Thursday, October 14, 2010

மசாலா மிக்ஸ் -2

ஜனவரி பையன் லீவுக்கு வந்த பையன் ஊருக்கு போய் விட்டான் கொஞ்சம் நாள் சந்தோஷம் ,பிறகு ரொம்ப சோகமாகிவிட்ட்து.
மார்ச் அடுத்து மாமனார் மாமியார் வருகை, பிஸியாகிவிட்டேன்.முடிந்த வரை வெளியில் கூப்பிட்டு போனோம். நல்ல சமைத்து கொடுத்து பாராட்டும் கிடைத்த்து
ஹனீஃப் குர் ஆன் ஓத ஆரம்பித்து சரியாக ஆலிம்சா கிடைக்கத்தால் பாதியில் பாதியில் விட்டு போய்விடும். இல்லை எக்ஸ்ட்ரா கிளாஸ் என்று மாலை ஓத முடியாமல் போய் விடும், இப்படியே பிடிச்ச பிடியா தொடர்ந்து ஓதி உம்மா வாப்பா( மாமனார் மாமியார் வந்திருந்த போது அவர்கள் ஊருக்கு செல்லும் முன் முடித்தே தீருவேன் என்று ஆலிம்ஷாவை மாலை இருமுறை அழைத்து மறுநாள் மேக்ஸ் எக்சாமையும் வைத்து கொண்டு முடித்தான்,.
மாமனார் மாமியாருக்கு ரொம்ப சந்தோஷம்.நினைத்த காரியத்தை முடிப்பதில் என்னை போலவே, குர் ஆன் அவன் ஓத கேட்பது ரொம்ப நல்ல இருக்கு என்றார்கள்

ஏப்ரல் மாதம்: தோழிகளின் சந்திப்பு ஏற்கனவே இங்கு போட்டு இருக்கேன்.


அதோடு மே மாதம் தேர்வு முடிந்து ஊரிலிருந்து பையனும் வந்தாச்சு ரொம்ப சந்தோஷம். நல்ல விரும்பியதை செய்து கொடுத்து எல்லோரும் ஊருக்கு ஒன்றாக போனோம்,
ஜுலை ஆகஸ்ட் நிறைய கல்யாணங்கள் .எல்லா சொந்தங்களையும் சந்தித்தோம். அருமையான நாட்கள். எல்லோரும் சேர்ந்து மொத்தமாக வெளியில் போனோம்.
அங்கு ஒரு ஹோட்டலில் பூண்டு சட்னி ரொம்ப நல்ல இருந்ந்தது போட்டோவும் எடுத்து ரெசிபியும் கேட்டு வந்துள்ளேன், செய்தால் ரெசிபி போடுகிறேன்.எல்லோரும் ஒன்றாக போனது ஒரே ஜாலி தான்.


அறுசுவை பாபு, ஸாதிகா அக்கா,மர்லி ,ஜே மாமி,சுஹைனா,பாயிஜா, செல்வி அக்கா, சீதா லக்‌ஷிமி அக்கா எல்லோரிமும் போனில் பேசியது ரொம்ப சந்தோஷம்ஸாதிகா அக்கா, மர்லி வீட்டுக்கு வந்தே ஆகனும் என்று ஓவ்வொரு நாளும் அம்மா வீடு மாமியார் வீடு, தங்கைகள் வீடு, கல்யாணங்களுக்கு போக்வே நேரம் சரியாக இருந்த்து,

பிறகு பையன்காலேஜில் கொண்டு போய் விட அப்படியே சின்ன டூர். .
எல்லாம் டூர் அனுபவத்தையும் எழுதனும் என்று தான் ஆனால் நேரமில்லை முடிந்த போது படங்களாவது இனைக்கிறேன்.


முதல் முதல் டெல்லி எங்கும் தமிழ் கிடையாது ஒரே ஹிந்தி மயம் பாஷ தெரிந்த்தால் ஒகே


டீவியில பட்த்துல பார்த்த தாஜ் மாஹால் நேரில் பார்க்கும் போது ஆனந்தம்.நிறைய போட்டோக்கள் எடுத்தேன் பிறகு பகிர்ந்து கொள்கிறேன்


ஜெய்ப்பூர் ரொம்ப நல்ல இருந்த்து சூப்பர்
வண்டியில் எங்களை கூப்பிட்டு வந்த சுபிஷ் சில இடங்களை அருமையாக விளக்கி கொண்டேவந்தார்.
தங்க போன ஹோட்டலில் எல்லாம் நுழையும் போது பயங்கர செக்கிங்.+ நல்ல கவனிப்பு, எல்லா ஹோட்டலிலும் டிபன் ஃபிரி,எல்லாமே அருமை ஒரு பிடி தான்


அங்கு யானை சவாரி போனோம் ரொம்ப அருமை

மந்த மந்தையாக யானைகள் எல்ல்லோரையும் எம்பர்ர் போர்டில் யானை சாவாரி இங்கு நடந்த் இரண்டு நகைச்சுவைய சொல்லியே ஆகனும்.
ஒன்று யானை மேலே எல்லோரும் இரண்டு இரண்டு பேரா ஏறி உட்கார்ந்தாங்க எங்க டேன்னும் வ்ந்ந்த்து, அண்ணனும் தம்பியும் ஒன்றாக ஏறி கொண்டார்கள். நானும் என் ஹஸும் ஒரு யாணையில். ரொம்ப பயந்து பயந்து ஏறினேன்.கேமராவ கையில் எடுக்க கூட பயமா இருக்கு, எங்களுக்கு முன் ஒரு வெள்ளைகார பாட்டி தாத்தா ரொம்ப தைரியமா ஏறி உட்கார்ந்து போய் கொண்டு இருந்தார்கள், எவ்வள்வு பேர் போறாங்க நீ ஏன் இப்படி பயப்ப்படுரே என்றார் , நாம ஏறின நேரம் அதுக்கு மதம்பிடிச்சிட்டுதுன்னா,

அதுக்கு ஏற்றர் போல யாணைய ஓட்டி செல்பவர் காலால் அதை உதைத்து தள்ளினார். எல்லோரும் ஏறியதும் கட கடன்னு யாணைகள் நகர்ந்த்து ஆனால் நாங்க ஏறியதும் இரண்டு அடி கூட் எடுத்து வைக்கல அப்படியே நின்னுடுச்சி பின்னாடி வர யாணை எல்லாம் முன்னே போய் கொண்டு இருக்கு. எனக்கு ஒரே பயம் சொன்னா மாதிரி ஏதும் நடக்குமா இல்லை வெயிட் தாஙக் முடியாம நின்னுடுச்சா, சும்ம இரு என்றார், கீழே இரங்கி ஓடவும் முடியாது.
பார்த்தா யாணைக்கு உச்சா வந்துடுச்சாம், போவுது போவுது போயிக்கிட்டே இருக்கு அப்படியே குடம் குடமா...... போய் கொண்டே இருக்கு,
அப்பரம் மின்னல் வேகத்தில் நடந்த்து மலை மேலே (ரோடு பக்கம்) ஏறியது போக போக ரொம்ப நல்ல இருந்த்து, இன்னும் நாலு ரவுண்டு போகனும் போல இருந்த்து., ஜெய்பூர் போனா எம்பர்ர் போர்ட்டில் உள்ள யானை சவாரிய மிஸ் பண்ணிடாதீங்க.

அடுத்து போய் மேலேசுற்றி பார்த்துட்டு காரில் கீழே வந்தோம் வந்த களைப்பில் கோன் ஐஸ் வாங்கி சாப்பிட்டோம், சாப்பிட்டோம் இல்ல, நான் மட்டும் சாப்பிடல, வாங்கி வாயில் வைக்க்க போனேன் எங்கிருந்து தான் வந்துச்சுன்னு தெரியல ஒரு குரங்கு கண் இமைக்கும் நேரத்தில் லபக்குன்னு பிடிங்கி கொண்டு போய் விட்டது.என் பையனுக்கு ஒரே சிரிப்பு.நான் ஐஸ் போனது போகட்டும் மறுப்டி என்னை தொரத்த கூடாதே பே பே பே.... திரும்பி பார்த்தா நிறைய குரங்கு எங்க வந்து தலை பிடிச்சி இழுத்துடு உட்கார்ந்துடுமோன்னு...இன்னும் ஒன்று ஹவ்வா மஹால் இத சுற்றியுள்ள நாலு ரோடு பிரிவுகள் அங்கு தான் முழுவதும் பஜார் போல லைனா கடைகள்.
ஜெய்பூரில் பிக் பஜார் பக்கத்தில் தான் ஹோட்டல் பையனுக்கு தேவையான பொருட்கள் அங்கேயே வாங்கி கொண்டோம். போனதுக்கு அங்கு பாந்தினி சேலை சுடி எல்லாம் பேமஸாம் வளையல்கள் ஆகா என்ன அருமை அருமை, எனக்கும் ஊரில் எல்லோருக்கு வாங்கினேன், பசங்க நான் வளையல் கடையில் நின்னு வாங்கியதில் வெருத்து போய் விட்டார்கள்

பிறகு அங்கிருந்து அலஹாபாத் ட்ரெயினில் போய் முன்று நாள் பையன் கூடவே இருந்து ஹாஸ்டல் கூட இருக்கிற பையனை எல்லாம் பார்த்து அம்மாக்களுக்கே உரித்த்தான கண்ணீரை வடித்து கொண்டு வந்தேன்.


பையனை விட்டுட்டு திரும்ப வந்த ட்ரெயின் + பிளைட் அனுபவம் அங்கிருந்து சென்னை வந்து சேர்ந்த்து இது வரை லைபில் மறக்க முடியாது. முடிந்த போது பதிவிடுகிறேன்


வந்த்தும் ஸாதிகா அக்கா, விடல வரனும் என்ற அன்பு தொல்லை.

அடுத்து சீதாலக்‌ஷ்மி அக்கா ஏற்போட்டிலாவது வந்து உங்களை பார்க்கீறேன் என்றார்கள்.

ஜேமாமி பையனுக்கு கல்யாணம் முடிந்த்து , அவஙக்ளை போய் பார்க்க்லாம் என்றால் ஞாயிற்று கிழமைதான் பிரி ஆகையால் பார்க்க முடியல.

கடைசியில் ஸாதிகா அக்காவை பார்க்க மர்லிய கூப்பிட்டு கொண்டு போய் பார்க்க போனேன், தனியா எங்கேயும் போனதில்லை, போகனும் என்று டிசைட் செய்து சொல்லியாச்சு மாலை 5 மணியிலிருந்து கிளமபவே முடியல,
ஒரு வழியா நான் என் பையனையும் , மர்லி மரியத்தையும் கூப்பிட்டு வந்தாங்க, ஒரே ஆனந்தம் தான், ஸாதிகா அக்கா தங்கைகள், தம்பி மனைவி, அம்மா எல்லோரையும் பார்த்து பேசினோம், பெட்டிஸ், நான் செய்யும் முர்தபா போல வேறு சுவையில் இருந்த்து.

வீட்டிலேயே செய்த மிக்சர் சூப்பர், இனிப்பு பணியாரம் கொஞ்சம் டென்ஷனில் கிளம்பி போனதால் பேர சரியா கேட்கல . கொஞ்சம் நேரம் இருந்துட்டு முதலே சொல்லி இருந்தா விருந்து ஏற்பாடு செய்து இருப்ப்பேன் ஜலீ இப்படி திடீருன்னு வந்து இருக்கீங்களே என்றார்கள் நேரமில்லத்தால் அப்படி போக வேண்டியதா போச்சு, இரவு கிளம்ப சொல்லி வைத்திருந்த ஆட்டோ லேட் ஆனதால் தீடீர் மொரு மொரு தோசை, பொட்டுகடலை சட்னி, மிளகாய் பொடி, அருமையா இருந்த்து.பிறகு நானும் மர்லியும் அங்கிருந்து கிளம்பி விட்டோம்.
மறுநாள் மாமானார் வீட்டில் எல்லா நாத்தனார்கள், அவர்கள் பிள்ளைகள் பேரன் பேத்திகள் எல்லோரும் ஒன்றாக அரட்டை அடித்து விட்டு பீச் போயே ஆகனும் என்று எல்லா பிள்ளைகளும், அடம் சரி மொத்தமா அனைவரும் பீச் போய் ஒரு மணி நேரம் உட்கார்ந்து அரட்டை , பிள்ளைகளும் நல்ல விளையாடினார்கள்,
கொஞ்ச நேரத்தில் ஜோன்னு மழை எல்லோரும் ஒன்றாக சேர்ந்து நனைந்து கொண்டு வீட்டுக்கு வந்து சேர்ந்தோம் ரொம்ப வருடம் கழித்து மழையில் நனைந்து நடந்து வந்தோம் பீச்சில் எங்கும் போய் ஒதுங்க முடியாது.அப்படியே மறு நாள் கிளம்பி இங்கு வந்து சேர்ந்தாச்சு.
அடுத்த பையன் வருகைக்க்காக வெயிட்டிங்... .....


42 கருத்துகள்:

Chitra said...

அக்கா - எத்தனை தகவல்கள் - தாஜ்மஹால், ஜெய்ப்பூர் - மகன் மேல பாசம், தோழிகள் சந்திப்பு - உறவினர்கள் - பல்சுவை விருந்து கொடுத்து அசத்திட்டீங்க!

அன்னு said...

யப்பா, பெரிய ட்ரிப் போல இருக்கு. ரெம்ப நல்லா இருந்துச்சு சொன்ன விதம். நீங்க சமைச்சு யாரும் பாராட்டாம இருக்க முடியுமா, அப்புறம் உங்க மாமனார் மாமியார் மட்டும் எப்படி பாராட்டாம இருப்பாங்க. கல்யாண வீடுகள்ல சொந்தங்களை பார்த்தாலே ஒரு சுத்து போட்டுடும், அதிலே அப்புறம் டூர் வேறயா? பையன் அலஹாபாத்ல காலேஜா? என்ன படிப்புக்கா? கஷ்டம்தான், நினச்சபடி போக வர முடியாது. அந்த பக்க சாப்பாடுகளும் நமக்கு பழகணும். பார்த்து பத்திரமா இருக்க சொல்லுங்க. இன்ஷா அல்லாஹ் நல்லதே நடக்கும். பதிவு நல்ல காமெடியும் கூட, மரத்தையே தும்பிக்கையால தூக்கற யானைக்கு நீங்க ரெண்டு பேர் உக்காந்ததால நடக்க முடியலையோங்கற சந்தேகம், நினச்சு நினச்சு சிரிச்சுக்கலாம். என்சாய் பண்ணுங்க :)

நாஞ்சில் பிரதாப் said...

செல்லாது செல்லாது...ஒரு மாசம் ஒட வேண்டிய பதிவை ஒரு பதிவுல முடிச்சா நாங்க விட்ருவோமோ...

அந்த யானை உச்சா போனமாதிரி இதைப்பத்தி நிறைய பதிவு போடுங்க போடுங்க போட்டுட்டே இருங்க...:))

Nithu Bala said...

super..padankal arumai

ஜெய்லானி said...

ஒரு மாச தொடர் பதிவை இப்பிடி சின்னதா சுருக்கி போட்டது சரியில்லை ..!! சரியில்லை ..!! சரியில்லை ..!!

Jaleela Kamal said...

ஜெய்லானி அபப் நீங்க பதிவ சரியா படிக்கல,
ஜனவரியில் இருந்து ஆகஸ்ட் சுருக்கமா போட்டுள்ளேன்.

Jaleela Kamal said...

சித்ரா தகவல்கள் அதிகமாக இருந்தும் பகிர்ந்து கொள்ள நேரம் இல்லை.
இது ஒரு காலத்தில் எடுத்து பார்க்கும் போது பழைய நினைவுகள் அழகாக அசை போடும்.

Jaleela Kamal said...

அன்னு ஆமாம்காலேஜ் படிப்புக்கு தான்.
அவனுக்கு அந்த ஊர் சாப்படுகல் போல தான் எப்பவுமே பிடிக்கும்.
ஆகையால் சாப்பாடு பிரச்சனை இல்லை.

யானை மேட்டர் அந்த நேரம் கதி கலங்கி இப்படி நினைகக் தோனுச்சு பா

Jaleela Kamal said...

நாஞ்சிலாரே வாரும், இப்ப தான் வழி தெரிந்ததா?
உமக்காகவே ஒரு பதிவு ரெடி பண்ணிட்டு இருக்கேன்.,
இவ்ளோ மேட்டர் இருக்கு, உங்க கண்ணுக்கு உச்சா மேட்டர் தான் அகப்பட்டதா>

Jaleela Kamal said...

இன்னும் நிறைய அழகான போட்டோக்கள் இருக்கு இனைக்க தான் நேரம் போதல .
கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி

enrum said...

ஸ்..ஸ்..அப்பாடா...என்ன ஜலீலாக்கா...இப்படி ஒரே மூச்சுல சொல்லி முடிச்சிட்டிங்க....நல்லா எஞ்சாய் பண்ணீங்களா..ரொம்ப சந்தோஷம்...யானை உச்சா போனதை நீங்க சொன்ன விதம் நினைச்சு நினைச்சு சிரிப்பை வருது. மொத்தத்துல இந்த ட்ரிப்ல இந்தியாவை ஒரு சுத்து சுத்திட்டீங்க.... கலக்கல் ட்ரிப்..கலக்கல் பதிவு.

asiya omar said...

BIG POST..BUT GOOD POST.

siva said...

பெரிய பதிவு பட் உடனே முடிந்தபோல இருக்கு
இன்னும் நேரிய இதுபோல எழுதுங்க
அணைத்து படங்களும் அருமை
ம் சூப்பரா இருக்கு

siva said...

சின்னதா சுருக்கி போட்டது சரியில்லை ..!! சரியில்லை ..!! சரியில்லை ..!!---repeatu...

Riyas said...

நல்ல பயணம் அக்கா.. சுவாரஸ்யமா இருந்திச்சி..

வெறும்பய said...

அருமையான பதிவு...

gunalakshmi said...

அருமையான பயணம் அதைவிட அருமையா நீங்க சொல்லியிருக்கீங்க... இன்னும் விவரமா சொல்லியிருந்தா ரொம்பா நல்லாயிருந்துக்குமே என் அருமை தோழி....

சசிகுமார் said...

//நல்ல கவனிப்பு, எல்லா ஹோட்டலிலும் டிபன் ஃபிரி//

எங்கே எங்கே அட்ரஸ் கொடுங்கக்கா

மாதேவி said...

பிரயாணம் போய் வந்தது மிக்க மகிழ்ச்சியாக இருந்திருக்கும்.

ஆகா யானை சவாரி...இங்கும் பிள்ளைகள் போனார்கள்.

பகிர்ந்துகொண்டதற்கு நன்றி ஜலீலா.

ஜெய்லானி said...

//ஜெய்லானி அபப் நீங்க பதிவ சரியா படிக்கல,
ஜனவரியில் இருந்து ஆகஸ்ட் சுருக்கமா போட்டுள்ளேன்.//

அதைத்தான் கேட்டது..ஏன் எல்லாத்தையும் சின்னதா போட்டீங்க ..!! பயனக்கட்டுரை மாதிரி தொடரா போட்டிருக்கலாம் தானே..!!

நட்புடன் ஜமால் said...

பெரிய ரிவ்யூய் போட்டுட்டீங்க

இண்ட்ரஸ்டிங்

அன்புடன் மலிக்கா said...

அக்கா அசத்தலாய் அனைத்தையும் சொல்லிட்டீங்க யானை பாவம் நினைத்தேன் சிரித்தேன்..ஹா ஹா

ஸாதிகா said...

ஜலி.எங்கள் வீட்டிற்கு எப்படி பட படவென்று வந்து விட்டு சென்றீர்களோ அதே போல் படபடப்புடன் ஒரே மூச்சில் பதிவை எழுதி முடித்து இருகிறீர்கள்.யானை உச்சா போனது..செம காமெடி.சிரிப்பு அடங்க ரொம்ப நேரம் பிடித்தது.

Jaleela Kamal said...

என்றூம் 16 வருகைக்கு மிக்க நன்றி
எஅன்க்கும் யானை ய நினைத்தால், ஒரே சிரிப்பு தான்.

Jaleela Kamal said...

நன்றி ஆசியா

வாங்க சிவா வருகைக்கு மிக்க ந்னறீ, முடியும் போது கண்டிப்பாக எழுதுவேன்.

Jaleela Kamal said...

நன்றி ரியாஸ்,

நன்றி வெறும் பய

குணலக்‌ஷ்மி வாஙக் தோழி, கருத்து தெரிவித்தமைக்கு மிக்க ந்ன்றி

சசி ஃபிரின்னு சொல்லிடக்கூடாதே இப்படி வேற ஒரு கூட்டம் கிளம்புதா?

Jaleela Kamal said...

மாதேவி உங்கள் வருகைக்கும் கருத்து தெரிவித்தமைக்கும் மிக்க நன்றீ.ஆமாம் பயணம் போனலே அது ஒரு சந்தோஷம் தான். உங்க்ள் பிள்லைகளும் யானை சவாரியா? எந்த ஊரில்.

Jaleela Kamal said...

ஒகே ஒகே ஜெய்லாணி நிங்க சரியா படிச்சி தான் பதில் போடீங்க ஒத்துக்கிறேன்.
முடிந்த் போது விபரமான் ப்திவு, படங்கள் இனைக்கிறேன்.

Jaleela Kamal said...

வாங்க சகோ ஜமால் பெரிய ரிவிவீவ் தான் இன்னும் சுவரசியம் இருக்கு நேரமின்மை காரணத்தால் எழுதமுடியல.

Jaleela Kamal said...

மலிக்கா யானை பாவமே தான் ஏன் அக்கா பாவம் இல்லையா?

Jaleela Kamal said...

என்ன செய்வது ஸாதிகா அக்கா உங்களுக்கு தான் எனனி பற்றி தெரியுமே, நானும் தனித்தனியா பதிவு போடனும் என்று ஆனால் போட முடியல.
அல் அயின், புஜைரா, அபுதாபி எல்லாம் கூட போன போது போட்டோ எடுத்து வைத்துள்லேன், நேரம் கிடைக்கும் போது போடனும்.

ஹுஸைனம்மா said...

ஒருவிதத்துல பரவால்லைக்கா - எழுதணும் எழுதணும்னு நினச்சு எழுதாம இருக்கிறதைவிட, இப்படிக் கொஞ்சமாகவாவது எழுதிடறது நல்லதுதான். பையர் அடுத்து எப்ப வர்றார்?

அஹமது இர்ஷாத் said...

அருமையான பதிவு.

R.Gopi said...

ஆஹா...

இந்தியா பயணமா? சூப்பர்...

அட்டகாசமா எழுதி, ஃபோட்டோஸ் எல்லாம் போட்டு அசத்திட்டீங்க...

நானும் 2 வாரம் போயிட்டு இன்னிக்கு தான் வந்தேன்... மொதல் கமெண்டே இந்த பதிவிற்கு தான்....

நானும் இந்த மாதிரி எல்லாம் எழுதணும்னு நெனச்சா கூட முடியறதில்ல....

வாழ்த்துக்கள்...

R.Gopi said...

ஆஹா...

இந்தியா பயணமா? சூப்பர்...

அட்டகாசமா எழுதி, ஃபோட்டோஸ் எல்லாம் போட்டு அசத்திட்டீங்க...

நானும் 2 வாரம் போயிட்டு இன்னிக்கு தான் வந்தேன்... மொதல் கமெண்டே இந்த பதிவிற்கு தான்....

நானும் இந்த மாதிரி எல்லாம் எழுதணும்னு நெனச்சா கூட முடியறதில்ல....

வாழ்த்துக்கள்...

Jaleela Kamal said...

ஆமாம் ஹுஸைம்மா நிறைய எழுத நினைத்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது.
சரி கொஞ்ச்ம சுருக்கமாகவாவது போட்டு வைப்போம், பிறகு நேரம் கிடைக்கும் போது விபரம் எழுத்வோம் என்று, தான் போட்டேன்.

Jaleela Kamal said...

நன்றி இர்ஷாத் ,

Jaleela Kamal said...

வாங்க கோபி, ரொம்ப நாளா ஆளை காணும்.
நான் அழைத்த தொடர் பதிவு போட்டீங்க்லான்னு பார்க்க உங்கள் பிளாக் பக்கம் வந்து போனேன்.
ஒகே ஓகே ஊருக்கு போய் வந்தீர்களா . வந்ததும் தேடி வந்து கமெண்டிட்டதற்கு. மிக்க சந்தோஷம்

angelin said...

wow... !
azhagaana ,arpudhamaana ninaivalaigal
with photos.
i enjoyed it.

Kurinji said...

மிகவும் நன்றாக எழுதி இருக்கீங்க...


குறிஞ்சி குடில்

Geetha6 said...

இவை என்றும் மறக்க முடியாதது!!

Jaleela Kamal said...

ஏஞ்சலின், குறிஞ்சி கீதா6
மறக்காமல் இந்த லிங்கையும் படித்தமைக்கு மிக்க நன்றி.

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா