பித்தம்,சூடு, வயிற்று வலி, பெண்களுக்கு மாத விடாய் காலத்து வயிற்று வலிக்கு மிகவும் நல்லது. நோன்புகாலத்திற்கு ஏற்ப அருமையான பானம்.
தேவையான பொருட்கள் - கருப்பு திராட்சை - அரை கிலோ
- உப்பு - ஒரு சிட்டிகை
- சர்க்கரை - ஐந்து டேபுள் ஸ்பூன்
- தண்ணீர் - இரண்டு கப்
- இஞ்சி சாறு - மூன்று டேபுள் ஸ்பூன்
- குங்மப்பூ - இரண்டு இதழ்
- ஐஸ் கியுப்ஸ் - ஆறு
|
செய்முறை - திராட்ச்சையில் ஒரு பத்து பதினைந்து எடுத்து மேல் தோல் உரித்து கொட்டையை எடுத்து ஒவ்வொன்றையும் நான்காக அரிந்து தனியாக எடுத்து வைக்கவும்.
- மீதி உள்ள திராட்சையில் மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பொருட்களையும் போட்டு மிக்சியில் விப்பரில் ஒடவிட்டு, மிக்சியில் நல்ல பத்து நிமிடம் ஓட விட்டு வ்டிகட்டி பெரிய ஜுஸ் டம்ளரில் ஊற்றி கட் பண்ணி வைத்துள்ள திராட்சையை எல்லா டம்ளரில் போடவும்.
|
குறிப்பு:
திராட்சை சிலது புளிக்கும் ஆகையால் இஞ்சி சாறு சேர்க்க வேண்டும். திராட்சை குளுமை சிலபேருக்கு தொண்டை பிடிக்கும் ஆகையால் குங்மப்பூ சேர்த்தால் இஞ்சி, குங்குமப்பூ சேர்ந்து சளியை கட்டு படுத்தும்.
23 கருத்துகள்:
செய்து பார்க்கலாம். பகிர்வுக்கு நன்றி
அவசரகால முதலுதவி சிகிச்சைகள்! தெரிஞ்சுக்கலாமே
மிகவும் அருமையாக இருக்கின்றது...பகிர்வுக்கு நன்றி...
சூப்பர்ர் ஜூஸ்!!
refreshing drink for summer.
கிரேப் ஜீஸ் நல்லா இருக்கிறது.
இஞ்ஜி போட்டு செய்த இல்லை ,இஞ்ஜி போட்டு செய்து குடிக்கிறேன் நன்றி ஜலீலா.
சூப்பர்...
சூப்பர்... ஜூஸ்!!
அக்கா, கிரேப் ஜூஸ்ல இஞ்சி சேர்க்கணும்க்கிறது புது தக்வல். செஞ்சிப் பார்க்கணும்.
ஆமா, கிளாஸ்ல ஜூஸ் மேலே ரோஸ் கலர்லயும், கீழே கருப்பு கலர்லயும் இருக்கே, அது எப்படி?
நல்ல குறிப்புங்க. செய்து பார்க்கலாம்.
ஸலாம் ஜலீலாக்கா,,,உங்க டிப்ஸே டிப்ஸ் தான்..
நோன்புக்கு சிறந்த பானம்...
ஆனா பாதிதா ஒருத்தருக்கு தருவீங்க போல..ஹாஃப் க்ளாஸ் நுரையாலே ஃபில் ஆயிருக்கு,,,:)
அப்ரம் எங்க ஊர் நோன்பும்,உங்க ஸ்பெஷல் நோன்பு கஞ்சி பற்றி ஒரு பதிவு எழுதீர்கேன்..
நேரம் கிடைக்கும் போது பாருங்களேன்...
http://sunmarkam.blogspot.com/2011/08/blog-post.html
அன்புடன்
ரஜின்
சூப்பர் ஜலீலாக்கா... கலரே கலக்கலா இருக்கு.
தமிழ் வாசி செய்து பாருங்கள் வருகைக்கு மிக்க நன்றி
கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றீ கீதா ஆச்சல்
நன்றி மேனகா
வாங்க சித்ரா , கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி
கோமதி அரசு , வெரும் கிரேப் ஜூஸ் குடித்தால் தொண்டை பிடிச்சிக்கும் ஆகியால் ,இஞ்சி சாரும், சாப்ரானும் சேர்த்துப்பேன்.
செய்து பார்த்து விட்டு சொல்லுங்கள்
சே.குமார் உங்கள் தொடர் வருகைக்கும் கருத்து தெரிவிப்பமைக்கும் மிக்க் நன்றி
நோன்பு என்பதால் யார் பதிவையும் சரியாக ப்டிக்க முடியல , முடிந்தபோது வருகிறேன்
ஹுஸைனாம்மா , எனக்கு முன்பு சைனஸ் பிராப்ளம் இருந்ததால், எந்த குளுமையான ஜூஸும் ஒத்துக்காது, ஆகையால் , சாப்ரான், இஞ்சி சாறு , மிளகு தூள் இப்படி சேர்த்து செய்து குடிப்பேன் ஒன்றும் செய்யாது.
அது ஜூஸை வடிகட்டி விட்டு மறுபடி ஜாரில் போட்டு நல்ல அடித்தால் இப்படி நுரை பொங்கிவரும், அதுவும் இல்லாம்ல் வாங்கும் திராட்சையின் நிறத்தை பொருத்தும் இருக்கு இது ரோஸ் கலந்த கருப்பு திராட்சை////
ஒகே வா
கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றீ
கோவை2தில்லி
ரஜின் தம்பி வாங்க
என்ன பாதி கிளாஸா அது எவ்வள்வு பெரிய கிளாஸ் தெரியுமா.
என் பிள்ளைகளுக்கு இப்படி நுரை பொங்க கொடுக்கனும் நுரை அடங்குவதற்க்ள் குடிக்கனும் என்று ஒரே போட்டியா இருக்கும்.
உங்கள் பதிவு பார்த்தேன் ரொம்ப சந்தோஷம், பதில் தான் உடனே போட முடியல் இன்னும் இந்த தடவை நோன்பு கஞ்சி ரெசிபி இனும் பொடல போட்டுட்டு வரேன்
வாங்க பூஸாரே என்ன ஒரே வரியில முடிச்சிட்டீங்க
அஸ்ஸலாமு அழைக்கும்
சூப்பர் ஜூஸ்...
wow superr i am going to try it soon..
யக்காட்ட காமிச்சாச்சி இந்த ரெசிப்பிய
சீக்கிரமே செய்திடுவாங்க இன்ஷா அல்லாஹ்
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா