தேவையானவை
சிகப்பரிசி புட்டு மாவு – 400 கிராம்
தேங்காய் துருவல் – அரை முறி (முழு தேங்காயில் பாதி)
சர்க்கரை – 150 கிராம்
நெய் – 25 கிராம்
செய்முறை
ஒரு டம்ளர் தண்ணீரில் சிட்டிக்கை உப்பு சேர்த்து சிறிது சிறிதாக தெளித்து உதிரியாக மாவை விறவி அரை மணி நேரம் ஊறவைக்கவும்.
பிறகு இட்லி பானையில் ஈர துணியை விரித்து மாவை கட்டி யில்லாமல் உதிரியாக வைத்து 15 நிமிட அவித்து எடுக்கவும்.
அவிந்து புட்டு மணம் வந்த்தும் அதை ஒரு வாயக்ன்ற பாத்திரத்தில் கொட்டி தேங்காய் துருவல்,சர்க்கரை சேர்த்து கிளறி நெய்யை உருக்கி ஊற்றவும்.
பால் பழம் சேர்த்து பிசைந்து சாப்பிட அருமையாக இருக்கும் கூடவே ஆஃப் பாயில் (அ)வெங்காய முட்டை சேர்த்து சாப்பிட நல்ல் இருக்கும்.
இதுக்கு சர்க்க்ரை சேர்க்காமல், சென்னா மசாலா, முழுபாசி பயறு மசாலா தொட்டும் சாப்பிடலாம். குழந்தைகளுக்கு வாழைபழம் சேர்த்து உருண்டையாக உருட்டி வைத்தால் சத்தமில்லாமல் காலி ஆகும்.
Tweet | ||||||
8 கருத்துகள்:
verum padam mattumaa??
தெரியாம பப்லிஷ் ஆகி விட்டது.
பிறகு போடுகீறேன்.
ஆஜர் டீச்சர்
படம் அருமை.புட்டும் சூப்பர்.
அமைச்சரே ஆஜருக்கு நன்றி
உங்கள் தொடர் வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி ஆசியா.
புட்டு சூப்பர்.
புட்டு சூப்பர் ..!!
தொட்டுக்க ஆஃப் பாயிலா..?..எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா