நோன்பு கஞ்சி இல்லாத நோன்பே கிடையாது. வருட வருடம் நோன்பு வந்து விட்ட்து என்றால் மாலை இஃப்தாருக்கு அனைவரின் இல்லத்திலும் தயாரிப்பது நோன்பு கஞ்சியும் அதுக்கு துணையா பஜ்ஜி கட்லெட் சமோசா இதில் ஏதாவது ஒன்று. காலையில் இருந்து நோன்பு நோற்று மாலை நோன்பு திறக்கும் போது இந்த கஞ்சியை முதலில் குடிப்பதால் வயிறு குளிர்ந்து எந்த உபாதையும் இல்லாமல் இருப்ப்து நோன்பு கஞ்சி தான், இது ஊருக்கு ஊர் செய்முறைகள் மாறுபடும். நான் பல முறைகளில் செய்து பார்த்தாச்சு, இப்ப நேற்று செய்த்து எண்ணையில்லாமல் அதாவது தாளிப்பு இல்லாமல் செய்து பார்க்கலாம் என்று செய்தேன். குடிக்க பாகமாக அருமையாக இருந்த்து.
இதில் எனக்கு ரொம்ப பிடித்த்து சென்னையில் பள்ளி வாசல்களில் கொடுக்கும் நோன்புகஞ்சி சூப்பர் அது மொத்த்மாக பெரிய தேக்ஷாவில் செய்வதால் சுவை இன்னும் கூடும்.
கஞ்சி குடித்துவிட்டு கண்டிப்பாக லெமன் ஜூஸ் குடிக்க ரொம்ப பிடிக்கும்/
தேவையானவை
பொடித்த நொய் (அரிசி பொடித்த்து) – அரை டம்ளர்
கடலை பருப்பு – இரண்டு மேசைகரண்டி
கேரட் – ஒரு சிறிய துண்டு
வெங்காயம் – ஒன்று
தக்காளி – ஒன்று
பச்ச மிளகாய் – ஒன்று
உப்பு – தேவைக்கு
பொடியாக அரிந்த இஞ்சி - அரை ஸ்பூன்
பொடியாக அரிந்த பூண்டு - முன்று
கொத்துமல்லி தழை – சிறிது
புதினா – சிறிது
மட்டன் (அல்லது) சிக்கன் கீமா – 100 கிராம்
மிளகாய் தூள் – அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி
உப்பு – கால் தேக்கரண்டி
கரம் மசாலா தூள் – அரை தேக்கரண்டி (பட்டை,ஏலம்,கிராம்பு தூள்)
செய்முறை
அரிசியை பொடித்து நொய்யாக அரை டம்ளர் எடுத்து அத்துடன் கடலை பருப்பை ஊறவைக்கவும்.
கீமா (மட்டன் (அ) சிக்கனை எடுத்து கழுவி சுத்தம் செய்து அத்துடன் இஞ்சி பூண்டு பேஸ்ட்,மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு , கரம் மசாலா தூள் அனைத்தையும் சேர்த்து வேகவைத்து கொள்ளவும்.
ஒரு பெரிய வாயகன்ற பாத்திரத்தில் 4 டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க் வைத்து கொதி வரும் போது ஊறிய அரிசி + கடலை பருப்பை போடவும்.
தேவைக்கு (ஒரு ஸ்பூன் ) உப்பு சேர்த்து கேரட் துருவி போட்டு, இஞ்சி , பூண்டு, வெங்காயம் அரிந்து போட்டு, தக்காளியை நீளவாக்கில் நான்காக அரிந்து சேர்த்து , பச்சமிளகாயையும் சேர்த்து நன்கு கிளறி விட்டு கொதிக்க விட்டு வேக விடவும்.
நன்கு வெந்து கொண்டு இருக்கும் போது வெந்து வைத்துள்ள கீமாவையும் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து கடைசியாக கொத்துமல்லி தழை, புதினா, ஒரு ஸ்பூன் நெய் விட்டு இரக்கவும். தேவைபட்டால் சிறிது தேங்காய் பவுடர் கரைத்து ஊற்றிக்கொள்ளலாம்.
பிரஷர் , சுகர் உள்ளவ்ர்கள் பிரியாணி போல் தாளித்த கஞ்சி அதிகம் சாப்பிட முடியாது. எண்ணை இல்லாமல் இருப்பதால் இதைதாராளமாக நல்ல குடிக்கலாம்.தாளிப்பு சுவைதான் பிடிக்கும் என்பவர்கள் கடைசியாக சிறிது எண்ணை + நெய் கலந்து பட்டை சிறிய துண்டு போட்டு வெங்காயம், சிறிது இஞ்சி பூண்டு, கருவேப்பிலை போட்டு தாளித்து குடிக்கலாம்.
பேச்சிலர்களுக்கு இந்த முறை கொஞ்சம் ஈசியாக இருக்கும், குக்கர் இல்லாதவர்கள் இப்படி சட்டியில் வெளியில் கஞ்சியை வேகவைத்து செய்யலாம்.
Iftar Menu
கீமா கஞ்சி ,வாழக்காய் பஜ்ஜி , தர்பூஸ், லெமன் ஜூஸ், பேரிட்சை புதினா சட்னி,பழங்கள்
சிக்கன் சூப், ரோஸ் மில்க், உளுந்து வடை, கல்கண்டு வடை, வெங்காய பஜ்ஜி,கருப்பு கொண்டைகடலை சுண்டல், ஜவ்வரிசி கடல் பாசி, பழங்கள்
மேங்கோ கடல் பாசி, சாக்லேட் கடல் பாசி, ரூ ஆப்ஷா கடல் பாசி
இப்படி கஞ்சியில் வடை பிச்சி போட்டு கூடவே புதினா சட்னி சேர்த்து சாப்பிட்டால் சூப்பர் தான்..
Tweet | ||||||
35 கருத்துகள்:
தாளிப்பு இல்லாமல் வித்த்யாசமாக செய்து காட்டி இருக்கீங்க ஜலீலா.
இதுலையும் டயட்டா
ஆஹா! உப-யோகம் தான்
Unga diet kanji romba nalla irukku, athoda iftar arrangements ellam kalakal, Masha allah!
super kanji. I like your presentation.
பிரபல மார்க்க அறிஞர் முப்தி உமர் ஷரீப் காசிமி அவர்கள் சிறப்பு பயான் இங்கே கிளீக் செய்யவும்
எல்லாம் பார்க்கவே சூப்பராக இருக்குது.
Romba nalla irukku. Ennakum palli vasalgalil kodukkapadum kanji romba pidikum. recipeikku thanks.
சூப்பர் ஜலீலாக்கா.
//கஞ்சி குடித்துவிட்டு கண்டிப்பாக லெமன் ஜூஸ் குடிக்க ரொம்ப பிடிக்கும்/
//
இது சத்தியமா ஜெய் ட லெமன் ஜூஸ் இல்லைத்தானே?:))).
ஆஹா...இப்படி எல்லாம் படம் போட்டு எங்களுக்கு ஆசையினை காட்ட கூடாது...
நாங்களும் வரலாமா...
ஸலாம் உண்டாவதாக சகோ.ஜலீலா கமால்,
//எண்ணையில்லாமல் அதாவது தாளிப்பு இல்லாமல் செய்து பார்க்கலாம் என்று செய்தேன்//--அடடா... இது காய்ச்சல் காரங்களுக்கு காய்ச்சி குடுக்கிற கஞ்சிகான செய்முறையாச்சே..! :)
//பிரஷர் , சுகர் உள்ளவ்ர்கள் பிரியாணி போல் தாளித்த கஞ்சி அதிகம் சாப்பிட முடியாது.//---இதுவும் கரெக்ட்தான்..!
//இப்படி கஞ்சியில் வடை பிச்சி போட்டு கூடவே புதினா சட்னி சேர்த்து சாப்பிட்டால் சூப்பர் தான்..//---நான் சிறு வயதிலிருந்தே செய்யும் ஒரு வழிமுறை.
இன்னொன்னும் இருக்கே..!
கஞ்சியிலே பேரிச்சம் பழத்தை பிச்சி போட்டு ஊறவச்சு சாப்பிட்டாலும் சூப்பரா இருக்குமே..!
பகிர்வுக்கு மிக்க நன்றி சகோ.
சூப்பரா இருக்கு ஜலீலாக்கா! விதவிதமா போட்டோஸ் போட்டு பசியைக் கிளப்புறீங்க! ;)
Super o super, kanji looks sooo delicious..
அஸ்ஸலாமு அழைக்கும்
தாளிப்பு இல்லாமல் கஞ்சியா
வித்தியாசமாக இருக்கு.
//இதில் எனக்கு ரொம்ப பிடித்த்த சென்னையில் பள்ளி வாசல்களில் கொடுக்கும் நோன்புகஞ்சி சூப்பர்//
சூப்பர் கஞ்சிதான்.
//முஹம்மத் ஆஷிக்
கஞ்சியிலே பேரிச்சம் பழத்தை பிச்சி போட்டு ஊறவச்சு சாப்பிட்டாலும் சூப்பரா இருக்குமே..!//
சகோ இது புதுசா இருக்கே.
super akka mm sema deedsdaayirukkum.
ரமதான் நோன்பு இருக்கும் அனைவரும் சாப்பிட வேண்டிய டயட்....
நான் வெள்ளை கஞ்சி தான் போடுவேன்... இன்ஷா அல்லாஹ் ஒரு நாள் செஞ்சு பார்க்கனும்...
உங்க கடைசி படத்த பார்த்துட்டு ரொம்ப ஆசையா இருக்கு.. உளுந்து வடைக்கு நாளைக்கு செய்யனும்
எல்லா நோன்புக் கஞ்சியிலும் மட்டன் அல்லது சிக்கன் சேர்ப்பார்களா...அல்லது அசைவம் சேர்க்காத வெஜ் கஞ்சியும் உண்டா?
ஆமாம் ஸாதிகா தினமும் ஒரே மாதிரியா செய்வதற்கு ஒரு வித்தியாசமாக செய்வோம் என்று தான்.
நன்றி ஸாதிகா அக்கா
ஆமாம் சகோ ஜமால், டயட் செய்பவர்களுக்கு உபயோகமாக இருக்கும்.,
நன்றி
உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி ஆயிஷா
ரொம்ப நாட்கள் கழித்து வந்து இருக்கீங்க வானதி மிக்க் நன்றி
உங்கள்தொடர் வருகைக்கும் ஊக்கத்துக்கும் மிக்க நன்றீ சித்ரா
ராதிகா பள்ளி வாசல் கஞ்சி ய விரும்பாதவர்களே யாரும் இல்லை, வருகைக்கு மிக்க் நன்றி
கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி கீதா ஆச்சல்
வாங்க எப்ப வேண்டுமானாலும் வரலாம்
முஹம்மது ஆஷிக் காய்ச்சல் காரர்களுக்கு செய்யும் முறை வேறு , இது வேறு
பேரிச்சை பழத்தை கஞ்சியில் போட்டு குடிப்பது இப்ப தான் கேள்வி படுகிறேன்.
வா அலைக்கும் சலாம் ஆயிஷா அபுல்
சென்னை பள்ளிவாசலில் கொடுக்கும் கஞ்சி எனக்கு ரொம்ப பிடிக்கும் குடித்து வருட கணக்கா ஆகுது.
வருகைக்கு மிக்க் நன்றி
வருகைக்கு ரொம்ப நன்றி மகி, நோன்புகாலங்களில் தினம் வித விதமான சமையல் தான்
உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி பிரியா
சூப்பரா இருக்கு நான் தான் அக்கான்னா
யாருன்னு தெரியலையே
பெயரை சொல்லி இருக்கலாம்.
வருகைக்கு மிக்க நன்றி
உங்கள் கருத்துக்கு மிக்க் நன்றி கோபி
நாஸியா வாங்க எப்படி இருக்கீங்க
உஙக்ள் பையன் எப்படி இருக்கிறார்
வெள்ளை கஞ்சி ஜுரம் வந்தா போடுவது, நோன்பு காலங்களில் செய்வது இது போல பலவகைகள்,
செய்து பாருங்கள்
ஸ்ரீராம் நோன்பு கஞ்சி என்றாலே மட்டன் , சிக்கன் சேர்த்து செய்வது தான்
ஆனால் 30 நாட்க்ள் நோன்பு என்பதால் தினம் ஒரெ போல் செய்யாமல்
ஒரு நாள் தேங்காய் பால் கஞ்சி
காய்கறிகள் கலந்த நோன்பு கஞ்சியும் செய்வோம்
சைவ நோன்பு கஞ்சி செய்து போஸ்ட் பண்ண நேரமில்லை.
பிற்கு போடுகிறேன்.
வருகைக்கு மிக்கநன்றி
எனக்கும் சைவக் கஞ்சி ஆசை. ஸ்ரீராம் இந்தக் கஞ்சியில் மட்டன் எடுத்துவிட்டால் சைவம் ஆகிடுமே. மிக நன்றி ஜலீலா.வயிற்றுக்கு நல்லது கஞ்சிதான்.
akka your a genius.
enga oorula chinna vayasula
kudichuruken. romba miss panina
oru recipe. same tastela
kidaichuruku. thanks a lot.
steaming recipes konjam solunga akka
valliyammaa varukaikku mikka nanRi
prema, ungkaLukku chiian vayathil kudiththai , kanji en kuRIppu muulam kidiththathu romba santhoosham
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா