Monday, August 22, 2011

தொடர் மரணம்

அஸ்ஸலாமு அலைக்கும்
அல்லாஹ் கூறுகிறான்: -


ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைப்பதாகவே இருக்கிறது. பரீட்சைக்காக கெடுதியையும், நன்மையையும் கொண்டு நாம் உங்களைச் சோதிக்கிறோம். பின்னர், நம்மிடமே நீங்கள் மீட்கப்படுவீர்கள். (அல்-குர்ஆன் 21:35)



வாப்பா மரணத்துக்கு பிறகு தொடர்ந்து மரண செய்திகள் தான் ஆண்டவன் அனைவரின் பாவங்களையும் மன்னிப்பானாக? இதே ஏன் ஏன் என்று கேள்வி கேட்டு கொண்டே அவர்கள் பேசிய பேச்சை பேசி பேசி ஆற்றி கொண்டு இருக்கிறோம்.

அடுத்து எங்க சொந்தங்களிலே

ஒருவர் பெண்களுக்கு நிச்சயத்துவிட்டு வெளிநாடு வந்த போது ஏர்போர்டிலேயே ஹார்ட் அட்டாக் வந்துள்ளது இங்குள்ள ஹாஸ்பிட்டலில் சேர்த்து சிகிச்சை பெற்று நல்ல ஆகி மறுபடி பெங்க்ளூரில் சிகிச்சை பெற்று சென்னை வந்து இரண்டு நாளில் இறைவனடி சேர்ந்தார்,
என்னத்த சொல்வது அவருக்கு முன்பே ஹார்ட் அட்டாக் வந்துள்ளதாம் வீட்டுக்கு சொல்லாமல் மறைத்து இருக்கிறார்.
இப்ப பாதிக்க பட்டது யார்.. முதலே நல்ல முறையில் சிகிச்சை பெற்று இருக்கலாம்.

மற்றொருவர் பெண்ணிற்கு கல்யாணம் முடித்து பேரபிள்ளையை பிறக்கும் நேரத்தில் ஹார்ட் அட்டாக்கில் இறந்துவிட்டார்.

40 வயதை அடையும் போதே ஜெனரல் செக்கப் பண்ணிகொள்வது நல்லது.

இன்னொரு குடும்பத்தில் ஒரு பொண்ணு இப்படி அடுத்து அடுத்து கேட்டு ரொம்ப மனக்‌ஷ்டமாக இருக்கு.

எல்லாம் இறைவனில் கணக்கு நாம் ஒன்றும் சொல்லுவதற்கில்லை


@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


பதிவுலக சகோ.எம் அப்துல் காதர் - ஆஹா பக்கங்கள் , மூத்த சகோதரி ஜுலை 31 ஆம் தேதி இறைவனடி சேர்ந்தார்கள். துஆ செய்யுங்கள் .

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


இந்த நோன்பில் என் தங்கையின் மாமியாரும், என் பெரிமா ( வாப்பாவின் அண்ணன் மனைவியும் இறைவனடி சேர்ந்தார்கள்.பெரிமாவை நினைத்தால் ரொம்ப மனவருத்தமாக இருக்கு. சின்னதில் எல்லாம் ஒரே குடும்பமாக இருந்தோம்.

இன்னும் பதிவுலகில் முன்று பேர் குறிப்பிட்டு இருந்தார்கள்
இப்படி தொடர் மரணச்செய்தி ரொம்பவே வருத்தமாக இருக்கிறது

 ஆண்டவன் அனைவரின் குடும்பங்களுக்கும் மன அமைதியை கொடுத்து சகஜ நிலை படுத்த தூஆ செய்வோம்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@




கப்ரில் உள்ளவர்களுக்காக நாம் செய்யவேண்டிய துஆ:-

“முஃமினான மண்ணறைவாசிகளே! உங்களுக்கு ஸலாம் உண்டாகட்டும். நிச்சயமாக நாங்களும் அல்லாஹ் நாடினால் உங்களை மரணம் மூலம் சந்திப்பவர்களே!”
அறிவிப்பவர் : அபூஹுரைரா, رَضِيَ اللَّهُ عَنْهُ , நூல்கள் : முஸ்லிம், அஹ்மது, நஸயீ.
*********************************************************************
“முஃமினான, முஸ்லிமான மண்ணறை வாசிகளே! உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும்! நிச்சயமாக, இன்ஷா அல்லாஹ், நாங்களும் உங்களை அடுத்து வருபவர்களே! உங்களுக்கும் எங்களுக்கும் அல்லாஹ்விடம் சுகவாழ்வைக் கேட்கிறோம்”
அறிவிப்பவர் : புரைதா رَضِيَ اللَّهُ عَنْهُ , நூல்கள்: முஸ்லிம், அஹ்மது, இப்னு மாஜா.
***********************************************************************8
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு மனிதன் இறந்து விட்டால்


அவனுடைய செயல் முடிந்து விடுகிறது, ஆனால் மூன்று விதமான செயல்கள் மட்டும்

எஞ்சியிருக்கின்றன.



1. 1. அதாவது மக்கள் காலங்காலமாக பயன் அனுபவித்து வரும் வகையிலான தருமங்கள்.

2. 2. பயன் அளிக்கும் கல்வி

3. 3. அவனுக்காகப் பிராத்தனை புரிந்து வரும் நல்ல பிள்ளைகள்



அறிவிப்பாளர் : அபூஹூரைரா (ரலி)

ஆதாரம் : முஸ்லிம், மிஷ்காத்

******************************************************************

-- இறந்தவரைப் பின்தொடர்பவை மூன்று (அவற்றில்) அவரின் குடும்பமும் செல்வமும் திரும்பிவிடுகின்றன. அவரின் செயல்கள் மட்டுமே அவருடன் தங்கிவிடும்"
நபி(ஸல்)அறிவிப்பாளர்:அனஸ் இப்னு மாலிக்(ரலி) நூல்: புகாரி
 ***************************************************************************
 
டிஸ்கி: இந்த நோன்பு நேரத்தில் நோன்பு திறக்கும் போது சுட சுட வ்டை பஜ்ஜி கஞ்சி வகைகளை குடிக்காதீர்கள்.
கொஞ்சம் ஆற்றி சாப்பிடுங்கள் , பேரிட்சை, ஜூஸ் கஞ்சிக்கு பிறகு எண்ணையில் பொரித்த ஐட்டங்களை சாப்பிடுங்கள், ஊரில் ஒருவருக்கு சுட சுட சாப்பிட்டதின் விளைவாக கடுமையான வயிற்று வலி, காலி வயிற்றில் முதல் முதல் நீராகாரம் சாப்பிடுவது நல்லது.
 

11 கருத்துகள்:

ஆமினா said...

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

வருத்தமான செய்தி.....

இறைவன் அவர்களின் குடும்பத்திள்ளோர்க்கு நல் அமைதியை தந்திடவும் விரைவில் சகஜ நிலைக்கு வர வேண்டியும் துஆ செய்கிறேன்

ஸாதிகா said...

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்,மரணித்தவர்களின் மஃபிரத்துக்காக துஆ செய்கின்றேன்.அவர்களது குடும்பத்தினருக்கு வல்ல நாயன் அழகிய பொறுமையை கொடுத்தருள்வானாக!

Geetha6 said...

so sad!

ஹுஸைனம்மா said...

இன்னா லில்லாஹி..

உண்மைதான் ஜலீலாக்கா.. நிறைய மரணச்செய்திகள் கேட்கிறேன் இப்போ.. அதுவும் குறிப்பாக இளவயது மரணங்கள்... அல்லாஹ்தான் பாதுகாக்கணும்.

எல்லாருக்கும் பொறுமையைத் தரணும் ஆண்டவன்.

Chitra said...

May their souls rest in peace!

உங்கள் பிறந்த நாள் அன்று வந்து இருக்கும் இந்த பதிவு, உங்கள் மனவலியை காட்டுகிறது.

அஸ்மா said...

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்! மரணித்தவர்களின் மண்ணறையில் அமைதியைக் கொடுக்கவும், மறுமை வாழ்வு சிறக்கவும், அவர்களின் குடும்பத்தார்களுக்கு அழகிய பொறுமையை இறைவன் கொடுக்கவும் துஆ செய்கிறேன்.

'பரிவை' சே.குமார் said...

May their souls rest in peace!

நட்புடன் ஜமால் said...

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன்

ஆயிஷா அபுல். said...

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

எல்லாருக்கும் சபூரை தரணும் வல்ல நாயன் .

குறையொன்றுமில்லை. said...

அவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த
அனுதாபங்கள்.உங்க மனவலி புரியுது.
பிறப்புன்னு ஒன்னு இருந்தா இறப்பும்
வரத்தானே செய்யும்.வேர என்ன சொல்ல?

ஆச்சி ஸ்ரீதர் said...

ஒரு மரணத்தையே தாங்க முடிவதில்லை,தொடர் மரணம் எனில் வேதனையின் உச்சத்தின் உச்சமாக இருக்கும்.சாந்தி பெற வேண்டும்.காலம்தான் மருந்து.

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா