வானதி
//ஜலீலக்கா இந்த உருளை சிப்ஸை இருமுறை செய்து விட்டேன்./..என் கணவருக்கும் மகளுக்கும் ரொம்ப பிச்சு போயிடுச்சு.இதற்கு முன் சற்று கணமான துண்டுகளாக வேற மசாலாவில் செய்து கொண்டிருந்தேன் அது சுவை இருக்கும் ஆனால் மொருமொருப்பு கிடைக்காது.இது கடை சிப்ஸ் போலவே உள்ளது../முதல் முறையாக //
தளீகா நீங்க வந்து கருத்து தெரிவித்தது ரொம்ப சந்தோஷம்.
அதைவிட செய்து பார்த்து கடை சிப்ஸ் போல்வே என்றது இன்னும் மிகுந்த சந்தோஷம்.
முடிந்த போது அடிக்கடி வாங்க
Moru moru urulai chips... yummy..
உருளை கிழங்கை தோல் சீவ வேண்டாமா?
மெல்லியதாக சீவுவது எப்படி ஸ்கர்ப்பரில் வர வில்லை. வட இந்தியாவில் இதை வட்ட வில்லைகளாக் நறுக்கி சிறிது உப்பு சேர்த்து வேக வைத்து நன்கு காய வைக்கிறார்கள்.பிறகு எப்போது தேவையோ அப்போது பொரித்து உண்கிறார்கள்.
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா