Monday, January 10, 2011

திரும்பி பார்க்கிறேன்.



இந்த தொடர் பதிவ அழைத்த தோழி விஜிக்கு மிக்க நன்றி

210 டைரி மற்றும் 2011 சாதிக்க நினைப்பது.
இதை டிசம்பர் 28 க்குள் எழுத சொன்னாங்க நான் அடுத்த டிசம்பரோன்னு நினைத்தேன்.
எனக்கு டைரி எழுதும் பழக்கம் எல்லாம் கிடையாது. பதிவுலகி வந்ததில் இருந்து தான் இது போல் தொடர் பதிவுகளில் கோர்வையாக இது போல் எழுத முடியுது.

ஏற்கனவே 2010 ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை எழுதியாச்சு.
அதை இங்கு போய் படித்து கொள்ளுங்கள்.


ஆகஸ்டு , செப்டம்பர் ஊரிலிருந்து வந்ததும் நோன்பு ரொம்ப பிஸியா போச்சு,
அடுத்து பெருநாள் விருந்தினர்கள் .
எல்லாரின் தேட்டம் வேறு.
நோன்பிலேயே விகடனில் இருந்து மெயில் சமையல் குறிப்பு கேட்டு ரொம்ப சந்தோஷம் ஆனால் உடனே அனுப்ப முடியாமல் போச்சு.பிற்கு ஒன்றிரண்டு குறிப்பு மட்டும் அனுப்பினேன்.

பிலாக்கில் பிராப்ளம் ஓப்பனே பண்ண முடியல. யாரோ கடத்திட்டாஙகளோன்னு பயந்துட்டேன், பிறகு ஒரு வழியா டெம்லேட் மாற்றி சரி பண்ணேன்.


அக்டோபர் மாதம் விகடனில் என் குறிப்பு ஹையா ரொம்ப சந்தோஷம்.


நவம்பர் , தமிழ் சமையலுன்னு ஒரு திருடர் என் குறிப்பு அத்தனையும் எடுத்து பிளாக்காகவே எடுத்து போட்டு வைத்து இருந்தார்,
அட கொடுமையே.அத அங்கேயே போய் தெரிந்து கொள்ளுங்கள்.

இனி குறிப்பே போட கூடாதுன்னு தோனுச்சு.உடம்பும் சரியில்லை கைவலி
அடுத்து சரி பெயரையாவது மாற்றுவோமுன்னு, மாற்றினேன் ,த்ப்பா போச்சு இங்கு ஒரு பதிவு போடமா மாற்றிவிட்டேன்,
தொடர்ந்து என் இடுகைக்கு வருகிறவர்களூக்கு என் பதிவு அப்டேட் ஆகல போல.
ஆஹா கூட்டம் வேற குறைந்து விட்டது.
பிறகு இடுகையை தமிழ் மனத்தில் இனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாக கூட்டம் சேர்ந்தத்து.




டிசம்பர் மறுபடி உடல் நலம் சரியில்லை. கை வலி, கழுத்து வலி, அடுத்து பையன் இந்த வருடம் அடுத்த வெக்கேஷனுக்கு வந்து இருந்தான் சந்தோஷ்மாக 20 நாள் கழிந்தது. பிள்ளைகளுக்கும் விண்டர் வெகேஷன்.
தங்கை வந்து தங்கி இருந்தாங்க , என் தங்கைபையன் குட்டி மழலை தமிழில் என்னை பெரிமான்னு(பெய்யாம்மாஅ) கூப்பிட ஆரம்பித்தான்

நான் மனசுக்குள்ள எங்க பேய் மா ந்னு கூப்பிட்டுடுவானோன்னு கொஞ்ச நாள் ஒட்டியதால் இப்படி. அடுத்து என் தங்கை என்னை ஜலிக்கான்னு கூப்பிடுவதை பார்த்து, அவனும் ஜல்லாக்கா, ஜல்லாகா என்று கூப்பிட ஆரம்பித்து விட்டான்.




நான் கிச்சனில் இருந்தால் என் போன் அடித்தால், ஜல்லாக்கா கோன் கோன் என்று ஓடி வந்து கொடுக்கும்.
நான் சமையலுக்கு போட்டவ எடுத்தாலும் தானும் நின்னு போஸ் கொடுத்து கொண்டே இருக்கும்.

உடம்பு முடியவில்லைஎன்றாலும் , வேலையும் அதிகம் என்றாலும் இவன் மழலை பேச்சு/ கேட்க ரொம்ப அருமையாக இருந்தது.
சமையலும் ஓவ்வொரு நாள் ஓவ்வொரு விதம் எல்லாம் போட்டோ எடுத்து வைத்துள்ளேன் பதிவில் போட தான் முடியல.அப்ப தான் எல்லோரும் துபாய் மால் போனோம், நல்ல இருந்தது.


இது ஹஸ் உடைய தம்பி மகன் ஹசன். ரொம்ப சுட்டி.

ஸ்கூலில் ரன்னிங் ரேஸில் 100 பேர் ஓடியதில் பர்ஸ்டாம், இரண்டு கோல்ட் மெடல் , ஒரு சிலவர் மெடலும் வாங்கி இருக்கிறார். டேய் எப்படி ஓடினாய் என்று கேட்டேன். செம்ம் செம்ம பாஸ்டா ஓடுன, எல்லாரும் ஹஸன் ஹஸன் ந்னு கை தட்டுனாஙக்லாம். ஒரே பெருமை , நானும் தான் ரன்னிங் ரேஸில் பஸ்ட் என்றேன் வாஙக் என் கூட ரேஸ் வையுங்க் பார்க்கலாம் , ந்ன் உடனே சொல்றார்.



போன வருடம் கடைசியில் கசப்பான விஷியம், அமீரகத்தில் நிறைய கம்பேனியில் எல்லோரையும் திடீர் வேலை நீக்கம் நடந்து கொண்டிருக்கிறது.
மிகவும் மக்கள் துவண்டு போய் இருக்கிறார்கள்.
இப்படி தீடீருன்னு என்றால் என்ன செய்வது, பிள்ளைகள் ஸ்கூல்,மற்றும் வாங்கிய லோன் கள் எல்லாம் பாதியில் நிற்கிறது.

மறுபடியும் நானும் மலிக்காவும் அதே பார்க்கில் சந்தித்தோம். அப்ப மலிக்கா மஷ்ரூல் லாப்பை, மற்றும் மஸ்கட் ஹல்வா கொண்டு வந்து கொடுத்தாங்க.

அபப் அங்கு வந்த இரண்டு மூன்று பெண்கள் ஜலீலா, மலிகா என்றதும்
தமிழ் குடுமப்த்தில் உள்ள பிரபலங்களா என்று கேட்டார்கள், இரண்டு பேரும் அப்படியே காலர தூக்கி விட்டு கொண்டோம்.
வந்து கேட்ட பெண்ணில் ஒரு பெண் கதீஜா, அது நம்ம ( அறுசுவை கதீஜாவின்) பெரிமா மகளாம்.


ஜனவரி 2011 : புது வருடம் பிறந்தது என்றாலும் மறுநாள் பையன் ஊருக்கு கிளம்புகிறான். ஆகையால் மறு படி சோகம், ஒரே அழுகை.அப்பரம் பிலாக் பார்த்தா எல்லால் சரியாகிடும்.

2011 சாதிக்க நினைப்பது என்று பார்த்தால் நிறைய மனதில் இருக்கு, ஆனால் அதில் ஒன்றாவது சாதிக்கனும் என்று அப்படி சாதித்தால் வருடகடைசியில் சொல்கிறேன்.கொஞ்ச பிலாக் எழுதுரத குறைத்து கொள்ளலாம் என்று இருக்கேன்.

சட்டுன்னு கோபப்படுவது, எரிச்சல் படுவது இன்னும் இதுபோல சில கெட்ட குணஙகளை விட்டு விடனும் என்று நினைப்பேன், போன வருடம் கோபத்தை குறைக்கனும் ,என்றும் பொறுமையை கையாளானனும், அவசர படக்கூடாது என்று இது போல் எனக்குள் குணங்களை விடனும் என்று அது போல் நடந்து வருகிறேன்.


இதை தொடர அழைப்பது

அதிரா , தளிகா, கீதா 6

பித்தனின் வாக்கு சுதாகர் சார், மற்றும் ஜெய்லானி.மங்குனி அமைச்சர்

முடிந்தால் கீழே பின்னூட்டம் இடுபவர்கள் யாரும் இந்த தொடரை எழுதலாம் இதுவே நான் லேட்டா போட்டுட்டேன் விஜி அதுக்காக என்னை பெஞ்சு மேலே ஏற்றக்க்கூடாது.

டிஸ்கி:தோழி அதிரா மீண்டும் கதைக்க வந்தது மிகவும் சந்தோஷம்.

41 கருத்துகள்:

Asiya Omar said...

very interesting jaleela.

Chitra said...

அக்கா.... நினைவுகளை அருமையாக தொகுத்து இருக்கீங்க... படங்களும் சுட்டி பேச்சும் - செம cute!

வெங்கட் நாகராஜ் said...

சுவையான பகிர்வு. நன்றி.

Starjan (ஸ்டார்ஜன்) said...

ரொம்ப அருமையா உங்க நினைவுகளை பகிர்ந்தது ரொம்ப சந்தோசமா இருக்கு.. நல்ல பகிர்வு ஜலீலா. வாழ்த்துகள்

Starjan (ஸ்டார்ஜன்) said...

2011 ல் நீங்க சாதிக்க நினைக்கும் காரியங்கள் எல்லாம் இறைவனின் கிருபையால் நல்லபடியாக நடக்கட்டும்.

மில்லியனெயார் ஆகும் அதிரா:) said...

ஜலீலாக்கா நல்ல அழகா அனுபவித்ததை அப்படியே எழுதிவிட்டீங்கள். தங்கையின் கடைக்குட்டி அழகாக இருக்கிறார், இப்பத்தான் பிறந்ததுபோல இருக்கு அதுக்குள் கதைக்கத் தொடங்கிற்றாரா.

பின்.கு:
ஜலீலாக்கா என்னை மன்னித்து விடுங்கள், வேறேதும் தொடரெனில் நான் எழுத சம்மதிப்பேன், இது 2010 ஐ எழுதச் சொல்றீங்கள், என்னால் முடியவே முடியாது ஜலீலாக்கா.... நான் பிறந்து வளர்ந்த காலத்தில் எனக்குப் பிடிக்காமல் போன ஆண்டு.

ஸாதிகா said...

ஜலி எளிய நடையில் ரசிக்கும் படி எழுதி இருப்பது அருமை.

Geetha6 said...

அருமை சகோதரி..
என்னை அழைத்தமைக்கு நன்றி.
விரைவில் தொடரை எழுதுகிறேன்.
பொங்கல் பண்டிகை முடிந்தவுடன்
எழுதட்டுமா? உங்கள் கருத்துரைகளை
ஆவலுடன் எதிர்பார்கிறேன் !!

சாந்தி மாரியப்பன் said...

அருமையான நினைவுக்குறிப்புகள் :-)

Jaleela Kamal said...

கீதா 6 உங்கள் வசதி படி எழுதுங்கள் பா
பொங்க்ல் வேலையை பாருங்கல். அப்பரம் எழுதிக்கலாம்.
இனிய பொங்க்ல வாழ்த்துக்கள்.

ராஜவம்சம் said...

மினி டைரி தொகுத்த விதம் அழகு.

Anonymous said...

ஜலீலா அக்கா..,உங்கள் நினைவலைகள் மிகவும் அருமை.தங்கை பைய்யன் மிகவும் அழகாக உள்ளார்.(கண்ணுபட போகுது...)மலிகாவும்,நீங்களும் அடிக்கடி சந்தித்து கொள்வீர்கள் என்பது தெரிகின்றது.
அடடே...நம்ம அதிரா இங்கு இருக்கின்றார்களே....
அதிரா....உங்களுக்கு என்னை நினைவிருக்கின்றதா.....?ஆனால் நாங்கள் மறக்கவில்லைங்க....

அன்புடன்,அப்சரா.

Angel said...

arumaiyana ninaivalaigal jaleela.
chinna kutti ungal nephew romba cute

Krishnaveni said...

nice write up, cute boys, happy new year madam

கவி அழகன் said...

அருமை சகோதரி..

ராமலக்ஷ்மி said...

நல்ல பகிர்வு ஜலீலா:)!

ஆமினா said...

நினைவுகள் அருமைக்கா

GEETHA ACHAL said...

சூப்பராக எழுதி இருக்கின்றிங்க...குழந்தையின் மழலை மொழியினை கேட்டு கொண்டே இருக்கலாம்...ஆனா பசங்க தான் சீக்கிரமாக வளர்ந்துவிடுராங்க...

மங்குனி அமைச்சர் said...

நேர்மையா எழுதி இருக்கீங்க மேடம் ............ நானும் உங்கள் படத்துடன் விகடனில் பார்த்து எனது மனைவியிடம் இது யார் என்று கேட்ட உடன் டக் என்று கூறிவிட்டால் நீங்கள் தான் என்று .......... ஏன்னா நான் அடிக்கடி உங்கள் பதிவு பற்றியும் உங்கள் சமையல் குறிப்பையும் அவளிடம் கூறியுள்ளேன் .

THOPPITHOPPI said...

மலரும் நினைவுகள் தான்

Jaleela Kamal said...

//பின்.கு:
ஜலீலாக்கா என்னை மன்னித்து விடுங்கள், வேறேதும் தொடரெனில் நான் எழுத சம்மதிப்பேன், இது 2010 ஐ எழுதச் சொல்றீங்கள், என்னால் முடியவே முடியாது ஜலீலாக்கா.... நான் பிறந்து வளர்ந்த காலத்தில் எனக்குப் பிடிக்காமல் போன ஆண்டு)

பரவாயில்ல்லை அதிரா, அடுத்த தொடர் பதிவிலும் பதிவிலும் சேர்த்துள்ளேன் அதில் கலந்து கொள்ளுங்கள்.

கோமதி அரசு said...

நல்ல பகிர்வு ஜலீலா.

வாழ்த்துக்கள்.

R.Gopi said...

//இதை டிசம்பர் 28 க்குள் எழுத சொன்னாங்க நான் அடுத்த டிசம்பரோன்னு நினைத்தேன்//

ஆஹா... ஜலீலா... ஸ்டார்டிங்லயே காமெடி தொடங்கியாச்சா!!?/ ஹா...ஹா...

//எல்லாரின் தேட்டம் வேறு//

தேட்டம் என்றால் தமிழில் என்ன அர்த்தம்?

//யாரோ கடத்திட்டாஙகளோன்னு பயந்துட்டேன்//

உங்களுடைய ப்ளாக்கையுமா? எனக்கு இது நடந்தது... அதற்காக ஒரு பதிவிட்டேன்... களவு / கடத்தலில் இருந்து மீட்டவுடன் இன்னொரு பதிவும் இட்டேன், அதன் தலைப்பு “அப்பீட் ஆன நான் மீண்டும் ரிப்பீட்டானேன்”..

//நவம்பர் , தமிழ் சமையலுன்னு ஒரு திருடர் என் குறிப்பு அத்தனையும் எடுத்து பிளாக்காகவே எடுத்து போட்டு வைத்து இருந்தார்,
அட கொடுமையே.அத அங்கேயே போய் தெரிந்து கொள்ளுங்கள்.//

இந்த மாதிரி ஒருத்தரா, ரெண்டு பேரா... நெறைய பேர் இருக்காங்க ஜலீலா... எல்லார் பதிவும் ஏதோ ஒரு வழியில் யாராலோ திருடப்பட்டுக்கொண்டு தான் இருக்கிறது... தோழமைகள் யாரும் பார்த்து சொன்னாலொழிய நமக்கு தெரிய வாய்ப்பே இல்லை...

//தொடர்ந்து என் இடுகைக்கு வருகிறவர்களூக்கு என் பதிவு அப்டேட் ஆகல போல. ஆஹா கூட்டம் வேற குறைந்து விட்டது.//

ஹா...ஹா... இது வேறயா!!! இதெல்லாம் நீங்க சொல்றப்போ தான் எனக்கே தெரியுது... ஆனா, மறுபடி நீங்க வந்து கலக்க ஆரம்பித்தாயிற்றே!!

//என் தங்கைபையன் குட்டி மழலை தமிழில் என்னை பெரிமான்னு(பெய்யாம்மாஅ) கூப்பிட ஆரம்பித்தான்//

எந்திரன் படத்தின் அரிமா அரிமா பாடல் கேட்ட எஃபெக்டா இருக்குமோ... தங்கை பையன் சொன்னது, அரிமா அரிமா, நீதான் என் பெரிமா... இப்படி இருக்குமோ!!?

//போன வருடம் கடைசியில் கசப்பான விஷியம், அமீரகத்தில் நிறைய கம்பேனியில் எல்லோரையும் திடீர் வேலை நீக்கம் நடந்து கொண்டிருக்கிறது//

உங்களின் இந்த அக்கறையான கவனிப்பு படிக்கும் போது மிகவும் நெகிழ்வாக இருக்கிறது... நல்லவர்களாக இருந்தால் மட்டுமே, அடுத்தவர் கஷ்டப்படுவதை பார்த்து வருத்தம் கொள்ள முடியும்... உங்களின் நல்ல மனசுக்கு அந்த இறைவன் உங்களுக்கு ஒரு குறையும் வைக்க மாட்டான்...

//மஷ்ரூல் லாப்பை, மற்றும் மஸ்கட் ஹல்வா//

எங்க...எங்க!!? ஸ்டாக் இன்னும் இருக்கா? கிடைக்குமா?

//ஜலீலா, மலிகா என்றதும் தமிழ் குடுமப்த்தில் உள்ள பிரபலங்களா என்று கேட்டார்கள்//

இல்லையா பின்ன, இதென்ன ஒரு கேள்வி... சரி..சரி... இருக்கட்டும்... சப்போர்ட் பண்ணினதுக்கு எப்போ ட்ரீட் தர்றீங்க ஜலீலா?

//2011 சாதிக்க நினைப்பது என்று பார்த்தால் நிறைய மனதில் இருக்கு, ஆனால் அதில் ஒன்றாவது சாதிக்கனும் என்று அப்படி சாதித்தால் வருடகடைசியில் சொல்கிறேன்//

நீங்கள் நினைக்கும் அனைத்தையும் இந்த வருடத்தில் (2011 ) சாதிக்க வாழ்த்துகிறேன்...

//சட்டுன்னு கோபப்படுவது, எரிச்சல் படுவது இன்னும் இதுபோல சில கெட்ட குணஙகளை விட்டு விடனும் //

நீங்க சொல்லி தான் தெரியுது, நீங்க சட்டுனு கோபப்படுவீங்க, எரிச்சல் படுவீங்கன்னு... விட்டுடுங்களேன் ஜலீலா... உடல் நலத்திற்கு நல்லதில்லை...

கலக்கலா எழுதி இருக்கீங்க... எப்படி தான் இவ்ளோ விஷயத்தை ஞாபகம் வச்சு எழுதினீங்களோ!!!

வாழ்த்துக்கள் ஜலீலா.....

RAZIN ABDUL RAHMAN said...

ஸலால் ஜலீலாக்கா,,
வருட நினைவுகளை அருமையாக கோர்த்து இருக்கிறீர்கள்...

பிள்ளைகளின் போட்டோக்களும் அருமை;...

உங்க தங்கை மகன் அழகா இருக்கிறான்..அவருக்கு நீண்ட ஆயுளும் நிரைந்த செல்வமும் வல்லோன் தர போதுமானவன்..

அன்புடன்
ரஜின்

அந்நியன் 2 said...

ரொம்ப அருமையான பதிவு இதன் மூலம் நாங்கள் நிறையா செய்திகளை தெரிந்து கொண்டோம் வாழ்த்துக்கள் !

Jaleela Kamal said...

கோபி அவர்களே பதிவை விளக்க கமெண்டுக்கே தனியா உங்களுக்கு ஒரு அவார்டுகொடுக்கலாம் போல.


( தேட்டம் என்றால் - ஊரிலிருந்து வந்ததும் அங்குள்ளவர்கள் நினைவாக அவர்களை தேடுவது.) அவ்ர்கள் நினைப்பு கண்ணில் இருந்து மறையாது.

சி.பி.செந்தில்குமார் said...

WELL SHARE

R.Gopi said...

கமெண்டுக்கு ஒரு தனி அவார்டா? எப்போ தர போறீங்க?

தேட்டம் விளக்கம் அருமை... தெளிந்தேன்...

நன்றி ஜலீலா....

நாஞ்சில் பிரதாப் said...

ஜலீலாக்கா...சூப்பர்..

கடந்த வருட அனுபவங்கள் அனைத்தும் வரலாற்றின் ஏடுகளில் பொன்னெழுத்தில் பொறிக்கப்படவேண்டியவை, இப்போதைக்கு சிக்கனையாவது பொறிப்போம்....:))

இந்த வருடம் முழுவதும் மகிழ்ச்சியான தருணங்கள் அமைந்திட வாழ்த்துக்கள்... புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Geetha6 said...

Thanks Jaleela Madam.
அன்புடன் Geetha.

ஜெய்லானி said...

முதல்ல விஜியக்கா கூப்பிட்டாஹ..
அப்புறம் ஆமீனாக்கா கூப்பிட்டாஹ...
இப்போ ஜலீலாக்காவும் கூப்பிடுறாஹ..

அவ்வ்வ்வ்வ்வ் என்னுடைய டைரியை படிக்க(நொந்து போக ) இவ்வளவு ஆர்வமா..!! ஹா...ஹா...

ஜெய்லானி said...

நான் பொதுவா மத்தவங்க டைரிய படிக்க ஆர்வம் காட்டுவதில்லை :-)

ஜெய்லானி said...

விரைவில் போட்டுடறேன் இன்ஷா அல்லாஹ் ( இறைவன் நாடினால் ) :-))

ஜெய்லானி said...

//நானும் மலிக்காவும் அதே பார்க்கில் சந்தித்தோம். அப்ப மலிக்கா மஷ்ரூல் லாப்பை, மற்றும் மஸ்கட் ஹல்வா கொண்டு வந்து கொடுத்தாங்க.//

கொழுக்கட்டையையை இன்னும் ,மறக்கலை ...இப்போ இது வேறயா...அவ்வ்வ்வ்வ்

ஜெய்லானி said...

குழந்தைகள் போட்டோவும் , மழழை சொற்களும் அழகு :-))

Mahi said...

சிரிக்கச் சிரிக்க சொல்லிருக்கீங்க ஜலீலாக்கா! 'பேயம்மா' காமெடி கலக்கல்!!

Jaleela Kamal said...

மிக்க நன்றி ஆசியா

ஆமாம் சித்ரா அப்படி நடபப்தை எழுதினேன் அவ்வளவு தான். நன்றிசித்ரா

வெங்கட் நாகராஜ் மிக்க நன்றி

நன்றி ஸ்டார்ஜன்

ஸ்டார்ஜன் உங்கள் தூஆவுக்கு மிக்க நன்றி

நன்றி அதிரா

Jaleela Kamal said...

வாங்க ஸாதிகா அக்கா இப்படி எளிய நடையில் மட்டும் தான் எழுத வரும்.

கீதா 6 நன்றி முடிந்த போது எழுதுங்க

நன்றி அமைதிச்சாரல்


வருகைக்கு மிக்க நன்றி ராஜ வம்சம்

Jaleela Kamal said...

வாங்க அப்சாரா நீங்களும் தேடி தேடி பதிவு போட்டு இருக்கீங்க உங்கள் அன்புக்கு மிக்க நன்றி

மலிக்காவும் நானும் எப்பவாவது தான் சந்திப்பது.

அதிரா இப்ப தான் இங்கு வந்து இருக்கிறார்

சீக்கிரமே நாமும் சந்திப்போம்
அன்புடன்
ஜலீலா

Jaleela Kamal said...

வாங்க ஏஞ்சலில் அந்த குட்டி ரொம்ப சுட்டி.

நன்றி கிருஷ்னவேனி

வாங்க யாதவன் வருகைக்கு மிக்கநன்றீ

நன்றி ராமலக்‌ஷ்மி

நன்றி ஆமினா

ஆமாம் கீதா ஆச்சல் சின்ன குழந்தைகளின் மழலை மொழியை நாள் பூரா கேட்டு கொண்டே இருக்கலாம்.

Jaleela Kamal said...

அமைச்சரே உங்கள் மனைவிக்கு என் நன்றியை சொல்லிடுங்க.
வருகைக்கு மிக்க நன்றி

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா