துபாய் வருவதற்கு முன் நோன்புகாலங்களில் தினம் தரவீஹ் தொழுகை வீட்டில் தான் தொழுவோம். கிரான்மா வீட்டில் எல்லோரும் மகள்கள் பேத்திமார்கள் என கூட்டாக சேர்ந்து தொழுவோம்.
ஆனால் இங்கு வந்தவுடன் முதலில் பள்ளிகளில் பெண்கள் தொழுவது தெரியாது. வீட்டில் நானே தனியாக தொழுது கொள்வேன்.
கொஞ்ச நாட்கள் கழித்து தான் ஈடிஏவில் பெண்களுக்கு என தொழ தனியாக இடம் உள்ளது என்று தெரிய வந்த்து27 தொழுகைக்கு மட்டும் அங்கு போய் தொழுவோம்,எங்க சொந்தங்களும் சில பேர் அங்கு வருவார்கள், எல்லோரையும் பார்த்த மாதிரி இருக்கும்.
இரவு தொழுகைக்கு எங்க ஏரியாவிலேயே உள்ள பள்ளியில் தொழ போவோம்.
பிறகு பக்கத்தில் உள்ள பள்ளியிலேயே இத்தனை வருடமாக நாங்க என் பையன் , ஹஸ்,பக்கத்துவீட்டு பேமிலி எல்லோரும் போய் தொழ போவோம்.
இந்த தடவை பையனும் ஹஸ் தினம் தொழுதுட்டு அருகில் இருக்கும் ரீஃப் மாலுக்கு போனால் அங்கு நடுவில் கூடாரம் அமைத்து காவா டீ யும் பேரிட்சையும் தரப்படும்,
பிறகு சில வருடங்களாக வீட்டின் அருகே உள்ள பள்ளிகளிலேயே தினம் தொழ போவோம். இருந்தாலும் ஓவ்வொரு வருடமும் சின்ன வயதில் கிரான் மா வோடு தொழுதோமே அந்த நாளை எண்ணிதான் பார்க்க தோனும். ஆனால் அது போல் சொந்தங்களோடு கூட்டாக தொழுகை எப்ப தொழுவோம் என நினைத்து கொள்வேன், 27 குர் ஆன் கத்தம் செய்வதால் எங்க மாமியார் பாலும் பழம் கரைத்து எல்லோருக்கும் கொடுப்பார்கள்.மற்றநாட்களில் அம்மா ரோஸ்மில்க் சப்ஜாவிதை சேர்த்து கரைப்பார்கள்.பார்க்கவேகலர் அழகாகாக இருக்கும் பெரிமா நன்னாரி சர்பத் கரைத்து கொடுப்பார்கள்எல்லோருக்கும் விளம்புவதும் ஒன்றாக சேர்ந்து குடிப்பதும் அருமையாக இருக்கும்.
##############################################################################
இன்றுஇரவு 27 தொழுகைக்கு போகனும் மதியம் சகோ,ஹுஸைனாம்மா பதிவு படித்து விட்டு இன்னும் பழைய நாட்கள் ஞாபகம் அதிகமாவே அசை போட்டு கொண்டு இருந்தது.
பதிவ படிச்சிட்டு கமெண்ட் டும் போட்டுட்டு மாலை நோன்பு திறந்து முடிந்ததும் என் சின்ன பையன் குர் ஆன் முடித்தான் அவனுக்காக கமலா பழ கேசரி செய்தேன்.
(கேசரியில பெயர் போட நேரமில்லை யாராவது சுட்டிங்க அவ்வளவு தான்)
குர் ஆன் முடித்து விட்டு, தரவீஹ் சென்றோம் . அங்கும் தொழுகை முடிந்ததும் இரவு தொழுகை என்ன செய்வது பள்ளியில் சுபுஹ் வரை தொழுவார்கள் காலை வேலைக்கும் போகனும் தள்ள ஆரம்பித்துடுமே. அங்குள்ள பங்களாதேசி, சூடானி,மேங்க்ளூர் பெண்கள் எல்லாம் இதே தான் பேசி கொண்டு இருந்தார்கள் , உடனே தினம் வரும் பங்ளாதேசி பெண் வேனுமுன்னா வாஙக் ஈரானி அம்மா (ஈரானி அம்மாக்கே கர்) வீட்டுக்கு போய் தொழலாம்.
எனன் ஈரானி அம்மாவா அவங்க வீடு எங்கிருக்கு சரி தொழுகை முடிந்தது கூடவே போய் பார்த்து வைத்து கொண்டு இரவு தொழுகை ஆரம்பிக்கும் நேரத்தையும் கேட்டு வரலாம் என போனால் ஒரு பெரிய வில்லா.
வீட்டு கிட்டதான் , தினம் அதை கடந்து தான் போவேன், வண்டிக்காக காலையில் காத்திருக்கும் போது நிறைய பெண்கள் குர் ஆனுடன் அங்கு போவார்கள்.
தினம் ஒரு நோட்ட்ம் இடுவேன் எப்படியாவது ஒரு நாள் இந்த வீடு எப்படி இருக்குன்னு பார்க்கனும் எனக்கு ஆசை. ஆனால் அவர்களோ ஈரானிகளும் அரபிகளும்.12 மணிக்கு வரனும் என்று சொன்னார்கள்.2.30 க்கும் முடியும் என்றார்கள்.
ரொம்ப சந்தோஷம் நானும் என் கூட இருக்கும் தோழியும் போய் துக்கமே வரல அந்த வீட்டுக்கு போகப்போறோம் என்று 11.30 க்கே ரெடி யாகிட்டோம்.
இரண்டு பேரும் அங்கு போனோம் உள்ளே தொழுகை ஆரம்பிச்சிட்டாங்க போய் சேர்ந்து கொண்டோம் , ஏற்கன்வே ஹால் முழுவது ஆட்கள் நிறம்பி இருந்ததால் முதல் வரிசையில் இடம் கிடைத்தது அங்கே நின்று கொண்டேன்,
இது வரை பள்ளி வாசலில் பெண்கள் பகுதியில் ஆண்கள் பக்கம் தொழவைப்பார்கள் அங்கு தான் மைக் இருக்கும். இங்கு மைக் இல்லாமலே அந்த பெண்ணின் கிரா அத் குரல் மிக அருமையாக இருந்தது. 4 பெண்கள் தொழ வைத்தார்கள்.அதில் ஒரு அம்மா தான் ”ஈரானி அம்மா” அசல் எங்க கிரான்மாவ பார்த்த மாதிரி இருந்தது, 4 பெண்கள் மாற்றி மாற்றி தொழ வைத்தார்கள். மைக் சவுண்டில் தொழ கேட்டு இப்ப பக்கத்திலேயே நின்று ஒதி தொழ வைத்தபோது இன்னும் நல்ல இருந்தது.
அதில் என் தங்கையின் பெயர் கொண்ட ஹுமேரா, இடையில் அடுத்து தொழ வைக்க ஹுமேரா ஹுமேரா என்று கூப்பிட்டார்கள். நம் தங்கை எங்கு திடீருன்ன்னு இங்கே என்று நினைத்தேன், பின்னாடி சோபாவில் கை குழந்தையோடு உட்கார்ந்து இருந்த பெண் நுழையும் போது தொழ வைத்தவர், மீண்டும் கடைசியாக வந்து தொழ மு.டித்தார்கள் அருமையான ராகத்துடன் எல்லா துஆக்களும் ஓதி முடித்தார்கள்.
பிறகு கிளம்புறோம் என்றோம். கை துரு துருன்னு இருந்து எப்படியாவது போட்டோ எடுக்கனும் என்று தெரியாம ஒரு கிளிக்.
வெயிட் பண்ணுங்க சாப்பிட்டு போங்க என்றார்கள் , பிள்ளைகள் இருக்க்கிறார்கள் கிளம்பனும் என்றேன், 10 நிமிடம்தான் வாங்க வந்து உட்காருங்கன்னு வெளி ஹாலுக்கு கூப்பிட்டு போனாங்க.
சுற்றிலும் உள்ள சோபாவில் வ்ந்திருந்த எல்லா பெண்களும் அமர்ந்தோம்.
ஈரானி அம்மாவும் இரண்டு வேலை காரிகளும், சின்ன பெண்களும் நடுவில் உள்ள டேபிலில் எல்லா உணவு பொருட்களையும் கொண்டு வந்து வைத்தார்கள்.
பாயில்ட் டபுள் பீன்ஸ் சுட சுட, இரண்டு வகை ஜூஸ், எள் கார கேக், மஷ்ரூம் பிஸ்ஸா, டேட்ஸ் நட்ஸ் கேக்,இன்னும் ஒரு கான்பிளேக்ஸ் டேஸ்ட் டிலைட்,சாக்லேட் எல்லாம் வைத்து கொடுத்தார்கள்.
.அங்கு இருக்கும் வீட்டு ஆட்களுக்கு உட்கர சோபாவில் இடம் இல்லை , எல்லாம் அழகாக கீழே வட்டமாக உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்தார்கள், நான் என் பங்கை என் பையனுக்காக எடுத்து வைத்து கொண்டேன். ஈராணி அம்மாவின் அருமையான விருந்தோம்பல், ஓடி ஆடி சிரித்த முகத்துடன் எடுக்க வெக்கப்பட்டாலும் டிரேவை நீட்டி களாஸ் கரோ களாஸ் கரோ என்றார்கள்.கடைசியா சுலைமானி டீயும் வந்தது. குடித்து விட்டு கை கொடுத்து முஸாபா (ஹக்) செய்துட்டு கிளம்பிட்டோம்.
எல்லாமே அந்த இறைவனின் கருனை என்னன்னு நான் சொல்வது , மதியம் 20 வருட முன் தொழுத தொழுகை இனி எப்ப கிடைக்கும் என நினைத்தேன் இரவே ஆண்டவன் நிறைவேற்றி வைத்து விட்டான், அதே சமயம் நீண்ட நாளா அந்த வீட்டிற்குள் போகனும் என்ற என் எண்ணமும் நிறைவேறியது. இதுவரை துபாய் வந்து வெளியில் போய் தொழுததில் இன்று ரொம்ப மனநிறைவாகவும், சந்தோஷமாக வும் இருந்தது. இன்ஷா அல்லா அடுத்தவருடம் இங்கிருந்தா தினம் தராவீஹ் தொழுகைக்கு இங்கு தான் வரனும் என்று நினைத்து கொண்டு வெளியில் வந்தேன்.
அந்த ஈரானி அம்மா வீடு உள்ளே சும்மா சொல்லகூடாது அருமையாக இருந்தது.
தொழுது கொண்டு இருக்கும் இடையில் அர்ரஹ்மான் சூராவும் வந்தது. இது அவர்கள் ஓதி கொண்டு இருக்கும் போது என் டாடி ஞாபகம் வந்து விட்டது கம்பியுட்டரில் சாட், மெயில் உள்ளே உள்ள எந்த ஆப்ரேஷனும் தெரியாது ஆனால் என் பையன் காலேஜ் சேரும் முன் அங்கு இருந்து குர் ஆன் டவுண்ட் லோடு செய்து டெஸ்க் டாப்பில் போட்டு கொடுத்தான் கம்பியுட்டரை ஆன் செய்து குர் ஆன் பகுதியை ஓப்பன் செய்து தினம் கூடவே ஓதிகொண்டு இருப்பார்கள். இந்த சூராவை டாடி ஓதும் போது இன்னும் நல்ல இருக்கும்.
மறுநாள் இந்தியாவில் 27 தொழுகை மம்மியிடம் போன் செய்து பித்ரா கொடுக்க வேண்டியதை கொடுக்க சொல்லிட்டு , முன்பு நாம் எல்லம் ஒன்று சேர்ந்த்து கிரான்மாவுடன் தொழுதது போல் நேற்று போய் தொழுதேன் என்றேன்.ரொம்ப சந்தோஷ பட்டார்கள்.
நோன்பு 27 பிறை யில் தான் பெரிய பையனும் பிறந்தான்.இன்று காலை போன் செய்தேன்,எப்படி இருக்கே நல்ல இருக்கிறான்னு கேட்டேன். 27 வது ஜுஜு வரேன் மம்மி என்றான், துஆ செய்யுங்கள் என்றான் என்றான் துஆ செய்தேன்.
ஆண்டவன் அனைவரின் நாட்ட தேட்டங்களையும் நிறைவேற்றி வைப்பானாக..
டிஸ்கி: இந்த பதிவு போட்டது வெளிநாடுகளில் உள்ள பள்ளிகளில் பெண்களுக்கென தனி இடம் இருக்கு என்பதை தெரிவிக்க தான். நிறைய பெண்கள் ஊரில் எல்லோரோடும் இருந்து விட்டு இங்கு வந்து தனிமையாகிவிடுகிறார்கள். நோன்பு காலங்களிலும் மற்ற நாட்களில் இப்படி போய் தொழுது கொள்ளலாம்.
Tweet | ||||||
42 கருத்துகள்:
சகோதரி,ரொம்ப உருக்கமாகவும்,சுவராசியமாகவும் இருக்கிறது.நன்றாக அனுபவித்து எழுதி இருக்கிறீர்கள்.
.உங்கள் தந்தைக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் ஜன்னத்துல் பிர்தௌஸ் கொடுப்பானாக.ஆமீன்.
உங்கள் நாட்டம் நிறைவேறியது குறித்து மிக்க மகிழ்ச்சி. நிறைவேற்றிய இறைவனுக்கு நன்றி.
பெரிய பையனுக்கு எனது வாழ்த்துகளும்.
வணக்கம் அக்காச்சி,
பண்டிக்கைக் கால நிகழ்வுகளையும், ஒரு கடல் கடந்து வாழ்ந்தாலும், இன்றும் மண் மணத்தோடு வாழ வேண்டும் எனும் நோக்கில் பெற்றோருக்குத் தொலைபேசி அழைப்பு மேற்கொண்டு அவர்களிடமிருந்து ஆலோசனை பெற்றுத் தொழுகை நடத்தும் உங்களின் நல் உள்ளத்தினையும் இப் பதிவு வெளிப்படுத்தி நிற்கிறது.
இந்த ஊரில் ஒவ்வொரு பள்ளியிலும் (ஜும்மா) பெண்களுக்கு தனியாக இடம் இருக்கு. இது நிறைய பேருக்கு தெரிவதில்லை.
அதிலும் ரமலான் இரவு தொழுகை ,மிக நீண்டதாக இருக்கும் 1.30 டூ 3 இல்லை 2 டூ 4 மணி வரை இருக்கும்
உங்கள் அனுபவங்களை நேரில் பார்த்தது போல இருக்கு.எனக்கு முஸ்லீம் மத வாசனை நிறையவே உண்டு,அதாவது நான் நாகூர் பக்கம் நாகப்பட்டினம்,எங்க ஊர்லையும் ஏகப்பட்ட முஸ்லீம் மக்கள்.எங்க பாட்டி காலையில் வாங்கு சொல்லும்போது எழுந்து வேலை செய்ய ஆரமிப்பாங்க.இதுவரை எத்தனையோ இடங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளேன்.அங்கெல்லாம் பக்கத்தில் பள்ளிவாசலும் அல்லது ஓதும் சத்தம் கேட்கும் தூரத்திற்குள் வீடு அமையும்.ஆனால் அர்த்தம் ஒன்னும் புரியாது.திருமணத்திற்கு முன்வரை நோம்பு கஞ்சி எனக்கு வருடாவருடம் கிடைத்துவிடும்.இந்த பதிவை படித்தவுடன் என்னவோஇதெல்லாம் சொல்லத் தோனியது சகோதரி.
சமையல் பதிவுகளுக்கு நடுவில் ஒரு அருமையான ஆன்மீகப் பதிவு :-)
அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.
மிக அழகாக சொல்லி இருக்கின்றிர்கள் வாழ்த்துக்கள் இனி யாரும் சுட மாட்டார்கள் திருந்தி விட்டார்கள் தைரியமாக இருக்கவும்.
தமிழ் மணம் ஓட்டும் போட்டாச்சு.
சகோதரி நான் வலை உலகத்துக்கு புதியவன்.இன்று தான் தங்கள் வலைத்தளம் பார்த்தேன் அமர்க்களமாக இருக்கிறது.நேரம் கிடைத்தால் என் வலைபக்கம் வந்து போங்கள்.
ஜலீலாக்கா.... படித்துக் கொண்டு வந்தபோது இதைப் படித்ததும் என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை:))).....
//கேசரியில பெயர் போட நேரமில்லை யாராவது சுட்டிங்க அவ்வளவு தான்)
///
ஹா..ஹா..ஹா இதப் போட்டிருக்காதுவிட்டால், சிலநேரம் ஆரும் கவனித்திருக்க மாட்டார்கள்... இது நீங்களே.. சுட வச்சிடுவீங்கபோல இருக்கே அவ்வ்வ்வ்:)))).
அஸ்ஸலாமு அழைக்கும் ஜலிலாக்கா..
ஈரானி அம்மா,குறித்த உங்களது அனுபவ பகிர்வு அருமை..ரீப் மால் கிட்டதா இருக்கியளா?
அல்லாஹ் உங்களது அனைத்து நன்மையான நாட்டங்களை நிறைவேற்றி வைக்க போதுமானவன்
தம்பிக்கு எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து விடுங்கள்..
உங்களுக்கும்,உங்கள் குடும்பத்தினருக்கும், இனிய ரமலான் வாழ்த்துக்கள்..
அன்புடன்
ரஜின்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....
உங்களுக்கும்
உங்கள் குடும்பத்தினருக்கும்
எங்களுடைய
மனமார்ந்த ஈத் பெருநாள் நல்வாழ்த்துக்கள்.
ரொம்ப அழகாக உங்கதொழுகை முறை
களை ரசிச்சு சொல்லி இருக்கீங்க. நல்லா
சொன்னீங்க. நானும் தெரிந்து கொண்டேன். நன்றி
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு....
நல்லதொரு feel-good பதிவு...ஜசாக்கல்லாஹு க்ஹைர்....
பதிவில் 27 என்று பலமுறை குறிப்பிடப்பட்டுள்ளதால் அது குறித்து சிலவற்றை கூற விரும்புகின்றேன்....
=========
1. ரமலானில் கடைசிப் பத்து நாட்களில் உள்ள ஒற்றைப்படை இரவுகளில் லைலதுல் கத்ரைத் தேடுங்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்கள்: புகாரி 2017, முஸ்லிம் 1997
2. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எங்களுக்கு லைலதுல் கத்ரு இரவைப் பற்றிச் சொல்லும் போது, “அது ரமலான் மாதத்தில் தான் இருக்கிறது. எனவே அதை ரமலானில் கடைசிப் பத்தில் தேடுங்கள். அது ஒற்றைப்படை இரவான இருபத்தி ஒன்று அல்லது இருபத்தி மூன்று அல்லது இருபத்தி ஐந்து அல்லது இருபத்தி ஏழு அல்லது ரமலானின் கடைசி இரவில் (29) இருக்கும்” என்று சொல்லி விட்டு, “யார் அதில் ஈமானோடும் நன்மையை எதிர்பார்த்தவராகவும் நின்று வணங்குகிறாரோ அவருடைய முந்திய பாவங்கள் மன்னிக்கப்படும்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: உபாதா பின் ஸாமித் (ரலி), நூல்: அஹ்மத் (20700)
==========
ஆக, பிறை 27-இல் மட்டும் அதிகமதிகம் வணங்கிவிட்டு, மற்ற ஒற்றைப்படை இரவுகளில் தவறவிட்டால் நாயகம் (ஸல்) கூற்றுக்கு மாறாக செயல்படுகின்றோம் என்று அர்த்தம். நாயகம் (ஸல்) கூற்றுக்கு மாறாக செயல்பட விரும்புபவர்கள் நம்மில் யாராவது இருப்பார்களா??
இதில் மற்றொரு முக்கிய விசயமும் இருக்கின்றது. லைலதுல் கத்ர் இரவு ஆயிரம் மாதங்களை விட சிறந்தது என்று குர்ஆன் கூறுகின்றது (குர்ஆன் 97:3). ஒருவேளை பிறை 27, லைலதுல் கத்ர் இரவாக இல்லாமல் போனால் என்ன செய்யப்போகின்றோம்???...
அன்று மட்டுமே லைலதுல் கத்ர் என்றெண்ணி வணங்கிய அத்தனை வணக்கமும் ஆயிரம் மாத சிறப்பை பெறாமல் போய்விட்டதே...
சிந்திக்க கடமைப்பட்டிருகின்றோம்...நிச்சயமாக சிந்திக்க கடமைப்பட்டிருகின்றோம்.
நன்றி,
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ
நோன்பு பற்றிய தகவல்கள் நன்றாக இருந்தது.
இனிய ரமலான் வாழ்த்துக்கள்.
அப்படியா, இங்கயும் பெண்கள் வீடுகளில் குழுவா தொழுதுகிறாங்களா? ஆச்சர்யம். அந்த ஈரானி அம்மாவுக்கு இறைவன் பரக்கத்தையும், ரஹ்மத்தையும் தரட்டும்.
இங்கே ஒவ்வொரு பள்ளியிலும் ஒவ்வொரு மாதிரி (நீண்ட அல்லது குறைந்த நேரங்கள்) தொழுகை இருப்பதால் விசாரித்து தொழுதுகொள்கிறோம். இங்கேதான் பள்ளிகள் நிறைய இருக்குதே, அதனால் பிரச்னையில்லை.
என் பதிவு உங்களுக்கும் பழைய நினைவுகளை எழவைத்துவிட்டதா அக்கா.
Sent: Monday, August 29, 2011 2:43 AM
Subject: super post
i am unable to post comment..why??here i typed the comment to ur blog today
இதுவரை உங்கள் பதிவுகளில் என்னை மிகவும் உருக்க செய்ததும் அப்படியே கண்முன்னே ஈரானி அம்மாவும் தொழுகையும் கிராத்தும் டாடியுமாக வந்தது..நானும் இதே ஏக்கத்துடன் தான் இருக்கிறேன்..இங்கு பள்ளியின் என் சின்னதை கொண்டு போனால் திட்டு வாங்கி தான் வந்தேன் அப்படி ஒரு அட்டஹாசம் செய்து சுஜூதில் ஒருத்தங்க முதிகில் ஏறி விட்டான்..அதோட விட்டாச்சு.
அன்னைக்கிருந்த கூட்டுக் குடும்ப வழக்கங்களும் குறிப்பாக் நோன்புகாலங்களிலான வணக்கவழிபாடுகளும் ஈத் நாளுக்கான தயாறெடுக்கும் அன்று காலை சூரியம் உதிக்கும் முன்னே குளித்து புத்தாடை அனிந்து துழுகைக்கு கூடுவதும்.பக்ரீதுக்கு வீடு வீடாக பங்கை கொடுக்க செல்வதும் எல்லாம் அப்படியே யோசிக்கையில் மனசு ரொம்பவே கனக்கிறது.என் கவலையெல்லாம் என் மகளுக்கு இந்த அனுபவமெல்லாம் தெரியாமல் போகிறதே என்பது தான்..நானும் இங்க ஈரானி அம்மா இருக்காங்களான்னு பாக்கிறேன்
அருமையான பதிவு ஜலீலாக்கா
thalika
தளிகா,
பள்ளிகளில் சின்னப் பிள்ளைகளைக் கொண்டு போனா, நம்மால மத்தவங்க தொழுகையும் கெடுதேன்னு வருத்தமாருக்கும்.
இங்கே, MBZ சிட்டியில்,, புதிதாகத் திறந்திருக்கும் ஃபாத்திமா பள்ளியில், பிள்ளைகளுக்கென்று ப்ளே ஏரியா சூப்பர்வைசர்களோடு (இலவசமா) வச்சிருக்காங்க. ரொம்ப வசதியா இருக்கு. இன்ஷா அல்லாஹ், அடுத்த வருஷம் இங்கே வாங்க. நடு இரவுத் தொலுகையும் உண்டு.
அபுதாபியிலும் சில பள்ளீகளில் இது மாதிரி இருக்கலாம். விசாரிச்சுப் பாருங்க.
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் பெருநாள் வாழ்த்துக்கள்.
பள்ளி வாசலில் பெண்களுக்கு அனுமதி இல்லை என்று தான் என்று வரை நினைத்திருந்தேன்... இன்று உங்கள் பதிவும் husseinamma பதிவும் படித்த பின் தெரிந்து கொண்டேன்... உங்கள் ஆசை நிறைவேறியதிலும் மகிழ்ச்சி ஜலீலாக்கா
வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்
இனிய ரமலான் வாழ்த்துகள்.
பெருநாள் வாழ்த்துக்கள் ஜலீலாக்கா.
கவலையோடு இருக்கும் உங்களுக்கு வாழ்த்துச் சொல்லலாமா என யோசித்துக்கொண்டே தான் எழுதுகிறேன்.
சகோதரி தங்கமணி அவர்களுக்கு,
உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தினர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன்.
///பள்ளி வாசலில் பெண்களுக்கு அனுமதி இல்லை என்று தான் என்று வரை நினைத்திருந்தேன்///
தங்களை போலவே பலரும் தவறாகவே எண்ணிக்கொண்டிருக்கின்றனர். தர்க்கரீதியாக விசயங்களை அணுகும் மார்க்கம் இஸ்லாம். அதில் இதுப்போன்ற கருத்துக்களுக்கு இடமில்லை.
பெண்கள் பள்ளிவாசல்களுக்கு செல்வதை தடுக்க வேண்டாமேன்று நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்:புஹாரி 900, 893).
நாயகம் (ஸல்) அவர்களது காலத்தில் பெண்கள் பள்ளிவாசலுக்கு வந்து தொழுபவர்களாக இருந்தனர். பின்வரும் அழகான நபிமொழிகளை பாருங்கள்....
இறைநம்பிக்கையுள்ள பெண்கள் தங்களின் ஆடைகளால் போர்த்திக் கொண்டு நபி(ஸல்) அவர்களுடன் ஃபஜ்ருத் தொழுகையில் பங்கெடுப்பவர்களாக இருந்தனர். தொழுகை முடிந்ததும் தங்களின் இல்லங்களுக்குத் திரும்புவார்கள். இருட்டின் காரணமாக அவர்களை ஒருவரும் அறிந்து கொள்ளமுடியாது.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி), நூல் : புகாரி(578)
"நீண்ட நேரம் தொழுகை நடத்தும் எண்ணத்துடன் நான் தொழுகையைத் துவக்குகிறேன். அப்போது குழந்தையின் அழுகுரலை கேட்கிறேன். (எனக்குப் பின்னால் தொழுது கொண்டிருக்கும்) அந்தக் குழந்தையின் தாயாருக்குச் சிரமமளிக்கக் கூடாது என்பதனால் தொழுகையைச் சுருக்கமாக முடித்து விடுகிறேன்" என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபு கதாதா (ரலி), நூல் : புகாரி(707)
நபி(ஸல்) அவர்களை விட தொழுகையைச் சுருக்கமாகவும் (அதே சமயம்) பரிபூரணமாகவும் தொழுகை நடத்தக் கூடிய வேறு எந்த இமாமின் பின்னாலும் நான் தொழுதது கிடையாது. ஒரு குழந்தையின் அழுகுரலை அவர்கள் கேட்க நேர்ந்தால், அக்குழந்தையின் தாயாருக்குச் சஞ்சலம் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் தொழுகையைச் சுருக்கமாகவே முடித்துக் கொள்வார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் இப்னு மாலிக், நூல் : புகாரி(708)
உலகின் பல்வேறு நாடுகளிலும் பள்ளிவாசல்களில் பெண்களுக்கென்று தனி இடம் ஒதுக்கப்பட்டே இருக்கும். அமெரிக்காவில் நடத்தப்பட்ட சமீபத்திய ஆய்வு என்ன சொல்கின்றது என்றால், அங்கே பள்ளிவாசலுக்கு வந்து தொழும் பெண்களின் எண்ணிக்கை ஆண்களுக்கு நிகராக இருக்கின்றதாம் (பார்க்க இங்கே)
தமிழ்நாட்டில், தூய இஸ்லாம் பிரச்சாரத்தால் நிலைமை படுவேகமாக மாறி வருகின்றது. எனக்கு பக்கத்தில் உள்ள முஸ்லிம்கள் பெருவாரியாக வாழும் ஒரு ஊரில் (கோட்டக்குப்பம்) பெண்களுக்கென்று தனி பள்ளிவாசளையே (நோன்பு காலத்தில்) கொடுத்திருக்கின்றனர். இது கடந்த சில ஆண்டுகளாக நடக்கின்றது. எல்லாப் புகழும் இறைவனுக்கே உரித்தாவதாக...ஆமீன்.
இறைவன் நாடினால் நிலைமை முழுமையாக மாறும். பிரார்த்தனை செய்யுங்கள்...
நன்றி...
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ
ரம்ஜான் வாழ்த்துகள்.
இனிய ரம்ளான் வாழ்த்துக்கள் ஜலீலா.
Nice post dear. Wishing you and family a blessed and happy Eid festival.
ஒறுவனின் அடிமை , க்கு மிக்க நன்றி
என் தந்தைக்கு செய்த துஆவுக்கும் மிக்க நன்றி.
சினேகிதன் அக்பர் உங்கள் வாழ்த்த்துக்கு மிக்க நன்றி
நிருபன் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி
ஆமாம் ஜெய்லானி இங்குள்ள பள்ளிகளில் பெண்களுக்கும் தொழுகைக்கு வசதி உள்ளது என்பதை தெரிவிகக் தான் பதிவு போட்ட்டேன்
நன்றி அந்நியன்
ஸ்ரீதர் வருகைக்கு மிக்க நன்றி
முடிந்த போது உங்கள் வலைப்பக்கம் வருகீறேன்
அதிரா ஓ நீங்க அப்படி சொல்றீங்கலா?
இனி உஷாராகிடுவோமுல்ல
சகோ ரஜின் கண்டிபிடிச்சிகளா/
கருத்துக்கு நன்றி
லக்ஷ்மி அக்கா பொறுமையா இவ்வள்வு தூரம் படித்தமைக்கு மிக்க நன்றி
சகோ ஆஷிக்
நீங்கள் சொல்வது முற்றிலும் சரியே.
21 லிருந்துஒற்றைபடையாக தொழுகை கியாமுல் தொழுகை
ஆனால் எனக்கு இங்கு வெள்ளி மட்டும் தான் விடுமுறை ஆகையால் வெள்ளி மட்டும் தொழ போனேன் அன்று 27 , அன்று ஊரில் எல்லோரும் எங்க வீட்டில் குர் ஆன் கத்தம் செய்வார்கள், அது போல் என் பையனும் முடித்தான், அதே 27 நோன்பு அன்று தான் என் பெரிய பையனும் பிறந்தான் அதை குறிப்பிட தான் இரண்டு முன்று தடவை 27 என்று போட்டு இருக்கீரேன்
வந்த புதிதில் பெருநாள் தொழுகைக்கஓ, தராவீஹ், கியாமுல் ட்தொழுகைக்கோ தனியாக பெண்களுக்கு என்று தனி இடம் இருபப்து எனக்கு தெரியது , ஊரில் எல்லோருட்னும் தொழுதோமே என்ற ஏக்கம் இருந்தது.
அதான் வெளிநாடுகளில் இருப்பவர்கலுக்கும் , ஊரிலிருந்து வருகிறவர்களுக்கும் பள்ளிவாசாலில் பெண்கள் தொழுகையும் இருக்கு என்ப்பதை தெரியபடுத்தவே இந்த பதிவு
உங்கள் விளக்கம், உங்கள் கருத்து , நீஙக்ள் கொடுத்துள்ள லின்குகள் இதை படிபப்வர்களுக்கு கண்டிப்பாக பயன் பட்டிருக்கும்.
வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி
//உங்கள் அனுபவங்களை நேரில் பார்த்தது போல இருக்கு.எனக்கு முஸ்லீம் மத வாசனை நிறையவே உண்டு,அதாவது நான் நாகூர் பக்கம் நாகப்பட்டினம்,எங்க ஊர்லையும் ஏகப்பட்ட முஸ்லீம் மக்கள்.எங்க பாட்டி காலையில் வாங்கு சொல்லும்போது எழுந்து வேலை செய்ய ஆரமிப்பாங்க.இதுவரை எத்தனையோ இடங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளேன்.அங்கெல்லாம் பக்கத்தில் பள்ளிவாசலும் அல்லது ஓதும் சத்தம் கேட்கும் தூரத்திற்குள் வீடு அமையும்.ஆனால் அர்த்தம் ஒன்னும் புரியாது.திருமணத்திற்கு முன்வரை நோம்பு கஞ்சி எனக்கு வருடாவருடம் கிடைத்துவிடும்.இந்த பதிவை படித்தவுடன் என்னவோஇதெல்லாம் சொல்லத் தோனியது சகோதரி..//
சகோதரி இவ்வள்வு தூரம் பதில் எழுதியது மிக்க சந்தோஷம்.
பாங்கு சொல்லும் சத்தம் வருடகாலமாக கேட்கிறேன் ஆனால் அர்த்தம் தெரியல என்றீர்கள்
கண்டிப்பா மற்றொரு பதிவீல் போடுகிறேன்
நன்றி கோவை2தில்லி
ஆமாம் ஹுஸைனாம்மா இங்கும் வீடுகளில் கூட்டாக தொழுகிறார்கள்,
எனக்கு தெரிந்து போரி முஸ்லீம்கல் (பெண்கள்)கூட்டாக சேர்ந்து கடைசி 10 தில் உம்ரா போவாரக்ள் என்பது மட்டும் தெரியும்
ஆனால் நம்ம ஊரில் வீடுகளில் தொழுவ்து போல் இங்கும் தொழுகிறார்கல் என்பது அன்று தொழ போகும் போது தான் தெரிந்துகொண்டேன்
தளி
உங்கள் நிலைமை எனக்கு புரியுது
நானும் எங்க பக்கத்துவீட்டில் உள்ளவஙக்ளும் வருடா வருடம் தொழ போகும் போது எங்க பசஙக்லும் இப்படிதான்
அதுவரை பேசாமல் இருப்பானுங்க்
தொழ ஆரம்பித்ததும் ஒரெ சிரிப்பும் பேச்சும் , பிறகு உஷாராகி கை பை நிறைய திண்பண்டம் கொண்டு வந்து கொடுத்து பிற்கு தொழுவோம் அபப்ரம் எந்த பிரசனையும் இல்லை
ஆனால் இப்ப நீங்க சொல்வது போல்
இரண்டு முன்று பேர் பிள்ளைகளை கூப்பிட்டு வந்து தொழ ஆரம்பித்ததும்
எப்பா அந்த பிள்ளைகள் ஆடின ஆட்டத்துக்கு, அரபி பெண்களிடம் சரியான திட்டடு வாங்கிஅனார்கள்
தளி
உங்கள் நிலைமை எனக்கு புரியுது
நானும் எங்க பக்கத்துவீட்டில் உள்ளவஙக்ளும் வருடா வருடம் தொழ போகும் போது எங்க பசஙக்லும் இப்படிதான்
அதுவரை பேசாமல் இருப்பானுங்க்
தொழ ஆரம்பித்ததும் ஒரெ சிரிப்பும் பேச்சும் , பிறகு உஷாராகி கை பை நிறைய திண்பண்டம் கொண்டு வந்து கொடுத்து பிற்கு தொழுவோம் அபப்ரம் எந்த பிரசனையும் இல்லை
ஆனால் இப்ப நீங்க சொல்வது போல்
இரண்டு முன்று பேர் பிள்ளைகளை கூப்பிட்டு வந்து தொழ ஆரம்பித்ததும்
எப்பா அந்த பிள்ளைகள் ஆடின ஆட்டத்துக்கு, அரபி பெண்களிடம் சரியான திட்டடு வாங்கிஅனார்கள்
தளி
உங்கள் நிலைமை எனக்கு புரியுது
நானும் எங்க பக்கத்துவீட்டில் உள்ளவஙக்ளும் வருடா வருடம் தொழ போகும் போது எங்க பசஙக்லும் இப்படிதான்
அதுவரை பேசாமல் இருப்பானுங்க்
தொழ ஆரம்பித்ததும் ஒரெ சிரிப்பும் பேச்சும் , பிறகு உஷாராகி கை பை நிறைய திண்பண்டம் கொண்டு வந்து கொடுத்து பிற்கு தொழுவோம் அபப்ரம் எந்த பிரசனையும் இல்லை
ஆனால் இப்ப நீங்க சொல்வது போல்
இரண்டு முன்று பேர் பிள்ளைகளை கூப்பிட்டு வந்து தொழ ஆரம்பித்ததும்
எப்பா அந்த பிள்ளைகள் ஆடின ஆட்டத்துக்கு, அரபி பெண்களிடம் சரியான திட்டடு வாங்கிஅனார்கள்
தளி
உங்கள் நிலைமை எனக்கு புரியுது
நானும் எங்க பக்கத்துவீட்டில் உள்ளவஙக்ளும் வருடா வருடம் தொழ போகும் போது எங்க பசஙக்லும் இப்படிதான்
அதுவரை பேசாமல் இருப்பானுங்க்
தொழ ஆரம்பித்ததும் ஒரெ சிரிப்பும் பேச்சும் , பிறகு உஷாராகி கை பை நிறைய திண்பண்டம் கொண்டு வந்து கொடுத்து பிற்கு தொழுவோம் அபப்ரம் எந்த பிரசனையும் இல்லை
ஆனால் இப்ப நீங்க சொல்வது போல்
இரண்டு முன்று பேர் பிள்ளைகளை கூப்பிட்டு வந்து தொழ ஆரம்பித்ததும்
எப்பா அந்த பிள்ளைகள் ஆடின ஆட்டத்துக்கு, அரபி பெண்களிடம் சரியான திட்டடு வாங்கிஅனார்கள்
//பள்ளி வாசலில் பெண்களுக்கு அனுமதி இல்லை என்று தான் என்று வரை நினைத்திருந்தேன்... இன்று உங்கள் பதிவும் husseinamma பதிவும் படித்த பின் தெரிந்து கொண்டேன்... உங்கள் ஆசை நிறைவேறியதிலும் மகிழ்ச்சி ஜலீலாக்கா/
அப்பாவி தஙக்மணி உங்களை போல் நிறைய பேருக்கு தெரியல அதுக்காதாஅன் இந்த பதிவு போட்டேன்
வருகைக்கும் , உங்களுக்கு தெரிந்தால் உங்கள் பகக்ம் உள்ல முஸ்லீம் பெண்களுக்கு சொல்லுவீங்க இல்ல.
//பள்ளி வாசலில் பெண்களுக்கு அனுமதி இல்லை என்று தான் என்று வரை நினைத்திருந்தேன்... இன்று உங்கள் பதிவும் husseinamma பதிவும் படித்த பின் தெரிந்து கொண்டேன்... உங்கள் ஆசை நிறைவேறியதிலும் மகிழ்ச்சி ஜலீலாக்கா/
அப்பாவி தஙக்மணி உங்களை போல் நிறைய பேருக்கு தெரியல அதுக்காதாஅன் இந்த பதிவு போட்டேன்
வருகைக்கும் , உங்களுக்கு தெரிந்தால் உங்கள் பகக்ம் உள்ல முஸ்லீம் பெண்களுக்கு சொல்லுவீங்க இல்ல.
மனோ அக்கா எல்லோரும் மறந்து போன என்னை வலைச்சரத்தில் என்னை மீண்டும் அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க்க நன்றி + ச்ந்தோஷம்
உங்கள் வாழ்த்துக்கு மிக்க ந்ன்றி மாய உலகம்
நன்றி காஞ்சனா
//பெருநாள் வாழ்த்துக்கள் ஜலீலாக்கா.
கவலையோடு இருக்கும் உங்களுக்கு வாழ்த்துச் சொல்லலாமா என யோசித்துக்கொண்டே தான் எழுதுகிறேன்//
பெருநாள் வாழ்த்துக்கு மிக்க நன்றி அதிரா
ஆமாம் கவலையோடு தான் இருந்தேன்
அப்பா இல்லாமல் இந்த தடவை பெருநாள் போல்வே இல்லை
நன்றி ஸ்ரீ ராம்
நன்றி மாதேவி
நன்றி விக்கி
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா